ஞாயிறு, 22 நவம்பர், 2020

தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே..


என்னுள்ளே உள்ள குரு தான் இதை செய்தார் என்று எனக்குத் தெரியும்... ஆனால் எங்கும் என்னுள்ளே உள்ள குரு என்ற புதையலை வெளிக் காண்பிக்கவே இல்லை.... குரு என்ற உதவி எப்படி வேலை செய்தது என்பதை அப்படியே சொன்னேன்...

குரு என்ற தொடர்பு என்பதே எனக்குப்  போதும், எவருக்கும் போதும் என்ற முடிவு எனக்குள் எட்டி விட்டது... அதன் பிறகு எங்கு எந்தப்  பெரிய பிரச்சினை வந்தாலும், முற்றிலும் மாறுபட்ட ஒரு அணுகு முறையை என்னுள்ளே இருந்து வெளிக்காட்டினார் என் இனிய ரமணர்.. அதனால் என்னால் சாதிக்க முடிந்தது...
குருவானவர் அணுகுகிற சீடனின் மன அலைக்காக தனது இருப்பை வெளிக்காட்டுகிறார் அதுவும் சீடனின் மூலம்.
கண் தெரியாத சீடன் பிரபஞ்சத்தினை பற்றி சொல்வது போல இது...

சீடனின் மன அலைக்கு திருப்பியக்கமாய் குருவானவர் எப்போதும் இயங்கிக்கொண்டிருப்பார்.. இது சத்தியம்...

"ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமணாய "