நடந்து கொண்டிருப்பது,
நடந்தது,
நடக்கப் போவது
எல்லாம் மங்களத்தன்மையே .
வாழ்க்கையை ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அது மங்களத் தன்மையைத் தான் உங்களுக்குச் சேர்த்துக் கொண்டே இருக்கிறது.
ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டியது, நாம் செய்ய வேண்டியது எல்லாமே ஒரேயொரு விஷயம்தான். கொஞ்சம் சிரத்தையோடு நம் வாழ்க்கையை நாமே ஆழ்ந்து பார்த்தல். ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தல். "மோதிரம் போட்டுக் கொள்கிற அளவுக்கு எனக்குச் சொத்தைக் கொடுக்கவில்லையே" என்று கடவுளைக் காலையிலிருந்து மாலை வரைக்கும் திட்டுகின்ற நாம், மோதிரம் போட ஒரு விரலைக் கொடுத்தாரே என்று நினைப்பதே இல்லை.
மோதிர விரலைக் கொடுத்திருக்கிறாரே என்பதற்காக ஆனந்தப்படுவதில்லை.
மோதிரம் போடுவதற்குச் சொத்தில்லையே என்பதற்காகத்தான் காலையிலிருந்து மாலை வரைக்கும் கடவுளைத் திட்டிக் கொண்டிருக்கிறோம். இல்லை எதையோ, யாரையோ சலித்துக் கொள்கிறோம்.
கடவுளைச் சலித்துக் கொள்வதும் வாழ்வைச் சலித்துக் கொள்வதும் இரண்டுமே ஒன்று. இந்த சத்தியத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். பிரபஞ்சத்திற்கென்று ஒரு தர்மம் இருக்கின்றது.
பிரபஞ்சத்தை இயக்கும் தர்மமே மங்களத்தன்மைதான். பிரபஞ்சத்தால் உங்களுக்குக் கஷ்டங்க¨த் தரமுடியாது. கஷ்டங்கள் என்பதே, மனிதர்கள் உருவாக்கியதுதான். இந்த மொத்தப் பிரபஞ்சத்திலும் கஷ்டம் என்ற ஒன்றே கிடையாது.
தியான ஆராய்ச்சி
சாபங்களைக் குறைத்து வரங்களை அதிகரிக்கும் பயிற்சி இது.
1. ஒவ்வொரு நிமிடமும் வாழ்வு எப்படி நகருகின்றது? வெறுமைத் தன்மையோடு, வெளியே சிரித்து, உள்ளே வேறு ஏதோ குறை உணர்வோடு நகருகின்றதா?
2, அடிக்க 'ச்சே!' 'சை!' என்ற சலிப்புச் சத்தங்கள் உங்களிடமிருந்து வெடிக்கின்றதா?
3. டி.வி பார்ப்பதிலிருந்து, மற்றவரோடு பேசி சிரிப்பதும் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பைத் தருகின்றதா?
4. அருமையாய் சிரித்து, இனிமையாய்ப் பேசுபவர்களைப் பார்த்தால், ஏக்கம் வருகின்றதா?
5. அழகாய் இருப்பவர்களை, நன்றாய் வாழ்பவர்களைப் பார்த்தால், பொறாமை கிளப்புகிறதா? என்னால் முடியவில்லையே என்ற துக்கம் உள்ளுக்குள் கசிகிறதா?
இந்த ஐந்து கேள்விகளுக்கம், எந்தெந்த கேள்விகளுக்கு பதில் 'ஆம்!' என்று சொல்கின்றீர்களோ, அதன் தீவிரத்தைப் பொறுத்து இருபது மதிப்பெண்கள் வரை அதிகபட்சமாகத் தரலாம். ஆம்! அப்படித்தான் இருக்கின்றது. ஆனால் என்னை ரொம்ப மோசமாக இது பாதிக்கவில்லை என்று, எந்தெந்த கேள்விகளுக்குத் தோன்றுகிறதோ, அதற்குப் பத்து மதிப்பெண்கள் வரை பாதிப்பின் தீவிரம் பொறுத்து மதிப்பெண் அளியுங்கள். ஐந்து கேள்விகளின் மதிப்பெண்களைக் கூட்டுங்கள். அதுதான. நீங்கள் எவ்வளவு சதவிகித கஷ்டத்தை உருவாக்கி வாழுகின்றீர்கள் என்பதின் அளவீடு.
எவ்வளவு மதிப்பெண் வந்திருக்கின்றதோ, அவ்வளவு நீங்கள் பிரபஞ்ச சக்தியை இழந்து கொண்டிருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.
ஒரு வேளை 40% மதிப்பெண் என்றால், 40% வாழ்வை, ஒவ்வொரு நிமிடமும் இழந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். அப்படியென்றால், இவர் தன்னுடைய அணுகுமுறையை இப்போது 40% சதவீதம் மாற்றினாலே போதும், அவர் வாழ்வில் முழு மங்களத்தன்மையை அடைந்து விடுவார். உங்கள் வாழ்வில் உள்ள அமங்களத்தை மங்களமாக்க, நீங்கள் எவ்வளவு முயற்சி எடுக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அருமையான ஆராய்ச்சி இது! செய்து பாருங்கள், சாபங்கள் குறையும், வரங்கள் அதிகரிக்கும்