வியாழன், 21 மே, 2020

தியானம்

மந்திர தியானம்

==============

முதலில் தியானம் செய்வதற்கு பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமர வேண்டும்.  நமது வலது நாசியில் சுவாசம் நடக்கும் நேரம் பார்த்து மந்திரத் தியானம் செய்ய வேண்டும்.

நமது மனதிற்குள்ளேயே சொல்ல வேண்டும். 
அந்த மந்திரம் நமது உடலில் அதிர்வை உண்டாக்கும் வகையில் சொல்ல வேண்டும்.
நமக்காக மந்திரம் சொல்லும் போது நம என்று முடிக்க வேண்டும்.
பிறருக்காகவோ அல்லது யந்திரம் வைத்து மந்திரம் சொல்லும் போது நமஹ என்று முடிக்க வேண்டும்.
அதாவது சின்ன எடுத்துக்காட்டு சிவயநம, என்ற பஞ்சாட்சர மந்திரத்தை நமக்காக சொல்லும்போது ஓம் சிவாய நம என்று சொல்ல வேண்டும். மற்றவர்களுக்காக சொல்லும்போது ஓம் சிவாய நமஹ என்று சொல்ல வேண்டும்.

எந்த மந்திரமானாலும் மந்திரமாக பலிதமாக்கும் போது மந்திரத்தின் முன் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை சேர்த்தே சொல்ல வேண்டும்,

மந்திரம் சொல்லும் போது பக்கத்தில் உள்ளவர் காதுக்கு கேட்கும் படி சொன்னால் 50% சதவீதப் 
பலன் கிடைக்கும், நமது காதுக்குக் கேட்கும்படி சொன்னால்,  70% சதவீதப் பலன் கிடைக்கும். நமது மனதிற்குள் சொன்னால் 90% சதவீத பலன் கிடைக்கும். உடலில் தொண்டைக்கும் ஆசன வாய்க்கும்  இடையில் அதிர்வை உண்டாகும்படி சொன்னால் 100% பலனை அடைய முடியும்.

சரம் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். அதாவது வாசி யோகம் தெரிந்திருக்க வேண்டும்.  அப்பொழுது தான் சுவாசம் பார்க்கத் தெரிந்திருக்கும்.