சித்தகலை என்றால் சித்த ரகசியம் என்று சொல்லப் படும். அனைத்தையும் சேர்த்து சொல்வதே சித்தகலை எனப்படும்..
சித்தர் இரசவாதம் – Siddha Alchemy
இரசவாதம் என்பது ஒரு உலோகத்தை மற்றொரு உலோகமாக மாற்றும் அதிசய கலையாகும்.அதாவது இரும்பு,செம்பு, பாதரசம் போன்றவைகளை உயர்ந்த உலோகமான தங்கமாக மாற்றும் கலையாகும்.
சித்தர்கள் ஏன் இக்கலையை ஆய்வு செய்தார்கள்.தங்கம் [GOLD] என்ற உலோகத்தின் மீது உள்ள ஆசையினாலோ, பொன், பொருள் ஈட்டும் ஆர்வத்தினாலோ அல்ல.என்றும் உடலை அழிய விடாமல் காக்கும் காய கற்பம் என்ற அற்புத நிலையை அடைவதற்காக.
மேற்கூறிய இரும்பு, செம்பு, பாதரசம் போன்றவை பஞ்சபூத சக்திகளான நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகா
எனவேதான் சித்தர்கள் இரசவாத ஆய்வினில் தாழ்ந்த நிலையில் உள்ள உலோகங்களை உயர்ந்த உலோகங்களாக மாற்றும் இரகசியங்களை கண்டறிந்தனர்.
சித்தர் நூல்களில் இரசவாதம் பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளது. ஆனால் வெறும் புத்தக அறிவைக் கொண்டு சுயமாக முயற்சி செய்து இக்கலையில் வெற்றி பெறுவது என்பது சாத்தியமில்லை.
இரசவாதம் சித்திக்க சுட்டுச் சுட்டு கெட்டலைந்தோர் கோடி என்ற வார்த்தையும் சித்தர் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொன், பொருள் என்ற பேராசையினால் இரசவாத கலையில் ஈடுபட்டால் தோல்வியும்,விரக்தியும் மட்டுமே மிஞ்சும்.
இரசவாதக் கலையில் வெற்றி பெற பிறவியில் அதற்கான அமைப்பு இருந்திருக்க வேண்டும். சித்தர்களின் ஆசீர்வாதமும் இக்கலையில் நன்கு தேர்ச்சி பெற்ற ஒரு மெய் குருவின் துணையும் இருந்தால் மட்டுமே இக்கலை சாத்தியமாகும்.