சனி, 1 டிசம்பர், 2012

காகபுஜண்டர் தவம் இருந்த இடம்

வாயில் முகப்பு

சின்ன சேலம் - ஆத்தூர் வழியில் தென் பொன் பரப்பி என்ற கிராமம் உள்ளது. இங்கு காக்கைபுசண்டர் தொடர் புடைய ஒரு அழகிய கோவில் உள்ளது. இந்த கோவிலின் பெயர் சொர்ணபுரீஸ்வரர் ஆகும். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் புஜண்டர் சித்தரால் செய்யப்பட்ட லிங்கமாக இந்த மூலவர் உள்ளார். 16 ஆண்டுகள் கடுமையாக காகபுஜண்டர் தவம் இருந்த இடம். 
சோடச லிங்கம்
இந்த லிங்கம் பிரம்மாண்டமாக உள்ளது சுமார் ஐந்தரை அடி உயரம், அரிய சூரியகாந்த கல்லால் 16 முகமாக அமைகப்படுள்ளது இந்த லிங்கம். (சோடச லிங்கம் ). இந்த இடம் புசண்டர் சமாதி கொண்டு, பீடத்துடன் இருக்கும் இடமாக அறநிலை துறை குறிப்பு கூறுகிறது. பின் வந்த காலங்களில் பொன்னும், பொருளும் உயர்ந்து சிறப்பு அடைந்ததால் இவ்விடம் பொன்பரப்பி என்று பெயர் காரணம் பெற்றது. ஈசன் சொர்ணபுரீஸ்வரர் ஆகவும், அம்மன் சொர்நாம்பிகையாகவும் உள்ளனர்.
புசண்டர் பீடம்
இந்த கோயில் கருவறையில் தீபம் ஏற்றினால், மையத்தில் உள்ள தீபம் துடிப்புடன் எரிந்து கொண்டிருக்கும்- என்று புசண்டர் ஓலை சுவடி கூறுகிறது
யோகி
மேலும் இவ்  இடத்தில் வாழும் 90 வயது வாசி யோகி இருக்கின்றார்.  ஒரு நாளைக்கு 43,200 முறை ராம நாமம் ஜெபிக்கிறேன் என்றார். பின் 21,600 வரும் சுவாசத்தை இரு முறையாக மடக்கும் கணக்கு தான் என்று புரியவும் வைத்தார் .