புதன், 4 செப்டம்பர், 2013

தமிழையும் கடவுளையும் ஒன்றாக பார்த்த தலைமுறை ...

தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர்
திருவாரூரில் தியாகராஜர்
திருநெல்வேலியில் நெல்லையப்பர்
திருவையாறில் ஐயாரப்பர்

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் ...
திருவாவடுதுறையில் கோமுக்தீஸ்வரர்
திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர்
திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர்

திருக்கருகாவூரில் முல்லைவனநாதர்
திருவாலாங்காட்டில் வடாரண்யேஸ்வரர்
திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர்
திருவிசநல்லூரில் யோகநந்தீஸ்வரர்

திருப்புகலூரில் வர்த்தமானீஸ்வரர்
திருத்தங்கூரில் வெள்ளிமலைநாதர்
திருக்கழுகுன்றத்தில் வேதகிரீஸ்வரர்
திருநீலக்குடியில் நீலகண்டேஸ்வரர்

திருச்சியில் தாயுமானவர்
திருநள்ளாரில் தர்ப்பாரண்யேஸ்வரர்
திருமணஞ்சேரியில் உத்வாகநாதர்
திருவேள்விக்குடியில் கல்யாண சுந்தரேஸ்வரர்

இப்படி ஒரே ஒரு கடவுளுக்கு பல்வேறு பெயர்களில் பல்வேறு இடத்தில் கோவில் அமைத்து தேவாரத்தையும் திருவாசகத்தையும் பாடி , ஆறு கால பூசையில் , ஒவ்வொரு பூசையையும் ஒவ்வொரு ஊரில் சிறப்பாக செய்து, தமிழையும் கடவுளையும் ஒன்றாகவே வணங்கி இருக்கின்றனர் நம் முன்னோர்கள்.

'த' வரிசையில் ஒரு பாதி ஊர்களை மட்டுமே எழுதியிருக்கிறேன்.இதற்கே மூச்சு வாங்குது.

இன்னும் மயிலாப்பூரில் காபாலீஸ்வரர் , சிதம்பரத்தில் நடராஜர் , வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாதர் என ஆரம்பித்தால் எழுதி முடிக்கவே ஒரு நாள் ஆகும்.
தேவாரம் பாடப் பெற்ற தலங்கள் மட்டுமே 274. இதில் காவிரியின் தென்கரையில் அமைந்த தலங்கள் மட்டுமே 128.

தமிழையும் கடவுளையும் ஒன்றாக பார்த்த தலைமுறை இவர்களுடையதாகத் தான் இருக்கும்.  ஊரின் சிறப்பைக் கொண்டே அந்த ஊர்களுக்கு பெயர் வைத்து , அந்த பெயரைக் கொண்டே அந்த ஊர் கடவுளையும் வணங்கி இருக்கின்றனர்.

உதாரணம் : திரு + ஐந்து +ஆறு = திரு ஐயாறு , இதுவே திருவையாறாக மாறி இருக்கிறது.காவிரி , குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு எனும் ஐந்து ஆறுகள் அந்த ஊரில் ஓடுவதால் இந்தப் பெயரை வைத்து கடவுளையும் ஐயாறப்பர் என்று அழைத்து இருக்கின்றனர்.

  இப்போதெல்லாம் நம்முடைய  பெயருக்கு காரணம் கேட்டாலே நம்மில் பலருக்கு விளக்கம் சொல்ல முடிவதில்லை.  அவர்கள் ஊருக்கு பெயர் வைப்பதில் கூட இவ்வளவு கவனமாக இருந்திருக்கின்றனர்.வாழ்க தமிழர்களின் புகழ்.