சனி, 28 டிசம்பர், 2013

அகத்திய மாமுனியின் ஞானம் பகுதியில் இருந்து ....


சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
சகலவுயூர் சீவனுக்கு மதுதானாச்சு
புத்தியினா லறிந்தவர்கள் புண்ணியோர்கள்
... பூதலத்தில் கோடியிலே ஒருவருண்டு

பத்தியினால் மனமடங்கி நிலையில் நிற்பார்
பாழிலே மனத்தைவிடார் பரம ஞானி
சுத்தியே யலைவதில்லைச் சூட்சஞ் சூட்சஞ்
சுழியிலே நிலையறிந்தால் மோட்சந் தானே .

விளக்கம் :
உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் ஒன்றே தெய்வம். இதனை
அறிந்தவர்கள் இவ்வுலகில் கோடியில் ஒருவருண்டு என்றும் ,
மனதினை அடக்கி தேவையற்ற விசயங்களில் மனதினை
செலுத்தாதவர்களை பரம ஞானி என்றும் கூறுகிறார் .

எங்கும் இறைவனை தேடி அலையாமல் உண்மையான சூட்சமத்தை உணர
வேண்டுமெனில் உண்மையான மூலத்தை அறியவேண்டும் ,அந்த மூல ரகசியம் உன் சுழிமுனையிலே தான் இருக்கிறது .அவ்வாறு உள்ள சுழிமுனையின் தன்மையை உணர்ந்தால் மோட்சம் கிடைக்கும் என்று கூறுகிறார்.