வியாழன், 12 செப்டம்பர், 2013

அகத்திய மகரிஷி அருளிய சிவகுளிகை

பாரப்பாசித்தரெல்லாஞ் சொன்னமார்க்கம்
பாங்கானவயித்தியரே யிந்நூல்பாரு
பாரப்பாமாந்தமது பிணிகட்கெல்லாம்
பகறினேன்குளிகையொன்று பண்பாய்க்கேளு
... சேரப்பாபதினெட்டு பேருங்கூடி
திறமாகக்கோர்வையாய்ப் பாடினார்கள்
ஆரப்பாவதைக்குறிக்கி யொருகுளிகைக்குள்ளே
அப்பனேசிவகணையாய்ப் பாடினோமே. 1

பாடினகராரென்றாற் பொதிகைக்குள்ளே
பரமசிவன்மகனுடைய சீடனப்பா
ஆடியேகுளிகையுட கருவைக்கேளு
வப்பனேசுருக்கியே துருசாய்ச்சொன்னோம்
தேடியேதிரியாதே கருமேனிவேரும்
செயமரிசிதிருநீற்றுப் பச்சைவேரும்
வாடியேயலையாதே சிறுபூளைவேறு
மைந்தனேவாடாத சிறுபொறுமிதானே. 2

தானென்னகாட்டிலே மொச்சவேறு
சாதவெள்ளைச்சாரணையின் வேறுதான்
தேனென்றசெப்பரிய வேலிவேறுஞ்
செயமானவமுக்குரா வடக்குவேறும்
மைந்தனேகுட்டிவிளா மேற்குவேறும்
வேனென்றவேறுவகை பதினொன்றுக்கும்
விளம்புகிறேன்கடைமருந்தின் விபரங்கேளே. 3

கேளடாபெருங்காயம் வசம்புகூட
கெடியானசிற்றரத்தை வெள்ளைப்பூண்டு
ஆளடாதிப்பிலி கிராம்புதானு
மப்பனேசாதிபத்திரி யிஞ்சிதானும்
சேரடாகடைமருந்து திரண்டுபங்கு
செயமானவேறுவகை வொன்றாய்க்கொள்ளு
வாரடாதின்குர வொன்றாய்க்கூட்டி
மாட்டியேகுட்டிவிளாசஞ் சாருவாரே. 4

வார்த்துநீயரையடா வரைச்சாமந்தான்
மைந்தனேகுழம்பதுபோ லாகுமுன்னே
பரிந்துநீவேலியின்றன் சாருவிட்டுப்
பாங்காகயரைச்சாம மரைத்துக்கொள்ளு
சேர்த்துமேகுன்றிக்கா யளவுசெய்து
திறமாக அங்-உங்-சிங்-மங்-ஓம்நமவென்று
போற்றியேயெடுத்தார்கள் சித்தியாகும்
புத்திரனேவட்டமா சித்தியாச்சு. 5

ஆச்சப்பாசிவகுளிகைதா னொன்றுசொன்னேன்
அப்பனே நூல்களிலே சொல்லவில்லை
காச்சப்பாகுளிகையுட கருவைச்சொன்னால்
காணாமலேலோடுமடா பிணிகளெல்லாம்
போச்சப்பாபிணிகள்முலைப்பாலி லாட்டிவிட்டால்
பேரானமுப்பத்திரண்டு தோசம்போகும்
ஆச்சப்பாமாந்தமொடு பதினொன்றுபோகு
மப்பனேவேலியுட சாற்றிற்போமே. 6

போமடாமூட்டுதோச மொன்பதுக்கும்
புகழாகயிஞ்சிவேர் சாற்றினோடும்
வாமடாபுள்தோசம் பதினெட்டுக்கும்
வாகானவென்னீரில் விட்டாற்போகும்
தாமடாபொதிகைமுனி சொன்னமார்க்கந்
தப்பாதுவொருநாளும் வீண்போகாது
ஆமடாசிவகுளிகை யிதுதானென்று
வப்பனேபார்த்தவர்க்கு சித்தியாமே. 7

கேளப்பாயெங்களுட குளிகைக்கெல்லாங்
கிருபையால்நொச்சியிலை சாற்றிலோடும்
வாளப்பாசன்னியொடு யிருமலுக்கு
மைந்தனேவேலியுட சாற்றிற்போகும்
வாளப்பாகரப்பானுக் கெல்லாமைந்தா
வளமானஅமுக்கிரா சாற்றிற்போகும்
ஆளப்பாகுழந்தைகட்கு வந்தநோய்க
ளப்பனேயக்குளிகையி லடக்கமாமே. 8 முற்றும்.