Nothing is Mine, Everything Is Yours, O Mercyful Lord Arunachchala! என்னுடையது எதுவுமில்லை, அனைத்தும் உன்னுடையதே, அருளாளா!அருணாச்சலா! தன்னை அறியும் தவமே பெரிதென்று தரணியில் தவம் புரிவோரெல்லாம் சிவனை அறிவார், சிவமே ஆவார்"."Every Visitor to my Dwelling is GOD SHIVA HIM SELF"
சனி, 28 நவம்பர், 2020
கார்த்திகை தீபம் ஏற்றும் போது......05.12..2014
"துன்பம் அகற்றும் மலை தொல்வினையை நீக்குமலை, அன்பர்தமை வாவென்று அழைக்கும்மலை -தன்பகத்தைக் காட்டுமலை தன்னைக் கருத்தில் உறும் அன்பர் இடர் வாட்டுமலை அண்ணாமலை.'' பொருள்: நம் துன்பங்களைப் போக்குவதும், முற்பிறவியில் செய்த தீவினைகளைக் களைவதும், அன்பர்களை தன்னிடத்தே வா என்று அழைப்பதும். தன்னை நாடி வந்தவர்களுக்கு திருவடிகளைக் காட்டுவதும், தன்னை எப்போதும் மனதில் இருத்தி தியானிப்பவர்களின் இடர்களை வாட்டுவதுமாகிய மலை திருவண்ணாமலையே. விளக்கம்: இந்தப் பாடலை தீபமேற்றும் போது பாடினால் பிறப்பற்ற நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.