செவ்வாய், 29 அக்டோபர், 2013

குரு என்ற ஒன்று சீடனுக்கு பாதை தான்....

குருவின் அருளால் அனைத்தும் நன்மைக்கே. எந்த இடத்திலே எம்மை அப்பன் கொண்டு வைத்தாலும், உள்ளுக்குள்ளே சுடரைப்போன்று தொடர்ந்து கூடவே இருக்கும் குருவின் காலடியின் இரு பெருவிரல்களிலே எமது இரு விழிகளை வைத்து வணங்குகிறேன்.
இறை நிலை தரும் விளக்கம் என்பது உள்ளது உள்ளபடி உணர்ந்து கொள்ளவேண்டும் என்றால் இறைனிலையோடு நாமும் கலந்தால் அன்றி வேறேது வாய்ப்பு?
எமது முனைப்பு சரி என்று குருவின் முன் நின்றால், இறை மௌனத்திலே கலந்தால் எப்படி பொருந்தும்?
 குரு என்ற ஒன்று சீடனுக்கு பாதை தான். குரு என்ற அன்பு ஒன்றே சீடனுக்குத் தேவையான பாதையைத் தந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்தும் தரும். இங்கே அறிவு என்ற ஒன்றைத் தவிர எந்த ஒரு அசைவிற்கும் வேலை கிடையாது. நுழையவும் முடியாது. அறிவை விட்டுத் தரும் அளவிற்கு சோதனையான ஒன்றை அங்கே சொல்ல எவரும் உருவாகவில்லை. உருவாகவும் முடியாது.
வாருங்கள். அந்த பாதையிலே. பதமடைவோம்... ஒன்றாவோம்.. பரமானந்தம் அடைவோம்.
எத்தனை நாளைக்கு உனது வருகைக்காக காத்திருப்பது என்று குருவானவர் நம்மைப்பார்த்து கண்களிலே ஆனந்தத்துடன் அணைக்க காத்துக்கொண்டிருக்கிறார்.
விவேகானந்தரை ராமகிருஷ்ணர் பார்த்த உடனே அணைத்துக்கொண்டது போல....