புதன், 30 ஜனவரி, 2013

பெண்ணாசை விலக்கல்..
                                   பாம்பாட்டி சித்தரின் நோக்கில் ....

சித்தர்கள் என்றும் பெண்களுக்கு எதிரானவர்கள் அல்ல . அவர்கள் எல்லா பெண்களையும் தம் தாயாகவே கருதுவார்கள். இங்கு கூறப்படும் பாடல்களில் உள்ளவை பெண்மேல் மோகம் கொண்டு திரியும் காமுகர்களுக்காக கூறபடுபவை.
சித்தர்களின் உள்ளங்கவர்ந்த நாயகியே வாலைப்பெண்(பராசக்தி) தான் . அப்படி இருக்க எப்படி அவர்கள் பெண்களை தவறாக கூறுவார்கள். சித்தர்களின் இலக்கண விதிப்படி உள்ளொன்று வைத்து புறமொன்று கூறுவார்கள் .

வெயில்கண்ட மஞ்சள் போன்ற மாத ரழகை
விரும்பியே மேல்விழுந்த மேவு மாந்தர்
ஒயில் கண்டே இலவுகாத் தோடுங் கிளிபோல்
உடல்போனால் ஒடுவாரென்று ஆடாய் பாம்பே .