வியாழன், 28 பிப்ரவரி, 2013

இடைக்காட்டு சித்தரின் ஜீவ சமாதி உள்ள இடம்.இவரின் ஜீவ சமாதி திருவண்ணாமலையில் உள்ளது என்றுதான் பல இணையதளங்களில் படித்திருந்தேன். அன்றுமுதல் குறிப்பாக அவரின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தேடிகொண்டிருந்தேன் தெரிந்தவரிகளிடமும் கேட்டேன் அப்போது தெரியவில்லை. ஆனால் அவரின் ஜீவ சமாதியை கண்டபின் அடடா அண்ணாமலையாரின் அதிசயம்தான் என்ன என்று வியந்தேன். ஆமாம் விடை தேடி அலைபவர்களுக்கு கண்டிப்பாக விடை கிடைக்கும் என்று என் பல தலைப்புகளில் சொல்லி இருப்பேன் அது போல் எனக்கும் விடை கிடைத்தது.

பட்டினத்தாரின் சிவ சமாதியை தரிசித்ததும் அடுத்து நான் சென்ற ஆலயம் திருவண்ணாமலைதான். அவரின் அருளால் அவரின் தரிசனத்தை ஆனந்தமாக கண்டேன்.

அப்போது நான் திடிரென்று இங்கே இடைகாட்டு சித்தரின் ஜீவ சமாதி உள்ளதாமே அது எங்கே என்று?. எப்படி இந்த கேள்வி அப்போது கேட்டேன் என்று இன்றும் யூகித்துக் கொண்டு தான் உள்ளேன்.

அவர் அடடா உனக்கு தெரியாதா, எனக்கும் தெரியாமல்தான் இருந்தது. பல நாட்களாக எனக்கும் இந்த ஐயம் உண்டு, அதை எனக்கு நீக்கியவரே நான் கொஞ்ச நேரம் முன் உனக்கு காண்பித்த அந்த சாமியார்தான் என்று சொன்னார்.

அப்புறம் இடைக்காடு சித்தரின் ஜீவ சமாதி உள்ள இடத்திற்கு ஒரு நிமிடத்தில் அழைத்து சென்றார் என்றால் அது மிகையாகாது.

ஆமாம், அண்ணாமலையாரை தரிசித்து விட்டு அவரின் பிரகாரத்தை சுற்றிவிட்டு வெளியே வந்து அவரின் அடுத்த பிரகாரத்தை சுற்றி வரும்போது சரியாக அண்ணாமலையாரின் சன்னதி உள்ளதுக்கு பின்புறம் அருணை யோகிஸ்வரர் மண்டபம் என்று இருக்கும். அது மண்டபம் அல்ல அதுதான்.. அதுதான் இடைக்காட்டு சித்தரின் ஜீவ சமாதி.  அந்த மண்டபத்துக்கு கீழே விளக்கு எரியும் அங்கு பார்த்தீர்களானால் இடைக்காட்டு சித்தரின் உருவம் சிலையாக வடிக்கப்பட்டிருக்கும்

எத்தனைமுறை அந்த பக்கம் வலம் வந்து இருந்தாலும் நான் தேடிக்கொண்டிருந்த அந்த மகானின் ஜீவ சமாதி அங்கு இருப்பதை கண்டவுடன் மெய் சிலிர்த்தேன். இதில் பல அர்த்தங்கள் எனக்கு புரிந்தது.

எல்லாம் சிவன் லீலை.