வெள்ளி, 28 நவம்பர், 2014

ஜீவன் முக்தர்கள் ஜீவசமாதி


போகமுனிவரின் ஜீவசமாதி பழனி மலையின் மேல்  முருகன் சன்னதியின் சுற்றுபிரகாரத்தில் அமைந்துள்ளது .புலிபாணி முனிவரின் குரு ஆவார் பழனிமுருகனின் நவபாசான சிலையை உருவாக்கியவரும் இவரே .பழனிமலை செல்லும் பலர் இவரது ஜீவசமாதியை தரிசிக்க மறந்து விடுகிறார்கள் இவர் நிறைய மருத்துவம் சம்பந்தமான நூல்களையும் இயற்றியுள்ளார் .


படே சாஹிபு ஜீவசமாதி சின்னபாபு சத்திரம் என்ற இடத்தில அமைந்துள்ளது .இந்த இடம் பாண்டிச்சேரியில் உள்ளது .இசையால் பலரின் நோய்களை தீர்த்தவர் என்று கூறப்படுகிறார் .
அடியேனும் இந்த புனிதமான இடத்திற்கு சென்று சேவித்தேன்.இவரிடம் சென்றால் பிணி அகலும் .ஏவல் ,
பில்லிசூனியம் ,போன்ற சங்கடங்கள் நீங்கும் .


கண்ணப்பசாமிகளின் ஜீவசமாதி சென்னை புழலில்
அமைந்துள்ளது. இவரின் முழு விபரம்
அறிய www.kannappa.org ஓபன் செய்யுங்கள்.
அற்புதமான மகானின் பாதார விந்தங்களுக்கு
என்னுடைய நமஸ்காரங்கள்.
சத்குருவின் படங்களும், அவரின்
ஜீவசமாதியின் படத்தையும் இங்கே
வெளியிட்டுள்ளேன்.
எனது குருவின் ஜீவசமாதி பழனியில்
அமைந்துள்ளது. பழனியாண்டவர்
கலை கல்லூரி எதிரில் அமைந்துள்ளது.
குருவின் பக்தர்கள் பலர் இன்னும்
குருவை காண்கிறார்கள். இதனை
அவர்களிடமே கேளுங்கள்.
சித்தர்கள் இயக்கம் அறிவியலுக்கு
அப்பாற்பட்டது. குரு இல்லாமல்
முக்தி என்பது அரிது.


நமது குருவின் பதேசங்கள்:
1 எண்ணங்கள் நல்லவையாக இருந்தால்
நம்மை சுற்றிலும் நல்ல அருளானது
உருவாகும் .
2 . நான் யார் என்று உனக்குள்ளே ஆராய்வது
மாயை விலக வழிவகுக்கும்.
3 .மெய் வழி மெய் உணர்.

நடனவேணுகோபால் சுவாமிகளின் ஜீவசமாதி   மதுரை அழகர்கோயில் ரோட்டில் காதக்கிணறு  என்ற இடத்தில அமைந்துள்ளது .நாயகன் ,நாயகி  bhavathil  இறைவனை வழிபட்டவர் .பற்பல அற்புதங்களை செய்தவர் .

காரை சித்தரின் ஜீவசமாதி கும்பகோணம் அருகில் அமைந்துள்ளது .அழகாக ஆற்றின் கரை  ஓரம் மனதை ஈர்க்கும் வண்ணம் உள்ளது .
அடியேன் இங்கு சென்று தரிசித்து உள்ளேன்.

சூட்டுகோல் மாயாண்டி சுவாமிகளின் ஜீவசமாதி திருப்பரம்குன்றத்தில் அமைந்துள்ளது.அருகிலேயே சோமப்பா என்ற மகானின் ஜீவசமாதியும் உள்ளது.
அங்கேயே ஆஞ்சநேயர் ஆலயம் ஒன்றும் உள்ளது. 
முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு ஆன்மீகப் பெருமக்கள் அனைவரும் இங்கேயும் சென்று வர வேண்டுகிறேன் .


சாது சாமி மடமும்
ஜீவசமாதியும் பழனியில் கிரிவலத்தில் அமைந்துள்ளது.

அரவிந்தர் ,அன்னையின்சமாதிகளும் ,ஆசிரமும் பாண்டிச்சேரியில் அமைந்துள்ளது .ஆரோவில் ஆலயமும் உள்ளது .தரிசனம் செய்பவர்களுக்கு மனஅமைதியும்,நிம்மதியும் ஏற்படும் என்பது நிச்சயம் .
வல்லநாடு சித்தரின் 
சமாதி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில்
ஒரு ஆலயமாகவே நன்கு அமைந்துள்ளது .


ராம் பரதேசி சுவாமிகளின் ஜீவசமாதி  பாண்டிச்சேரியில் அமைந்துள்ளது . பாண்டிச்சேரி ஒரு ஞான பூமியாகும் . ஏராளமான மகான்களின் ஜீவசமாதிகள் இங்கு உள்ளது. அனைவரும் சென்று  குறைந்தது மூன்று நாட்களாவது தங்கி  தரிசிக்க வேண்டுகிறேன் .