சனி, 7 ஜூன், 2014

பழனி மூட்டை சாமிகள் - ஒரு பக்தையின் அனுபவம்

மூட்டை சாமிகளின் பதிவை படித்த பக்தை ஒருவர் அனுப்பிய மின்-அஞ்சல்

 ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க
பகவான் ஞான வள்ளல் திருவடிகளே சரணம் சரணம் சரணம்


சற்குருவின் திருவடியினை பணிந்து அவர் அருளாலே அவரை வணங்கி அவருடைய குழந்தையாகிய அடியவளுக்கு  பகவான் கருணா மூர்த்தி தரிசனம் தந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஆரம்ப காலத்தில் எனக்கு பகவான் மீது நம்பிக்கை இல்லை, ஆனால் எனது தந்தை பகவானை வழிபடுவார். எங்கள் மதுரையில் பகவானால் நிறுவப்பட்ட சபை உள்ளது.எனது தந்தை அங்கு செல்வார். எனக்கு அங்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் இருந்தது. கொஞ்ச காலம் கழிந்து சபையின் முதல் ஆண்டு விழாவின் போது பகவானின் அருளால் எனது தந்தையுடன் சென்றேன். சுவாமியின் பக்தர் ஒருவர் சொற்பொழிவு ஆற்றினார் பிறகு அவர் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறினால் உங்களுக்கு ஒரு பரிசு தருவேன் என்றார். உடனே எனக்கு நாமும் பரிசு வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அவர் "பகவான் ஆரம்ப காலத்தில் எந்த மலையில் வசித்தார் " என்ற கேள்வியை கேட்டார். நான் நினைத்தேன் நமக்கு இந்த சுவாமியை பற்றி தெரியாதே நாம் எப்படி பரிசு ங்குவோம் என்று. அவர் பல கேள்விகளுக்கு பிறகு கடைசியாக நான் பேசிய சொற்பொழிவில் இருந்து ஓரு கேள்வி கேட்கிறேன் என்று சொல்லி கேள்வியை கேட்டார். அதற்கான பதில் தெரிந்தவர்கள் கையை உயர்த்தினார்கள். அதில் இந்த அடியேனும் ஒருவர். அவர் என்னிடம் பதில் கேட்டார், நான் சரியான பதிலை கூறியவுடன் என்னை அழைத்து அந்த பரிசை தந்தார். பரிசு  பகவானை பற்றிய புத்தகம். இதன் மூலம் நான் நினைத்தேன் "நமக்கு என்ன கொடுக்கணும் எப்ப கொடுக்கணும்" என்பதை பகவான் அறிவார்.
அதன் பிறகு நான் சபைக்கு வார வாரம் செல்வேன் ஆனால் பகவானை பார்த்தது இல்லை. சில மாதங்கள்  சென்ற பிறகு பகவானின் அருளால் அவரை தரிசிக்க செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்ற பொழுது பகவான் எனக்கு சில வேலைகளை  கொடுத்தார்கள். அப்பொழுது சுவாமி சொன்னார்கள்  "கோபக்காரி ஆணவக்காரி" என்று . அப்பொழுது எல்லாம் நான் மிகவும் கோபப்படுவேன், அதை எனக்கு உணர்த்தினார். அன்று இரவு பகவானிடம்  ஊருக்கு போய் விட்டு வருகிறோம் என்று சொன்னோம் அதற்கு பகவான் போய் உட்காருங்கள் என்றார். சுவாமி எது சொன்னாலும் செய்தாலும் அது நம்முடைய நன்மைக்கே. சிறிது நேரம் சென்ற பிறகு நாங்கள் பகவானிடம்  ஊருக்கு போய் விட்டு வருகிறோம் என்று சொன்னோம்.பகவான் ஒரு திசை சொல்லி போகச் சொன்னார்கள். பகவானின் அருள் தரிசனத்துக்கு பிறகு பற்பல மாற்றங்கள் என்னுடைய வாழ்வில் நிகழ்ந்தும், நிகழ்ந்துகொண்டும் உள்ளன.

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்றும்  இல்லை
அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே. 
என்ற பாடலுக்கேற்ப கற்பக விருச்சமான பகவான் சற்குரு பக்தர்களுக்கு வேண்டியதை அருள காத்து கொண்டு இருக்கிறார்.
நாம்  பகவானிடம் முழுவதுமாக சரணடைந்து விட்டால் எந்த ஒரு செயலையும் ஆராய்ந்து தான் செய்வோம். நாம் ஏதாவது தவறு செய்துவிட்டால் பகவானிடம் தண்டனை கிடைக்கும் என்ற எண்ணமே நம்மை நல்வழிப் படுத்தும். சுவாமி நமக்கு சொல்லும் பாடம் "வாழ்க வளமுடன் நேர்மையாக". நாம் நம் வாழ்வில் எல்லா செயல்களிலும் இந்த நேர்மையை கடைபிடிக்க ஆரம்பித்து விட்டால் பகவானின் அருள் நமக்கு பரி பூரணமாக கிடைக்கும்.
பகவானுக்கு நாம் மன கோவில் கட்டி சற்குருவின் திருநாமத்தை இடைவிடாது சொல்லி அந்த கருணா மூர்த்தியின் அருளை பெற்று வீடு பேறு அடைய முயல்வோம்.
அன்பு மாறா இல்லறமும் 
ஆசை இல்லா தர்மமும்
இன்னல் தார உறவுகளும் 
ஈகை உள்ள நெஞ்சமும்
உண்மை உணரும் லட்சியமும் 
ஊக்கம் அளிக்கும் நட்புமும் 
என்றும் மாறாத  நற்குணமும் 
ஏவல் கேட்கும் பணிவும்
ஐயம் இல்லா வாழ்வும்
ஒழுக்கம்  மாறாத இயக்கமும் 
ஓம் கார பெருமமும்
பிறப்பு அறுக்கும் வ்வுச்சதமும்  
ஒன்று சேர தந்து அருள்வாய் 
சச்சிதானந்த சற்குருவே சரணம் சரணம் சரணம் 
அன்பே கடவுள் சற்குரு வாழ்க
சற்குரு வாழ்க சற்குருவே துணை
சற்குரு பாதம்  சரணம் பாதம்.

வெள்ளி, 6 ஜூன், 2014

சமீபத்திலே பகவான் ரமணரின் வார்த்தைகளினை பார்த்தேன்...

After a brief discussion between Major chadwick and Bhagvan on the necessity of periodic action to ensure that the body remains healthy. There was ten minute silence. Then a devotee asked, " it is stated that one should dive in to oneself with a keen one-pointed mind controlling speech and breath. Is it necessary to control the breath also?"
 Bhagavan replied, " if all thoughts are controlled, automatically the breath is also controlled. By intense and sustained practice it will become habitual. controlling the breath through various yogic exercises is like putting brakes to the train when the engine is working. But by watching the source of the mind with full concentration, the thoughts would get controlled. This method would be more effective and easy.It is like shutting the power of the engine and there by stopping the train completely."
ஆக, நமது குருவிடம் கொண்ட ஆழ்ந்த தொடர்பிலே தொடர்ந்து ஆழ்ந்த இறை நிலை தவம் செய்த போது, சிவகளத்திலே நிலைத்து நீடித்து நின்ற போது, ஸ்தூல உடலைக் கடந்தும் விலகியும் இருக்கிற தன்மை கிடைத்தது... அப்போதும் தியானம் தடைபடவில்லை... எப்போது எமது உடலை விலகி நின்று பேரானந்தத்தினை உணர முடிந்ததோ, அப்போதே உடலை விட்டு உயிர் பிரிந்து, தனது சூக்கும உடலிலே புகுந்து கொண்டது... சூக்கும உடலிலே புகுந்த போது தான் மரணம் என்றால் என்ன? என்பதை உணர முடிந்தது...
ஸ்தூல உடலிலே இருந்து சூக்கும உடலிற்கு உயிர் தாவிய போதும் கூட சிவகளத்தினை விட்டு விலகாது விழிப்பிலே தியானம் தொடர்ந்து இருந்தது..

சூக்கும உடலிலே உயிர் இணைந்த உடன், அளவிலா வேகத்திலே இறை அருளானது எம்மை இழுத்துக்கொளவதினை உணரமுடிந்தது... அந்த ஈர்ப்பிலே தொடர்ந்து தியானத்திலே லயித்த போது, சூக்கும உடலில் இருந்து உயிரானது மேலே எழுவதும், அந்த நிலையே தான் குண்டலினி என்றும்... எது முதலில் மனமாக இருந்ததோ, அதுவே தான் உயிராக தன்மாற்றம் அடைந்தது என்று உணர்ந்தேன்... தியானமும் தொடர்ந்தது...சூக்கும உயிரானது அளப்பறிய ஆனந்தத்துடன் அந்த ஈர்ப்பு நிலையாம் இறை என்ற கருணை நிலையால் ஈர்த்துக்கொள்ளப்பட்டது... இறை என்ற கருணை நிலையானதன் ஆற்றலின் முன் இந்த உடல் எனது என்கிற முனைப்பு (" நான்") சென்று கரைந்து ஒன்றாக ஆரம்பித்த போது, எம்மால் தாங்க முடியாத ஆனந்த நிலையும், உடல் என்ற ஒன்றை விலகி நிரந்தரமாக விலகி விடுவோம் என்கிற உணர்வு எண்ணமாக மேலிட்ட போது, அந்த அசையாத சிவகளத்திலே அசைவு ஏற்பட்டது...
இந்த அனுபவத்திலே எமது அம்மை, அப்பனாம் குரு எமக்கு பேரானந்தத்தினை மட்டுமே தந்தார்...குண்டலினியானது உயிராக உணர்ந்து, சூக்குமத்திலே இருந்து உயர்ந்த போதும் எமக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்க்கு இப்பிள்ளை என்ன செய்து விடப் போகிறேன் எம் அன்னைக்கு? வாரி வாரி வழங்கியதற்க்கு என்ன பெரிதாக அவர்க்கு திருப்பித் தரப் போகிறேன்?
குண்டலினி தியானத்திலே எந்த கங்கடமும் இல்லாது நமது குரு நமக்குத் தந்திருக்கிறார் என்பதற்க்குத் தான் இப்பிள்ளை எழுதுகிறான்..
அன்பும் கருணையுமாய் அகன்ற நிலையில் உள்ளாய்
என் மனதை விரித்து இணைத்துக் கொண்டாய் உன்னுள்ளே
கன்ம வினைகள் எல்லாம் கழிந்தன உணர்கின்றேன்
உன்னை உணர்ந்துய்ய உலகோர்க்கு தொண்டு செய்வேன்..
உன்னிலே நான் அடங்க என்னுள்ளே நீ விளங்க
உனது தன்மை ஒளிர எனதுள்ளத் தூய்மை பெற்றேன்
இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேறு பெற்ற பின்னர்
எடுத்த மனிதப்பிறப்பெய்தியதே முழுமை!

குருவே சரணம்...
-எல்லாம் வல்ல இறை அருளின் முன் அனைத்து உயிர்களும் ஒன்றே.
- கருத்திற்க்கு விஞ்ஞானம் பற்றி நிறைய பேசினாலும், அறியப்படாத ஒன்றாக என்றுமே விளங்கும் இறை நிலை என்ற ஒன்று இல்லாது போனால், மனிதன் தன் சுய நிலையை உணர வேண்டிய கட்டாயம் இல்லாமல் இருந்திருப்பான்.

- ஒவ்வோர் தனி மனிதனும் சுய அறிவால் முன்னேற்றத்தை அடையும் வரை எல்லா வகையான பேச்சுக்களையும் கேட்டுக்கொண்டே இருந்தாலும், தியானம் என்ற ஒரு பயிற்ச்சியிலே அமரும் போது கற்ற அனைத்தையும் துறக்க வேண்டி வருகிறது. One has to know how to unlearn in Meditation. learning of knowledge is burden.

- நாம் இறை தியானம் செய்தால், உடலிலே உள்ள நரம்புகள் புத்துணர்ச்சியும் பெறுகின்றது. – நரம்புத் தளர்ச்சியை குறைக்கின்றது. மூச்சு சீராக இருக்கவைப்பதால், இதயத் துடிப்பும் சீராகவும் ஆகிறது.

- நன்றாக இறை தியானம் செய்தால், சுவாசம் சீராக ஆகி, இதயத்துடிப்பும் சீராகிறது.-மூச்சிழுக்கும் அளவு குறைவதால் இதயத்தின் துடிப்பை முறைப்படுத்தி துடிப்பை சீராக்குகின்றது. –இந்த மூச்சிழுக்கும் அளவு இயல்பாகவே நமக்கு நடைமுறையில் வந்து விடுவதால் தவத்தின் பலன் வாழ்விலே நன்றாக அனுபவிக்க முடிகின்றது.

- இதயத்துடிப்பை நிறுத்துவது என்பது விஞ்ஞானத்தினால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. விஞ்ஞானத்திலே இதயம் நின்றால் மனிதன் பிணம் என்று அழைக்கப்படுகின்றான். தியானத்திலே இதயம் நின்றால், மனிதன் தெய்வமாகின்றான்.

- -மனது எட்டும் அளவிற்கே விஞ்ஞானம் வேலை செய்கின்றது. –விஞ்ஞானம் அறியாத ஒன்று இறை நிலை என்று காலம் காலமாக இருந்து கொண்டே இருக்கும். விளக்க முடிந்த அனைத்து இறை விளக்கங்களும் அதிகப் படியாக துவைத அடிப்படை வரை போகும். இறையை ஒன்ற தியானத்தை அன்றி ஒருவரும் தர முடியாது.

- -இறை அறத்தொடு ஒன்றும் போது கிடைக்கும் வாய்ப்பு என்பது மானிடனாய் பிறந்த கோடிகளில் ஒரு சிலருக்கே தான். –அந்த வாய்ப்பும் கூட குருவை அன்றி உணர்ந்தவர் ஒருவரும் இல்லை.-அதிகபட்ச அறிவை தியானம் அன்றி பெற்றவர்கள் தியானம் செய்தால் சரியாகும் என்பதை ஒப்புக்கொள்வர்.

- -எல்லாம் முடிகின்ற இடத்திலே நிற்கின்ற நாம் எதற்க்கும் எதை எதையோ பார்க்க வேண்டும். – குருவின் உதவி நமக்கு எங்கே கிடைக்கப் பெறுகிறது என்று தியானித்தால் இறை நிலை வரை நம்மை கொண்டு சேர்த்து விடும்.

- -தியானத்திலே அமரும் நாம் ஆரம்பத்திலே குருவை பிடித்துக் கொண்டால், அந்த பிடிப்பின் அளவிற்கு ஏற்ப அழுத்தத்திற்கு ஏற்ப அறிவை பற்றி அறிவிலே தெளியும். –தேடுதல் தீரும். –அது வரை பிச்சைக்காரனைப் போல அலைந்து தான் தேட வேண்டும் தியானத்திலே. குருவைத் தேடிய பிச்சைக்காரனை குருவானவர் போதும் தேடியது… நிறுத்து உன்னை … நீ என்னிடத்திலே இப்போது என்கிற போது பிச்சைக்காரன் மாறிப் போயிருப்பான். அசைவின்றி குருவோடு இணைந்து ஆனந்தத்திலே கரைந்திருப்பான்.

- -தியானத்திலே விரும்புதல் என்ற ஒன்றும், விரும்பாதது என்றும் ஒரு நிலை இருக்கின்றது. வீராவசனம் பேசும் எவரும் இறையின் முன் நிற்கும் போது தான் அந்த ஆற்றலை பார்க்கும் போது தான் அவரின் சுய வலிமை விளங்கும்.

- -குருவின் காலடியை தவத்தின் ஆரம்பத்திலே மனதால் நினைப்பதற்க்கும், தியானத்திலே குருவின் காலடியை உணர்வதற்க்கும் நிறைய வித்தியாசம் உண்டு. வெறும் 20 நிமிடம் போதாது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் குருவை விடாமல் கொண்டால் அன்றி வேறு வழி இல்லை. – ஏதோ சாமியார் என்கிற மாதிரி பக்கத்திலே இருப்பவர், தியானம் ஆரம்பித்தவுடன், மனதில் நினைக்கும் போது ஒரு அந்நியனாகவும் இருக்கின்ற அந்த குரு, மனதால் அன்பு வடிய நினைக்கும் போது பெற்ற தந்தையாகவும் இருப்பார்… -தியானம் நிலைத்தால் அவரே நம் தாயாவார்… அந்த தாயின் நிலையும் மாறி இறையாகவும் மாறுவார் குரு. அப்போதும் குருவைத் தொட முடியாது அறிய முடியாத ஆற்றல் மிக்கவராய் அருட்பெரும் ஜோதியாய் இருப்பார்..

- -குருவாக, தந்தையாக, தாயாக, இறைவனாக இருக்கும் குருவும் அவரை ஏற்கும் பிள்ளையும் ஒன்றே தான் என்பார்.  
இறை நிலையிலே நின்று.- -தாயே என்றவுடன் தருக்கென்ற தன்முனைப்பு குருவோடு இணைந்து கண்ணிலே நீர் வர வேண்டும். –அம்மா என்று இறைஞ்சினால் குரு கண்ணிலே நீராக வர வேண்டும்… அப்பா என்றால் மனம் என்ற சுமை இறங்கிப்போக வேண்டும்…. –எந்த அளவிற்கு ஏற்கிறோமோ அந்த அளவிற்கே தான் இறையின் நெறி அறிவில் தெளியும்.. அதனைத்தாண்டி ஒரு புள்ளி நம்மால் பெற முடியாது…
- -தாயே, தந்தையே , அப்பா, குருவே என்று அணுகும் சீடனுக்கு, தன்மையிலே தன்னை வெளிப்படுத்தி உயர்த்துவது குருவின் அருள் !

- -- நித்தம் நித்தம் உயிர் உடலில் இயங்குமட்டும்,
- -எவர் ஒருவர் குருவை ஒழுகினாலும்,
- -தப்பாது குரு உயர்வு நினைப்போர் தம்மை
- -தரத்திலே உயர்த்தி பிறவிப்பயனாகிய நிறைவைத் தரும்…