வியாழன், 16 ஜனவரி, 2014

காரண சரீரம்...

குருவின்இருப்புஎப்படிஎல்லாம்இயங்கிக்கொண்டேஇருக்கிறதுஎன்பதனைநன்றாகஉணர்ந்தபிறகுதான்எமக்குஎழுதும்வாய்ப்புவந்தது.

2005ம் ஆண்டு, குருவும் அவரைப் பற்றிய பல சிந்தனைகள் என்று எப்போதும் அவர் மீதே தவத்தினை மேற் கொண்டது  போலஇருந்த நேரம்..
தவமும், குருவின் மீதான சிந்தனையும் என்னை நோக்கி எதுவும், வேறு எதன் தாக்கமும் என்னுள் வராமலும் காத்துக் கொண்டு இருந்தது. தியானத்தின் தன்மையும் அதன் அனுபவங்களும் எமக்குத் தேவையான ஒரு நட்பை மட்டுமே அனுமதித்துக் கொண்டு இருந்தது.
குருவின்மீதுகொண்டிருக்கும்அன்புஎன்பது, அவரின்உடலைமையப்படுத்திஇல்லை...
ஸ்தூலஉடல், சூக்குமஉடல்பற்றிஏற்பட்டதியானஅனுபவம்என்பதுஎந்தவிதத்திலும்எனக்குஅறிமுகம்இல்லாதது..

எங்கோ  கண்டம் கடந்து இருந்தாலும், உள்ளத்தால் மட்டுமே எண்ணிக் கொண்டிருந்த இந்தப் பிள்ளைக்கு எப்பேர்ப்பட்ட அனுபவத்தினை தந்து இருக்கிறீர்களே!! எதுவும் எதிர் பார்க்காது உங்களை மட்டுமே நினைத்து இருந்த பிள்ளைக்கு உங்கள் திருப்பியக்க அன்பின் மூலம் என்னை அரவணைத்துக் கொண்டுவிட்டீர்களே... எதையும் எதிர்பார்க்காது இருந்தபோது, எமக்குள் உங்களின் இருப்பின் தன்மையை அதன் உச்சம் வரை கொண்டு சென்று, இதுதானப்பா நமது இடம் என்று உள்ளுணர்த்தியதை எத்தனை ஆண்டுகளானாலும் குருவை புகழ்ந்து கொண்டே தான் இருக்கத் தோன்றுகிறது.
ஒரு கவிதையிலே குரு சொன்னார்...
" யான் உணர்ந்ததை அப்படியே தருவேன்" என்று... அதை படித்த போது ஆனந்தினால் அழுகிறேன். ஏனெனில், அவர் மட்டுமே நினைத்த எனக்கு இப்படி ஒரு உள் அனுபவம் எனில், இன்னும் ஆழ்ந்த பக்தி கொள்ளும் சீடனுக்கு அவர் என்னவெல்லாம் அருளுவார்?! என்று.
ஸ்தூல சரீரம், சூக்கும சரீரம் என்று இருப்பது போல காரண சரீரம் என்றும் இருக்கிறது.
சூக்கும உடலில் இருந்து உயிரானது மேலே எழுவதும், அந்த நிலையே தான் குண்டலினி என்றும்... எது முதலில் மனமாக இருந்ததோ, அதுவே தான் உயிராக தன் மாற்றம் அடைந்தது என்று உணர்ந்தேன்... தியானமும் தொடர்ந்தது...சூக்கும உயிரானது அளப்பரிய ஆனந்தத்துடன் அந்த ஈர்ப்பு  நிலையாம் இறை  என்ற கருணை நிலையால் ஈர்த்துக் கொள்ளப் பட்டது... இறைஎன்றகருணைநிலையான தன்  ஆற்றலின் முன் இந்த உடல் எனது என்கிற முனைப்பு(" நான்")  சென்று கரைந்து ஒன்றாக ஆரம்பித்த போது, எம்மால் தாங்க முடியாத ஆனந்த நிலையும், உடல் என்ற ஒன்றை விலகி நிரந்தரமாக விலகி விடுவோம் என்கிற உணர்வு எண்ணமாக மேலிட்ட போது, அந்த அசையாத சிவகளத்திலே அசைவு ஏற்பட்டது...
"இந்த ஸ்தூல உடலில் இருந்து உயிரை பிரித்து எடுத்த உடன், சூக்கும சரீரமானதை பற்றிக் கொண்ட உடனே, இறையானது சூக்கும சரீரத்தை இழுத்துக் கொண்டு போகும்... எப்போது சூக்கும சரீரத்திலே இருந்து கொண்டு ஸ்தூல உடலிலே கவனித்து பேரானந்தத்தினை உணர்ந்தோமோ அக் கணத்திலே இருந்து இறைவெளி கலக்கும்வரை உள்ள அனுபவமாக விரிந்து இருப்பது எதுவோ அதுவே தான் காரண சரீரம்" என்று சொன்னார்...