வியாழன், 14 பிப்ரவரி, 2013

இறை தத்துவம்

இறைவனை அடைய:
உயிர் எழுத்துக்கள் :12. ஆம் இந்த உயிர் மனித நிலையிலிருந்து இறைவனை அடைய 12 நிலைகளினை கடக்க மீண்டும் பிறவா நிலை. மாதங்களின் எண்ணிக்கையும் 12.
மெய் எழுத்துக்கள் :18. இறைவனை அடைய (பிறவா நிலை) வாழ்வில் மனிதன் 18 தத்துவங்களை கடைபிடிக்க வேண்டும். (மனிதனை ஆட்டுவிக்க 9 கிரகங்களை படைத்திருக்கிறான்.ஒவ்வொன்றும் நன்மை தீமை இரண்டும் செய்கின்றன. அதன் உட்பொருளான 2 தத்துவத்தை உணர்கிறானா ? 9 X 2 =18 தத்துவத்தை அவன் உணர வேண்டும் )
சபரி மலை அய்யப்பனைக் காண 18 படிகள் கடக்கவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
அக்கு எனப்படும் ஆயுத எழுத்து. ( இறைவன் )
ஒரு மாதத்தில் (12+18=30) (12+18+1=31) 30/31 நாட்களை கொண்டதாக அமைந்துள்ளது.நாட்கள்
30 என்பது உயிரும் மெய்யும் 18 தத்துவத்தை கடைப் பிடித்து நல்ல வாழ்க்கை வாழவேண்டும்.
31 என்பது இறைவனை அடையும் வழி காண வேண்டும்.
60 வருடங்கள் தமிழ் ஆண்டுகளாக கொடுக்கப்பட்டுள்ளன.
9 க்கு அடுத்தது 10. 9 கிரகங்கள் வழிவிட்டால் தான் இறைவனை அடைய இயலும்.
மனிதன் 6 கட்டளைகளை கடைப் பிடிக்க வேண்டும். ஒவ்வொரு கட்டளை கடைப் பிடித்து வாழவும் கிரகங்கள் வழிவிடணும். (9 X 6=54)
55 - கிரகங்கள் வழி விட்டு விட்ட பின்னர் பிரம்மன் ( பாவ புண்ணிய கணக்கு சமமாகி விட்டது. இனி கணக்கு எழுத வழி இல்லை ) வழி விட வேண்டும்.
56.- பிரம்மன் வழி விட்ட பின் சக்தியால் வழங்கப் பட்ட மாயை விளக்கி சக்தி வழி விடவேண்டும்.
57.- சக்தியின் மாயை விலகி விட்ட பின், வாழ்வதற்கான  மாயை அளித்த நாராயணன் தான் மாயை விலக்கி, வழி விட வேண்டும்.
58 - மாயை நீங்கிய பின், மனிதனை ஆட்டுவிக்கும் அஞ்ஞானத்தை சங்கரன் விலக்கி வழி விட வேண்டும்.
59 - மெய்ஞானத்தை முழுமுதற் கடவுள் கண நாதன் அருள வேண்டும்.
60 - இறைவன் தன்னை அடைய மனிதனுக்கு கொடுத்த 6 கட்டளைகளை கடைப் பிடித்தானா என்று அலசி ஆராய்ந்து, முப் பெரும் தெய்வத்தின் அருள் , தாயின் அருள் பெற்றிருப்பதை , ஞானத்தை பெற்றிருப்பதை உறுதி செய்தபின்,
அது அதுவாகவே ஆகும், என்ற தத்துவத்தை (எங்கிருந்து வந்ததோ, அங்கேயே அது சென்றடைய ) முருகப்பெருமான் வழி விடவேண்டும்.
மெய்ப் பொருள் விளக்கமாக, என் குருநாதர் கொடுத்த குறிப்பினை, உங்களின் முன் வைத்துள்ளேன். ஏற்பதும், ஏற்காததும் உங்களின் விருப்பம்.
நம் முன்னோர்கள் காரண காரியத்தோடு செயல் பட்டுள்ளனர் என்பது தான் மறுக்க முடியாத உண்மை..