இவர் நாட்டின் தலைநகர் தகடூர் என்பதாகும். இது இன்றைய தர்மபுரி ஆகும். இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபொன்றைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. சங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. சங்கப் புலவரான ஔவையாருக்கு நெடுமான் அஞ்சி என்னும் அதியமான் என்பவன் நெருங்கியவனாக இருந்தான் என்று சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.
அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய
புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன.
திண்மையான உடல்வலி பொருந்தியவன் என்றும்; சேரன் சோழன், பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவன் என்றும் புலவர்கள் இவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். இவனது அரண்மனை இல்லையென்று வருவோர்க்கு அடையாத வாயிலைக் கொண்டது என்றும், அவனது கைகள் மழையைப் போல் ஈயும் தன்மையது என்றும் பாடல்கள் அவனைப் புகழ்கின்றன
அதியமான் ஒளவையாரிடம் கொண்ட அன்பினை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சிகளிலேயே மிகச் சிறந்த நிகழ்ச்சி ஒன்று உண்டு. அதுதான் நெல்லிக்கனி அளித்த செயல். அதியன் மிகவும் பாடுபட்டுப் பெற்றது கரு நெல்லிக்கனி. அதனை உண்டவர் நீண்ட நாள் வாழ்வார்கள் என்னும் சிறப்பினைப் பெற்றது அக்கனி. அத்தகு கனியைத் தான் உண்ணாது ஒளவைக்குக் கொடுத்தான் அதியன்.
அது இந்த மலையில் உள்ள கரும்பாறை பகுதியில் இருந்து
எடுக்கப்பட்டது.