கரடி சித்தர் என்பவர் காலங்கிநாதர் தான். அவர் இந்த பகுதியில் கரடி உருவம் எடுத்து அடிக்கடி இங்கு உலவிக்கொண்டு இருப்பார். இந்த ஊரையாண்ட சிற்றரசனின் மகள் ஒரு ஏழையை விரும்பினாள்,அதனால் அவன் மகளை ஒரு ஏழைக்கு கல்யாணம் செய்து தரமுடியாது என்பதற்காக அவனை இந்த பகுதியில் உள்ள புலியை வேட்டையாடினால் தன் மகளை திருமணம் செய்து தருவதாக வாக்களித்தான். அதற்கு சாட்சியாக அங்கு உலவிகொண்டிருந்த கரடியை பார்த்து இது தான் சாட்சி என்றான் . கரடி வந்து சாட்சி சொல்லாது என நினைத்து கூறினான். சொன்னபடியே புலியை வேட்டையாடி வெற்றி கொண்டான். ஆனால் மன்னன் தன் மகளைத் தர முடியாது என்றான். இதற்கு யார் சாட்சி என்று கேட்க ஏழை அதிர்ந்து போனான், உடனே நான் தான் சாட்சி என்றது ஒரு குரல் பார்க்க ஜடாமுடியுடன் ஒரு முனிவர். யார் நீ? என்றார் அரசர், நான் தான் காலாங்கி இந்தமலையை வளம் வருபவன். நீ சாட்சியாக கூறியபோது நான் கரடி உருவில் இருந்தேன் என்றார். உடனே கரடியாக உருமாறினார் பின் மன்னன் மனம் வருந்தி தன் மகளை ஏழைக்கே மணம் முடித்து வைத்தான். அன்று முதல் இவரை அங்கு கரடி சித்தர் என்று எல்லோரும் அழைத்தனர் மேலும் இவரை கஞ்சமலையான் என்றும் அழைப்பர் .