ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

சித்தர் நெறி

ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டிலில்லை!
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று!
ஞானத்தின் மிக்கவை நன்முக்தி நல்காவா!
ஞானத்தின் மிக்கார் நரனின் மிக்கார்! என்ற திருமந்திரம்.

"ஞானத்தைக் காட்டிலும் மிகச் சிறந்த நெறி நாட்டில் இல்லை; ஞானத்தைப் போதிக்காத சமயத்தாலும் நன்மை இல்லை;ஞானத்தைப் போல் மிகச் சிறந்த வழி முக்திக்கு வேறெதுவும் நல்காது; ஞானத்தைத் தழுவாத மனிதன் நல்ல மனிதனாகான்" என்பது திருமூலர் வாக்கு.