வியாழன், 31 டிசம்பர், 2015

மனம் ஒருநிலைப் பட தியானமே முக்கியம்


தியானம் செய்ய வேண்டும் என்றால், மனம் ஒருநிலைப்பட வேண்டும். மனம் ஒருநிலைப்பட வேண்டும் என்றால், உடம்பைப்பற்றியும் உயிரைப்பற்றியும் அறிந்திருக்க வேண்டும். நமது தோற்றமே ஆண் பெண்ணின் காமத்தின் சேர்க்கையால் வந்ததாகும். ஆகவே, நமக்குக் காம விகாரம் இருப்பது இயல்பே. இந்த காம விகாரம் தணிவதற்கு, புனிதத் தலங்கள் சென்றாலோ, புனித நீராடினாலோ தணியாது. அதற்குத்தான் பெரியோர்கள் ஆண் பெண் சேர்க்கையாக இல்லறம் அவசியம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆண் பெண் சேர்க்கையாகிய இல்லற ஈடுபாடு இல்லையென்றால், உடம்பு கெட்டுவிடும். இல்லறத்தில் ஈடுபட்டவர்கள் இல்லற வாழ்வில் ஈடுபடாவிட்டால் உடல் உஷ்ணம் மிகுதியாகும், மலச்சிக்கல் ஏற்படும், இரத்த சுத்தி ஏற்படாது, மூளையும் வேலை செய்யாது, கண் எரிச்சல் ஏற்படும்.
எனவே, இயற்கையின் படைப்பே பெண்பாலையும் ஆண்பாலையும் சேர்த்தே தோற்றுவித்திருக்கிறது. உடம்பும் உயிரும், ஆண் பெண் சேர்க்கையில் வந்தது என்று அறிந்து அதன் போக்கிலேயே சென்று, தினமும் காலை 5 மணிக்கே எழுந்து காலைக்கடன் முடித்துவிட்டு 10 நிமிடம் "ஓம் அகத்தீசாய நம" என்று நாமஜெபம் செய்து, பிறகு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும் என்றும், மனம் ஒருநிலைப்பட்டு உமது திருவடியைப் பற்றி தியானிக்க வேண்டும் என்றும், உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்து கொள்ள அருள் செய்ய வேண்டும் என்றும், உடல் மாசு பற்றி அறிந்து, உமது திருவருள் கடாட்சத்தால், உடல்மாசு நீங்க அருள் செய்ய வேண்டும் என்றும், உயிராகிய ஆன்ம ஜோதியைக் காண வேண்டும் என்றும், ஆன்மஜோதியைக் காண்பவர்கள் தான், ஜீவாத்மா பரமாத்மாவோடு ஐக்கியமாகும் என்பதை அறிந்து, ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள் என்பதை உமது திருவருளால் அறிந்து கொள்ள வேண்டும்.
இயற்கையை நன்கு உணர்ந்த ஆன்மீகவாதிகள், இல்லறமே நல்லறம் என்று சொல்வார்கள். ஏனென்றால், ஒருவன் வீடுபேறு அடைய வேண்டுமென்றால், இருபது வருடம் ஆகலாம். இல்லறம் தான் ஜென்மத்தைக் கடைத்தேற்றத் துணையாக இருக்கும். இயற்கையைப் பற்றி அறியாதவர்களோ, பிரம்மச்சாரியம் கடைப்பிடிக்க வேண்டும் என்பார்கள். பாச பந்தம் கூடாது என்பார்கள். இதை நம்பி, ஆண்களும் பெண்களும் சிலர் இளம் வயதிலேயே துறவு மேற்கொள்வார்கள். வாழ்க்கை முழுவதும் மனப் போராட்டமாகவே இருக்கும். அவர்களால் மன ஒருநிலையோடு தியானமும் செய்ய முடியாது, தர்மமும் செய்ய முடியாது. ஆகவே வாழ்நாள் முழுவதையும் வீணாக்கிக்கொள்வார்கள்.
எனவே, துறவை விரும்புகிறவர்கள், சுத்த ஆன்மீகவாதிகளிடம் சென்று உபதேசம் பெறவேண்டும். அப்படிபெற வாய்ப்பில்லையென்றால் "ஒம் அகத்தீசாய நம" என்று காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும் நாமஜெபம் செய்தால் ஆசான் சற்குருநாதராகிய அகத்தீசர் உணர்வோடும் உணர்ச்சியோடும், நாடி நரம்புகளில் சார்ந்திருந்து நமக்கு ஆசானாக இருந்து உணர்த்துவார்கள். இதுவே முக்தியடைவதற்கு உற்ற துணையாக இருக்கும். இதை விட்டு விட்டு போலி ஆன்மீகவாதிகளிடம் சென்றால், பந்த பாசம் கூடாது என்பார்கள், பட்டினி கிடக்கவேண்டும என்பார்கள், பிராணாயாமம் செய்ய வேண்டும் என்பார்கள்;; ஊர் ஊராகச் சுற்றச் செய்வார்கள். உனக்கு உள்ள சொத்துக்களை எல்லாம் என்னிடம கொடு என்பார்கள், நமது பாவச் சுமை எல்லாம் பூரணமாக வாங்கிக் கொள்வார்கள். நாமும் தெளிவடைய முடியாது, ஏமாற்றப்படுவோம், அவர்களும் தேறமாட்டார்கள்.
தியானம் செய்யும் முறை
தியானம் செய்யவேண்டும் என்றால், சமமான இடத்தில் வெண்ணிறத் துணியை விரித்து, அதன்மேல் அமர்ந்து நாமஜெபம் செய்ய வேண்டும். அங்கு கொசு, எறும்பு, ஈ, புகை மற்றும் துர்நாற்றம் இருக்கக் கூடாது. நறுமணம் உள்ள பத்தி இருக்கவேண்டும். முடிந்தால் திருவிளக்கு வைத்துக்கொள்ளலாம். இங்கு திசை முக்கியமல்ல. பக்திதான் முக்கியம். காலை மாலை உறுதியாகத் தியானம் செய்கின்ற மக்களுக்குத் தன்னிடம் உள்ள குணப் பண்புகளைப் பற்றியும், குணக்கேடுகளைப் பற்றியும் அறிந்துகொள்ள முடியும். நமது மனமே, நம்மைப் பற்றி உயர்த்தியே எண்ணிக் கொண்டிருக்கும். இது பாவத்தின் சின்னமாகும். இந்த விபரங்கள் யாவும் சித்த புருஷர்கள் சொல்லியிருப்பவை...
தினமும் தியானம் செய்யச் செய்யத்தான் நம்மிடம் "யான்" என்ற கர்வம் உள்ளதா? பொறாமை உள்ளதா? பேராசை உள்ளதா? ஜாதிவெறி உள்ளதா? மதவெறி உள்ளதா? வஞ்சனை உள்ளதா? பழிவாங்கும் எண்ணம் உள்ளதா? லோபித்தனம் உள்ளதா? பிறரை மதிக்கக் கற்றுக்கொண்டோமா? இன்னும் அநேக பலஹீனங்களைப்பற்றியும் அறிந்துக்கொள்ள முடியும். தியானம் செய்யாவிட்டால், நமது மனம் நம்மை உயர்த்தியே எண்ணி, நரகத்தில் தள்ளிவிடும். எனவே, அன்னதானம் செய்வோம். தினமும் அகத்தீசனைக் குறித்து தியானம் செய்வோம். அகத்தீசன் ஆசி பெறுவோம். இன்புற்று வாழ்வோம்.

புதன், 30 டிசம்பர், 2015

பழனி நவபாஷாண சிலை


இந்த உலகத்தில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து இருந்தால் எப்படி இருக்கும்? இந்தக் கேள்வியை உலகில் உள்ள நவீன விஞ்ஞானிகளிடமோ அல்லது மருத்துவரிடமோ 

கேட்டால் இது முட்டாள் தனமான கேள்வி இது சாத்தியமே இல்லை 
என்பார்கள். ஆனால் இதே கேள்வியை தமிழனிடம் கேட்டால் சாத்தியம் என்பான். ஆம் இதைத் தான் பல ஆயிரம் வருடம் முன்பே 18  சித்தர்களில் ஒருவரான மாபெரும் தமிழ் சித்தர் போகர்க்கு தோன்றிய
சிந்தனையில் உதித்த மருந்து தான் நவபாஷாணம். இதற்காக அவர் மூலிகைகள் ஆராய்ச்சியில் இறங்கினார் கிட்டத்தட்ட 4448 நோய்களுக்குரிய மூலிகைகளை உபயோகித்து அதை 81 பாஷாணங்களாக மாற்றி இந்த பாஷாணங்களை 9 பாஷாணங்களாகப் பிரித்து எடுத்தார். அவை கௌரிப் பாஷாணம்,கெந்தகப் பாஷாணம்,சீலைப் பாஷாணம்,வீரப்பாஷாணம்,கச்சாலப் பாஷாணம்,வெள்ளைப் பாஷாணம், தொட்டிப் பாஷாணம், 
சூதப் பாஷாணம்,சங்குப் பாஷாணம்ஆகும்.
இந்த 9 பாஷாணங்களை 9 விதமான எரிபொருளைக் கொண்டு சூடு பண்ணிப் பூமியில் குழி தோண்டி இந்த 9 பாஷாணங்களைப் புதைத்துக் குறிப்பிட்ட நாளில் எடுத்து மருந்தாக மக்களுக்குக் கொடுத்தார்.
இந்த நவபாஷாணம் உலகில் நிறைய இடங்களில் இருக்கு என்று கூறினாலும் நிருபிக்கபட்டது.
பழனி முருகன் சிலை மட்டுமே. இதில் நிறைய சந்தேகங்கள் தோன்றலாம் இதை ஏன் சிலையாக வடித்தார்?மருந்தாகவே மக்களுக்குக் கொடுத்திருக்கலாமே? என்று. இதைப் பற்றி இன்னொரு தகவல்
என்னவென்றால் நவபாஷாணத்தை போகர் கண்டு பிடித்தது  மனிதனின் நோயைப் போக்குவதற்கு இல்லை மனிதனை இறப்பே இல்லாமல் செய்வதற்குத் தான் கண்டுபிடித்தார் என்று
சில சித்தஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர் கண்டு பிடித்த நவபாஷாணத்தைப் பற்றி கேள்விப் பட்ட மற்ற சித்தர்கள் போகரை "நீ இயற்கை விதிக்கு எதிராக செயல்படுகிறாய் இந்த நவ பாஷாணத்தை உடனே அழித்து விடு என்று அறிவுரை கூறினார்கள். உடனே தன் தவறை உணர்ந்த போகர் அந்த
பாஷாணங்களை அழிக்க மணமில்லாமல் அதைப் பொதுமக்கள் யாரும் பயன்படுத்த முடியாதுபடி முருகன் சிலையாகச் செய்து பழனியில் வைத்து விட்டார். இந்தக் கதையைக் கேட்டவுடன் சில பேருக்கு சிரிப்பு வரலாம் அது எப்படிங்க மனிதன் இறப்பே இல்லாமல் வாழ முடியும்?  என்று.  இதை உங்களுக்குஅறிவியல் பூர்வமாகவே விளக்குகிறேன்.
அதாவது இப்போது உள்ள DNA (மரபணு) ஆராய்ச்சியாளர்கள் என்ன கூறுகின்றனர் என்றால் ஒரு மனிதனின் மரபணுவை சுத்திகரிப்பதன் மூலம் இளமை மாறாமல் 1200 ஆண்டுகள் வாழலாம் என்று கூறுகின்றனர். அதை போல் இந்த நவபாஷாணம் ஏன் நமது மரபணுவை சுத்திகரித்து இறப்பை தடுக்கக் கூடாது.ஏது
எப்படியோ இந்த நவபாஷாணத்தை நமது அரசாங்கம் தான் ஆய்வுக்கு உட்படுத்தி அதோடு உண்மை தன்மையை உலகுக்குத் தெரியப்படுத்தப் வேண்டும். மக்கள் அனைவரும் சித்தர்களின் இரகசியங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் நோக்கம். இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 3000 ஆண்டுகள் முன்னாடி பிறந்தவர் போகர் என்ற மாபெரும் சித்தர். இவர் காளாங்கி நாதர் என்ற சித்தரின் சீடரும் 18 சித்தர்களில் ஒருவரும் ஆவார். இவர் பழனியில் இருக்கும் நவபாஷாண சிலையைச் செய்தவரும் இவர் தான்.
இவரைப் பற்றிய தகவல் மிக ஆச்சரியத்தைக் கொடுக்கும். இவரைப் பற்றிய ஒரு தகவலை அவர் இயற்றிய போகர் சப்தகாண்டம் என்ற நூலில் அவர் குறிப்பிட்ட தகவலைப் படித்து ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்று விட்டேன்.  இப் பேர்பட்ட தமிழனை உலகம் முழுவுதும் தெரியப்படுத்த வேண்டும் என்பதே என் நோக்கம். அவர் இயற்றிய அந்த நூலில் 1799,1800 ஆம் பாடலில் விமானத் தொழில் நுட்பத்தைப் பற்றிய குறிப்பையும்
அதை எப்படிச் செய்ய வேண்டும் என்றும் அதை வைத்து அவர் பறந்ததையும் தெள்ளத் தெளிவாகக் கூறிப்பிட்டிருக்கிறார். அது மட்டும் அல்ல 1926 ஆம் பாடலில் நீராவி  இஞ்சின் (Steam Engine) வைத்து கப்பலை எப்படி இயக்குவது என்றும் கப்பலின் வரைவையும் வடிவமைக்கிறதையும் குறிப்பிட்டிருக்கிறார். 
இதை 5000 ஆண்டுகள் முன்பே தமிழன் கண்டு பிடித்து விட்டான் என்பது நமக்கெல்லாம் பெருமை. ஆனால், அப்பேர்பட்ட தமிழனை நாம் மறந்து விட்டோம் என்பது தான் வேதனையளிக்கிறது.  தமிழனின் புகழ் உலகம் முழுவதும் பரவவேண்டும். உலகத்தின் முதல் இனமும் முதன் மொழியும் முதல் அறிவியல் விஞ்ஞானியும் முதல் மருத்துவனும் முதல் ஆன்மீகவாதியும் தமிழனே என்பதில் நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும்.

ஈசன் திருவருள்

இயக்கத்துள் இருக்கும்போது உணராத இயக்கம் !!
இயக்கத்துள் நிற்கும் பொருள் மூலம் உணர்ந்தால் !!
இயக்கத்தால் தான் எதுவும் என்று உணர்விக்கப்பட்டு !!
இயக்குபவன் இயக்கத்தில் அனைத்தும்.... அதில் நாமும் !
நமசிவய!
இன்றைய நாள் !! இந்த நிமிடம் !! இந்த நொடி !! இப்போது !! உன்னிடம் உள்ள அனைத்தும்!! எண்ணம் ! செயல் ! சிந்தை ! ஆடை ! அலங்காரம் ! சுற்றம் ! சூழ்நிலை ! உணர்வு! போன்ற அனைத்துமே திருவருள் !!
இதை அனுபவிக்காமல் ?? நாளை !! அடுத்த நிமிடம் !! அப்போது !! என்று எதையாவது நினைத்து !! துன்பம் என்று உழலாமல்!!
அளித்துள்ள திருவருளை ஆனந்தமாக அளித்த ஈசனின் துணை கொண்டு அனுபவியுங்கள் !! அதுவே திருவருட் பயன் !!
இப்போது இவ்வளவையும் அனுபவிக்க கொடுத்தவன் !! எப்போது எதை அனுபவிக்க கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கட்டும் !!
இப்பதிவை எப்போது படித்தாலும் அந்தத் தருணத்திற்கும் பொருந்தும்!! அது தான் திருவருள் !!
இறைவன்அளித்ததை அனுபவியுங்கள் !! அது ஆனந்தமாகவும் அனுபவமாகவும் இருககும் !! அதுவே திருவருள் !!
எதையும் மாற்றவல்லான் திருவருளே எங்கும் எப்போதும் !! இங்கும் இப்போதும் !!
திருசிற்றம்பலம்
நற்றுணையாவது நமச்சிவாயவே!

வெள்ளி, 18 டிசம்பர், 2015

உலகின் முதல் வைத்தியர் திருமூலர்!


ஸோஸர் என்னும் ஃபாரோ மன்னரின் பேரமைச்சராக
இருந்தார்.
அவர்தான் உலகின் முதல் வைத்தியர். தற்கால மருத்துவத்தின் 
தந்தை என்று அவரைத்தான் சொல்லவேண்டும். கிரேக்க நாட்டு
ஹிப்போக்ரேட்டஸ் அவருக்குப் பின இரண்டாயிரம் ஆண்டுகள்
கழித்துத் தோன்றியவர். பல நோய்களின் அறிகுறிகள், குணங்கள்,
சிகிச்சை, மருந்துகள், உடற்கூறு போன்றவற்றையெல்லாம்
நன்கு அறிந்திருந்தார்.
Mummification என்னும் உடலைப் பாடம் செய்யும்
முறையையும் அவர்தான் வரையறுத்தார்.
அவருக்குக் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையும் உடலுக்குள்
உயிரை ஒடுக்கி வைக்கும் வித்தையும் தெரிந்திருந்தது.
காயகல்பமும் அறிந்திருந்தார். நான்கு ஃபாரோ மன்னர்களின்
அமைச்சராக இருந்திருக்கிறார்.
அவர் இன்னும் இறக்கவில்லை என்று நம்பப்படுகிறது.
சிறந்த பொறியியலாளர். அவர் தான் முதன்முதலில் பிரமிட்
கோபுரத்தைக் கட்டியவர். அவர் கட்டிய கோபுரம் சக்காரா
என்னுமிடத்தில் இருக்கிறது.
சிறந்த கவிஞர். இப்போது எகிப்திய மொழியிலும் இன்னும்
பல ஆஃப்ரிக்க மொழிகளிலும் வழங்கும் பல பழமொழிகள் அவர்
இயற்றிய கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்டவைதாம்.
MultiGenius அல்லது Multi-Talented Genius வகையைச்
சேர்ந்தவர்.  அவர் கிமு. 2700 வாக்கில் இருந்தவர்.
திருமூலரின் திருமந்திரம் திருஞானசம்பந்தரால்
திருவாவடுதுறையில் கண்டுபிடிக்கப்பட்டது.
நம்பியாண்டார் நம்பியால் பத்தாம் நூற்ராண்டில் பத்தாம்
திருமுறையாக வகுக்கப்பட்டது.
திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவர்.
இப்போது கணக்குப் போட்டுப் பாருங்கள்......
இம்ஹோட்டெப் காலத்திலும் திருமூலர் வாழ்ந்திருப்பது தெரியும்
கீழ்க்கண்ட வாசகங்கள் ஷாஓலின் மரபைச் சேர்ந்தவை.
ஷாஓலின் மரபு ஒரு தற்காப்புக்கலை மட்டுமல்ல.
அது சன்மார்க்க நெறிகள் அடங்கிய கட்டுக்கோப்பான
சித்தர் மரபு.
போதிதர்மரின் வழி வந்தது.  அதன் நூல்களில் ஒன்றில் வரும் வாசகங்கள் இவை:
People who know others are wise
People who know themselves are enlightened
-Shaolin Chinese Kung Fu Meditations
இப்போது இதைப் பாருங்கள்:
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே
-திருமூலர்

உணர்வில் உணவின் தாக்கம்

குரு நானக் தமது சுற்றுபிரயாணத்தில் எம்னா-பாத் என்ற கிராமத்தை அடைந்தார். அவரோடு பாயி-மர்தானா வும் உடன் இருந்தார். அந்த ஊரில் பாயி-லாலோ என்ற தச்சன் வசித்து வந்தார். அவருக்கு பச்சிலைகளை வைத்து செய்யும் மருத்துவமும் ஓரளவுக்கு தெரிந்திருந்தது. அவரது எளிமையும் நேர்மையும் பக்தியும் கண்டு அவரோடு சில காலம் தங்கினார் குரு நானக். அவர் நானக் கை விட பதினேழு வருடங்கள் பெரியவர். சீக்கிய மதத்திற்கு அடிக்கல் இவருடைய வீட்டில்தான் நாட்டப்பட்டது என்றும் சொல்லப்படுவதுண்டு. இன்றைய பாகிஸ்தானத்தில் இருக்கும் அவர் வீடு சீக்கியர்களுக்கு ஒரு புனித யாத்திரை தலமும் ஆகும்.

அதே ஊரில் 'மல்லிக் பாகோ' என்ற நிலசுவான்தாரும் வசித்து வந்தார்.அவர் பதானி நவாப்பின் அரசில் ஒரு முக்கிய அதிகாரியும் கூட. உயர்குடியை சேர்ந்தவர். ஊரிலுள்ளவர்களுக்கெல்லாம் ஒரு பெரும் விருந்து வைத்தார்.குருநானக்கிற்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால் அவர் செல்லவில்லை. நானக்~கைப் பற்றி பலவிதமாகக் கேள்விப்பட்டிருந்த பாகோ விற்கு இது அதிசயமாகப் பட்டது. பாகோநானக் கை தேடி வந்து கேட்கலானார்.

“ஐயனே உயர்குலத்தில் பிறந்து, பலருக்கும் ஆன்மீக குருவான நீங்கள் கீழ்குலத்தில் பிறந்த லாலோ வுடன் ஏன் இருக்க வேண்டும் ?”

“அன்பரே, நான் குலங்களும் மதங்களும் பார்ப்பதில்லை.எனக்கு யாவரும் ஒன்றே. நான் எளிய உணவையே விரும்புபவன். அதனால்பாயி லாலோவுடன் தங்கினேன்”

“லாலோ படைத்த உணவை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் என் வீட்டு விருந்தை புறக்கணிக்கும் காரணத்தை அறியலாமா?” “அவசியம் தெரிய வேண்டுமா ?”
“ஆம்”
“உங்களுக்கு அவ்வளவு விருப்பமென்றால் சிறிது வரவழையுங்கள்” என்று மல்லிக் பாகோவிடம் கேட்டுக்கொண்டார்.
அந்த உயர்ந்த விருந்து வந்து சேரும் முன்னரே லாலோவின் வீட்டிலிருந்தும் சிறிது உணவை கொண்டு வரச் செய்தார்.
இரண்டும் வந்தததும் ஒரு கையில் லாலோவின் வீட்டு உணவையும் மற்றொன்றில் பாகோ வீட்டு உணவையும் எடுத்துக்கொண்டு பிழியும் வகையில் கைகளைப் பிசைந்தார். சுற்றியிருந்த அனவரும் ஆச்சரியப்படும் படியாக லாலோ படைத்த உணவில் பால் துளிகளும்பாகோ படைத்த உணவில் இரத்தமும் சொட்டத் தொடங்கின.
மல்லிக் பாகோ விற்கு முகம் வாட்டமடைந்தது.
“குருவே ஏனிந்த கண்கட்டு வித்தை. என்னை இப்படி அவமானத்திற்கு ஆளாகும்படி செய்ய என்ன தவறு செய்தேன்?”
“அன்பிற்குரிய பாகோ!
உன்னை அவமானப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. நீ உண்மையை அறிய விரும்பியதால் உனக்கு அதைக்காட்ட முனைந்தேன். லாலோ கடும் உழைப்பாளி. தனக்கு நேர்மையாக வரும் கூலி மூலம் குடும்பம் நடத்தி வருகிறான். அதனால் அவன் தந்த உணவிலிருந்து பால் வெளிப்பட்டது. ஆனால் உன் விஷயத்திலோ உன் செல்வம் நேர்வழியில் வந்ததல்ல. உன் நிலங்களில் உண்மையாக உழைப்பவர்களுக்கு நீ தகுந்த முறையில் கூலியும் கொடுப்பது கிடையாது. அவர்களின் ரத்தத்தில் தோன்றியது உன் வசதிகளும் ஆடம்பரங்களும். ஆகவே தான் உன் வீட்டு உணவில் இரத்தம் வெளிப்படுகிறது” என்று விளக்கினார். பேச்சற்று நின்றார் மல்லிக் பாகோ.
குருவினுடைய கூற்றை உண்மையாக்கிக் காட்டினார் குரு நானக். ஆம், கபீர்தாஸரை நானக்கின் குரு என்று கூறுவோர் உளர். இன்னும் சிலர் அவர்கள் சந்தித்துக் கொண்டதே இல்லை என்றும் சொல்வதுண்டு. ஆனால் சீக்கியர்களின் கிரந்த சஸாஹேப் எனப்படும் புனித நூலில் கபீரின் 541 ஈரடிகளும் பாடல்களும் உண்டு. கிரந்தஸாஹேப்~ல் இல்லாத ஈரடிகளை கபீரது மூல ஈரடிகள் அல்லவென்றும் பிற்சேர்க்கையெனவும் கொள்வோர் உளர். அந்த அளவிற்கு கபீரின் போதனைகளுடன் ஒன்றியிருந்தார் குரு நானக்.

இப்போது கபீரின் அந்த ஈரடியைக் காண்போமா?


பாலொக்கும் தானே வந்தது,நீரொக்கும் இரந்து பெற்றது 
ஒறுத்து ஆர்தல் செந்நீரே, கேண்மினோ கபீரன் கூற்றது
.

(ஒக்கும் = போல;ஒறுத்து =துன்புறுத்துதல்;ஆர்தல்= அனுபவித்தல்,புசித்தல்,குடித்தல்; செந்நீர்= இரத்தம்; கேண்மினோ =கேட்பீரே)
மாற்று :
வழிமுறை வந்தது பாலொக்கும், நீராகும் இரந்து பெற்றது 
வலித்து புசிப்பின் செந்நீரே, கேண்மினோ கபீரன் கூற்றது


(வழிமுறை =முறையான வழி, தர்மத்திற்குட்பட்ட வழி; வலித்து =துன்புறுத்தி 
)

உடல் வளர்ச்சியைப் போலவே ஆன்ம வளர்ச்சியும் இன்றிமையாதது. இதை அருட்செல்வம் என்பார் வள்ளுவர்.
"அருட் செல்வம் செல்வத்துள் செல்வம்...." என்று குறிப்பிடுகிறார். பால் உடலின் வளர்ச்சிக்கு ஊட்டம் தருவது. அருட்செல்வம் ஆன்மாவிற்கு ஊட்டமாகும்.

அறன் ஈனும் இன்பமும் ஈனும்; திறனறிந்து 
தீதின்றி வந்த பொருள் (754)'


என்ற குறளில் தீய வழியில் அல்லாமல் முறையறிந்து நேர்மையாக செயல் புரிந்து தேடிய செல்வம் நன்மையும் மகிழ்ச்சியும் தரும் என்கிற கருத்தை பார்க்கிறோம்.லாலோ போன்றவர்கள் அப்படிப்பட்டவர்கள். எனவே குருஅருளுக்கு முழுவதும் தகுதியானவர்கள்.

ஆனால் எல்லா சந்தர்பங்களிலும் பிறன்கையை எதிர்பார்க்காமல் வாழ்க்கையை நடத்தமுடியாமல் போய்விடுவதுண்டு.அத்தகைய நிலைமையில் பிறரிடமிருந்து பெருகின்ற உதவி ஆன்ம வளர்ச்சிக்கு பெரிதாக உதவாவிட்டாலும் பாதை பிறழாது இருக்கலாம். எப்படி குடிநீரில் ஊட்டச்சத்து இல்லாவிடினும் அது உடலுக்கு அத்தியாவசியமோ அது போல சமுதாயத்தின் இயக்கத்திற்கு இரத்தலும் ஈகையும் ஒரு முக்கிய அங்கம்.

துறவிகளும், வறியவர்களும் அபலைகளும் இரத்தல் மூலமே ஈகைக்கான வாய்ப்பை பிறருக்கு அளிக்கிறார்கள்.
இதை திருவள்ளுவரும் அங்கீகரிக்கிறார்.

இரக்க இரக்கத்தக்கார்க் காணின், கரப்பின்அவர்பழி; தம்பழி அன்று (1051)
[யாசித்தலுக்கு ஏற்றவரிடம் சென்று யாசிக்கலாம்.அவர் மறைத்து இல்லை என்றால் அது அவருக்கே பழியாகும்,யாசிப்பவருக்கு இல்லை]
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் 
பெற்றான் பொருள் வைப்புழி (226)
[பொருளற்ற ஏழையின் கடும்பசியைத்தீர்ப்பதே தன் செல்வத்தை தனக்குப்பின் உதவுவதற்காக சேர்த்து வைக்கும் சிறந்த இடமாகும். ]
பாலும் நீரும் உடலுக்கு இன்றியமையாதது போல ஈகையும் இரத்தலும் உலகில் அற வாழ்க்கைகு இன்றியமையாதது.

ஆனால் பிறரை துன்புறுத்தி பயனடைபவர் போக்கு அசுரகுணத்தை சேர்ந்தது. அதனால் அவர்கள் உட்கொள்ளும் உணவை பிறரின் இரத்தத்தை குடிப்பதற்கு சமானமாக சொல்கிறார் கபீர்.

குருநானக் இந்த நிகழ்ச்சி மூலம் சொல்ல வருவது என்னவென்றால் எவனொருவன், பாகோ போன்ற சித்தசுத்தி இல்லாதவர் கையால் உணவை ஏற்பானோ அவனது சித்தமும் அன்னமிட்டவனின் சித்தத்தைப் போலவே அசுத்தம் ஆகிவிடும் அபாயம் உள்ளது. (இதை எழுதும்போது இதை ஒட்டிய இன்னொரு கதையும் நினைவுக்கு வருகிறது. பதிவின் நீளம் கருதி அதை பின்னொரு சமயம் பார்ப்போம்).
நம் எண்ண அதிர்வுகள் எந்த அளவுக்கு பிறரை பாதிக்கக்கூடும் என்பதையும் அதன் காரணமாக நல்ல எண்ணங்களை வளர்ப்பதிலும் காப்பதிலும் ஒவ்வொருவருக்கும் உள்ள பொறுப்பும் இதன் மூலம் எடுத்துக்காட்டியிருக்கிறார் மகான் குரு நானக்.