வெள்ளி, 3 அக்டோபர், 2014

ஆராதனைக்குரிய நமது ஆசார்ய புருஷர்கள் வேதங்களைப்படிக்க ஆசைப்படுகின்றீர்களா?


வேதங்களைப்படிக்க ஆசைப்படுகின்றீர்களா?
அப்படியானால் அவற்றைப் படிக்க ஆரம்பிக்க முன்னர் அவற்றை உருவாக்கிய/கேட்டுணர்ந்த மஹரிஷிகளைப் பற்றியும்
நீங்கள் அறிந்து கொள்வது நல்லதாகும்.
வேதவ்யாஸர் (கிருஷ்ணத்வைபாயணர்)
கிருஷ்ண பரமாத்மாவின் மற்றொரு அவதாரமான இவர் வஸிஷ்டரின் கொள்ளுப் பேரன் சக்தி முனிவரின் பேரன், பராசர முனிவரின் குமாரர் ஆவார். இவர் காற்றுவெளி மண்டலத்தில் ஒலிவடிவாய் இருந்த அனைத்து வேதங்களையும் புராணங்களையும் தன் தவ வலிமையால் கண்டு அவைகளுக்கு புத்துயிர் ஊட்டி அவைகளை (ரிக் 21, யஜுர் 101, சாமம், 1000, அதர்வணம் 9) என்று பிரித்தும் விரித்தும் (விரிவாயும்) வழங்கினார். அந்த க்ருஷ்ணத்வைபாயணரை நாம் தினமும் நமஸ்கரிக்க வேண்டும்.
ஆஸ்வலாயணர்
வ்யாஸர் வழங்கிய 21 கிளைகளை உடைய ரிக் வேதத்தில் தற்போது தென்னிந்தியாவில் ஒன்றும் வட இந்தியாவில் ஒன்றும் 2 கிளைகள் மட்டுமே உள்ளது. தென்னிந்தியாவில் சாகல சாகையும் வட இந்தியாவில் பாஷ்கள சாகையும் உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள சாகல சாகை (ரிக்) க்கு க்ருஹ்ய சூத்ரம் (பூர்வ அபர ப்ரயோகங்களை) வழங்கி ரிக் வேதிகளுக்கு அருளிய ஆசார்யர் ஆஸ்வலாயனரை நாம் தினசரி நமஸ்கரிக்க வேண்டும்.
போதாயனர்
வ்யாஸர் வழங்கிய யஜுர் வேதத்தில் கிருஷ்ண யஜுர் வேத சாகைகள் (89 சுக்ல யஜுர் 15 ஆக 101) அந்த 86 சாகைகளில் தற்போது நம்மிடம் உள்ளது தைத்தரீய சாகை என்ற ஒன்று மட்டுமே. அந்த க்ருஷ்ண யஜுர் வேத தைத்தரீய சாகைக்கு மட்டும் க்ருஹ்ய சூத்யம் (பூர்வ அபர) செய்த ஆசார்யர்கள் 6 பேர் அதில் முதன்மையானர்வர் போதாயனர் ஆவார். அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கணக்கு முறையை (மேதமேடிக் வேதிக்மேதமேடிக்) வழங்கியவரும் இவரேயாவார். ஆகவே அந்த ஆசார்யருக்கு நமஸ்காரம்.
ஆபஸ்தம்பர்
போதயனர் வழங்கிய பூர்வ அபர கர்மாக்களை நன்கு ஆய்வு செய்து சற்று சுருக்கமாகவும் எளிமையாகவும் மற்ற வேதத்தைச் சார்ந்தவர்களும் கூட எளிதில் புரிந்து கொள்ளும்படி தன் ஞானத்தையும் போதாயனரின் கருத்துக்களையும் இணைத்து ஒரு கிருஹ்ய சூத்ரத்தை (ஆபஸ்தம்பம்) வழங்கினார். இன்று தென்னிந்தியாவைப் பொருத்தவரை ஏறத்தாழ 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் கடைபிடிக்கும் சூத்ரம் ஆபஸ்தம்பர் செய்ததாகும். அந்த ஆசார்யர் ஆபஸ்தம்பருக்கு நமஸ்காரம்.
காத்யாயனர்
வ்யாஸர் வழங்கிய யஜுர் வேதம் 101 கிளைகளில் 15 கிளைகள் சுக்ல யஜுர் வேதத்தைச் சார்ந்தது. குருகுலத்தில் பயிற்சி பெற்ற யாக்ஞவல்க்யர் சூழ்நிலை காரணமாக கற்ற வேதத்தை குருவிற்கே அற்பணித்துவிட்டு சூர்யனிடம் சுக்ல யஜுர்வேதத்தின் 15 கிளைகளையும் கற்று நமக்கு வழங்கினார். அதில் 1 கான்வ சாகை 2 மாத்யந்தின சாகை. அந்த 15 கிளைகளுக்கும் ஒரே க்ருஹ்ய சூத்ரம். அதைச் செய்தவர் காத்யாயனர். ஆகவே அந்த ஆசார்யர் காத்யாயனர் அவர்களுக்கு நமஸ்காரம்.
த்ராஹ்யாயனர் (காதிரர்)
வேதவ்யாஸர் வழங்கிய சாமவேதம் 1000 கிளைகளை உடையது. அதில் தற்போது 3 மட்டுமே உள்ளது. 1 ராணாயணீய சாகை, 2. கௌதும சாகை, 3. ஜைமினி சாகை. அதில் தென்னிந்தியாவில் அனேகமாக ரானாயணீய சாகை மட்டுமே உள்ளது. அந்த ராணாயணீய சாகைக்கு கிருஹ்ய சூத்ரம் (பூர்வ அபர ப்ரயோகம்) செய்து அருளியவர் த்ராஹ்யாயனர் ஆவார். அவருக்கு மற்றொரு பெயர் காதிரர் (காதிர க்ருஹ்ய சூத்ரம்). ஆகவே அந்த ஆசார்யர் த்ராஹ்யாயணர் அவர்களுக்கு நமஸ்காரம்.
கௌசிகர்
வ்யாஸர் வழங்கிய அதர்வன வேதம் 9 கிளைகளை உடையது. அதில் 2 கிளைகள் மட்டுமே தற்போது உள்ளது. (ஆயுர்வேதம், மந்திர சாஸ்திரங்கள் மிகவும் தெளிவாக அமைந்துள்ளது.) ஒன்று கௌனக சாகை, மற்றொன்று பிப்பலாத (பைபிலாத) சாகை. இதில் சார்ந்தவர்கள். அவர்களில் சௌனக சாகையைச் சேர்ந்தவர்களே அதிகம். அந்த சௌனக சாகைக்கு க்ருஹ்ய சூத்ரம் (பூர்வ, அபர ப்ரயோகம்) செய்து அருளிய ஆசார்யர் கௌசிகர் ஆவார். அந்த கௌசிகருக்கு நமஸ்காரம்.
ஆண்டப்பிள்ளையார்
எல்லா வேதத்தைச் சார்ந்தவர்களும் அக்னி ஹோத்ரம், பசுபந்தம், ஸோமயாகம், கருட சயனம், வாஜ பேயம், அப்தோர் யாமம், உக்த்யம், ஷோடசீ போன்ற யாகங்களை அனுஷ்டிக்க அந்தந்த ஆசார்யர்கள் ப்ரயோகங்களை வகுத்திருந்த போதிலும் அதிகமாக தற்போது நடைமுறையில் அனுஷ்டிக்கப்படுவது ஆண்டப்பிள்ளையார் வகுத்த வழிமுறைகளையே சார்ந்துள்ளது. ஆகவே அந்த சிரௌத ஆசார்யர் ஆண்டப் பிள்ளையார் அவர்களுக்கு நம்ஸ்காரம்
http://www.ulloli.com/?p=3286
http://www.vedadharmatrust.org/rishis.asp
யஜுர் வேத சாகைகள்
யஜுர் வேத விளக்கம் 1
நாம் அறிவோம், கேட்டதுண்டு, கண்டதில்லை. இப்பொழுதோ கண் முன்னால் வந்து விட்டது. பாராயணம் செய்யுங்கள், பயன் பெறுங்கள்.
நான்கு வேதங்கள் – ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண  வேதம்.
இப்பொழுது நாம் கவனிப்பது – யஜுர் வேதம். இது இரண்டு வகைப்படும். அவையாவன: 1. கிருஷ்ண யஜுர் வேதம், 2. சுக்ல யஜுர் வேதம்.
யஜுர் வேத சாகைகள் 101 ஆனால் பல சாகைகள் இப்பொழுது காணக் கிடைக்காதவைகளாகி விட்டன. 35 சாகைகள் மட்டுமே இப்பொழுது அறியக் கிடைத்துள்ளன.
அனைவரையும் ஈர்க்கும் வேதம் – கிருஷ்ண யஜுர் வேதம்,
அறிவொளி நிறைந்த வேதம் – சுக்ல யஜுர் வேதம் (அறிவும் ஒளியும் இணைந்தால் அறிவொளி)
(தொடர்ச்சி – கிருஷ்ண யஜுர் வேத சாகைகள்)
யஜுர் வேதத்தில் தேவர்கள்
1. அக்னி
2. இந்த்ரன்
3. சூர்யன்
4. விஷ்ணு
5. சோமன்
6. மருத்துக்கள்
7. புவி
8. ஜலம்
9. உஷை
10. வருணன்
11. ருத்ரன்
12. ஸரஸ்வதி
இவர்களே முதன்மை பெறும் தேவர்களாவர்.
தேவர் என்ற சொல் பொதுவாக நமக்கு உதவும் புருஷன் மற்றும் நாங்கள் பயன் பெறுகின்ற நல்ல பொருட்களையும் அடக்குவதாகும்.
சில வேளைகளில் கண், காது, மூக்கு ஆகியவைகள் கூடத் தேவர்கள் ஆகும் சந்தர்ப்பங்கள் உள்ளன.
க்ருஷ்ண யஜுர் வேத அனுவாகங்கள்
இந்த அனுவாகங்களின் ஒவ்வொரு ஐம்பது (50) பதங்களுக்கும் ஒரு இலக்கம் கொடுக்கப்படுகின்றது. அதன் இறுதியில் ஒரு குறிப்பு வாக்கியம் (வசனம்) 50 பதங்களுக்குக் குறைந்தால் அவற்றின் எண்ணிக்கை தனியாகத் தெரியப்படுத்தப்படும்.
ஓவ்வொரு ப்ரஸ்ன முடிவிலும் சகல அனுவாகங்களினதும் முதல் சொல்லுடன் அந்தந்த அனுவாகங்களினதும் மொத்தப் பதங்களின் எண்ணிக்கை காட்டப்படும்.
ப்ரஸ்னத்தின் சொற்கள், சொற்களின் தொகை, ஒவ்வொரு காண்ட முடிவிலும் ப்ரஸ்னத்தின் முதற் சொல்லுடன் சொற்களின் எண்ணிக்கை காட்டப்படும்.
தைத்திரிய ஸம்ஹிதை
ரிஷி தித்திரி பரம்பரையில் வரும் க்ருஷ்ண யஜுர் வேத மந்த்ரங்களுக்குத்தான் ‘தைத்திரிய ஸம்ஹிதை’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நூல் ஏழு காண்டங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. காண்டங்களை மீண்டும் ப்ரபாடகங்கள் அல்லது ப்ரஸ்னங்கள் என்று பிரிக்கப்படும். அவைகளை மேலும் அனுவாகங்கள் என்றும் பிரித்;துள்ளனர்.
மூல ஸம்ஹிதை
கிருஷ்ண யஜுர் வேத தைத்திரிய ஸம்ஹிதை
ஸம்ஹிதை என்பது பொதுவாக மந்த்ரக்கூட்டங்களைக் குறிப்பிடும் சொல்லாகும்.
தைத்திரிய ஸம்ஹிதை – க்ருஷ்ண யஜுர் வேதம். இது ப்ராமணமும், மந்த்ரங்களும் கலந்தது. பிராமணம் – ப்ரயோக பாவம் – எனவே வேதம் ஆக இயலாது. அனுவாகங்களின் முடிவில் மூன்று எண்கள் காணப்படும். இவை மூல நூலின் குறிப்புக்களாகும். முதலாம் எண் – காண்டத்தைக் குறிக்கும். இரண்டாம் எண் – ப்ரஸ்னத்தைக் குறிக்கும். மூன்றாம் எண் – அனுவாகத்தைக் குறிக்கும்.
யஜுர் வேதம் – தலைப்புகள்
ஆதி மூல வேதத்தில் தலைப்புகள் காணப்படுவதில்லை. பிற்காலத்தவரே தலைப்புக்களை இணைத்துள்ளனர். அனுவாகங்களுக்குத் தலைப்புக்கள் வழங்க முயல்வது கடினமான பணியாகக் கருதப்படுகின்றது.
ஒரே அனுவாகத்தில் பல வேறுபட்ட விஷயங்களைக் காணலாம். ஒரே மந்திரத்தில் பல வேறு விஷயங்கள் தெளிவாக்கப்படும். ஒரு சொல்லிற் கூட உலகம் முழுவதுமே நிறைந்திருக்குமாம்.
இவற்றை விட ஆண், பெண், ஒன்றன் பால், பலவின் பால், ஒருமை, பன்மை, தன்மை, முன்னிலை, படர்க்கை, இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம், கர்த்தா, கர்மா, க்ரியை, அனைத்துமே மலர்ந்தும், மறைந்தும், இணைந்தும் பிரியலாம்.
பண்டைய நாட்களில் பெரும் மேதாவிகள், ஒரு வேத மந்த்ரத்தைப் பல ஆண்டுகளாகத் த்யானம் செய்தும், அதன் பின்னரும் தங்களுக்கு அது சரியாகப் புரியவில்லை என்றே சொல்வார்களாம். அப்படியானால் சகல மந்த்ரங்களுக்கும் தலைப்புக்கள் வழங்குவதில் எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை உணரலாம்.
க்ருஷ்ண யஜுர் வேத சாகைகள்
1. ஆக்கினிவேசம்
2. ஆபஸ்தம்பீ;
3. ஆருணி
4. ஆஹவரகம்
5. ஒளகேயம்
6. ஒளபமன்னியவம்
7. கபிஷ்டலகடம்
8. காமலாயினம்
9. காலேதை
10. சாகலேயம்
11. தாண்டினம்
12. தும்புரு
13. பாதண்டநீயம்
14. பாலங்கினம்
15. மானவம்
16. வாதூலம்
17. வாராயணியம்
18. வைகாநஸம்
19. ஆத்திரேயம்
20. ஆர்ச்சாயினம்
21. ஆலம்பினம்
22. உலபம்
23. கடம்
24. காண்டிகீயம்
25. காலாபம்
26. சரகம்
27. சாராணீயம்
28. துந்துபம்
29. தைத்தீரீயம்
30. பாரத்வாஜி
31. ப்ராச்யகடம்
32. மைத்ராயணீயம்
33. வர்தந்தவயம்
34. வாராஹம்
35. சாட்யாயநீ
36. ஸ்யாமாயனம்
37. ஹாரித்ரவ்யம்
38. ஹிரண்யகேசி
39. ஸ்வேதாஸ்வதரம’
40. ஹாரீரதிம்