ஞாயிறு, 5 ஜூலை, 2020

நல்ல குரு யார்?



ஒரு நல்ல குரு தேவை. அவர்  குணமென்ன?

மதாச்சாரியன்:
தனக்குப் பொருள் வரக்கூடிய வழிமுறைகளைப் பயிற்றுவித்து, அதைப்
பின்பற்றினால் சுவர்க்கம் கிட்டும், அது கிட்டும், இது கிட்டும் என
ஆசைகாட்டி அதன் மூலம் பொருள் தேடுவோன்.

காரியக் குரு:


ஆரம்பத்தில் பற்றற்றவர் போலப்பேசி, பின்னர் “நீ நல்ல சீடனாயிருக்கிறாய். ஆகவே, உனக்கு மட்டும் இந்த மந்திரங்களை உபதேசிக்கிறேன். இதனால் எல்லாம் சித்தியாகும். ஆனால் தட்சணை கொடுக்கவிடில் சித்திக்காது” எனக் கூறிப் பணம் பிடுங்குவர்.

ஞானகுரு:

மந்திர தந்திர கலைகளை விலக்கி ஞானமார்க்க வழிகளை ஆய்ந்து, அனுபவித்து உணர்ந்து பக்குவமுள்ள சீடனுக்குப் பிரதி பலன் கருதாது உரைத்து வழிநடத்தும் குரு. பொருள் பிடுங்காதவனே நல்ல குரு.

இப்பொழுதெல்லாம், நல்ல ஞானாசிரியன் கிட்டுவதரிதே. ஆகவேதான் பெரும்பாலும் போலி குருக்களைச் சென்றடைகிற மாதிரி நிலைமைகள் 
உருவாகிறது. 

உங்களில் ஒவ்வொருவருக்கும் ஞான குரு கிடைக்க 
என் மனப்பூர்வமான ஆசிர்வாதங்களும், வாழ்த்துக்களும்.. உரித்தாகட்டும் !!!.


மீண்டும்  தொடர்கிறேன்.....