செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

அகஸ்தியர் சுவடி


துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

நீத்தார் பெருமை குறள் - 22.
சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டு அங்கு ஆமாறு ஒன்றில்லை
அவனை வழிபட்டு அங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே.
திருமந்திரம் கவி 2119 
 அகத்தியர் துணை
ஆசான் அகத்தீசன் சுவடி மூலம் அருளிய கொடி வணக்கம்

வல்லமையே செந்நிறத்தின் கொடியே போற்றி
வஞ்சகத்தை அழித்திடுமோர் குணமே போற்றி
நல்வாழ்வை நிலைநாட்டி தீதழித்து
நன்னெறியை விளக்கிடுமோர் நிறமே போற்றி
நிறவெறியை அழித்திடுமோர் நெஞ்சே போற்றி
நேர்மைமிகு செயல்புரிந்து குருதிவெள்ளம்
சிறப்பாக நடைபெற செய்வாய் போற்றி
செல்வமுடன் வாழவைக்கும் பசுமைபோற்றி
பசுமையதின் வளர்ச்சிநிற கொடியே போற்றி
பலதேசம் வாழ்ந்திடவும் வகையும்செய்து
நிசமான உயர்வளிக்கும் நிறமே போற்றி
நிறமதற்கும் ஏற்றவார் பணிவே போற்றி
பணிவுடனே சுபவிசேடம் மஞ்சள் போற்றி
பாக்கியங்கள் தந்திடுமோர் நிறமே போற்றி
துணிவுமிகு நற்காரியம் செய்யவல்ல
துயர்நீக்கும் மங்களத்தின் நிறமே போற்றி
போற்றியே புவிமாந்தர் வாழ்ந்தபின்னும்
புகழ்கீர்த்தி தொடக்கமுதல் கடைநாள் மட்டும்
ஏற்றமிகு ஒற்றுமையே சமாதானம்
ஏற்படுத்தும் வெண்நிறத்தின் ஒளியே போற்றி
ஒளிநிறத்தின் அடையாளம் ஞானமோட்சம்
உயர்வாழ்வை அளித்திடுநல் வெண்மை போற்றி
பளிச்சிட்டு பரவெளியில் சூட்சம்தன்னை
பார்அறியும் சோதியாம் போற்றிபோற்றி.
சுபம்