புதன், 29 ஏப்ரல், 2015

சித்தர்ளின் இரசவாதம்

உண்மையான இரசவாதம் என்பது தத்துவம். தத்துவம் என்பது இந்து, விந்து, உயிர், அணு என்று பொருள். 
முதல் கீரன் உகத்தில் கல் தோன்றி மண் தோன்றி இயற்கை என்ற பஞ்சபூத தத்துவத்தின் செயல்பாட்டால் விதை தோன்றி பருவகால மாற்றத்தால் பயிரினம், உயிரினம் தோன்றி உயிர்களின் என்நெற்ற மாற்றத்தால் உருவம் தோன்றி உருவமாற்றத்தால் மனிதன் தோன்றினான். மனிதன் மனிதனாக வாழ்வதற்க்கு இயற்கையின் சத்திகளை கண்டு சிந்தித்து பயிற்சி, முயற்சி செய்து சித்தியானர் சித்தர்கள். 
சித்தர்களின் இந்து மதமான இந்து வேதம் இந்து வேதத்தின் ஆண்டு இன்று சுமார் 43,73,116 நாற்பத்தி மூன்று லட்சத்து எழுபத்தி மூன்று ஆயிரத்து நூற்றி பதினாறு ஆண்டுகள் ஆகிறது. 
இவ்வாண்டுகளுக்கு முன் சித்தர்களின் தலைவனான முதல் சித்தன் சீவனான சிவன் ஆயகலை 64- அறுபத்தி நான்கு அதில் 54- ஐம்பத்தி நான்காவது கலையாக ரசவாதக் கலை தத்துவம் என்று கூறுகிறார். 
இரசவாதம் என்பது மிகவும் கீழான உலோகமான இரும்பை மிக உயர்ந்த உலோகமான பொன் தங்கம்.
தங்கமாக செய்வதற்கு பல ரசவாத மூலிகைகளின் சாறு கொண்டு சுருக்கு கொடுத்து அரைத்து கவசம் செய்து புடம் செய்து தங்கம் செய்யலாம்.

அத் தங்கத்தை இதே மூலிகைகள் கொண்டு பற்பம் செந்தூரம் செய்து சாப்பிட உடம்பை காயத்தை எந்தவித பிணி பதிப்பு இல்லாமல் நீண்ட நாள் ஆயுளுடன் இருப்பதற்க்கு செய்த பொருள் இதுவே ரசவாத மூலிகை என்றும், காய கற்பம் என்றும் பல தமிழ் சித்தர்கள் கூறுகின்றனர்.


இரசவாதம் என்பது திரவம் தண்ணீர் வடிவம் உள்ள இலிங்க ரசத்தை சில மூலிகைகளின் சாறு கொண்டு திட பொருள் அதாவது கெட்டியான பொருள் செய்வதற்கு உதவும் மூலிகை ரசவாத மூலிகை என்று தமிழ் சித்தர்கள் கூறுகின்றார்கள்.

இத்திடப் பொருளை பல ரசவாத மூலிகைகளின் சாறு கொண்டு சுருக்கு கொடுத்து அரைத்து கவசம் செய்து புடம் போட்டு பற்பம் செந்தூரம் செய்து சாப்பிட உடம்பை காயத்தை அழியாதிருக்க செய்து காக்கின்ற மூலிகைகள் என்ற காயகற்ப மூலிகைகள் என்று பல தமிழ் சித்தர்கள் கூறுகின்றார்கள்.

இரசவாதம் வேறு ஆடல் வல்லான் எல்லாம் வல்லான் சித்தர்களின் தலைவன் முதல் சித்தன் சித்தர் பீடாதிபதி சிவனான சிவன் சிவபெருமான் ரசம் என்பதை நவநீதிஎன சிறப்பித்து சொல்லப்படும் பூமிலுள்ள சத்திவாய்ந்த பொருளான தொட்டால் ஓடக் கூடியதுமான பாதரசத்தை புகையாது செய்தும் மணியாக கட்டி அதற்கு சாரனை மூலம் குளிகை செய்து சித்திக்கு வேண்டிய வழியில் பயன்படுத்தினர். 

இதை தாயுமானவர் கூறுகிறார்:

வெண் தணலில் ரசம்வைத்து ஐந்து லோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம் 
வேறொருவர் காணாமல் உலகத் துலாவலாம்
விண்ணவரை ஏவல் கொள்ளலாம் 
சந்ததமும் இளமையோ டிருக்கலாம் 
மற்றொரு சரீரத்தினும் புகுதலாம்.

இதையே அகத்தியர் கூறுகிறார்:

தானென்ற ஞானிக்கு குளிகை யுண்டு 
சர்ருகிறேன் புலத்தியனே சார்ந்துகேளு 
தேனென்ற விந்துவல்லோ ரசமிதச்சு 
திரண்டுமணி யாவதற்கு வகையைக்கேளு 
மானென்ற அக்னியே புடந்தா னாகும் 
மக்களே ரசமனியின் மார்க்கத் தாலே 
ஊனென்ற சடத்திலே மணிபோற் செய்தால்
உத்தமனே ககனத்தி லோ லாமே

கொங்கணர் கூறுகிறார், 
ஓடலாம் அட்சயமாம் ரசத்தை கேளு 
உத்தமனே பதினொருக்கால் விடுவித்தாக்கால் 
ஆடலாம் அட்டமா சித்தியெட்டும் 
அணி மாவும் கரிமாவும் லகிமாவோடு 
தேடலாம் மகிமாவும் பிரார்த்தியோடு 
சேர்ந்த எட்டு மாடலாம் செய்யக்கேளு
நீடலாம் பூரணத்தில் சென்றுபுக்கி
நிலைக்கலாம் திரும்பலாம் நீங்கள்கேளே 

பாம்பாட்டி சித்தர் சொல்லுகிறார்:
தேனில் வீழ்ந்த ஈயைப் போலச் சிந்தை குலைந்து 
திகையாமல் சிற்சொருப தெரிச னைக்கண்டு 
வானிற்பறந் திடச்சுத வான்ம ணிதீர்ந்து
வாயீற் போட் டேகநீ நின்று ஆடு பாம்பே!
யூகிமுனி சொல்லுகிறார்,

இருந்து பார் சூதத்தை எவ்வண்ணத்தாலும்
இருக்கினலன் தேவனடா இடுக்கணீல்லையே

போகர் சொல்லுகிறார்:
ஆடுகின்ற சூதமென்ற யானை கட்டுமானால்
ஆச்சர்ய ரசவாதம் கொசுவைப் போலாம் 
நாடுகின்ற சூதமணி தாழ்வாடமாய்ப் போட்டு 
நலமாக சுகாசனத்தி லிருந்து கொண்டு
ஊடுவாய் சிவசிவா வென்று கொண்டால் 
உவந்து முன்னே பஞ்சகர்த்தர் நிர்பார்பாரு 
தேடுவார் கேட்டதெல்லா மீவார் ரசன்
செக சால வித்தையெல்லார் தெளிந்து போமே

உண்மையான இரசவாதம் என்பது தத்துவம். தத்துவம் என்பது இந்து, விந்து, உயிர், அணு என்று பொருள். 

இருத்தி பார் பாதரசத்தை எந்த விதத்தாலும் ரசத்தை இருக்கி கட்டியவன் இறைவனுக்கு சமம் ஆன்றோர் வாக்கு ஆண்டவன் வாக்கு மெய்ஞான சித்தர்களின் வாக்கு. ரசம் என்பது விந்து கரு உரு உருவம் மனிதன் என்று பொருள் மண் நிலம் நீர் தீ காற்று ஆகாயம் என்றும் மெய்,வாய், கண், மூக்கு, செவி என்றும் சொல்லுகிறார்கள். இதை ஆள்வது ஒரு தத்துவம்.

இத் தத்துவத்தை சீவனான சிவன் முதல் சித்தன் சொன்னது. ரசம் என்ற விந்து நாதம் என்ற சுரோணிதம் சேர்ந்து கருவின் மூலமாக ஏற்பட்ட உயிர் என்ற உயிர் உருவத்தை ஆள்வது தொன்னுத்தாறு தத்துவம் கூறுகின்றது. இதை திருமூலர் திருமந்திரத்தில் விளக்குகிறார்,

முப்பது முப்பது முப்பத் தறுவரும்
செப்பு மதிலுடைக் கோவிலுள் வாழ்பவர்
செப்பு மதிலுடைக் கோயில் சிதைந்தபின் 
ஒப்பி லனைவரும் ஓடெடுத்தாரெ
தத்துவங்களின் தோற்றம் ஒடுக்கம் முதலியவைகளை ஆராய்ந்து அறிவது தத்துவ விசாரணை. அவற்றை தன் வசப்படுத்தி வெற்றி கொண்டால் மரணம் இல்லாத  பெருவாழ்வு வாழலாம்.

இல்லையேல் திருமூலர் திருமந்திரத்தில் கூறுகிறார் 
கோயில் கொண்டன்றோ குடிகொண்ட ஐவரும் 
வாயில் கொண்டங்கே வழிநின்றளுவர் 
தாயில் கொண்டாற் போல் தலைவனென் னுட்புக 
வாயில் கொண்டீசனு மாளவந்தானே

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

ஞானிகளின் திருவடிகளைப் பூசிப்போம்!!!ஞானம் பெற்று வாழ்வோம்!!!

ந்த கலிகாலத்தில் ஆன்மீகவாதிகள் பல கோவில்களுக்குச் செல்கிறார்கள். புனித தீர்த்தத்தில் நீராடுகிறார்கள். எல்லாவற்றிற்கும் நோக்கம், ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும் என்பதற்காகத்தான். ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டுமென்றால் தக்க ஆசான் வேண்டும். உலகத்தில் உள்ள குருமார்கள் சிலர் பொருள் வெறியர்களாகவும், ஜாதி வெறியர்களாகவும், மத வெறியர்களாகவும், காமுகர்களாகவும், வீண் ஆரவார ஆடம்பர பிரியர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் ஆடம்பரம் செய்வது ஆன்மீக நாட்டம் உடையவர்களை வசப்படுத்தி, பொருளாதாரத்தைச் சேகரிக்கத்தான். அவர்களுக்கு உண்மைப்பொருள் தெரியாது.மேலும், சிலர் ஜாலம் செய்வார்கள், சிலர் பரப்பிரம்மம்போல் காவி உடையும், ஜடா முடியும், புலித்தோல் ஆசனமும், யோக தண்டமும், உருத்திராட்ச கொட்டையும் அணிந்து மக்களை ஏமாற்றுவார்கள். இவர்களிடம் செல்லுகிறவர்கள் பொருளையும் இழப்பார்கள், நல்ல இல்லறத்தையும் விட்டு வந்துவிடுவார்கள் மேலும் போலி ஆசாமிகளின் பேச்செல்லாம் நாளுக்கு நாள் மாற்றம் அடைந்துகொண்டே இருக்கும். உறுதியான கருத்துக்களைச் சொல்ல மாட்டார்கள். பாவம் அவர்களுக்கே உண்மைப்பொருள் தெரியாது. இவர்களின்
ஆசான் அகத்தீசனைப் பூஜை செய்தால் ஞானிகளின் பெருமையை உணர முடியும். ஞானிகளின் பெருமையை உணர்ந்தவர்கள் போலி ஆடம்பர ஆசாமிகளைப் புரிந்து கொள்ள முடியும். உண்மைப் பொருள் அறிந்த குருவருள் இல்லையென்றால், இது போன்ற மூடர்களிடம் அகப்பட்டு நரகத்திற்குச் செல்வார்கள். உண்மைப்பொருள் அறிந்த ஆசானிடம் சென்றால் எல்லா நன்மையும் உண்டாகும். குருவருள் விரும்பாதவர்களுக்குக் கேடுதான் வரும்.
ஆசான் அகத்தியர் ஞான சைதன்யம் 51ல் நான்காம் கவியில் 3, 4 ஆகிய வரிகளில்
என்ன படித்தாலும் குரு இல்லாச் சீடன்
என்ன பிரயோசனமாம் அலைந்து சாவான்.
என்று ஆசான் அகத்தீசர் தம் பாடலில் பாடியுள்ளார்கள். ஆகவே, ஞானிகளை வணங்கினால் நாம் செய்த பாவங்கள் தீரும், பாவங்கள் தீர்ந்தால் அறியாமை நீங்கி, தெளிவான அறிவு உண்டாகும். தெளிவான அறிவுள்ளவர்கள்தான் நல்வினை தீவினையை அறிய முடியும். நல்வினை தீவினையை அறிந்தவர்கள்தான் தீவினையை நீக்கி நல்வினையைப் பெருக்கிக் கொள்வார்கள். நல்வினையைப் பெருக்கிக் கொண்ட மக்கள்தான் வீடுபேறு அடைவார்கள்.
வீடுபேறு அடைய விரும்புகிறவர்கள், மகான் ரோமரிஷி  அவர்கள் இயற்றிய பூஜா விதி 7ல் கவி எண் 2ல் பாடிய பாடல்
காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மசித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புத்தானே.
மேற்கண்ட பாடலில் காப்பான கருவூரார் போகநாதர் என்றும், கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர் என்றும், மூப்பான கொங்கணரும் பிரம்மசித்தர் என்றும், முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர் என்றும், கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் என்றும், கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர் என்றும், வாப்பான வாதத்திற்கு ஆதியான வாமுனி(வாசமுனி என்பது தூர்வாசர் ஆகும்) கமலமுனி என்றும் ஆசான் ரோமரிஷி  அவர்கள் தம் கவியில் பாடியுள்ளார்கள். இவர்கள் தான் இல்லறம் மற்றும் துறவத்திற்கு பாதுகாவலர்களாக இருப்பார்கள்.
மாமேரு எனத்திகழும், இந்த 14 ஞானிகள் அடங்கிய இந்த பாடலை தினமும் காலையிலும், மாலையிலும் படித்து பாராயணம் செய்தும், தினமும் பூஜைசெய்தும் வந்தால், மனித வர்க்கம் அடையமுடியாத, அறியமுடியாத, உணர முடியாத ஒன்றை நாம் உணர முடியும். மேலும், பொல்லாத வறுமை தீரும், கொடிய நோய் தீரும் தீராத நியாமான வழக்குகள் தீரும், குடும்பத்தில் அமைதி ஏற்படும். தீய நட்பு  நம்மை சார்ந்திருந்தாலும் தானே விலகி விடும். பண்புள்ள புத்திர பாக்கியம் அமையும், சொந்த வீடு இல்லாதவர்களுக்குச் சொந்த வீடும் அமையும். தீராத கடன் சுமையும் தீரும், செல்வமும் பெருகும், தகுதியுள்ள நட்பும் அமையும், தீய பழக்கங்களுக்கு அடிமையாக இருந்தாலும், தீய பழக்கங்கள் நீங்கிவிடும். கொடிய பகையும் நீங்கும், மன அமைதி ஏற்படும். எதையும் ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய சிறப்பறிவு உண்டாகும். மேலும் ஆன்மா மாசுபடுவதை அறிந்து, மாசை நீக்கிக்கொள்ளவும் அறிவு உண்டாகும். நாம் மேற்கொள்ளும் காரியங்கள் எதுவானாலும் குறிப்பாக உத்தியோகம், தொழில், வியாபாரம், விவசாயம், இன்னும் குடும்பத்தில் சுபகாரியங்கள் எதுவானாலும் தடையில்லாமல் நடக்கும். எதிலும் வெற்றி! எப்போதும் வெற்றி! வெற்றியோ வெற்றி!
குறிப்பு:
தவம் என்பதே ஞானிகளின் திருவடியைப் பூஜிப்பதுதான் தவமாகும். மற்றதெல்லாம் அவமாகும். ஆகவே அகத்தீசனைப் பூஜிப்போம்! அருள்பெற்று வாழ்வோம்!!.
மகான் சட்டைமுனிநாதர் அவர்கள் இயற்றி ஞானவிளக்கம் 51-ல் 21-ஆம் பாடல்
போடுவது திலதமடா மூலர் மைந்தர்
போகர் கருவூராரைத் தியானம் பண்ணு
நாடுநகர தனிலுள்ள ஜீவசெந்து
நாதாக்கள் சித்தருக்கும் தோணாதையா
ஏடுதனில் எழுதினதோர் பாடல் என்று
எண்ணாதே ஒருநாளும் தப்போ இல்லை
தேடினபேர் பொருள்கோடி தனமீந்தாலும்
செப்பாதே இக்கருவை(ரகசியத்தை) உலகத்தோர்க்கே.
இப்பாடலின் சாரம்
வைணவர்கள் நெற்றியில் நாமம் இடும்பொழுது "ஓம் நமோ நாராயணா" என்றோ "ராமா" என்றோ நாமமிட்டுக்கொள்வார்கள். சைவர்களோ நெற்றியில் விபூதி வைக்கும்பொழுது "ஓம் விக்னேஷ்வரா" என்றோ "ஓம் முருகா" என்றோ "ஓம் நமச்சிவாய" என்றோ அல்லது "சிவ சிவ" என்றோ நெற்றியில் விபூதி வைத்துக்கொள்வார்கள். அது அவரவர்களின் கொள்கையாகும். மகான் சட்டைமுனிநாதர் அவர்களோ நெற்றியில் விபூதி வைக்கும் பொழுது "ஓம் திருமூலதேவாய நம" என்றும் அவர் மைந்தராகிய காளாங்கிநாதரை "ஒம் காளாங்கிதேவாய நம" என்றும் "ஓம் போகதேவாய நம" என்றும், "ஓம் கருவூர் தேவாய நம" என்றும் நான்கு மகான்களின் நாமத்தைச் சொல்லி நெற்றியில் விபூதி வைத்தால் கணக்கில் அடங்காப் பிறவிகள் எடுத்துச் செய்த பாவங்கள் பொடிபட்டுப் போகும். மேலும், ஞானியும் ஆவார்கள்.
இந்த உலகத்தில் உள்ள சில ஆன்மீக வாதிகளோ மற்றும் உள்ள சில கல்வியாளர்களோ இதை யாரும் பின்பற்றுவதில்லை காரணம் அவர்களுக்கு யாரும் இந்த உயர்ந்த உபதேசத்தை உபதேசிப்பதில்லை. அப்படியே சிலர் உபதேசித்தாலும், சிலர் அதை கடைப்பிடிப்பதில்லை. அது அவரவர்களின் வினைப்பயன். இந்த உயர்ந்த மார்க்கத்தை ஆசான் சட்டைமுனிநாதர் ஏதோ ஏட்டில் எழுதி வைத்துவிட்டார் என்று லேசாக நினைத்துவிட வேண்டாம். இந்த மார்க்கம் புண்ணியம் செய்த மக்களே உணர்வார்கள். மற்றவர்களோ இதை உணரமாட்டார்கள். அது அவர்களின் வினைப்பயனாகும்.
இந்த உயரிய மார்க்கத்தை மகான் சட்டைமுனி அவர்கள் சொன்னதே உலக ஆன்மீகப் பிள்ளைகளே பிழைத்துக் கொள்ளுங்கள் என்று கருணையோடு சொன்னதாகும். எனவே காலை 5 மணிக்கு எழுந்து காலைக்கடன் முடித்துவிட்டு வெண்ணிறத்துணியை விரித்து, அதன்மேல் அமர்ந்து திருவிளக்கு ஏற்றியும், நறுமணம் உள்ள பத்தி ஒன்றை வைத்தும், காலையில் 10 நிமிடம், மாலையில் 10 நிமிடமும் "ஓம் அகத்தீசாய நம"இ"ஓம் திருமூலதேவாய நம"இ "ஓம் காளாங்கிதேவாய நம"இ "ஓம் போகதேவாய நம"இ "ஓம் கருவூர் தேவாய நம" என்று திரும்பத்திரும்ப நான்கு மகான்களின் நாமத்தை நாமஜெபம் செய்து வந்தால் வீடுபேறு அடையலாம்(முக்தி பெறலாம். 
மேற்கண்ட பாடல் வைரம் பெருந்திய தீவினையாகிய மரத்தை வேரோடு வெட்டித்தள்ளும் கோடாலி ஆகும்.
சில ஆன்மீகவாதிகள் பலப்பல சித்தச் தத்துவ நூல்களைப் படித்தும், பக்தி நூல்களைப் படித்தும் இதில் என்ன சொல்லியுள்ளது, அதில் என்ன சொல்லியுள்ளது என்று ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பார்கள். பூஜை செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு முதுமை வந்துவிடும். அவர்களுடைய ஆராய்ச்சிகளுக்கும் முதுமை வந்துவிடும். ஆகவே எந்த ஆன்ம லாபமும் பெறமுடியாமல் வீணாகி விடுவார்கள். மேற்கண்ட நான்கு மகான்களின் நாமத்தைச் சொல்லி பூஜை செய்து வந்தால் எந்த நூலையும் படிக்கவேண்டிய அவசியம் இல்லை, ஆராய்ச்சியும் அவசியம் இல்லை. பல சாஸ்திர நூல்களையும், தோத்திர நூல்களையும் படித்து, பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்துகொண்டே இருப்பார்கள். இவர்கள் ஒரு எல்லைக்கு உட்பட்டே இருந்துவிடுவார்கள். சலிப்பில்லாமல் தினமும் ஞானியர்களைப் பூஜை செய்து வருபவர்கள் எல்லையில்லாப் பேரானந்தம் பெற்று பெருவாழ்வு வாழ்வார்கள்.
நான்கு மகான்களின் நாமத்தைச் சொல்லி பூஜிப்போம்,
மரணமில்லாப் பெருவாழ்வு பெற்று இன்புற்று வாழ்வோம்.
பெண்கள் நெற்றியில் பொட்டு(திலகம்) வைக்கும் பொழுது என்ன சொல்ல வேண்டும்
பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கும்பொழுது "ஓம் திருமூலதேவாய நம", "ஓம் காளாங்கிதேவாய நம", "ஓம் போகதேவாய நம", "ஓம் கருவூர் தேவாய நம" என்று சொல்லி நெற்றியில் பொட்டு வைக்க வேண்டும். இவ்வாறு காலை, மாலையில் நான்கு மகான்களின் நாமத்தைச் சொல்லிவிட்டு, நெற்றியில் பொட்டு வைத்தால், உடல் ஆரோக்கியம் உண்டாகும்,  திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமணம் நடக்கும், பண்புள்ள புத்திர பாக்கியம் அமையும், தகுதியுள்ள கணவன் அமைவான், இனம் புரியாத கவலைகள் நீங்கும், தன்னம்பிக்கை உண்டாகும், எந்த துன்பத்தைக் கண்டும் சோர்வடையமாட்டார்கள், எதையும் தாங்கிக் கொள்ளும் மன உறுதி ஏற்படும், எல்லா நோய்களும் நீங்கும், வீண் ஆடம்பரத்தில் நாட்டம் கொள்ளமாட்டார்கள், மற்றவர்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தமாட்டார்கள், தாம் உண்டு தன் வேலை உண்டு என்று தம் கடமையைச் செய்வார்கள், இன்னும் அநேக நற்குணங்களும் அமையும். மேலும், ஞானமும் சித்திக்கும். 
ஞானியர்களின் திருவடியைப் பூஜிப்போம், ஞானம் பெற்று வாழ்வோம்!

வியாழன், 23 ஏப்ரல், 2015

மகான் இராமலிங்க சுவாமிகள் - 14.

மேற்கண்ட 14 பாடல்களிலும் ஞானிகளைப் பூஜைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. ஞானிகள் என்றாலே நல்வினை தீவினையை நீத்து, தம்முள்ளே
அருடபெரும்; ஜோதியைக் கண்டவர்கள் ஆவார்கள். அவர்கள் ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல்,அருளல் ஆகிய ஐந்தொழிலையும் செய்யும் வல்லவர்கள் ஆவார்கள்.

இவர்கள் திருவடியைப் பூஜிக்க வேண்டும் என்றால், புண்ணியம் செய்திருக்க வேண்டும் அல்லது உண்மைப் பொருள் அறிந்த ஆசானின் உபதேசம் பெற்றிருக்க வேண்டும்.உலகத்தில் சிலர் சிறுதெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு, உயிர்பலி கொடுத்தலும், சிறுதெய்வங்களுக்கு கோவில் கட்டியும், கும்பாபிஷேகம் செய்தும் மற்றும் வீண் ஆரவாரச் சடங்குகள் செய்தும் இந்த அரிய மானுடப் பிறவியை பயனற்றதாக்கிக் கொள்கிறார்கள். விஷயம் தெரிந்தவர்களோ, முற்றுபெற்ற முனிவர்களை வணங்கினால்தான் நாம் செய்த பாவங்களைப் போக்கிக்கொள்ள முடியும் என்றும், பாவங்கள்தான் அறியாமையை உண்டுபண்ணும் என்றும், ஞானிகளைப் பூஜை செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்கிறார்கள்.

ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும் என்றால் மேற்கண்ட பாடல்களில் உள்ள ஞானிகளை குருவாக ஏற்று, தினமும் உருகி நாமஜெபம் செய்ய வேண்டும். நாமஜெபம் செய்யசெய்யத்தான் சிறப்பறிவு உண்டாகும். சிறப்பறிவு உள்ள மக்கள்தான் உடம்பைப் பற்றியும், உயிரைப் பற்றியும் அறிந்து உடல் மாசையும் உயிரைப் பற்றிய மாசையும் நீக்கிக் கொள்கிறார்கள். நீக்கிக் கொண்டவர்கள் தான் தம்முள் அருட் பெருஞ்ஜோதியைக் கண்டு அளவில்லாப் பேரானந்தம் அடைகிறார்கள்.

இவர்கள் தான் கோடிக் கணக்கான யுகங்கள் வாழ்கின்றவர்கள் ஆவார்கள். இவர்கள் பெருமையைக் கணக்கிட்டுச் சொல்ல இதுவரையிலும் யாரும் பிறந்ததில்லை. இனி யாரும் பிறக்கப்போவதும் இல்லை.

வியாழன், 16 ஏப்ரல், 2015

திருமந்திரம்

பரம்பொருளான இறையுடன் ஒன்றிணை யும் நிலையே முக்தி நிலை. இவ்வாறு ஜீவாத்மாபரமாத்மாவுடன் இணையும்போதுதான் எல்லையற்ற ஆனந்த நிலை உருவாகும். இதையேபரமானந்த நிலை என்கிறோம். இதுவே இறையனுபவம். இந்த இறையனுபவம் குறித்துதிருமூலர் பாடியுள்ள சில திருமந்திரப் பாடல்களைக் காணலாம்.

"உரை அற்று உணர்வு அற்று, உயிர்பரம் அற்று

திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்

கரையற்ற சத்தாதி நான்கும் கடந்த

சொரூபத்து இருத்தினான் சொல்இறந் தோமே."
பரமனோடு இணையும் இறையனுபவம் கிடைக்கும்போது முதலில் பேச்சு நின்றுபோகும். இதையே முதல் வரியில் "உரை அற்று' என்கிறார் திருமூலர். மனிதனின்பிரச்சினைகள் அனைத் திற்கும் மூல காரண மாக அமைவது அவனது நாக்கும்அதிலிருந்து உருவாகும் பேச்சுமே ஆகும்.

ஓயாத வீண் பேச்சே மனிதனின் முதல் எதிரி. மௌனம் ஞானப்பாதையின் முதல் படி.இறையனு பவத்தின் முதல் அனுபவம் அல்லது விளைவு என இந்த "உரை அற்ற'நிலையைக் குறிப்பிடுகிறார் திருமூலர்.

அடுத்த அனுபவம் உணர்வு அறுந்த நிலை (உணர்வு அற்று). சிலர் வாரம் ஒரு நாள்அல்லது மாதம் ஒரு நாள் மௌன விரதம் இருப்பார்கள். வாய் மட்டும்தான்மூடியிருக்கும். மனதிற்குள் ஆயிரம் சிந்தனைகள் புயலடித்துக்கொண்டிருக்கும். இத்தகைய மௌன விரதத்தால் எந்தப் பலனும் கிட்டுவதில்லை.
பேச்சுக்கு மூலமாக அமைவது உணர்வுகளும் சிந்தனைகளுமே. நாக்கும் உதடுகளும்ஒலியை உண்டு பண்ணும் கருவிகள் மட்டுமே. உரை (பேச்சு) உருவாவதுசிந்தனையில்தான். நமது உணர்வு நிலையின் அடிப்படையிலேயே சிந்தனைகள்எழுகின்றன. ஆக, உரைக்கு ஆதிமூலம் உணர்வுகளே. இறையனுபவம் கிடைக்கும்போதுஇந்த உணர்வுகளும் அற்றுப் போகும்.

அடுத்த வார்த்தையைக் கவனியுங்கள்- "உயிர்பரம்' (அற்று). உயிர்பரம் என்பதைஉயிர் அற்று, பரம் அற்று என்று இரண்டாகப் பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும்.
உயிர் என்பது ஜீவாத்மாவையும், பரம் என்பது பரமாத்மாவையும் குறிக்கும் சொற்களாகும். உயிர் என்பது ஜீவாத்மாவின் உள்ளி ருக்கும் "தான்' எனும்அகந்தையை- ஆணவத் தைக் (ஆணவ மலம்) குறிக்கிறது. இறையனு பவம் கிடைக்கும்போதுஜீவாத்மாவின் இந்த அகந்தை அழிந்து போகும். (உயிர் அற்று). பரம் அற்று என்றசொல்லில் ஒரு சூட்சுமம் உள்ளது. சில உரையாசிரியர்கள் உயிர் பரம் அற்றுஎன்ற சொற்களுக்கு, "பரமனை அடையத் தடையாக இருக்கும் தான் எனும் அகங்காரம்அற்றுப் போய்' என்று பொருள் எழுதியுள்ளனர். இது மிகவும் ஏற்புடையதே.

ஆனால் இதை சற்றே ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது, இதைவிட மேலான ஒருசூட்சுமம் உள்ளே பொதிந்து கிடப்பது தெரியும். உயிர் அற்று- தான் எனும்அகந்தை அழிந்து என்றே கொள்ளலாம்.

அது என்ன பரம் அற்று? ஜீவாத்மா முக்தி நிலையடைய சதா பரமனின் நினைவாகவேஇருந்து, அவனது தாள்களைப் பற்றிக் கொண்டு, முக்தி நிலை அடைவதற்கானமுயற்சிகளில் ஈடுபட வேண்டும். ஆக, முக்தி நிலையை அடையும் வரையில் பரமனின்திருவடிகளே ஜீவாத்மாவின் சிந்தனை முழுவதும் நிறைந்திருக்க வேண்டும்.

ஆனால் இறையனுபவம் எனும் முக்தி நிலையை அடையும்போது, அங்கே உயிர் என்றும்பரம் என்றும் பேதங்கள் இல்லை. இரண்டும் ஒன்றாக இணைந்த நிலையே அந்தபேரானந்த நிலை. அந்த நிலையில் உயிர் அற்றுப் போகும்; பரமும் அற்றுப்போகும். ஒரு பேரானந்த நிலை மட்டுமே எஞ்சி நிற்கும். எனவேதான் திருமூலர்இந்த இறையனுபவத்தை "உயிர்பரம் அற்ற நிலை' என்கிறார். இனி இரண்டாவதுவரியைக் காண்போம்.
"திரையற்ற நீர் போல் சிவமாதல் தீர்த்து'
"திரையற்ற நீர்' என்பதற்கு அலைகள் இல்லாத கடல் என்று பொருள். ஓயாமல்அலையடித்துக் கொண்டிருப்பதுதான் கடலின் இயல்பு. ஜீவாத்மாவின் மனமும்சிந்தனைகளும் எப்போதும் ஓய்வின்றி அலை பாய்ந்து கொண்டேயிருக்கும்.எனவேதான் ஜீவாத்மாவை கடலுக்கு ஒப்பிடுகிறார் திருமூலர்.
கடலின் கரைகளில்தான் அலைகள் அடித்துக் கொண்டேயிருக்கும். கடலின் உள்ளேசெல்லச் செல்ல ஆழம் அதிக மாகும்; அலைகள் இராது. மனிதர்களுக்கும் இதுபொருந்தும். புற வாழ்க்கை மட்டுமே வாழ்க்கை என வாழ்ந்து கொண்டிருக்கும்மனிதர்கள் அலையடிக்கும் கடற்கரை போன்றவர்கள். உடலிலும் மனதிலும் அமைதிஇராது. இவர்களது வாழ்க்கை யிலும் ஆழமோ பொருளோ இராது. ஒரு அர்த்தமற்றவாழ்க்கை.
ஞானத் தேடலில் உள்நோக்கிச் செல்லச் செல்ல அலைகள் அடங்கும்; அமைதிபிறக்கும். உள்ளே இருக்கும் இறையெனும் ஜோதியைத் தரிசிக்க முடியும். இந்தஉள்நோக்கிய பயணத்திற்கான வழிமுறையாக திருமூலர் தந்திர யோகத்தைக் குறிப்பிடுகிறார்.

இந்தப் பயிற்சிகளின் மூலம் தங்களின் உள்ளே இருக்கும் பரமனோடு இணைந்தஅனுபவம் கிடைக்கும்போது, மனமும் உடலும் திரையற்ற நீர் போல் அமைதி யாகும்;மனம் சிவமயமாகும்.
"கரைஅற்ற சத்தாதி நான்கும் கடந்த'
இந்த மூன்றாவது வரியில் ஒரு நுட்ப மான தந்திர யோக சூட்சுமம் பொதிந்துகிடக்கிறது. சத்தாதி என்பது ஓசையைக் குறிக்கும் சொல்லாகும். "சத்தாதிநான்கும் கடந்த' என்றால், நான்கு வகையான ஓசை களையும் கடந்த நிலை என்றுபொருள். அது என்ன நான்கு வகையான ஓசைகள்?

தந்திர யோகத்தில் ஓசைகளை நான்கு வகையாகப் பிரிக்கிறோம்.

* செவி ஓசை

* மிடற்றோசை

* நினைவோசை

* நுண் ஓசை

"செவி ஓசை' நாம் அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு கணமும் பலவிதமான ஓசைகள் நம்சுற்றுப்புறத்திலிருந்து நம் காதுகளை வந்தடைகின்றன. இந்த ஓசைகள்செவிப்பறையைத் தாக்கும்போது உருவாகும் அதிர்வுகள் செவி நரம்புகளில்மின்காந்த அலைகளாக மாற்றப்பட்டு மூளையைச் சென்றடைகின்றன. நமது மூளையே அந்தஓசைகளின் அர்த்தங்களைப் பகுத்துணர்ந்து அறிகிறது. நமது செவிகளின் மூலமாகநாம் உணர்ந்து கொள்ளும் ஓசைகள் செவி ஓசை எனப்படும். இறையனுபவம் கிடைக்கும்போது இந்த செவி ஓசைகள் எதுவும் நம்மை வந்தடையாது. செவி எனும் புலன்அடங்கிப் போகும்.

அடுத்த ஓசை "மிடற்றோசை'. இது நம் உள்ளிருந்து உருவாவது. தொண்டைப்பகுதியில் உருவாகும் ஓசையை காது நரம்புகள் நேரடியாக உணர்ந்துகொள்வது.உதாரணமாக ஒரு பாடலை நாம் வாய் திறந்து பாடாமல், வாய்க்கு உள்ளேயேபாடும்போது நமது செவிகள் அதை உணர்ந்து கொள்கின்றன அல்லவா.

பக்கத்தில் இருப்பவர்களால் இந்த ஒலியை- ஓசையை உணர முடியாது. வாயிலிருந்துவெளியே வரும் ஓசைகளே காற்றில் ஒலி அலைகளாகப் பரவி செவிப்பறையை அதிர வைக்கமுடியும். மிடற்றோசை வெளியில் வராத ஓசை. தொண்டைப் பகுதியிலுள்ள குரல்நாண்களின் அதிர்வை செவி நரம்புகள் நேரடியாக உணர்ந்து கொள்ளுதல்.

மூன்றாவது ஓசை "நினைவோசை.' எந்தவிதமான ஒலி அலைகளையும் உருவாக்காமல், நமதுநினை வில் மட்டுமே ரீங்காரமிடும் ஓசை. உதாரணமாக உங்களுக்கு மிகவும்பிடித்த ஒரு பாடலை அல்லது இசையை நீங்கள் நினைத்துப் பார்க்கும்போது, அதுஉங்களது நினைவில் ரீங்காரமிடும்.

இந்த நினைவோசை நமது நினைவில் மட்டுமே உருவானது. ஒலி அலைகள், செவிப்பறைகள்,செவி நரம்புகள் என எதுவுமே இந்த ஓசைக்குத் தேவை யில்லை. முழுக்க முழுக்கநமது மூளையில் உருவாகி, மூளையால் உணர்ந்து கொள்ளப்படும் ஓசை இது.

ஒலி அலைகள் எதுவும் உள்ளே புகா வண்ணம் காதுகளை இறுக மூடிக் கொண்டால்செவியோசை கேட்காது. நமது குரல் நாண்களின் அசைவை நிறுத்திக் கொண்டால்மிடற்றோசையும் கேட்காது. ஆனால் தந்திர யோகப் பயிற்சிகள் மூலமாக மட்டுமேமூளையையும் மனதையும் அமைதிப்படுத்தி, நினைவோசையை நிறுத்த முடியும்.

இந்த நினைவோசையும் அடங்கிய நிலையில் மட்டுமே ஆழ்நிலை தியானங்கள் கைகூடும்.தியானத்தின் ஆழ்நிலைகளுக்குச் செல்லச் செல்லத்தான் உள்ளே இருக்கும் இறைவனைஉணர்ந்து கொள்ள முடியும். அவனோடு இணைய முடியும்.
நான்காவது ஓசை "நுண் ஓசை'. நமது உடலில் ஒவ்வொரு கணமும் பல்லாயிரக் கணக்கானநிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றன. பல நிகழ்வுகள் பலவிதமானஓசைகளையும் உடலினுள்ளே உருவாக்குகின்றன. சாதாரண மனிதர்களால் இந்த ஓசைகளைஉணரவோ, கேட்கவோ முடியாது.
உதாரணமாக, நமது இதயம் துடிக்கும் "லப்-டப்' என்ற ஓசை, மூச்சுக்குழலினுள்ளே மூச்சு செல்லும் ஓசை, ரத்தக் குழாய்களினுள்ளே ரத்தம் பாயும்ஓசை, நாடிகளில் பிராண சக்தி பயணிக்கும் ஓசை என பல ஓசைகளை நம்மால் கேட்கவோஉணரவோ முடிவதில்லை. (சில விஞ்ஞானக் கருவிகள் மூலம் மட்டுமே இந்த ஓசைகளைக்கேட்க முடியும்.)
தந்திர யோகப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து பிற மூன்று ஓசைகளும் அடங்கியநிலையில், உடலில் உருவாகும் இந்த நுண் ஓசைகளை நம்மால் உணர்ந்து கொள்ளமுடியும்.

தந்திர யோகப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வரும்போது, இதன் அடுத்தநிலையில் இந்த நுண் ஓசைகளும் அடங்கிப் போகும். குண்டலினி சக்தி விசுக்தி,ஆக்ஞை ஆகிய சக்கரங்களை அடைந்து அந்த சக்கரங்கள் திறந்து கொள்ளும்போது வேறுபலவிதமான நுண் ஓசைகளை நம்மால் உணர முடியும்.

பிற லோகங்களில் இருப்பவர்களின் குரல்கள், அமானுஷ்ய சக்திகள் உருவாக்கும்ஓசைகள் ஆகிய நுண் ஓசைகளை இந்த நிலை யில் உணரலாம். ஒரு பூ விரியும்ஓசையைக்கூட உணரலாம். இந்த நிலை ஒரு வகை சித்தி நிலையாகும். பிறரது மனதில்ஓடும் நினைவோசைகளையும் (எண்ணங்களையும்) இந்த நிலையில் கேட்க முடியும்.

தொடர்ந்து பயிற்சிகளைச் செய்து வந்தால் இந்த நுண் ஓசையும் அடங்கிப் போக, நுண் ஓசையின் இறுதி நிலையை அடையலாம்.

இந்த நிலை ஆக்ஞை சக்கரம் திறந்து கொண்டபின் உருவாகும். பல தெய்வீக ஓசைகள்நாள் முழுவதும் உடலுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கும். வீணை ஒலி, புல்லாங்குழல் இசை, நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டு வது போன்ற ஓசை, மணி ஒலி எனஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு விதமான ஓசைகள் கேட்கும். இது அதிகபட்சமாக ஓரிருவாரங் களே நீடிக்கும். பின்னர் இந்த ஒலிகள் அனைத் தும் அடங்கி, "ஓம்' என்றபிரணவ மந்திரத்தின் ரீங்காரம் உடலில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

இதுவே நுண் ஓசைகளில் கடைசி ஓசை யாகும். இறையனுபவம் கிடைக்கும்போது இந்தஓசையும் அடங்கிப் போகும். ஆக ஜீவாத்மா, பரமாத்மாவோடு ஒன்றிய நிலையைஅடையும்போது, செவி ஓசை, மிடற்றோசை, நினைவோசை, நுண் ஓசை ஆகிய நான்கு விதமானஓசைகளும் அடங்கிப் போகும். இனி பாடலின் கடைசி வரியைக் காணலாம்.

"சத்தாதி நான்கும் கடந்த

சொரூபத்து இருத்தினான் சொல் இறந் தோமே.'

நான்கு வகையான ஓசைகளையும் கடந்த நிலையில் (சொரூபத்து) இறைவன் என்னைக்கொண்டு இருத்தினான். அந்த ஆனந்த நிலையில் எனது பேச்சும் நின்று போயிற்று(சொல் இறந்தோமே) என்பதே இந்த கடைசி அடியின் பொருள்.

"சொல் இறந்து போதல்' தந்திர யோகப் பயிற்சிகளில் முக்தி நிலைக்கு முற்பட்டநிலையாகும். தாமச நாடி தூண்டப்படும்போது இது நிகழும். இது குறித்துஏற்கெனவே விரிவாகக் கண்டோம். அதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

"சொரூபத்து இருத்தினான்' என்ற சொல்லாடலிலும் ஒரு சூட்சுமம் உள்ளது.முக்தியை நோக்கிய பயணத்தில் நாம் எத்தனை முயற்சிகள் செய்தாலும், தந்திரயோகப் பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டாலும் அந்த முக்தி எனும் பரமானந்தநிலையில் நாம் போய் இருந்துவிட முடியாது.

பரமன் அருள் இருந்தால் மட்டுமே நாம் அந்த இறையனுபவ நிலையை அடைய முடியும்.அந்த சத்தாதி நான்கும் கடந்த சொரூபத்தில் இறைவன்தான் நம்மைக் கொண்டுஇருத்த முடியும்.

புதன், 15 ஏப்ரல், 2015

மனமே குரு அறிவே இறைவன்!

மனமே குரு அறிவே இறைவன்
அருளை அனுவப்பொருளாக பெற்று மனிதனாக வாழலாம்!

1. மனிதன் பிறப்புக்கு காரணம் பேராசையே 
2. மனிதன் இறப்பிற்கு காரணம் பொறாமையே 
3. மனிதன் உடல் அழிவிற்கு காரணம் மலசலமே
4. மனம் புத்தி அறிவு மழுங்கக் காரணம் மலசலமே
5. அழிவைத் தவிர்க்க விருப்பு வெறுப்பு இல்லாமை வேண்டும்
6. மனமே மூலம் மூலத்தை அசையாமல் வைத்தால் ஞானம் வரும்
7. மனம் புத்தி அறிவு நன்றாக இருக்க மூலம் என்ற மனம் தெளிவாக வேண்டும்
8. வாழும் கலை பயின்றால் உடல் அழிவை தவிர்க்கலாம்
9. வாசி யோகம் என்பது நாடி சுத்தியே
10. ஆரோக்கிய வாழ்வுக்கு யோகாசான கலையே
11. மனம் அமைதியாவதர்க்கு வாசி யோகமே 
12. வாசி கட்டு  
13. மனிதனுக்கு யோகக்கலை ஆசனம், வாசி யோகம் இரண்டும் இரு கண்கள் 
14. மனம் அசையாமல், உடல் அசைவதில்லை 
15. யோகாசனமும் வாசியோகமும் கட்டுபட்டால் இறைவனை தெரிந்து கொள்ளலாம்
16. இறையைத் தெரிந்தால் சித்தனாகலாம்
17. சித்தன் என்றால் பிறப்பு இறப்பு இல்லையே 
18. பிறப்பு இறப்பு அற்ற பேரின்ப பெருநிலையை அடையலாம்.
கடவுள் இல்லை! கடவுள் இல்லை!! கடவுள் இல்லவே இல்லை!!!
கடம் + உள் கடவுள் வெளியில் இல்லை.
கடவுளாவது முன்னோர்களும் மூததையர்க்களுமே, மூத்தோர் மதித்தல் முன்னோர் முதாதையர் வாழ்த்துதல் வணங்குதல் தொழுதல் கும்பிடுதல்.
தன்னை தான் அறிய தனக்கு ஒரு கேடு இல்லை
தன்னை அறியாமல் தானே கெடுகிறனே

முன்னைப் பிறவியில் செய்த முதுதவம்
பின்னைப் பிறவியில் பெற்றால் அறியலாம்
தன்னை அறிவ தறிவாம்  அக்தன்றிப்
பின்னை அறிவது பேய்அறி வாகுமே
- என்று தாத்தா தமிழ் சித்தர் திருமூலர் சொல்லுகிறரர்.
தமிழனின் மானம் காத்த 64வது சித்தர் பெரியார் தத்துவமானது,
தன்னை அறியும் அறிவே பெரிய அறிவு
அறிவுக் கழிவில்லை ஆக்கமும் இல்லை
அறிவுக் கறிவல்ல ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிகின்ற தென்றிட்டு
அறிகின் றனமறை ஈறுகள் தாமே
மண் மனம் எங்கு உண்டோ அங்கு வாயுவும் உண்டு
மண் மனம் எங்கு இல்லையோ அங்கு வாயுவும் இல்லை
மண் மனதுள் மகிழ்ந்து இருப்பவரே சித்தர்கள் சித்தர் பிடாதிபதிகள் ஆகையால் மனமே குரு அறிவை அறிந்தவன் ஆண்டவன் அல்லது இறைவன் அல்லது குரு அல்லது இயற்கை.
கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருளுடல் ஆவி உடன்ஈக 
எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று
தெள்ளத் தெளியச் சிவபதம் தானே!
கருவூரார் - அவர்களும் சொல்லும் தத்துவம் என்னவென்றால்,
ஆவி ஆன்மா ஆருயிர் ஒன்றாவதற்கு, மனம் வாக்கு காயம் அறிய மந்தரம், மந்திரம், மந்திறம்
தத்துவ பிறப்பாயே வித்தே! மகேசா!
மகாதேவே! நீ தீயே யாகி
தன்னோடு உருத்திரப் பிறப்பைச் சாதித்தாய்;
என்னோடு உன்னோடன்றி எங்கும் அருளூற
ஓம் நமசிவாய சிவாய நம ஒலியருளினாய்;
தழைத் தெழு நீ! நாங்கள் பிழைத்தெழ அருளுநீ!
அழைக்கிறோம்! செழுந்தீயே! செழித்தெழு நீ!
வாசிவாசி! வாசிவாசி! வாசிவாசி!
வசிவசி! வசிவசி! வசிவசி!
ஓம் காயந்திரிந்து சிவமாகட்டும்;
ஓம் ஆவி, ஆன்மா, ஆருயிர் ஒன்றாகட்டும்;
தத்துவமே! நமச்சிவாய மென்றுணர்ந்தோம்
சித்தாந்தமே! சிவாய நாம வென்று ணர்ந்தோம்
நங்! மங்! சிங்! வாங்! யங்!
காத்தருளுக! காத்தருளுக! காத்தருளுக!
ஓம்! ஓம்! ஓம்! ஓம்! ஓம்!
தன்னையறிந்து தலைவனையறியப் பயன்படும்
அருளூறு காயந்தரி மந்திரம்
ஓம் பூர்வ புலன்கள் சுவையாகுக !
தத்துவ வித்துக்கள் அரணாகுக !
பாரின்கோ தேவர் வசிக்கும் தீ மகிழட்டும்
தீயே யோகப் பரஞ்சோதி யாகும் !
தலைவனுக்குள் தன்னை நிறுத்தித் திரம் பெற்றிடுவதற்காக ஓதும் அருளூறு காயந்தரி மந்திரம்
ஓம் சத்தியே, காத்தாயி அயனாய வித்தின் மகவே !
வாலையே! கன்னியே! குமரியே! நங்கையே! தீயென மலர்ந்திடு.
தீயே, உன்னோடு தூர்த்திடு பிரச்சினை யாவும்
தாயே, என்னோடு உயிரினப் பயிரினக் காப்பு வழங்கிடு.
சீவபுராணம்
தத்துவம் தொண்ணூத்தாறு

சிவ தத்துவம் ஐந்து
வித்தியா தத்துவம் ஏழு
ஆன்ம தத்துவம் இருப்பதினான்கு

பூதங்கள் ஐந்து
ஞானேந்திரியம் ஐந்து
தன்மாத்திரைகள் ஐந்து
கன்மேந்திரியங்கள் ஐந்து
அந்தகரணம் நான்கு

தாத்துவீகம் அறுபது
பிருதிவியின் காரியம் ஐந்து
அப்புவின் காரியம் ஐந்து
தேயுவின் காரியம் ஐந்து
வாயுவின் காரியம் ஐந்து
ஆகாயத்தின் காரியம் ஐந்து

வாயுக்கள் பத்து
நாடிகள் பத்து
ஏடனை மூன்று
கன்மேந்திரியங்களின் தொழில் ஐந்து
குணங்கள் மூன்று
வாக்குகள் நான்கு

தத்துவம் முப்பத்தாறு தாத்துவிகம் அறுபது ஆக தத்துவங்கள் தொண்ணூத்தாறு.

தத்துவங்களின் தோற்றம் ஒடுக்கம் முதலியவைகளை ஆராய்ந்து அறிவது தத்துவ விசாரணை. அவற்றை தன் வசப்படுத்தி வெற்றி கொண்டால் மரணம் இல்ல பெருவாழ்வு வாழலாம்.

இல்லையேல் திருமூலர் திருமந்திரத்தில் கூறுகிறார்
கோயில் கொண்டன்றோ குடிகொண்ட ஐவரும்
வாயில் கொண்டங்கே வழிநின்றளுவர்
தாயில் கொண்டாற் போல் தலைவனென் னுட்புக
வாயில் கொண்டீசனு மாளவந்தானே.
இந்து மதமான இந்து வேதத்தில் மனித இனம் மேன்மை அடைவதற்காக சாதி, மதம், மாச்சரியம் எனும் பேதம் இல்லாமல் எல்லா உயிரினங்களும் மேன்மை அடைவதற்காக சீவனான சிவன் நமக்காக தன் கைப்பட எழுதி கொடுத்தது தான் தத்துவம் எனும் சீவபுராணம்.
நாம் ஒவ்வருவரும் நம் வாழ்வில் எத்தனையோ துன்பங்களை அனுபவித்து மிகவும் மனம் நொந்து வேதனையில் வாழ்ந்து கொண்டு உருகிறோம். இந்த துன்பங்களில் இருந்து விடுபட, நாம் ஒவ்வருவரும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது எந்த வேளை செய்து கொண்டுருந்தாலும், வெளியூர் பயணம் செய்து கொண்டிருந்தாலும், ஓயுவு எடுத்துக் கொண்டுருந்தாலும் எந்த நேரத்திலாவது சிவபுராணம் எனும் சீவபுரணத்தின் பாட்டின் தத்துவத்தின் பொருள் உணர்ந்து சொல்லுங்கள். அப்படி சொல்லுங்கால் இயற்கை எனும் துன்பத்திலிருந்து விடுதலை பெறலாம். விடுதலை பெற்று அவரவர்களின் ஆன்மாவின் அறிவுத் திறமையால் துன்பம் அகற்றி இன்பம் எனும் அருளை அனுபவப் பொருளாக பெற்று பிறப்பிறப்பற்ற பெருநிலை வாழலாம் இவ்வையகத்தில்.

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

ஞானிகளை பூஜிப்போம்! நலம் பெற்று வாழ்வோம்!!


காசிக்குப் போனால் வினை (பாவம்) போகுமா..?! அந்தக் கங்கையில் நீராடினால் நற்கதி கிடைக்குமா..?! புண்ணியதலங்களுக்குச் செல்வதால் இறையுடன் இரண்டறக் கலக்கலாமா..?!

இவை புனிதமான வழிபாட்டிற்குரிய இடங்கள்தான். இருந்தாலும் இங்கு செல்வதால் மட்டும் எந்த ஆன்ம இலாபமும் கிடைக்காது. 

காசிக்கோ டில்வினை போமோ - அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ ?
பேசுமுன் கன்மங்கள் சாமோ ? - பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ.

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
-கடுவெளிச் சித்தர் பாடல்

கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து
பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து
பசுவதைப் பூசித்து அதன்கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய் முத்தியதை யடையார்.
- வள்ளலார் பெருமான் - 14.

நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டு இருக்கின்றனர். இயற்கையின் தன்மையை உணர்ந்து, வென்று சிவத்தை(கடவுள்தன்மை) யடைந்த மனிதர்களை(சித்தர்களை) வழிபட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற கோவில்கள் அனைத்தும் நமது உடம்பேயன்றி வேறொன்றும் இல்லை என்று நாம் உணரவில்லை. ஆகவேதான் நாம் நம் நிம்மதியை தேடி கோவில்களுக்கு செல்கிறோம். தவறில்லை. ஆனால் உணர்ந்து செயல்பட்டால் மிகச் சிறப்பு.

"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"
- ஆசான் திருமூலர் (725)

என்று மானுட உடம்பின் மகத்துவத்தை மனித மனத்தில் பதிய வைத்த ஆசான் திருமூலர். இதோடு நின்று விடாது,

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்"

என்று பாடியவர் மேலும் கூறுகிறார்,

"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே
கள்ள மனமுடைக் கல்வி இலோரே!

என்று உள்ளத்துள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெங்கோ தேடி அலையும் வீணரை மூடர் என்றே ஏசுகிறார்.

உடம்பில் நன்மையும், தீமையும் சேர்த்தே இயற்கை அன்னை படைத்துள்ளாள். இந்த உடம்பில் தீமை சேர்த்து படைத்ததின் காரணம், நெல்லுக்கு உமி இல்லை என்றால் மீண்டும் முளைக்காது. ஆகவே, இந்த தேகத்தில் கேட்டையும், ஆக்கத்தையும் சேர்த்து படைத்திருக்கிறாள். கேடாகிய உமி நீங்கினால் அரிசி மீண்டும் முளைக்காது. (புற உடம்பாகிய மும்மல தேகம் நீங்கினால்) அதேபோல் கேடான மும்மலம் என்னும் உமி நீங்கினால் மலமற்ற ஒளி உடம்பாகிய ஜோதி உடம்பு உண்டாகும். ஜோதி உடம்பு உண்டானால் மீண்டும் பிறக்காது (உமி நீங்கினால் அரிசி முளைக்காதது போல).

உடம்பைப்பற்றி அறிகின்ற சிறப்பறிவு தான் வேதம். உன்னுள்ளே எப்போதும் இருக்கின்ற சோதியை உன்னால் அறிய முடியாது. ஏனென்றால் நமது சிந்தனையும் செயலும் அதை நோக்கி இல்லை. தினம் தினம் ஞானிகளை பூசை செய்து தக்க குருவின் துணையுடன் அறியலாம்.

அரிதான பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றவர் மகான் / சித்தர் / சிவம் / கடவுள் ஆகவேண்டும்

#உடம்பினுள் உத்தமனைக் காண் - ஆசான் ஔவையார்

பிறவிப்பிணியைத் தரும் உடம்பே நஞ்சு. ஆனால், அந்த உடம்பினுள்ளே மிகப்பெரும் ஆக்கசக்தி(மெய்) உண்டு. பிறவிப்பிணியை வெல்ல குண்டலனி சக்தியை இறைதுணையோடு தட்டி எழுப்பி சுக்கிலத்தை முதுகுத்தண்டிலுள்ள 18 முடிச்சுக்களைத்(இதுவே மெஞ்ஞான 18படிகள்) தாண்டி, கண்டத்தின் மேலெழ அமிர்தமாக மாறி, 7 சக்கரங்கள் கடந்து 7 திரைகளையும் நீக்கி, உடற்கசடுகளை நீக்கி இறைதுணையுடன் இறையுடன் இரண்டறக் கலந்து, சதாகாலமும் இறையுடனேயே நீக்கமற நிலை பெறலாம். இவ்வாறு நீக்கமற நிலைபெற்றவர்களே சித்தபெருமக்கள். இவர்கள் ஐந்தொழில்களையும் செய்யும் ஆற்றலுடையவர்கள் ஆவர்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கங்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.
- திருமந்திரம் (ஆசான் திருமூலர்)

ஞானிகள் காரண உடம்பை பெற்றவர்கள். நமது உடம்பு தூல தேகம் கண்ணால் பார்க்க கூடியது ஆனால் சூட்சுமதேகம் என்றால் அறிவுக்கு மட்டுமே புலப்படும். உடம்பைப் காப்பாற்றிக் கொண்டவனால்தான் பிறவியை ஒழிக்க முடியும். சைவ உணவை உட்கொண்டு தினம் தினம் தியானம் செய்ய வேண்டும்.

நம் உடம்புக்குள்ளே மிக அற்புதசக்தி ஒன்று இருக்கிறது. அந்த சக்தியைத் தட்டி எழுப்புவதற்கு ஆசான் சுப்ரமண்யர் அருளாசி வேண்டும்.. அவர் அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். ஓர் ஒளிச்சுடர், சொல்லவொண்ணாப் பேரானந்தத்தை தரக்கூடிய ஒர் ஒளிச்சுடரை அவர் அடைந்திருக்கிறார். அதை நாம் அடைய வேண்டும்.

அதை அடைவதற்குக் கடைசி, குறையெல்லாம் நிவர்த்திப்பதற்கு நிறை எது ? என்று கேட்டான். அது மீண்டும் பிறவாமை. அதுதான் நிறை. குறையெல்லாம் முடிந்தது. முன் செய்த பாவம் குறை. கல்வி குறை; மன உளைச்சல்; பல்வேறு பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து கொண்டே வருகிறது. தீரும் வரை விடக்கூடாது. அதுதான் பிரச்சனை, நம் குறை தீர்ந்தது; செல்வநிலை பெருகியது, வறுமை தீர்ந்தது. எல்லாம் தீர வேண்டும். கடைசியில் பெற வேண்டிய ஒன்று. நிறைவான வாழ்வு. எப்போதும் நிறைவான வாழ்வு. அதை அடைவதற்கு ஆசானைக் கேட்க வேண்டும். அதுதான் முடிவு. பூஜையின் முடிவு அதுதான். ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும். இப்ப ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்காகத் திருவடியைப் பற்ற வேண்டும். அதுதான் குறையது கூறி குணங்கொண்டு போற்ற என்றார்.

நம் குறையெல்லாம் சொல்லி, குணங்கொண்டு போற்றணும். போற்றுதல் என்பது ஞானிகளைப் புகழ்ந்து பேசுதல். நல்ல பண்போடு குணங்கொண்டு பேசணும்.

"குணங்கொண்டு போற்றச் சிறை உடல் நீ அறக் காட்டி"

நம் ஆன்மா சிறைப்பட்டுக் கிடக்கிறது இப்போது. எந்தச் சிறையில் கிடக்கிறது? மனமாசு. மலமாசு. உடம்பு என்று சொல்லப்பட்ட களிம்பு தேகம். மும்மலம் என்று சொல்லப்பட்ட களிம்பு தேகத்தில் அந்த ஆன்மா சிறைப்பட்டிருக்கிறது. சிறை உடல் நீ அறக் காட்டி – ஆன்மா சிறைப்பட்டிருப்பதை, நீக்கக் காட்டி, அது அற்றுப் போகும்படி செய்து,

"சிவத்தோடு அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி ஆமே" நாம் சிவத்தோடு சேர வேண்டும். இப்போது நாம் சவமாக இருக்கிறோம். நம் உடம்பில் தலைவன் இருந்தாலும், புலப்படவில்லை நமக்கு. அதுதான்,

உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை
உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவு அறியாதே
-திருமந்திரம் (ஆசான் திருமூலர்)-கவி எண் 431

நம்மோடு தலைவன் இருக்கிறான். ஆனால் அவனை அறிய முடியாது. ஆக நாம் என்ன செய்யணும், சிவத்தோடு இருக்கணும். நம் உடம்பிற்குள்ளேயே தலைவன் இருக்கிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதுதான்

"உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை
உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை"

அவன் நம் மனதை விட்டு ஒரு அடி கூட, ஒரு அங்குலம் கூட நகரவில்லை. ஒரு ஜாண் கூடப் போகவில்லை. உள்ளம் விட்டு ஓரடி என்று சொன்னார்.

"உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவு அறியாதே."

அவனும் நாமும் இருக்கிறோம். ஆனால், நாம் உடம்பாகிய சாக்கடைக்குள்ளே ஒரு வைரமணி இருக்கிறது. அந்த வைரமணி ஜொலிக்க வேண்டும். அதுவோ ஆயிரம் கோடி சூரியப்பிரகாசம் உள்ள ஒரு வைரமணி. அந்த வைரஜோதி, அதுதான் அந்த ஆணிப்பொன் அம்பலம் என்று சொல்வார். அந்த மணி வந்து உடம்பாகிய நாற்ற தேகம், அசுத்தத்தில் கிடக்கிறது. அப்ப என்ன சொல்வார், சிவத்தோடு அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி ஆமே என்றார். சுடரைத் தட்டி எழுப்பணும்.

உற்றுநின் றாரொடு மத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றுந் தெரிந்தறி வார்இல்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.
- திருமந்திரம் (ஆசான் திருமூலர்)

அருட்பெருஞ்சோதியை சிறந்த பண்பாளர்கள்தான் காணமுடியும். அந்த ஜோதி நம்முள்ளே இருந்தாலும் ஆசான் தான் அதைச் சொல்ல வேண்டும். தினமும் பூசை செய்தால் குணக்கேடுகள் படிப்படியாக நீங்கும். உங்கள் பத்திக்கு அடிமையாகி ஆசான் உங்கள் முன் நிற்பார். பூசை செய்வதற்கு வயதெல்லை கிடையாது. நேரம் வரும்போது பார்க்கலாம் என்று விட்டால் அந்த நேரம் உங்களுக்கு கிடைக்காமலே போய்விடும் என்கிறார் தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்.

குருபோக நாதரைத்தான் கூறுடன் பூஜைசெய்து
குருமூலர் சட்டடைநாதர் கொங்கணர் காலாங்கி பாதம்
குருவென்று பூஜை செய்து கூறும் இச்சுவடி வைத்து
குருவென்று பதம் பணிந்தோர் கூறுடன் வேதைகாண்பார்
ஆமப்பா யுத்தி சொன்னேன் அழிபுத்தி சொல்லவில்லை
ஆமப்பா வேதைகண்டால் கற்பத்தை அதன்பின்கொள்ளு
ஆமப்பா சித்தியாகும் அன்புடன் செய்து பாரு
ஆமப்பா குருவைக்காணு அன்புடன் சொல்லினேனே.
-ஆசான் கருவூர் முனிவர் -11-

மகான் கருவூர் முனிவர் அருளிய கவியின் சாரம் :;

சித்தர்கள் அத்தனைபேரும் ஒரே தன்மையுடையவர்கள் ஆவார்கள். இவர்கள் ஆசான் அகத்தீசன் திருவடியை பூஜை செய்தவர்கள் ஆவார்கள். அகத்தீசனை பூஜைசெய்ய பூஜைசெய்யதான் உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்துகொள்ள முடியும். உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். இந்த காற்றை ஞானிகள் என்ன செய்கின்றார்கள் என்றால், ஆசான் அகத்தீசன் ஆசியால் ரேசகம், பூரகம், கும்பகம் ஆகிய இயக்கத்தை அறிந்து ஆசான் திருவடியை உருகி தியானிக்கின்றார்கள். என்னதான் மூச்சுக்காற்றை பற்றி அறிந்திருந்தாலும், சுழிமுனையில் வாசியை செலுத்த முடியாது. அகத்தீசன்தான் அவரவர் பக்குவத்தை அறிந்து வாசியோடு வாசியாக கலந்து வாசி நடத்தி தருவார் (மூச்சுக்காற்றை இயக்கச் செய்வார்). அவர் வாசி நடத்தாமல் நாமே முயன்றால் கொடிய நோய்வாய்ப்பட்டு இறந்து விடுவோம்.

எனவே, எல்லா ஞானிகளும், ஆசான் அகத்தீசனை பூஜை செய்து பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் மரணமில்லா பெருவாழ்வு பெற்றுள்ளார்கள். அந்த வரிசையில் போகமகாரிஷி, திருமூலதேவர், சட்டை முனிவர், கொங்கணர், காலாங்கிநாதர் ஆக ஐவரும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் அளவிலா சித்தி பெற்றுள்ளார்கள்.

இவர்கள் பெருமையை கருவூர் முனிவர் அவர்கள், நன்கு உணர்ந்து தம் நூலில் அவர்களை புகழ்ந்து பாடியுள்ளார். நாமும் கருவூர் முனிவர் நூலை படித்தும், பூஜித்தும் ஆசிபெற்றால் பலகோடி ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கி ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம்.

கருவூர் முனிவரும் ஆசான் அகத்தீசர் ஆசி பெற்றவர்தான். எந்த ஞானிகளை நாம் பூஜை செய்தாலும், எல்லா பூஜையும் ஆசான் அகத்தீசன் திருவடியையே சாரும். எனவே மேற்கண்ட ஐந்து ஞானிகளையும் மற்றும் கருவூர் முனிவரையும், அகத்தீசரையும் பூஜித்து ஆசிபெற்றுக் கொள்வோம்.

இந்த உபதேசம் கருவூர் முனிவர் சொன்னதாகும். இதை நல்மனதுடன் சொல்கின்றேன் என்றும், இதை நீங்கள் பின்பற்றினால் ஞானம் பெறலாம் என்றும் சொல்லியுள்ளார்.

எனவே, ஞானிகளை பூஜிப்போம்! நலம் பெற்று வாழ்வோம்!!

ஆகவே கோவிலுக்கு செல்வதால் மட்டுமே பலனில்லை. நாம் நம் உடலை புரிந்து கொண்டு அதை சரியாக ஓம்புவதால் மட்டுமே நம்மால் நம் உள்ளம் நன்றாக வேலை செய்யும். நம் உளம் நன்றாக வேலை செய்தால் நம்முடைய சுற்று வட்டாரங்கள் நமக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் நம் உலகம் ஒன்றுகொன்று தொடர்புடையதே. ஆகையால் வெற்றி வேண்டுமெனில் நாம் நம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதை விடுத்து கோவில் கோவிலாக ஏறி இறங்கி விட்டு கடவுள் எனக்கு ஒன்றும் செய்ய வில்லையே என்று புலம்புதல் நன்றல்ல.

தன்னை அறிந்திடில் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்த பின்
தன்னை அர்ச்சிக்க தான் இருந்தானே !
- ஆசான் திருமூலர்.

ஆசான் ஔவையார் அருளிய
ஞானக்குறள் <உடம்பின் பயன்>

உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா
முடம்பினி லுத்தமனைக் காண். 11

உணர்வாவ வெல்லா முடம்பின் பயனே
யுணர்க உணர்வு டையார். 12

ஒருபய னாவ துடம்பின் பயனே
தருபயனாஞ் சங்கரனைச் சார். 13

பிறப்பினாற் பெற்ற பயனாவ தெல்லாந்
துறப்பதாந் தூநெறிக்கட் சென்று. 14

உடம்பினா லன்றி யுணர்வுதா னில்லை
யுடம்பினா லுன்னிய தேயாம். 15

மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு. 16

ஓசை யுணர்வுக ளெல்லாந் தருவிக்கும்
நேசத்தா லாய வுடம்பு. 17

உயிர்க்குறுதி யெல்லா முடம்பின் பயனே
அயிர்ப்பின்றி யாதியை நாடு. 18

உடம்பினாற் பெற்ற பயனாவ வெல்லாம்
திடம்பட வீசனைத் தேடு. 19

அன்னத்தா லாய உடம்பின் பயனெல்லா
முன்னோனைக் காட்டி விடும். 20

திங்கள், 13 ஏப்ரல், 2015

பிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்

அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர்,பழனி

பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர்,வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர்,பழனி
கார்த்திகை1(மேஷம்)ஸ்ரீபோகர்,பழனி,ஸ்ரீதணிகைமுனி & ஸ்ரீசம்ஹாரமூர்த்தி,திருச்செந்தூர்;ஸ்ரீபுலிப்பாணி,பழனி
கார்த்திகை2,3,4(ரிஷபம்)ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்; ஸ்ரீவான்மீகர்,எட்டுக்குடி;ஸ்ரீஇடைக்காடர்,திரு அண்ணாமலை.
ரோகிணி(ரிஷபம்)=ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்
மிருகசீரிடம்1,(ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்
மிருகசீரிடம்2(ரிஷபம்)=ஸ்ரீசட்டைநாதர்,சீர்காழி & ஸ்ரீரங்கம் ஸ்ரீ பாம்பாட்டி சித்தர், மருதமலை & சங்கரன் கோவில்
மிருகசீரிடம்3(மிதுனம்)=ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை & சங்கரன்கோவில்.
மிருகசீரிடம்4(மிதுனம்)=அமிர்தகடேஸ்வரர் ஆலயம்,திருக்கடையூர்
திருவாதிரை(மிதுனம்)=ஸ்ரீஇடைக்காடர் @ திரு அண்ணாமலை,ஸ்ரீதிருமூலர்@ சிதம்பரம், ஸ்ரீஅமுதானந்தர் @ மணியாச்சி கிராமம்,ஸ்ரீசற்குரு @ எம்.சுப்புலாபுரம்,தேனிபகுதி.
புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் @ வைத்தீஸ்வரன்கோவில்,
புனர்பூசம் 4(கடகம்)ஸ்ரீதன்வந்திரி,வைத்தீஸ்வரன்கோவில்
பூசம்(கடகம்)ஸ்ரீ கமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி, திருவாரூர்(மடப்புரம்)
ஆயில்யம்(கடகம்)ஸ்ரீகோரக்கர்,வடக்குப்பொய்கைநல்லூர், நாகப்பட்டிணம் அருகில்;  ஸ்ரீஅகத்தியர்,
ஆதி கும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை,பாபநாசம்.
மகம்(சிம்மம்), பூரம்(சிம்மம்)ஸ்ரீராமதேவர்,அழகர்கோவில்,மதுரைஅருகில்.
உத்திரம்1(சிம்மம்)ஸ்ரீராமத்தேவர்,அழகர்கோவில்,மதுரை அருகில்,ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்.
உத்திரம்2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரா @ நெரூர்; ஸ்ரீகரூவூரார் @ கரூர் பசுபதீஸ்வரர் கோவில்
ஆனிலையப்பர் கோவில் @ கருவூர்; கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் @ தஞ்சாவூர்.
அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் @ கரூவூர்,ஸ்ரீகரூவூரார் @ கரூர்.
சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் @ கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் @ கொடுவிலார்ப்பட்டி.
சித்திரை3,4(துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மாயூரம்
சுவாதி(துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மாயூரம்
விசாகம்1,2,3(துலாம்)=ஸ்ரீநந்தீஸ்வரர் @ காசி,ஸ்ரீகுதம்பைச்சித்தர் @ மயிலாடுதுறை
விசாகம்4(விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மயிலாடுதுறை,ஸ்ரீவான்மீகர் @ எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணிசித்தர் @ நீலாயதாட்சியம்மன் கோவில்,நாகப்பட்டிணம்
அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி @ எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள்,தோளூர்பட்டி,தொட்டியம்-621215.திருச்சி மாவட்டம்.
கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி @ எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் @ வடக்குப் பொய்கைநல்லூர், நாகப்பட்டிணம் அருகில்.
மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி @ ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்
பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி @ ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்துஅடிகளார் @ பனைக்குளம்(இராமநாதபுரம்),ஸ்ரீபுலஸ்தியர் @ ஆவுடையார்கோவில்.

உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி,ஸ்ரீதிருவலம் சித்தர் @ திருவலம்(ராணிப்பேட்டை),ஸ்ரீலஸ்ரீமவுனகுருசாமிகள் @ தங்கால் பொன்னை(வேலூர் மாவட்டம்)
உத்திராடம்2,3,4(மகரம்)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி
திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி,ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் @ நெரூர், ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,ஸ்ரீகருவூரார் @ கரூர், ஸ்ரீபடாஸாகிப் @ கண்டமங்கலம்
அவிட்டம்1,2(மகரம்);அவிட்டம் 3,4(கும்பம்)
ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்(திருமூலகணபதி சந்நிதானம்)
சதயம்(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,
ஸ்ரீசட்டநாதர் @ சீர்காழி,ஸ்ரீதன்வந்திரி,
ஸ்ரீதன்வந்திரி @ வைத்தீஸ்வரன் கோவில்.
பூரட்டாதி1,2,3(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,ஸ்ரீதட்சிணாமூர்த்தி @ திருவாரூர்.
ஸ்ரீகமலமுனி @ திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் @ திருவாடுதுறை,சித்தர்கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும்மானந்த ஸ்ரீ சிவபிரபாகர சித்தயோகி பரமஹம்ஸர் @ ஓமலூர் & பந்தனம்திட்டா.
பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் @ மதுரை,ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் @ குட்லாம்பட்டி (மதுரை),
பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.
உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் @ மதுரை;ஆனந்த நடராஜ சுவாமிகள் @ குட்லாம்பட்டி(மதுரை),ஸ்ரீமச்சமுனி @ திருப்பரங்குன்றம்.
ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் @ மதுரை,திபாவளிக்கு முந்தையநாள் அன்று குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி

வியாழன், 9 ஏப்ரல், 2015

அழுகணிச் சித்தர் பாடல்கள்...


கலித்தாழிசை

மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே

கோலப் பதியடியோ குதர்க்கத் தெரு நடுவே

பாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்

மேலப் பதிதனிலே என் கண்ணம்மா! 

விளையாட்டைப் பாரேனோ! 1
எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
பஞ்சாயக் காரர்ஐவர் பட்டணமுந் தானிரண்டு
அஞ்சாமற் பேசுகின்றாய் ஆக்கினைக்குத் தான்பயந்து
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா! 
நிலைகடந்து வாடுறண்டி! 2
முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
பத்தாம் இதழ்பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி
அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே
குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா! 
கோலமிட்டுப் பாரேனோ! 3
சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க!
உண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
முத்துப் போலன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும்
தித்திக்குந் தேனாமிர்தம் என் கண்ணம்மா! 
தின்றுகளைப் பாரேனோ! 4
பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கிச்
செம்பொற் கலையுடுத்திச் சேல்விழிக்கு மையெழுதி
அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே
கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா!
கண்குளிரப் பாரேனோ! 5
எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால்நாலும் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா!
ஆண்டிருந்தா லாகாதோ! 6
கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா!
குடியோடிப் போகானோ! 7
ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா!
உன்பாதஞ் சேரேனோ! 8
வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்றுசொல்லித்
தாழைப் பழத்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா!
வாழ்வெனக்கு வாராதோ! 9
பையூரி லேயிருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்,
மெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா!
பாழாய் முடியாவோ! 10
மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்
காமன் கணையெனக்குக் கனலாக வேகுதடி
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா!
கண்விழிக்க வேகாவோ! 11
அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்
சந்திரரும் சூரியரும் தாம்போந்த காவனத்தே
வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா!
மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ! 12
காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா!
கண்குளிரக் காண்பேனோ! 13
உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சுக்கு மேலேறி வானுதிரம் தானேடுத்துக்
கச்சை வடம்புரியக் காயலூர்ப் பாதையிலே
வச்சு மறந்தல்லோ என் கண்ணம்மா!
வகைமோச மானேண்டி! 14
மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டாய்த் தான்தூக்கி
நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி
நாக்கால் வலைபரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே
மூக்காலைக் காணாமல் என் கண்ணம்மா
முழுதும் தவிக்கிறண்டி! 15
காமமலர் தூவக் கருத்தெனக்கு வந்ததடி
பாமவலி தொலைக்கப் பாசவலி கிட்டுதில்லை
பாமவலி தொலைக்கப் பாசவலி நிற்குமென்றால்
காமமலர் மூன்றும் என் கண்ணம்மா!
கண்ணெதிரே நில்லாவோ! 16
தங்காயம் தோன்றாமல் சாண்கலக் கொல்லைகட்டி
வெங்காய நாற்றுவிட்டு வெகுநாளாய்க் காத்திருந்தேன்
வெங்காயந் தின்னாமல் மேற்றொல்லைத் தின்றலவோ
தங்காயந் தோணாமல் என் கண்ணம்மா!
சாகிறண்டி சாகாமல்! 17
பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்ததுபோல்
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கம் தீரவில்லை
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கந் தீர்ந்தக்கால்
பற்றற்ற நீராகும் என் கண்ணம்மா!
பாசியது வேறாமோ! 18
கற்றாரும் மற்றாருந் தொண்ணூற்றோ டாறதிலே
உற்றாரும் பெற்றாரும் ஒன்றென்றே யானிருந்தேன்
உற்றாரும் பெற்றாரும் ஊரைவிட்டுப் போகையிலே
சுற்றாரு மில்லாமல் என் கண்ணம்மா!
துணையிழந்து நின்றதென்ன ? 19
கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை மெத்தவுண்டு
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை கண்டவர்க்கும்
கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா!
காரணங்கள் மெத்தவுண்டே! 20
சாயச் சரக்கெடுத்தே சாதிலிங்கம் தான்சேர்த்து
மாயப் பொடிகலந்து வாலுழுவை நெய்யூற்றிப்
பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே
இட்ட மருந்தாலே என் கண்ணம்மா!
இவ்வேட மானேண்டி! 21
பாதாள மூலியடி பாடாணம் தான்சேர்த்து
வேதாளங் கூட்டியல்லோ வெண்டாரை நெய்யூற்றிச்
செந்தூர மையடியோ செகமெல்லாம் தான்மிரட்டித்
தந்த மருந்தாலே என் கண்ணம்மா!
தணலாக வேகுறண்டி! 22
கள்ளர் பயமெனக்குக் கால்தூக்க வொட்டாமல்
பிள்ளை யழுதுநின்றால பெற்றவட்குப் பாரமடி
பிள்ளை யழுவாமல் பெற்றமனம் நோகாமல்
கள்ளர் பயமெனக்கே என் கண்ணம்மா!
கடுகளவு காணாதோ! 23
பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள்
விட்டுப் பிரியாமல் வீரியங்கள் தாம்பேசி
விட்டுப் பிரிந்தவரே வேறு படுங்காலம்
பட்டணமும் தான்பறிபோய் என் கண்ணம்மா
படைமன்னர் மாண்டதென்ன ? 24
ஆகாப் புலையனடி அஞ்ஞானந் தான்பேசிச்
சாகாத் தலையறியேன் தன்னறிவு தானறியேன்
வேகாத காலறியேன் விதிமோச மானேனடி
நோகாமல் நொந்தல்லோ என் கண்ணம்மா!
நொடியில்மெழு கானேனடி! 25
தாயைச் சதமென்றே தந்தையரை ஒப்பென்றே
மாயக் கலவிவந்து மதிமயக்க மானேனடி
மாயக் கலவிவிட்டு மதிமயக்கம் தீர்ந்தக்கால்
தாயுஞ் சதமாமோ என் கண்னம்மா
தந்தையரு மொப்பாமோ ? 26
அஞ்சாத கள்ளனடி ஆருமற்ற பாவியடி
நெஞ்சாரப் போய்சொல்லும் நேயமில்லா நிட்டூரன்
கஞ்சா வெறியனடி கைசேத மாகுமுன்னே
அஞ்சாதே யென்றுசொல்லி என் கண்ணம்மா
ஆண்டிருந்தா லாகாதோ! 27
உன்னை மறந்தல்லோ உளுத்த மரமானேன்
தன்னை மறந்தார்க்குத் தாய்தந்தை யில்லையடி
தன்னை மறக்காமற் றாயாரு முண்டானால்
உன்னை மறக்காமல் என் கண்னம்மா
ஒத்திருந்து வாழேனோ ? 28
காயப் பதிதனிலே கந்தமூலம் வாங்கி
மாயப் பணிபூண்டு வாழுஞ் சரக்கெடுத்தே
ஆயத் துறைதனிலே ஆராய்ந்து பார்க்குமுன்னே
மாயச் சுருளோலை என் கண்ணம்மா
மடிமேல் விழுந்ததென்ன ? 29
சித்திரத்தை குத்தியல்லோ சிலையை எழுதிவைத்து
உத்திரத்தைக் காட்டாமல் ஊரம்ப லமானேன்
உத்திரத்தைக் காட்டியல்லோ ஊரம்ப லமானால்
சித்திரமும் வேறாமோ என் கண்னம்மா!
சிலையுங் குலையாதோ! 30
புல்ல ரிடத்திற்போய்ப் பொருள்தனக்குக் கையேந்திப்
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிகக்காட்டமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகமல் என் கண்ணம்மா
பொருளெனக்குத் தாராயோ ? 31
வெட்டுண்ட சக்கரத்தால் வேண தனமளித்துக்
குட்டுண்டு நின்றேண்டி கோடிமனு முன்னாலே
குட்டுண்டு நில்லாமற் கோடிமனு முன்னாக
வெட்டுண்டு பிணிநீங்கி என் கண்ணம்மா
விழித்துவெளி காட்டாயோ! 32
ஐங்கரனைத் தொண்ட னிட்டேன் - ஆத்தாடி
அருளடைய வேணுமென்று
தாங்காமல் வந்தொருவன் - ஆத்தாடி
தற்சொரூபங் காட்டி யென்னை 33
கொள்ள பிறப்பறுக்க - ஆத்தாடி
கொண்டான் குருவாகி
கள்களப் புலனறுக்க - ஆத்தாடி
காரணமாய் வந்தாண்டி. 34
ஆதாரம் ஆறினையும் - ஆத்தாடி
ஐம்பத்தோர் அக்கரமும்
சூதான கோட்டையெல்லாம் - ஆத்தாடி
சுட்டான் துரிசறவே. 35
வாகாதி ஐவரையும் - ஆத்தாடி
மாண்டுவிழக் கண்டேண்டி
தத்துவங்க ளெல்லாம் - ஆத்தாடி
தலைகெட்டு வெந்ததடி. 36
மஞ்சன நீராட்டி - ஆத்தாடி
மலர்பறித்துத் தூவாமல்
நெஞ்சு வெறும்பாழாய் - ஆத்தாடி
நின்றநிலை காணேண்டி. 37
பாடிப் படித்து - ஆத்தாடி
பன்மலர்கள் சாத்தாமல்
ஓடித் திரியாமல் - ஆத்தாடி 
உருக்கெட்டு விட்டேண்டி. 38
மாணிக்கத்து உள்ளளிபோல் - ஆத்தாடி
மருவி யிருந்தாண்டி
பேணித் தொழுமடியார் - ஆத்தாடி
பேசாப் பெருமையன் காண். 39
புத்தி கலங்கியடி - ஆத்தாடி
போந்தேன் பொரிவழியே
பதித்தறியாமல் - ஆத்தாடி


பாழியில் கவிழ்ந்தேனே. 
தோற்றம் மொடுக்கம் இல்லா -
ஆத்தாடிதொல் பொருளை அறியார்கள் .

அகத்தியர்அறிவுரை!


"பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தச் சமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்."