செவ்வாய், 21 ஜூலை, 2020

“வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே!

ரமணாச்ரமத்தில் பகவான் வந்து ஐம்பது வருடங்கள் ஆனதை ஒட்டி பொன்விழா கொண்டாடப்பட்டது. அதற்காக நிர்மாணிக்கப்பட்ட ஜூப்ளி ஹாலில் ரமணர் அமர்ந்திருந்தார். பக்தர்கள் பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்து கொண்டிருந்தனர்.
ஒரு பக்தர் குழு, சிவப்பிரகாசம் பிள்ளை இயற்றிய,
“வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே;

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க என்றும் வாழ்க
ரமணாச்ரமத்தில் பகவான் வந்து ஐம்பது வருடங்கள் ஆனதை ஒட்டி பொன்விழா கொண்டாடப்பட்டது. அதற்காக நிர்மாணிக்கப்பட்ட ஜூப்ளி ஹாலில் ரமணர் அமர்ந்திருந்தார். பக்தர்கள் பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்து கொண்டிருந்தனர்.
ஒரு பக்தர் குழு, சிவப்பிரகாசம் பிள்ளை இயற்றிய,
“வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே;
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க என்றும் வாழ்கவே:
…………………………………
………………………………….
திருச்சுழி என்னும் தலத்து உதித்த செல்வன் பாதம் வாழ்கவே;
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே.”
- என்னும் “ரமண பாத மாலை”யைப் பாட ஆரம்பித்தனர். அதில், “ரமணன்” என்று வரும் இடங்களிலெல்லாம் “ரமணர்” என்றே பாடினர். ”ரமணன் பாதம் வாழ்கவே” என்று பாடினால் அது பகவானுக்கு மரியாதைக்குறைவு என்று எண்ணிய அவர்கள், அவ்வாறு அரும் இடங்களில் எல்லாம் மரியாதை விளியாக ”ரமணர் பாதம் வாழ்கவே” என்று சொல்லியே பாடி முடித்தனர்.
பாராயணம் முடிந்தது. உடனே பகவான் அமர்ந்திருந்த பக்தர்களிடம், “ஆஹா.. பிரமாதம். நன்னா பாடினா! ரமணன்னா மரியாதைக்குறைவு போலிருக்கு! அதான், ’ரமணர்’ ’ரமணர்’ன்னு பாடியிருக்கா! அப்போ சிவனைக் கூட இனிமே நாம ”சிவர்”, ”சிவர்”ன்னுதான் சொல்லி பாடணும் போலயிருக்கு. பேஷ்.. பேஷ்…” என்றார், கிண்டலாக.
பக்தர்கள் பகவானின் அந்த நகைச்சுவையை ரசித்தனர். அதேசமயம் சில பக்தர்கள் மட்டுமே, “’ரமணன்’ என்றழைத்தாலும், ‘ரமணர்’ என்றழைத்தாலும் எல்லாம் ஒன்றுதான். ரமணர் என்பது அந்த உடலல்ல. அது எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கும் பரிபூரண ஆத்மா. அதை உணர்வதே முக்திப் பேறு” என்பதைப் புரிந்து பகவானைத் தொழுதனர்.

………………………………….
திருச்சுழி என்னும் தலத்து உதித்த செல்வன் பாதம் வாழ்கவே;
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே.”
- என்னும் “ரமண பாத மாலை”யைப் பாட ஆரம்பித்தனர். அதில், “ரமணன்” என்று வரும் இடங்களிலெல்லாம் “ரமணர்” என்றே பாடினர். ”ரமணன் பாதம் வாழ்கவே” என்று பாடினால் அது பகவானுக்கு மரியாதைக்குறைவு என்று எண்ணிய அவர்கள், அவ்வாறு வரும் இடங்களில் எல்லாம் மரியாதை விளியாக ”ரமணர் பாதம் வாழ்கவே” என்று சொல்லியே பாடி முடித்தனர்.
பாராயணம் முடிந்தது. உடனே பகவான் அமர்ந்திருந்த பக்தர்களிடம், “ஆஹா.. பிரமாதம். நன்னா பாடினா! ரமணன்னா மரியாதைக்குறைவு போலிருக்கு! அதான், ’ரமணர்’ ’ரமணர்’ன்னு பாடியிருக்கா! அப்போ சிவனைக் கூட இனிமே நாம ”சிவர்”, ”சிவர்”ன்னுதான் சொல்லி பாடணும் போலயிருக்கு. பேஷ்.. பேஷ்…” என்றார், கிண்டலாக.
பக்தர்கள் பகவானின் அந்த நகைச்சுவையை ரசித்தனர். அதேசமயம் சில பக்தர்கள் மட்டுமே, “’ரமணன்’ என்றழைத்தாலும், ‘ரமணர்’ என்றழைத்தாலும் எல்லாம் ஒன்றுதான். ரமணர் என்பது அந்த உடலல்ல. அது எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கும் பரிபூரண ஆத்மா. அதை உணர்வதே முக்திப் பேறு” என்பதைப் புரிந்து பகவானைத் தொழுதனர்.

ஞாயிறு, 5 ஜூலை, 2020

நல்ல குரு யார்?

ஒரு நல்ல குரு தேவை. அவர்  குணமென்ன?

மதாச்சாரியன்:
தனக்குப் பொருள் வரக்கூடிய வழிமுறைகளைப் பயிற்றுவித்து, அதைப்
பின்பற்றினால் சுவர்க்கம் கிட்டும், அது கிட்டும், இது கிட்டும் என
ஆசைகாட்டி அதன் மூலம் பொருள் தேடுவோன்.

காரியக் குரு:

ஆரம்பத்தில் பற்றற்றவர் போலப்பேசி, பின்னர் “நீ நல்ல சீடனாயிருக்கிறாய். ஆகவே, உனக்கு மட்டும் இந்த மந்திரங்களை உபதேசிக்கிறேன். இதனால் எல்லாம் சித்தியாகும். ஆனால் தட்சணை கொடுக்கவிடில் சித்திக்காது” எனக் கூறிப் பணம் பிடுங்குவர்.

ஞானகுரு:

மந்திர தந்திர கலைகளை விலக்கி ஞானமார்க்க வழிகளை ஆய்ந்து, அனுபவித்து உணர்ந்து பக்குவமுள்ள சீடனுக்குப் பிரதி பலன் கருதாது உரைத்து வழிநடத்தும் குரு. பொருள் பிடுங்காதவனே நல்ல குரு.

இப்பொழுதெல்லாம், நல்ல ஞானாசிரியன் கிட்டுவதரிதே. ஆகவேதான் பெரும்பாலும் போலி குருக்களைச் சென்றடைகிற மாதிரி நிலைமைகள் 
உருவாகிறது. 

உங்களில் ஒவ்வொருவருக்கும் ஞான குரு கிடைக்க 
என் மனப்பூர்வமான ஆசிர்வாதங்களும், வாழ்த்துக்களும்.. உரித்தாகட்டும் !!!.

மீண்டும்  தொடர்கிறேன்..... 

என்னை தேடி எனக்குள் ஒரு பயணம்....... என்னைத் தொலைப்பதற்கு....

இந்த உள்நோக்கிய  பயணத்தில் 
நான்கு வருடங்கள்  இடைவெளியாகிவிட்டது. 

இதற்கு முன்னர்   எனக்கு கிடைத்த ஆக்கங்களை  உங்களுடன்  பகிர்ந்து கொண்டேன். இப்போது  படித்தவை 
களை விடவும்,  குருமுகமாக அறிந்தவைகளையும் + உணர்ந்தவைகளையும் எனது வரை முறைக்கு உட்பட்டு 
இங்கு பதிவிட வந்திருக்கின்றேன்.
மக்களை நல்வழிப்படுத்த யோகம், ஞானம் ஆகியன பற்றியுள்ள சித்தர் பாடல்களை இயன்றவரை எடுத்துரைத்தல் நலம்” என்பது எம் கோட்பாடு.
"அன்னையின்  திருவடி சரணம்  "

“குருவடி சரணம் "   

என் குருவின் பாதம்  பணிந்து எழுத ஆரம்பிக்கிறேன் !

குரு வார்த்தை. தியானத்திற்கு முக்கியம், 

குரு வடிவம் மோட்சத்துக்கு 
முக்கியம்.   'உங்களை விழிக்கச்  செய்பவர் தான் குரு'. "ஞானிகளைப்  பூஜிப்போம், ஞானம் பெற்று வாழ்வோம் ",  
"அன்னதானம் செய்வோம், கர்மவினையைத் தகர்ப்போம் ".

மனிதனும் தெய்வமாகலாம்.. 
அன்பர்களே....குருவ ருளே  திருவருள்!........குருவுக்கு மேலான தத்துவம் இல்லை....
குருவருளை மிஞ்சி ஏதுமில்லை.. 

குருவை வணங்கி, அவரது திருவடிகளில் நம்முடைய வாழ்வைச்  சமர்ப்பிக்க வேண்டும். மனித உருவத்தில்  குருவே மேலானவர். அவருடைய மேற்பார்வையில் தான் நாம் சாதனை புரியவேண்டும்.  

எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் சரணம் அடைய வேண்டும்.எனவே மகான்களை, சித்தர்களைப்  போற்றித்  துதியுங்கள் குருவ ருளும்.....இறையருளும் உங்களை எப்போதும் காத்து வழி நடத்தட்டும் !

வாழ்த்துக்களுடன்.....நன்றி.....

மீண்டும் தொடர்கிறேன் ....

புதன், 1 ஜூலை, 2020

தன் உயிரை அறிவதும் உணர்வதும் இறைவனை அறிவதுமாகும். தன்னை அறிவதே கடவுளை அறிவதாகும்!

"உயிரே கடவுள்".  உண்மை இதுவே!  ஞானம் இதுவே! இதை அறிவதற்காக‌வே    குருவின் உபதேசம்! இதை உணர்வதே திருவடி தீட்ஷை. . இதனை அறிந்து உணர்ந்து தவம் செய்ப‌வ‌னே இறைவனை அடைவான். 

மனிதனாக எக்குறையுமின்றி பிறந்து ஞான  ஒருவரைப்  பணிந்து ஞான உபதேசம் திருவடி தீட்ஷ பெற்று தவம் செய்து தன உயிராக இறைவன் இருப்பதை உணர்ந்து ஊனே ஒளி உடலாக மாறப் பெறலாம். ஞானம் பெறலாம். மனிதனாகப் பிறந்தது இதற்காகவே தான். உயிரை  தான் என்று உணரவே. ஒளி உடம்பு ஆவதற்காகவே.

தன் உயிரை அறிவதும் உணர்வதும் இறைவனை அறிவதுமாகும். தன்னை அறிவதே கடவுளை  அறிவதாகும்.