வியாழன், 26 மார்ச், 2015

நான்கு மகான்களின் நாமத்தைச் சொல்லி பூஜிப்போம்,

மரணமில்லாப் பெருவாழ்வு பெற்று இன்புற்று வாழ்வோம்.
பெண்கள் நெற்றியில் பொட்டு(திலகம்) வைக்கும்பொழுது என்ன சொல்ல வேண்டும்
          பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கும்பொழுது "ஓம் திருமூலதேவாய நம", "ஓம் காளாங்கிதேவாய நம", "ஓம் போகதேவாய நம", "ஓம் கருவூர் தேவாய நம" என்று சொல்லி நெற்றியில் பொட்டு வைக்க வேண்டும். இவ்வாறு காலை, மாலையில் நான்கு மகான்களின் நாமத்தைச் சொல்லிவிட்டு, நெற்றியில் பொட்டு வைத்தால், உடல் ஆரோக்கியம் உண்டாகும், திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமணம் நடக்கும், பண்புள்ள புத்திரபாக்கியம் அமையும், தகுதியுள்ள கணவன் அமைவான், இனம் புரியாத கவலைகள் நீங்கும், தன்னம்பிக்கை உண்டாகும், எந்த துன்பத்தைக் கண்டும் சோர்வடையமாட்டார்கள், எதையும் தாங்கிக்கொள்ளும் மன உறுதி ஏற்படும், உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல், மலச்சிக்கல் நீங்கும், வீண் ஆடம்பரத்தில் நாட்டம் கொள்ளமாட்டார்கள், மற்றவர்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தமாட்டார்கள், தாம் உண்டு தன்வேலை உண்டு என்று தம் கடமையைச் செய்வார்கள், இன்னும் அநேக நற்குணங்களும் அமையும். மேலும், ஞானமும் சித்திக்கும்.
ஞானியர்களின் திருவடியைப் பூஜிப்போம், ஞானம் பெற்று வாழ்வோம்.

சனி, 14 மார்ச், 2015

மகான் சட்டைமுனிநாதர் - 10.



குருபோக நாதரைத்தான் கூறுடன் பூஜைசெய்து
குருமூலர் சட்டடைநாதர் கொங்கணர் காலாங்கி பாதம்
குருவென்று பூஜை செய்து கூறும் இச்சுவடி வைத்து
குருவென்று பதம் பணிந்தோர் கூறுடன் வேதைகாண்பார்
ஆமப்பா யுத்தி சொன்னேன் அழிபுத்தி சொல்லவில்லை
ஆமப்பா வேதைகண்டால் கற்பத்தை அதன்பின்கொள்ளு
ஆமப்பா சித்தியாகும் அன்புடன் செய்து பாரு
ஆமப்பா குருவைக்காணு அன்புடன் சொல்லினேனே.
-மகான் கருவூர் முனிவர் -11
 

மகான் கருவூர் முனிவர் அருளிய கவியின் சாரம் :;
          சித்தர்கள் அத்தனைபேரும் ஒரே தன்மையுடையவர்கள் ஆவார்கள். இவர்கள் ஆசான் அகத்தீசன் திருவடியை பூஜை செய்தவர்கள் ஆவார்கள். அகத்தீசனை பூஜைசெய்ய பூஜைசெய்யதான் உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்துகொள்ள முடியும். உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். இந்த காற்றை ஞானிகள் என்ன செய்கின்றார்கள் என்றால், ஆசான் அகத்தீசன் ஆசியால் ரேசகம், பூரகம், கும்பகம் ஆகிய இயக்கத்தை அறிந்து ஆசான் திருவடியை உருகி தியானிக்கின்றார்கள். என்னதான் மூச்சுக்காற்றை பற்றி அறிந்திருந்தாலும், சுழிமுனையில் வாசியை செலுத்த முடியாது. அகத்தீசன்தான் அவரவர் பக்குவத்தை அறிந்து வாசியோடு வாசியாக கலந்து வாசி நடத்தி தருவார் (மூச்சுக்காற்றை இயக்கச் செய்வார்). அவர் வாசி நடத்தாமல் நாமே முயன்றால் கொடிய நோய்வாய்ப்பட்டு இறந்து விடுவோம்.
          எனவே, எல்லா ஞானிகளும், ஆசான் அகத்தீசனை பூஜை செய்து பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் மரணமில்லா பெருவாழ்வு பெற்றுள்ளார்கள். அந்த வரிசையில் போகமகாரி~p, திருமூலதேவர், சட்டை முனிவர், கொங்கணர், காலாங்கிநாதர் ஆக ஐவரும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் அளவிலா சித்தி பெற்றுள்ளார்கள்.
          இவர்கள் பெருமையை கருவூர் முனிவர் அவர்கள், நன்கு உணர்ந்து தம் நூலில் அவர்களை புகழ்ந்து பாடியுள்ளார். நாமும் கருவூர் முனிவர் நூலை படித்தும், பூஜித்தும் ஆசிபெற்றால் பலகோடி ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கி ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
          கருவூர் முனிவரும் ஆசான் அகத்தீசர் ஆசி பெற்றவர்தான். எந்த ஞானிகளை நாம் பூஜை செய்தாலும், எல்லா பூஜையும் ஆசான் அகத்தீசன் திருவடியையே சாரும். எனவே மேற்கண்ட ஐந்து ஞானிகளையும் மற்றும் கருவூர் முனிவரையும், அகத்தீசரையும் பூஜித்து ஆசிபெற்றுக் கொள்வோம்.
          இந்த உபதேசம் கருவூர் முனிவர் சொன்னதாகும். இதை நல்மனதுடன் சொல்கின்றேன் என்றும், இதை நீங்கள் பின்பற்றினால் ஞானம் பெறலாம் என்றும் சொல்லியுள்ளார். நாமும் கருவூர் முனிவர் நற்கருணையுடன் சொன்னதை பின்பற்றி ஞானிகளை பூஜிப்போம்! நலம் பெற்று வாழ்வோம்!!.

தான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான்
தர்மத்தின் வழிசொல்லிக் கருணை வைப்பான்
ஊன் என்ற மந்திரமே உபதேசித்து
உண்மையுடன் சுழிமுனையிலே இருக்கும் என்று
கோன் என்ற சிவரூபம் கண்ணில் காட்டி
கோபமென்ற முனைபோக்கி ஆசை போக்கி
நான் என்ற ஆணவங்கள் தன்னைப்போக்கி
நாட்டுவார் குருநாதன் மோட்சந் தானே.
மகான் கொங்கண மகரிஷி - 12.
 
மகான் கொங்கண மகரிஷி  அருளிய கவியின் சாரம் :
          மனிதன் எண்ணிலடங்கா பிறவிகள் எடுத்துள்ளான். ஆறுகளில் உள்ள மணல்களை எண்ணி கணக்கிட்டாலும், நமது பிறவியை கணக்கெடுக்க முடியாது. இத்தனை பிறவிகளிலும் காமத்தாலும், பொருள் வெறியாலும், ஜாதி வெறியாலும், மத வெறியாலும், நான் என்ற கர்வத்தாலும், தனக்குள்ள ஆள்படையாலும், கல்வி கற்றோம் என்ற கர்வத்தாலும், உத்யோக பெருமிதத்தாலும் அடாது பாவங்கள் செய்திருப்போம். இந்த பாவங்கள்தான் அறிவை மங்க செய்துவிடும். அதன் காரணமாக பாவம் எது? புண்ணியம் எது? என்று உணர முடியாது. அப்படியே அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் சொன்னாலும் நமது பாவத்தின் காரணமாக உணர முடியாது. மூர்க்கத்தனமே மிஞ்சி இருக்கும். இதுபோன்ற கொடுமைகள் எல்லாம் பல ஜென்மங்களில் செய்திருந்தாலும், ஆசான் அகத்தீசன் திருவடியை நம்பி தொடர்ந்து பூஜை செய்து வந்தால் பாவம் எது? புண்ணியம் எது? என்று உணர்த்துவார்கள்.
          ஒரு மனிதன் பாவியாவதற்கு காரணம், மனைவியினுடைய இயல்பை அறியாமல் அவள்மீது சந்தேகப்படுதலும், அடிமைபோல் எண்ணி அடித்தலும், கொடுமையாக பேசுதலும், மேலும், கல்வி அறிவு இருப்பதால் உடன் பிறந்தவர்களின் சொத்தை அபகரித்தலும், மேலும் தாய் தந்தை நமக்கு செய்த உதவிகளை நன்றி மறந்துவிடுவதும், மேலும் நம்மிடம் வேலை செய்கிறவர்களுக்கு நியாயமான கூலி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமையும், பொருள் சேர்க்கும் பொழுது மற்றவர்கள் சொத்தை அபகரித்து கொள்ள வேண்டும் என்ற அறியாமையும்தான் பாவம் சேர்வதற்கு காரணங்கள் ஆகும். மேற்கண்ட பாவங்களைப் பற்றி ஆசான் அகத்தீசர் உணர்த்தியும், மேலும் பாவங்கள் செய்யாமல் இருப்பதற்குரிய பரிபக்குவத்தையும் ஆசான் நமக்கு அருள்செய்வார்.
          மேலும், உடம்புதான் ஞானவீடு என்றும், இந்த உடம்பாகிய வீட்டை அறிந்து வீட்டை உறுதிபடுத்தி கொள்ளவும் ஆசான் அகத்தீசர் உபதேசிப்பார். அவர் உபதேசித்தபின் இந்த உடம்பில் பாவமும் புண்ணியமும் சேர்ந்தே அமைந்துள்ளது என்பதை உணர முடியும். மேலும், பாவமாகிய மும்மல தேகத்தை நீத்து புண்ணியமாகிய ஒளி உடம்பு பெற அருள்செய்வார். புண்ணிய உடம்பு பெறுவதற்கு இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகிய இயல்பை அறிந்து சுழிமுனையில் வாசி செலுத்தினால் அது ஓங்கார ரீங்காரமாக ஓசை உண்டுபண்ணி தசநாதமாக பின்பு விரிவடையும். மேலும், அமிழ்தமும் சிந்தும், ஜோதியும் தோன்றும். ஆசானே நம்முன் தோன்றி அருள்செய்வார். அதுமட்டுமல்ல கோபத்தால்தான் பல பிறவிகளில் பாவம் வந்தது என்று அறிந்து அந்த கோபத்தின் முனையையும் மழுங்கச்செய்துவிடுவார். அதுமட்டுமல்ல ஆசைதான் பிறவிக்கு காரணம் என்பதை அறிந்து மூலக்கனலை எழுப்பச் செய்து அந்த ஆசைகளை வேரோடு எரித்துவிடுவார். மேலும், கொடூரமான எண்ணங்கள் நீங்கி சாந்தம் உண்டாகும்.எனவே, ஆசான் அகத்தீசரை தினமும் "ஓம் அகத்தீசாய நம" என்று நாமஜெபம் செய்து வந்தால் முன்செய்த பாவங்களும் தீரும். ஊனாகிய உடம்பைப்பற்றி அறிகின்ற அறிவும் வரும். சுழிமுனைiயாகிய இரகசியமும் தெரியும். சிவவடிவாக உள்ள அகத்தீசன் நம்முன் தோன்றி காட்சி தருவார். மூர்க்கத்தனம் நீங்கி சாந்தம் உண்டாகும். இதுவ மேற்கண்ட பாடலின் சாரமாகும்.
திறமான கொங்கணர் போல் ஆருமில்லை
செகத்திலே இப்படித்தான் உண்டோபிள்ளை
உறமான செய்திஎல்லாம் பார்த்து வந்தார்
ஒவ்வொரு நாளாக யிருக்க முத்தி
அறமான தவஞ்செய்தார் சட்டமுனி மெய்க்க
அவர்பிதா போகர்மெய்க்க காலாங்கி மெய்க்க
திறமான திருமூலத்தேவர் மெய்க்க
நித்திரைப்போல் மூன்று கற்பஞ் சமாதிகாணே.

வியாழன், 12 மார்ச், 2015

அண்ட பேரண்ட அரச யோகி கருவூரார் !


தமிழே தெய்வம், தெய்வமே கடவுள், கடவுள் மனுஷன், மெய்யே பிண்டம், பிண்டமே அண்டம், அண்ட பிண்டம் என்பது தத்துவம்.  

தத்துவம் என்பது ஒன்றரை லட்சம் (1,50,000) அணுக்கள் 
தொண்ணூற்றாயிரம் (96000) இணைப்புகள் 
எழுப்பத்திரெண்டாயிரம் (72000) நாடி நரம்புகள் 
ஆயிரத்தியெட்டு (1008) சிவலயம் 
முன்னுதினார்ப்பதியாறு (346) சக்திலயம் 
நூற்றியெட்டு (108) ஆதார சக்கரம் கொண்ட பிண்டம். 

பிண்டத்தை சீர்குலைக்கும் நாலாயிரத்து நாற்பத்திஎட்டு (4448) வித பிணிகள்.

இதை சோதித்து பார்க்கும் நாடி நரம்புகள் பத்து (10) அதில் மிக முக்கிய நாடி வாத, பித்த, கபம், வாதத்தில் வாதம் பித்தம் கபம், பித்தத்தில் பித்தம் வாதம் கபம், கபத்தில் கபம் வாதம் பித்தம். இவை தவிர குறு நாடி ஒன்று உண்டு.

இவைகளை சோதித்து கற்பம் சாப்பிட்டால் காயமான பிண்டம் நிலைக்கும். 

மனிதனின் உடம்பில் 4448 வியாதிகள் உள்ளன என்று தமிழ் சித்தர் அகத்தியர் கூறுகின்றார்.

வாதம் - 84
பித்தம் - 48
கபம் - 96
தனுர்வாயு - 300
சயம் - 7
பெருவயர் - 8
சூலை - 200
கண்நோய் - 96
சிலந்தி - 68
சன்னி - 76
கழலை - 95
சுரம் - 85
மகோதரம் - 7
தலைவீக்கம் - 5
உதிரநோய் - 16
பிளவை - 10
படுவன் - 11
பீலி - 8
உருவசியம் - 5
பேரறிகறப்பான் - 90
கெண்டை - 10
குட்டம் - 20
கதிர்வீச்சு - 3
மதிவட்டை - 5
சோலிநோய் - 16
இசிவு - 6
மூர்ச்சை - 7
வேலிநோய் - 46
மூலம் - 9
கழல்நோய் - 10
கடிவிசம் - 52
கிராணி - 25
பல் நோய் - 76
மாலை கண் - 20
அதிசாரம் - 25
கட்டி - 12
கிருமி - 6
முட்டு நோய் - 30
முதிர் நோய் - 20
சத்தி - 5
கல்லடைப்பு - 80
வாய்வு - 90
திமிர் நோய் - 10
மேகம் - 21
நீராம்பல் - 5
காதுநோய் - 10
விக்கல் - 10
அரோசிகம் - 5
மூக்கறுப்பன் - 10
கடிதோடம் - 500
குத்து வெட்டு - 700
கிரந்தி - 48
பொறிவிடம் - 800
துடிநோய் - 100
பிள்ளைநோய் - 100
குமிழி - 7
விப்புருதி - 18
விசபாகம் - 16
பிரநீர்க்கோவை - 200


மேற்கூறிய வியாதிகளை சோதிக்க மனிதனின் உடலில் 72000 நாடி நரம்புகள் ரத்த குழாய்கள் உள்ளன. மேலும் இதனை சோதிக்க பெருநாடிகள் என்று 10 உள்ளன. 

அவையாவன, 
1. இடகலை 
2. பிங்கலை 
3. சுழுமுனை 
4. சிகுவை
5. புருடன்
6. காந்தாரி 
7. அத்தி 
8. அலம்புடை
9.சங்குனி
10. குரு நாடி 

மேற்குறியவற்றுள் முக்கிய நாடி,
1. இடகலை :- அபானன் (வாதம்)
2. பிங்கலை :- பிராணன் (பித்தம்)
3. சுழுமுனை :- சமானன் (கபம்) - என்று அறிய வேண்டும். 

அகத்தியர் கவி:

நாடியான் முன்னோர்சொன்ன நற்குறிக்குணங்களாலு 
நீடிய விழியினாலு நின்ற நாட் குறிப்பினாலும்
வாடிய மேனியாலு மலமொடு நீரினாலுஞ்
சூடிய வியாதி தன்னைச் சுகம்பெற வருந்தி சொல்லே 

சுகம்பெறவங்கமெல்லாஞ் சுருங்கிய குணங்களாய்ந்து
முகங்குறி நாடிமூக்குச் செவிநுத னயனநாடி 
அகந்துடி யடக்குநாடி யதுதிசை விடுதிநாடி 
உகந்துடி யுந்திநாடி யுண்மையாம் நடைகள்பாரே 

- என்று அகத்தியர் நாடிகள் பரிசோதனை செய்யும் முறை பற்றி கூறுகின்றார்.


இதை தவிர கண்ணுக்கு தெரியாத நோய்கள் பல உள்ளன. இதனை இன்றைய விஞ்ஞான உலகத்தில் உள்ள "X-Ray", "C.T Scan", "M.R.I Scan" எந்திரங்களினால் கண்டறியமுடியாது. அந்த நோய்களாவன:

1. காற்று 
2. கருப்பு
3. பேய்
4. பிசாசு
5. பில்லி
6.சூனியம்
7. ஏவல் 
8. செய்வினை
9. வைப்பு
10. கழிப்பு
11. மருந்து
12. கண்நேறல் 

இதனை தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்திக்கு 12 பற்கள் அமைத்து எங்கள் குருதேவர் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய பதினோராவது பதினென் சித்தர் கருவூரர் உறுதிபடுத்திஉள்ளார்.

செவ்வாய், 10 மார்ச், 2015

மரணத்திற்கு பிறகு உடலின் சக்கரங்கள் என்னாகும்?

நாம் இறந்த பிறகு நம் உடல் மண்ணிற்கும், உயிர் விண்ணிற்கும் போய்விடும் என்பது நாம் கேள்விப்பட்டவைதான். அப்படியிருந்தால், நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் அந்த ஏழு சக்கரங்கள் என்னாகும்? உடலோடு சேர்ந்து அவையும் மறைந்துவிடுமா? இதைப்பற்றி சத்குருவிடம் கேட்டபோது… சத்குரு: சக்கரங்கள் எங்கே போகும்? சக்கரங்கள் என்பது உங்கள் உடலில் ஸ்தூலமாக இருக்கிற சக்கரங்கள் அல்ல; அவை சில சக்தி மையங்கள். நீங்கள் சுழல்காற்றைப் பார்த்திருப்பீர்கள். அது இருக்கும்போது உள்ளபடியே இருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் அது மறையும்போது எங்கே போகிறதென்றே தெரிவதில்லை. இந்த தர்க்க மனம் எப்போதுமே, ஒன்று இருந்தால் அது எங்கேயோ போகவேண்டும் என்று நினைக்கிறது. ஒன்று போய்விட்டால் ஒன்று திரும்ப வரவேண்டும் என்று நினைக்கிறது. அந்த நிகழ்வு இயற்கையில் தானாகவே நிகழ்கிறது. ஒரு சமுத்திரத்தில் வருகிற மிகப்பெரிய அலை அடுத்தவினாடி எங்கே போகிறதென்று தெரியவில்லை. திரும்பிப் போய்விடுகிறது. அதன் பிறகு அங்கே எதுவும் இல்லை. சக்கரங்களும் அப்படித்தான். இந்த முழு பிரபஞ்சமே சக்திநிலைதான் என்கிறபோது சுழல் காற்றுபோல் சில மையங்களும் இருக்கின்றன. சில நேரம் அங்கு இருக்கிறது. பிறகு காணாமல் போகிறது. அது எதோ ஒரு இடத்திற்கு போவதில்லை. வருவது, போவது எல்லாம் உங்கள் கற்பனை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த தர்க்க மனம் எப்போதுமே, ஒன்று இருந்தால் அது எங்கேயோ போகவேண்டும் என்று நினைக்கிறது. ஒன்று போய்விட்டால் ஒன்று திரும்ப வரவேண்டும் என்று நினைக்கிறது. இது அப்படியல்ல. ஒரு ஜென் கதை ஒரு ஜென் குரு மரணப்படுக்கையில் இருந்தார். ஜென் மார்க்கத்தைப் பொறுத்தவரை மரணம் மிகமிக முக்கியமானது. முழு விழிப்புணர்வோடு அவர்கள் இறக்கவேண்டும். இப்போது அவருக்கு விடைகொடுக்க இன்னொரு ஜென் குரு வந்தார். அவர் பெயர் சாங் சூ. அது கடைசி வினாடி. எனவே சாங் சூ கேட்டார். “என் உதவி உங்களுக்குத் தேவையா, அதைக் கடந்து செல்ல வேண்டுமா?” எனக் கேட்டார். இறந்து கொண்டிருக்கிற ஜென் கேட்டார், “உங்களால் என்ன செய்ய முடியும்? இது வந்திருக்கிறது. போகிறது. இது தானாக வருகிறது, தானாகப் போகிறது. அதற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்.” அதற்கு சாங் சூ சொன்னார், “அதுதான் உங்கள் சிக்கல். வருகிறது, போகிறது என்றால் அதற்கு ஒரு வழி இருக்கிறது. வராமல் இருப்பதற்கும், போகாமல் இருப்பதற்கும் நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்” என்றார். அந்த குரு புரிந்து கொண்டார், புன்னகைத்தார், உடனே மரணமடைந்தார். உண்மைதான், உண்மையிலேயே வருவது, போவது என்பதே இல்லை. அது ஒரு மாயை, ஒரு பெரிய வேடிக்கை. அரங்கேறிக் கொண்டேயிருக்கிற வேடிக்கை. இருப்பது போல் இருக்கும். ஆனால் இல்லை. எனவே வருவதற்கும், போவதற்கும் நீங்கள் அளவுக்கதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதனால் இப்போது இங்கே எதையும் பற்றிக் கொள்ளாமல் இருக்க முடியாது. உங்களுக்குப் புரிகிறதா? வருவதற்கும், போவதற்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுத்தால் இங்கே இருப்பது மிக முக்கியமாகிவிடும். இதுதான் இயல்பு. எனவே பற்றுதல் தோன்றிவிடும். எனவே நீங்கள், “எது எங்கே போகிறது, என்ன நடக்கிறது” – இந்த அபத்தங்களை எல்லாம் விட்டுவிடுங்கள். போவதற்கு என்று எந்த இடமும் இல்லை. அப்படியே கரைந்து போய்விட வேண்டும். செய்வதற்கென்று எதுவும் இல்லை. வெறுமனே இருங்கள் போதும். கேள்வி செய்வதற்கு எதுவுமே இல்லையென்றால் இந்த ஆன்மீகப் பயிற்சிகள் எதற்கு? இதில் ஏன் எங்களைத் தீவிரமாக ஈடுபடுத்துகிறீர்கள்? சத்குரு: ஓ! செய்வதற்கு எதுவும் இல்லையென்றால் ஏன் இரவு, பகல் எங்களை இப்படி தொந்தரவு செய்கிறீர்கள் என்கிறீர்களா? செய்வதற்கு எதுவும் இல்லை என்பதல்ல பொருள். உங்கள் இயல்பு செயல்தான். ஏனென்றால் இங்கு எப்போதுமே செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் நீங்கள் இல்லை. எப்போதுமே செய்வதற்கு ஏதாவது இருக்கிறது. எதையாவது செய்தாக வேண்டும் என்கிறபோது எதையோ செய்வதற்கு இதையாவது செய்யுங்கள் என்பதுதான் பயிற்சிகளின் நோக்கம். எப்படியும் எதையாவது செய்து கொண்டிருக்கப் போகிறீர்கள். நீங்கள் எங்கே போனாலும் சரி, இமாலயத்துக்குப் போனாலும் சரி, சென்னைக்குப் போனாலும் சரி, இல்லை ஈஷாவில் இருந்தாலும் சரி எதையாவது செய்து கொண்டிருக்கப் போகிறீர்கள். உடலளவில் செய்யாவிட்டாலும் மனதளவிலாவது செய்து கொண்டிருக்கப் போகிறீர்கள். எனவே உங்கள் வளர்ச்சிக்கு வழி செய்கிற செயலை உங்களுக்குத் தரலாம் என்று முடிவு செய்தோம். அதனால்தான் இவ்வளவு செயல்களும் பயிற்சிகளும். இல்லையென்றால் இந்த செயல்களுக்கென்று எந்த அர்த்தமும் இல்லை. எந்த செயல் உண்மைக்கு மிக அருகில் உங்களை எடுத்துச் செல்கிறதா இல்லையா என்பதுதான் கேள்வி. பிற செயல்கள் உங்களை வேறு எங்காவது எடுத்துச் செல்லலாம். குறைந்தது இந்த செயலாவது உண்மைக்கு சற்று நெருக்கமாகக் கொண்டுவரும். இதுதான் யோகாவின் முழு நோக்கமே.

சனி, 7 மார்ச், 2015

நவகோடி சித்தர்களுக்கு தலைவனாகிய ஆசான் அகத்தீசனை தியானித்தால் ஏற்படும் நன்மைகள்:

திருவடியே சிவமாவது தேரில்
திருவடியே சிவலோகம் சிந்திக்கில்
திருவடியே செல்கதியது செப்பில்
திருவடியே தஞ்சம் உள்தெளிவார்க்கே
திருமந்திரம்-உபதேசம்-கவி எண்:138
திருவடிஞானம் சிவமாக்குவிக்கும்
திருவடிஞானம் சிவலோகம்சேர்க்கும்
திருவடிஞானம் சிறைமலமீட்கும்
திருவடிஞானமே திண்சித்திமுத்தியே
திருமந்திரம்-திருவடிப்பேறு-கவி எண்:1598

ஓம் அகத்தீஸ்வரா! உன் திருவடியை கோடானுகோடி ஆன்மீகவாதிகள் உருகி தியானம் செய்ததால் அவர்களுடைய முன்ஜென்மத்தில் செய்த வினைகளும் இந்த ஜென்மத்தில் செய்த வினைகளும் நீங்கி நல்வினை, தீவினைப்பற்றி புரிந்து நல்வினையை பெருக்கியும், தீவினையை நீக்கியும் ஆசிபெற்றார்கள். நல்வினை, தீவினைப்பற்றி புரிந்துகொள்வதே பேரறிவாகும்.
நல்வினையை பெருக்கிக்கொண்ட மக்கள்தான் தூல உடம்பாகிய புறஉடம்பையும், சூட்சும தேகமாகிய அகஉடம்பையும் அறியமுடியும். புறஉடம்பாகிய தூலதேகத்தையும் அகவுடம்பாகிய சூட்சுமதேகத்தையும் அறிந்துகொள்ள உமது ஆசியின்றி முடியாது என்று அறிந்துகொள்ளவும் உமது ஆசிவேண்டும். உமது ஆசியின்றி எத்தனை சாஸ்திரங்கள், வேதங்கள், படித்தபோதிலும் அதனுடைய நுட்பம் (சூட்சுமம்) உணரமுடியாது என்பதை உமது திருவருள் கடாட்சத்தால் அறிந்துகொண்டேன்.
உன்திருவடியைப் பற்றி உருகி தியானிக்க நினைக்கிறேன். ஆனால் நான் செய்த பாவங்களோ என்னை தியானிக்க முடியாமல் தடை செய்கிறது. அந்த தடையை நீரே உடைத்து நாயினும் கடையேனாகிய என்னையும் ஒரு பொருட்டாக மதித்து என்னை ஏற்று அருள்செய்யும்படி உமது திருவடி பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.
உருகி தியானிக்க நினைக்கிறேன், முன்செய்த பாவத்தால் கல்மனம் உருகவில்லை. கல்மனம் உருகி தியானிக்க ஆசிவேண்டும். உடனே கல்மனம் உருகாது என்பது உன் திருவருளால் அறிந்துகொண்டேன். உன்னை தியானிக்க தியானிக்கத்தான் கல் மனமாகிய என் மனம் உருகி தியானிக்க முடியும் என்பதையும் உமது திருவருளால் உணர்ந்துகொண்டேன்.

1 : நன்னெறியைக் கடைபிடிக்க வெண்டும் என்றால் தலைவன் ஆசான் அகத்தீசன் தான் என்று அறிந்து பூஜை செய்யவேண்டும். பூஜை செய்தால்தான் நன்னெறி எது, தீநெறி எது என்று உணரமுடியும். எனவே பூஜை செய்தால்தான் நன்னெறியைக் கடைபிடிக்கமுடியும்.
குறிப்பு 2 : ஆசான் அகத்தீசரை பூஜிக்க பூஜிக்க வினை நீங்கும். மேலும் மேலும் பூஜிக்க பூஜிக்க தன்னை பற்றி அறியக்கூடிய சிற்பறிவு உண்டாகும். மேலும் மேலும் உருகி தியானிக்க ஆன்மா மும்மலமாகிய சிறையில் அகப்பட்ட விபரம் தெரியும். மேலும் விடாது திருவடியை பற்றி உருகினால் சிறைப்பட்ட ஆன்மா விடுபட்டு ஆன்ம ஜோதி தோன்றும். மேலும் ஜீவான்மா பரமான்வாகும் (எல்லாம் வல்ல இயற்கை நாமாகவும், நாமே எல்லாம் வல்ல இயற்கையாகவும்). அதுவே வீடுபேறு அல்லது மோட்சமாகும்.
குறிப்பு 3 : சரியை, கிரியை, யோக, ஞானம் அல்லது அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய இரண்டும் ஒன்றேயாகும். இந்த நான்கும் அறியவேண்டுமென்றால் ஆசான் அகத்தீசன் அருள் இருக்க வேண்டும். ஆசான் அருள்பெற காலை, மாலை ஓம்அகத்தீசாய நம என்று முடிந்த அளவிற்கு நாமஜெபம் செய்யவேண்டும். நாமஜெபம் செய்ய செய்யத்தான் மேற்கண்ட நான்கு படிகளையும் அறிந்து கடக்கமுடியும். நாமாக கற்றுத்தெளிவது என்பது முடியாததாகும். எனவே, ஆசான் அகத்தீசன் திருவடியை பூஜித்து ஆசிபெறுவோம், வீடுபேறு அடைவோம்.
குறிப்பு 4 : சாகாக்கல்வி என்பது - முற்றுப்பெற்ற முனிவராகிய ஆசான் அகத்தீசரிடம் இனி நான்பிறவாதிருக்க வேண்டும் என்று உருகி தியானிப்பதே சாகாக்கல்வி ஆகும்.
கடவுள் அருள் பெறுவதற்காக ஆடு, கோழி, பன்றி, எருமைகிடா போன்ற உயிர்களை பலியிடுகின்றார்கள். அப்படி பலிகொடுத்தால் இறையருள்பெற முடியாது. பாவம்தான் மிகுதியாக வந்து சேரும். உயிர்பலி கொடுக்க கொடுக்க வறுமையும், பிணியும், பகைமையும், மன உளைச்சலும் ஏற்படும் என்று ஆசான் சிவவாக்கியர் தம் பாடலில் அருளியுள்ளார்கள்.

வியாழன், 5 மார்ச், 2015

கரப்பாத்திர சிவபிரகாச சுவாமிகள்

"அன்னையே அருளா லயம் அதாய் அடியார்
            அகத்துளே அறிவுரு வாகி
 முன்னை மாமறையும் மோனமாய் மொழிந்த
            முடிவில்லா பரம்பொருள் தன்னை
பன்னுசீர் வியாசர் பாடியில் வளரும்
             பரமனே பத்திரக் கரைத்தொஒய்
என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச
            இறைவநல் தேசிக மணியே "......காசிவாசி சிவானந்தா யதீந்திர சுவாமிகள்
இவர்கள் சமாதி வியாசர்பாடியில் உள்ளது..சமாதி அடைந்த வருஷம் 1918.

கர்மாவிற்கும் நோய்க்கும் என்ன தொடர்பு? சத்குரு:

கேள்வி கர்மவினைக்கும் உடலைத் தாக்கும் நோய்களுக்கும் என்ன தொடர்பு என்று விளக்க முடியுமா?

சத்குரு: கர்மா என்பது பாராட்டுப் பத்திரமும் அல்ல. தண்டனையும் அல்ல. கர்மா என்பது ஒரு செயலும், அதன் பின் விளைவும் பற்றியது. கண்களை மூடிக் கொண்டு வாகனத்தைச் செலுத்தினால், என்ன ஆகும்? தெருவில் காணும் எதையோ பொறுக்கி எடுத்து உட்கொண்டால் என்ன ஆகும்? விரும்பத்தகாத பின் விளைவுகள் தாம் இருக்கும். அதேபோல் தான் உடல், மனம், உணர்ச்சி, சக்தி என்று வெவ்வேறு நிலைகளில் நீங்கள் புரியும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின் விளைவு வருகிறது. அப்படிப் பதிவான பின்விளைவுகள்தாம் உங்கள் உடல் நிலையையும் தீர்மானிக்கின்றன. நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதும், நோய் கொண்டிருப்பதும் இந்தப் பதிவுகளால் தான். அதற்காக, கர்ம வினைகள் அறுதியானவை, மாற்ற முடியாதவை என்று அர்த்தமல்ல. முழு விழிப்புணர்வுடன் இயங்க ஆரம்பித்தால், ஏற்கெனவே சேகரித்த கர்மவினைகளால் வேதனையுறாமல், அவற்றைச் சுலபமாகக் கடந்து செல்ல முடியும். கேள்வி விதிக்கப்பட்டதிலிருந்து தப்ப முடியாதல்லவா? சத்குரு: நம் தேசம் சுதந்திரம் பெற்றபோது, ஒவ்வொரு குடிமகனின் சராசரி வாழ்நாள் இருபத்தேழு வருடங்கள் தான். இன்றைக்கு அது ஐம்பத்தாறு வருடங்களாக முன்னேறியிருக்கிறது. இதை விதியா செய்தது? இல்லை விதியின்மீது நம்பிக்கை இருந்தால், சின்னம்மைக்கும் போலியோவுக்கும் எதிராக ஏன் மருந்துகளைக் கண்டு பிடித்தீர்கள்? ஏன் தடுப்பூசிகள் போடுகிறீர்கள்? நோய்களைப் புரிந்து கொள்ளும் திறமை பெற்றதும், விதியை மாற்றும் திறனும் உங்களுக்கு வந்தது அல்லவா? அது போல் வாழ்க்கையைத் தெளிவாகப் புரிந்து கொண்டால், அதை உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளலாம். விதியை நீங்களே எழுதலாம். உங்கள் உடலின் மீது உங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு இருந்தால், வாழ்க்கையை உங்கள் விருப்பப்படி அமைத்துக் கொள்ளும் திறனில் 15 முதல் 20 சதவீதம் கிடைத்து விடும். உங்கள் மனதை உங்கள் சொல்படி கேட்க வைத்து விட்டால், 50 முதல் 60 சதவீத வாழ்க்கை உங்கள் வசம் வந்துவிடும். உங்கள் உயிர்சக்தியைக் கட்டுப்படுத்த அறிந்து கொண்டீர்களென்றால், நூறு சத வீத கட்டுப் பாட்டுடன் உங்கள் விதியை நீங்களே எழுதிக் கொள்ள முடியும். கேள்வி மதச் சார்பின்றி மக்கள் வாழ முடியுமா? 
சத்குரு: இன்றைய சூழ்நிலையில் மதச்சார்பு இருந்தால் மக்கள் எப்படி வாழ முடியும் என்பதல்லவா கேள்வி. ஒவ்வொரு மதமும் தங்களுக்குள் நடத்தும் போர்கள் மனிதனை நிம்மதியாக வாழ விடுவதில்லை என்பது தானே உண்மை? மதம் என்பது ஒரு மனிதன் தனக்குள் பார்த்துக் கொள்வதற்கான கருவிகளை வழங்குவதற்காக உருவானது. ஆனால், அந்த அடிப்படையை விட்டு விட்டு கூட்டம் சேர்ப்பதும், பலத்தை பிரயோகித்துக் காட்டுவதும் அல்லவா மதங்களின் முக்கிய வேலைகளாகி விட்டன? எப்போது எண்ணிக்கையில் கவனம் போனதோ, அப்போதே மதம் செத்துப் போய், அ.ங்கே அரசியல் கட்சி பிறந்து விடுகிறது. இன்றைக்கு பெரும்பாலான மத அமைப்புகள் இப்படி அரசியல் கட்சிகளின் அமைப்புகளாக மாறி விட்டன. இப்படிப்பட்ட சிந்தனை உள்ள மத அமைப்புகள் இல்லாமல் இருப்பதே மனித குலத்துக்கு நல்லது

புதன், 4 மார்ச், 2015

பரமபத விளையாட்டு சொல்லும் நீதி என்ன?

 பரமபத விளையாட்டு சொல்லும் நீதி என்ன?

உயர்த்தும் ஏணிகளும், கடிக்கும் பாம்புகளும் வாழ்க்கைப் பாதையில் சகஜம். ஏற்ற இறக்கமின்றி வாழவே முடியாது. இவற்றை சமாளித்து வெற்றி கொள்வது தான் பரமபத விளையாட்டின் தத்துவம்.

சூத்திர ஞானம் - வால்மீகர் - 11 - 16

சிவசிவா பதினெண்பேர் பாடற் கெல்லாம்

திறவுகோல் வால்மீகன் பதினா றாகும்;
சிவம்பெத்த சித்தரெல்லா மென்னூல் பார்த்துச்
சிவனோடே கோள் சொன்னார் சினந்தான் நாதன்;
அவமாகிப் போகாமல் சிவனுத் தார
அருளினால் திறந்து சொன்னேன் உலகுக்காக;
நவமான நவக்கிரகந் தன்னுள் ளேயே
நாக்குவாய் செவிமூக்கு மத்திக் கப்பால். 11

நாக்குவாய் செவிமூக்கு மத்திக் கப்பால்
நடுவீதி குய்யமுதல் உச்சி தொட்டுத்
தாக்குவாய் அங்கென்றே அதிலே முட்டுத்
தாயாரைப் பூசித்து வேதம் ஓது;
வாக்குவாய் அசையாமல் மவுனங் கொண்டு
வாசிவரு மிடத்தில்மனம் வைத்துக் காத்து
நீக்குவாய் வாசியொடு மனந்தான் புக்கு
நினைவதனி லடங்கிவரும் வரிசை காணே. 12

காணரிதே யெவராலு மிருசு வாசம்;
காண்பவனே சிவசித்த னவனே யாகும்;
பூணரிதிவ் வுலகத்தி லிந்நூல் கிட்டில்
பூலோக சித்தனென வுரைக்க லாகும்;
காணரிது சிவசக்தி திருமூச் சாகும்;
காட்டாதே மூடருக்கே யிந்நூல் தன்னை;
தோணரிது விழிமயக்கம் சும்மாப்போமே
சொல்லரிய சூட்சுமத்தைச் சொன்னே னப்பா. 13

சூட்சமிந்நூல் சொல்லுகிறேன் வாசி காண;
சூட்சாதி சூட்சத்தைத் துறக்கப் போகா;
சாட்சியில்லை துணையில்லை கேள்வி யில்லை;
சந்தேக மொன்றுமில்லை விழியைக் காணக்
காட்சியென்ன கற்பகத்தில் வசிக்கு மாப்போல்
காரணத்தைக் கண்ணாலே கண்டி ருக்க
ஆட்சிதரு முமையாளப் படியே கண்டேன்;
ஆனந்தத் திருக்கூத்தின் நடக்கை காப்பே. 14

காப்பதற்குப் பத்தியத்தைச் சொல்லக் கேளு;
காய்கனிகள் பஞ்சரசம் பரமான் னங்கள்
ஏற்கையுட னுண்டுகொண்டு சிவத்தைக் காத்தே
என்மகனே சித்தருடைக் குருநூல் பாராய்;
ஆத்துமத்துக் கழிவில்லா திருக்க வேணும்;
அவரவர்கள் நித்யகர்மம் நடக்க வேணும்;
தீர்க்கமுட னின்றவர்க்கு வாசி சித்தி
சிறப்புடனே பதினாறும் பலிக்குந் தானே. 15

தானவனா யிருக்கவென்றால் வாசி வேணும்;
தனக்குள்ளே தானிற்க இடமும் வேணும்;
வானவனாம் நின்றவர்கட் கெல்லாஞ் சித்தி
வானுக்குள் மனமிருக்க மதிபோல் காணும்,
தேனவனாஞ் சித்தருக்குத் தெவிட்டா மூலி
சிரசப்பா வுடலுக்குப் பதியே யாகும்
கோனவனா யிருக்கவென்று குறியைச் சொன்னேன்
குவலயத்தில் பதினாறுங் குறுகத் தானே.

திங்கள், 2 மார்ச், 2015

சூத்திர ஞானம் - வால்மீகர் - 5 - 10

தானென்ற வுலகத்தில் சிற்சில் லோர்கள்

சடைபுலித்தோல் காசாயம் தாவ டம்பூண்டு
ஊனென்ற வுடம்பெல்லாம் சாம்பல் பூசி
உலகத்தில் யோகியென்பார் ஞானியென்பார்;
தேனென்ற சிவபூசை தீட்சை யென்பார்;
திருமாலைக் கண்ணாலே கண்டோ மென்பார்;
கானென்ற காட்டுக்கு ளலைவார் கோடி
காரணத்தை யறியாமல் கதறு வாரே. 6

கதறுகின்ற பேர்களையா கோடா கோடி;
காரணத்தைக் கண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சம்
பதறுகின்ற பேர்களெல்லாம் பராப ரத்தைப்
பற்றிநின்று பார்த்தவர்கள் சுருக்க மப்பா!
உதறுகின்ற பேர்களெல்லா முலகத் துள்ளே
உதித்தகலை தம்முள்ளே யறிய மாட்டார்;
சிதறுகின்ற பேர்களைப்போல் சிதறி டாமல்
சிவசக்தி வரும்போதே தன்னில் நில்லே. 7

நில்லென்ற பெரியோர்கள் பாஷை யாலே
நீடுலகம் தன்னுள்ளே நாலுவேதம்
வல்லமையைச் சாத்திரங்க ளிருமூன் றாக
வயிறுபிழை புராணங்கள் பதினெட் டாகக்
கல்லுகளைக் கரைப்பதுபோல் வேதாந் தங்கள்
கட்டினா ரவரவர்கள் பாஷையாலே;
தொல்லுலகில் நாற்சாதி யனேகஞ் சாதி
தொடுத்தார்க ளவரவர்கள் பிழைக்கத்தானே. 8

தானென்ற வுலகத்தி லில்லா விட்டால்
தன்பெருமை யாலழிந்து சகத்தில் வீழ்வார்;
ஊனென்ற வுடம்பெடுத்தா லெல்லாம் வேணும்;
உலகத்தி லவரவர்கள் பாஷை வேணும்;
மானென்ற சிவகாமி சிவனுங் கூடி
மாமுனிர் முகம் பார்த்து மறைநூல் சொன்னார்;
தேனென்ற சிவகாமி யருளி னாலே
திரட்டினார் வெகுகோடி தேச பாஷை 9

தேசத்தின் பாஷைதனை யறிந்தி டாமல்
தெளிவாகத் தாமுரைப்பார் பாஷை பார்த்தோர்;
ஆசிப்பா ருலகத்தில் கண்டதெல்லாம்;
ஆச்சரியந் தனைக்கண்டு மறந்து போவார்;
வாசிதனை யறியாத சண்டி மாண்பர்
வார்த்தையினால் மருட்டிவைப்பர் வகையி லாமல்;
நாசிநுனி யதனடுவில் சிவத்தைக் கண்டோர்
நான்முகனும் திருமாலும் சிவனுந் தாமே.

ஞாயிறு, 1 மார்ச், 2015

சூத்திர ஞானம் - வால்மீகர் - 1 - 5

வால்மீகர் சூத்திர ஞானம்
இராமாயணம் பாடிய வால்மீகர் வேறு. தென்னாட்டில் சித்தராக
விளங்கியவர் வேறு.
தேற்றமுடன் வால்மீகர் என்ற சித்து
தெளிவாக மார்க்கமது சொல்வேன் பாரீர்
மாற்றமயம் நீக்கியல்லோ வையத்தில்
வளமையுடன் வெகுகாலம் இருந்த சித்து
ஆற்றலுடன் வால்மீகி ராமாயணத்தை
அவனிதனில் மாந்தருக்குச் செய்திட்டாரே.

போகர் ஏழாயிரம் - 5834
இவர் புரட்டாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர். வேடர்
குலத்தவர். இவரது சமாதி எட்டிக்குடியில் உள்ளது.
இருள் வெளியாய் நின்றசிவ பாதம் போற்றி
எழுத்ததனின் விவரத்தை விரித்துச் சொல்வேன்;
அருவுருவாய் நின்றதுவே எழுத்த தாகும்
ஆதியந்தம் அண்டபிண்ட மதுவே யாகும்;
திருவுருவாய் ரவிமதியாய் நின்ற ரூபம்
சிவசத்தி திருமாலின் ரூப மாகும்;
வருமுருவே சிவசத்தி வடிவ மாகும்;
வந்ததிலும் போனதிலும் மனத்தை வையே. 1

வந்ததுவும் போனதுவும் வாசி யாகும்;
வானில்வரும் ரவிமதியும் வாசி யாகும்;
சிந்தைதெளிந் திருப்பவனா ரவனே சித்தன்;
செகமெலாஞ் சிவமென்றே யறிந்தோன் சித்தன்
நந்தியென்ற வாகனமே தூல தேகம்;
நான்முகனே கண்மூக்குச் செவிநாக் காகும்;
தந்திமுகன் சிவசத்தி திருமூச் சாகும்;
தந்தைதாய் ரவிமதியென் றறிந்து கொள்ளே. 2

அறிந்து கொள்ளு பூரகமே சரியை மார்க்கம்
அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்;
பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம்;
பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்;
மறிந்துடலில் புகுகின்ற பிராண வாயு
மகத்தான சிவசத்தி அடங்கும் வீடு;
சிறந்துமனத் தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்
சிவசிவா அவனவனென் றுரைக்க லாமே. 3

ஆமப்பா வுலகத்தில் பெருநூல் பார்த்தோர்
அவரவர்கண் டதையெல்லாம் சரிதை யென்பார்;
ஓமப்பா கல்செம்பைத் தெய்வ மென்றே
உருகுவார் பூசிப்பார் கிரியை யென்பார்
வாமப்பா யோகமென்று கனிகாய் தின்று
வாய்பேசா வூமையைப்போல் திரிகு வார்கள்;
காமப்பா ஞானமென விண்டு மேலும்
காக்கைபித்தன் மிருகம்போல் சுற்றுவாரே. 4

சுற்றுவார் பெருநூலைப் பார்த்துப் பார்த்துத்
தூடிப்பா ருலகத்தல் சிற்சில் லோர்கள்!
தெற்றுவா ரவர்பிழைக்க அனேக வேடம்
தேகத்தி லணிந்துகொண்டு திரிகு வார்கள்;
பற்றுவார் குருக்களென்பார் சீட ரென்பார்
பையவே தீட்சைவைப்பார் தீமை யென்பார்.
கத்துவார் திருமூர்த்தி தாமே யென்று
காரணத்தை யறியாத கசடர் தானே; 5