புதன், 24 செப்டம்பர், 2014

சிவவாக்கியரின் பாடலில் எமக்கு தெரிந்த கருத்துகள் .....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு,

சிவவாக்கியரின் பாடலில் உள்ள கருத்துகள், தான் ஞான நிலையை அடைவதற்க்கு முன்னால் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தேன் என்று புலம்புவதாக இங்கு அமைந்துள்ளது.

இந்த உலகில் நான் பல வகையான மலர்களை பறித்து அதனால் இறைவனை அர்ச்சித்து என்ன பயன் கண்டேன்?
இந்த உலகில் நான் பல வகையான மந்திரங்களை செபித்து அதன் மூலம் என்ன பயன் கண்டேன் ?
இந்த உலகில் நான் இறைவன் மேல் கொண்ட பக்தியினால் அவன் மீது மோகம் கொண்டு பல வகையான புண்ணிய நதி நீர்களினால் அவனை அபிசேகம் செய்து என்ன பயன் கண்டேன் ?
அவனின் அருள் வேண்டும் என்று பல சிவத்தலங்களை சுற்றி வந்து என்ன பயன் கண்டேன்?

இந்த உலகினை கட்டிக்காக்கும் ஈசனின் உண்மையான இருப்பிடத்தை அறிந்த ஞானிகள் , அவனின் சிறப்பு வாய்ந்த தன்மையை அறிந்ததால் உண்மையான பரம் பொருளினை மட்டும் வணங்குவார்கள். அவனின் இருப்பிடத்தை அறிந்து உணர்பவர்கள் அனைவரும்
கண்ட கோவில்களை வணங்க மாட்டர்கள்.
இங்கு கண்ட கோவில் என்பது , மூலைக்கு மூலை எங்கு பார்த்தாலும் நகரங்களில் பல வகையான சிறிய கோவில்களை கட்டிகொண்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் கூட்டம் ஒன்று இருக்கும். எந்த கோவிலை பார்த்தாலும் நமது கைகள் அந்த ஆலயத்தை நோக்கி மனமார பிரார்த்திக்கும். ஆனால் உண்மையான ஆலயத்தை உணர்ந்தவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்பது அவரின் கருத்து.
ஊனுக்குள் உள்ளொளியை பார்க்க வேண்டும்....உண்மையான இருப்பிடத்தை காட்டவல்லவர்களே ஞானிகள் என்று தெளிவுபட கூறுகிறார்.

சிவவாக்கியரின் பாடல்கள் அனைத்தும் மக்களுக்காக எழுதப்பட்டவை .
கீழ்க்கண்ட பாடலினால் என் மனது மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியது. இதனை எழுதிய பின் 2 நாட்கள் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

மட்பாண்டங்கள் உடைந்தால் கூட அதனை தேவை என்று மக்கள் எடுத்து அடுக்கி வைத்துக்கொள்வார்கள்.
வெங்கலத்தினால் செய்த பாத்திரங்கள் கீழே விழுந்து நசிங்கனாலோ அல்லது உடைந்தாலோ அதனையும் கூட வேனுமென்று எடுத்து வைத்து கொள்வார்கள்.
ஆனால் மாபெரும் சக்தி வாய்ந்த இந்த மானுடல் இறந்த போது நாறுமென்று தூக்கி வீட்டுக்கு வெளியே வைப்பார்கள். இதன் மூலம் என்னில் நீ இருந்து கொண்டு செய்யும் மாயம் என்ன மாயம் ஈசனே என்று கேட்கிறார்.

இந்த உடலின் மதிப்பு மட்பாண்டங்களுக்கு உள்ள மதிப்பு கூட கிடையாது( உயிர் பிரிந்தால்).
உயிர் = ஈசன்= அருட்பெருஞ்சோதி=அல்லா=ஏசு.
கடந்து உள்ளே பாருங்கள்( கட + உள்ளே ) = கடவுள்.
கடம் + உள் = கடவுள் ( கடம் = உடம்பு ,உடல்).