ஞாயிறு, 5 ஜூலை, 2020

என்னை தேடி எனக்குள் ஒரு பயணம்....... என்னைத் தொலைப்பதற்கு....




இந்த உள்நோக்கிய  பயணத்தில் 
நான்கு வருடங்கள்  இடைவெளியாகிவிட்டது. 

இதற்கு முன்னர்   எனக்கு கிடைத்த ஆக்கங்களை  உங்களுடன்  பகிர்ந்து கொண்டேன். இப்போது  படித்தவை 
களை விடவும்,  குருமுகமாக அறிந்தவைகளையும் + உணர்ந்தவைகளையும் எனது வரை முறைக்கு உட்பட்டு 
இங்கு பதிவிட வந்திருக்கின்றேன்.
மக்களை நல்வழிப்படுத்த யோகம், ஞானம் ஆகியன பற்றியுள்ள சித்தர் பாடல்களை இயன்றவரை எடுத்துரைத்தல் நலம்” என்பது எம் கோட்பாடு.
"அன்னையின்  திருவடி சரணம்  "


“குருவடி சரணம் "   

என் குருவின் பாதம்  பணிந்து எழுத ஆரம்பிக்கிறேன் !

குரு வார்த்தை. தியானத்திற்கு முக்கியம், 

குரு வடிவம் மோட்சத்துக்கு 
முக்கியம்.   'உங்களை விழிக்கச்  செய்பவர் தான் குரு'. "ஞானிகளைப்  பூஜிப்போம், ஞானம் பெற்று வாழ்வோம் ",  
"அன்னதானம் செய்வோம், கர்மவினையைத் தகர்ப்போம் ".

மனிதனும் தெய்வமாகலாம்.. 
அன்பர்களே....குருவ ருளே  திருவருள்!........குருவுக்கு மேலான தத்துவம் இல்லை....
குருவருளை மிஞ்சி ஏதுமில்லை.. 

குருவை வணங்கி, அவரது திருவடிகளில் நம்முடைய வாழ்வைச்  சமர்ப்பிக்க வேண்டும். மனித உருவத்தில்  குருவே மேலானவர். அவருடைய மேற்பார்வையில் தான் நாம் சாதனை புரியவேண்டும்.  

எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் சரணம் அடைய வேண்டும்.எனவே மகான்களை, சித்தர்களைப்  போற்றித்  துதியுங்கள் குருவ ருளும்.....இறையருளும் உங்களை எப்போதும் காத்து வழி நடத்தட்டும் !

வாழ்த்துக்களுடன்.....நன்றி.....

மீண்டும் தொடர்கிறேன் ....