செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

மோட்சத்திற்கான வழி...

*யார் ஒருவர் தினமும் ஆசான் அகத்தீசரை கட்டாயமாக, உறுதியாக, சத்தியமாக பூஜை செய்து வருகிறார்களோ அவர்கள் மனதில் எப்போதும் அமைதி இருக்கும். அவர்கள் கடும் கோபம் கொள்ள மாட்டார்கள். மற்றவர்களிடம் குறைகள் காணமாட்டார்கள். எப்போதும் மனம் நிறைவாகவே இருக்கும்.
*நம்மிடம் குடிப்பழக்கம் இருக்கலாம், சூதாடும் பழக்கம் இருக்கலாம், புலால் உண்ணும் பழக்கம் இருக்கலாம், தேவையில்லாமல் அதிகமாக பேசுதல், இன்னும் ஆநேக குணக்கேடுகளும் இருக்கலாம், இதையெல்லாம் ஒரு நாளில் நீக்கிவிட முடியாது. எத்தனை அறநூல்கள் படித்தாலும் நீங்காது. பூஜையாகிய வழிபாடுகள் செய்தால் தான் குணக்கேடுகள் எல்லாம் நாளுக்குநாள், நாளுக்கு நாள் நசிந்து, மெலிந்து விடும். உடனே எல்லா குணக் கேடுகளும் நீங்கும் என்று நினைப்பது மனம் சோர்வு தரும். பூஜை செய்யச் செய்ய சிறப்பறிவு உண்டாகும். சிறப்பறிவு துணை கொண்டு தான் திருக்குறள், திருவருட்பா, திருமந்திரம் மற்றும் உள்ள அநேக அற நூல்களையும் படித்து உணர முடியும். இல்லையென்றால் படிக்கலாமே தவிர படித்து உணர முடியாது. உணர வேண்டுமென்றால் தினமும் பூஜை செய்ய வேண்டும்.

*ஆசான் அகத்தீசன் ஆசி இருந்தால்தான், சிறுதெய்வங்களுக்கு ஆடு, கோழி வெட்டினால் நமது குடும்பத்திற்கும் நமக்கும் நன்மை உண்டாகும் என்று நினைப்பது பாவச் செயல் என்று உணர முடியும். உயிர்கள் பால் கருணை இருந்தால் தான் நமக்கும் நமது குடும்பத்தார்க்கும் பல நன்மைகள் உண்டாகும் என்று உணர முடியும்.
எதிலும் சந்தேகமில்லாது உண்மையை அறிய வேண்டுமென்றால், அருள் பலமும், புண்ணிய பலமும் வேண்டும். அருள் பலமும், புண்ணிய பலமும் பெற வேண்டுமென்றால் ஆசான் அகத்தீசரின் ஆசி பெறவேண்டும்.