பலர் யோகங்களைப் பற்றி தங்களுக்கு அறிந்தவையையே முதன்மைப் படுத்தி வருகிறார்கள்.அதைப்போல் வாசி யோகத்தைப் பற்றி பலர் பலவிதமாக தங்கள் கருத்துக்களை முன்னிலைப் படுத்துகிறார்கள். சித்தர்கள் கலையான வாசியோகம் மறைபொருளாகவே உணர்த்தப்படுகிறது. தவமியற்ற, தவமியற்ற சாதகனுக்கு அதன் சூட்சுமங்கள் செயலுக்கு வந்துவிடும். மிகப்பெரும் பொறுமை இங்கே தேவைப்படுகிறது.
வாசியோகத்தை பற்றி இதுவரை முறையாக பயிலாதவர்கள் அது என்ன வகையான யோக முறை என்று அறிந்திடாமலும். மற்றும் அதை பயிற்சி செய்து பார்க்காமலும் தங்கள் கருத்துக்களை முகநூலில் மற்றும் வலை தளத்தில் ஏற்றி வருகிறார்கள்.வாசியோகம் பல வகைகளில் பல காலங்களில் இயற்றப்படுகிறது. முறையாக பயின்றவர் அதன் சக்தியை அடக்கியாள்வார்கள்.
நேரமும் காலமும் அதற்கு மிகப்பெரிய பலம். இதை என் குருவிடம் கண்டிருக்கிறேன். வாசியோகம் ஒரு சிலரால் மட்டுமே முறையாகத் தெளிந்த ஞானம் உடையவர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. சித்தர் கலையான இந்த யோகம் பல முறைகளில் கையாளப்படுகிறது. எதுவாகிலும். முறையான முதல் தவத்தில் அது காண்பித்துக் கொடுக்கப்படுகிறது. முதல் தவம் தவறானால் முற்றிலும் கோணம் எனக்கேற்ப. அடுத்த படிகள் சாதகனால் மட்டும் கடக்கப்படுகிறது. பின்னர் வருடங்கள் கூடக் கூட சாதகன் புவியீர்ப்பு விசை விட்டு வெளியேறிப் பறந்து விடுகிறான். தாங்கள் கூறும் வார்த்தைகள் சிதறி அங்குமிங்கும் பரவி அதனிடத்தில் ஒன்றிவிடுகிறது. கிரகங்கள் அசையும் வகைக்கேற்ப சிதறிய வகைகள் ஒன்றுகூடி பிம்பத்தை உருவாக்கிக் கொடுத்து விடுகிறது.
தவ விஞ்ஞானி என்ற சொல் இப்பொழுது எல்லா யோக மையங்களிலும் உயர்த்தி ஒலிக்கப்படுகிறது. காரணம் காலம் கடந்து போய்விட்ட காரணத்தாலும் சொல்லிக் கொடுத்த தவங்கள் இறுதிக்கு
உள்ளான பலனைக் கொண்டு வரவில்லை என்பதாலும், இவ்வாறு புதிதாக தவ விஞ்ஞானி என்ற சொல் முன்னிறுத்தப்படுகிறது. வெளிப்படையான காரணம் தவங்கள் முறையான அடுக்குகளில் பின்பற்றப்படவில்லை என்பதே..
இயக்கமற்ற நிலையில் பயணிக்கும் யோகி எவ்வாறு இயக்க நிலையில் வேலை செய்யும் விஞ்ஞானி அளவிற்கு தங்களைக் கொண்டு வர முடியும்?. அவ்வாறு வந்தால் இருப்பு நிலை இரகசியங்களைப் பாதுகாத்து விடும். யோகி சமாதி நிலைக்குப் போகாமல் இறக்க நேரிடலாம். இயற்கை தங்களை ஆராய விடுவதில்லை. ஆகையால் இது தவறான வாதம். பெரியோர் இதை அறிந்து கொள்வீர்களாக.
முறையான தவங்கள் ஒருவரது சுயத்தை அழித்து விடும். வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விடும். வாழ்க்கையின் எல்லை வரை கொண்டு செல்லும் இயல்புடையது. யோகம் நம்மை உடைத்து எறிந்து விடும். விளிம்பு நிலைக்குக் கொண்டு போய் பயமுறுத்தும். படிப் படியாக தவம் கூடும் வருடங்களில் சாதகன் தன்னை இழந்து மிரண்டு போய் விடும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். தாங்கள் தங்கள் கட்டுக்குள் இல்லை என்பதை அறிந்து கொள்ளும் நிலையில் தன்னை இயற்கையிடம் இழப்பதை தவிர வேறு மாற்று வழியே அவனுக்கு இருப்பதறகில்லை.
வாசியோகம் சாதகனை மயக்கமுறச் செய்து விடும். அவன் அண்டசராசரங்களைக் கட்டி ஆள்பவன் ஆகிறான். காலம் செல்ல அதன் அரண்கள் உடைத்தெறியும் போது தாங்கள் நினைப்பதை இயற்கை கேட்டு அதன் வழியில் தங்களுக்கு வழி விடுகிறது என்பதை உணர்ந்தே வருகிறான். மனப் பிரமையில் மூழ்கி விடுகிறான். இயற்கை தனக்குக் கீழ் படியும் போது பயந்தேயிருக்கிறான்.
இவ்வாறு வருடங்களை யோகி சிறிது சிறிதாக இழந்து விடுகிறான். திரும்பிப் பார்க்கையில் தாங்கள் எல்லாம் இழந்து விட்டதாகவே உணர்கிறான். ஆகையால் யோகிகள் அன்பானவர்களை தவிர மற்றவரை தூக்கி எறிந்து விடுகிறார்கள்.
உண்மையான தவம் ஆளைச் சிதைத்து விடும். சரியான வாசியோகம் செய்கிறவர்கள் தனித்தே இருக்கிறார்கள். அவர்களுடைய மிகப்பெரிய பலம் என்பது தங்களைச் சுற்றி உள்ளது, தங்கள் கட்டுக்குள் உள்ளது என்பதை உள்ளதை உணர்ந்த பின்பு அமைதியாக இருக்க வேண்டியுள்ளது என்பதே.
அன்பர்களே இதை எழுதுவது தாங்கள் உண்மையை உணர்ந்து அதன் வழியை வடித்தெடுத்து, உண்மை யோகத்தை கற்று உணர வேண்டியே எழுத நேர்ந்தது. இதை இப்படி எழுத விரும்புவதன் காரணம் செயல் யோகம் அதன் வடிவெடுத்தவுடன் அதன் உருவத்தை இயற்கை நிலைக்கே தள்ளிச் சென்று சாத்திவிடும் என்பதைப் புரிந்து கொண்டு, உணர்ந்துகொள்ளலாம். இறுதியாய் அதன் பாகங்களை மட்டும் நம்மால் எடுக்க முடியும் என்பதை தவம் இயற்றுபவர் உணர்ந்து கொள்வார் என்ற காரணமும் ஆகும்.