வியாழன், 6 ஆகஸ்ட், 2020

கோயிலும் மனிதனும்

கோயில் எதை வைத்து உருவானது என்றால், மனித உருவத்தை வைத்தே வடிவமைக்கப் பட்டது. 33 கோடிதேவர்கள் என்கிறோம். அது நமது உடலில் 33 கோடி சக்திகள் இருக்கிறது. ஒவ்வொரு சக்தியின் பெயர் தான் நாம் கோயிலில் பார்ப்பது, பலதெய்வங்களாக. 

அந்தச் சக்தியைத் தூண்டினால் மனிதனே கோயிலாக மாறி விடலாம். அந்தச் சக்தியை சாதாரண மனிதனும் பெற்று நன்மை அடையட்டுமென்று அமைக்கப்பட்டது தான் கோயில். நமது உடலில் முக்கியமான சக்தியாக இருப்பவை 6 சக்தி. அந்த 6 சக்தியைத் தான் நாம் ஆறு சக்கரங்கள்

என்கிறோம். அவை ( மூலாதாரம். சுவாதிஷ்டானம். மணிபூரகம். அனாகதம். விசுத்தி. ஆக்ஞை. எனப் படும் ஆறு சக்திமையங்கள். இவை 6 சக்திகளும் சுழன்று கொண்டிருப்பதால் சக்கரம் என்கிறோம்.  இவை ஆறையும் முறையாகத் தூண்டி விட்டால் நாம் 33 கோடி சக்திகளையும் அடைந்து விடலாம். அதனால் தான் சித்தர்கள் சாதாரண மனிதன்,  இந்தச் சக்திகளின்  நன்மைகளைப் பெற்று, அவர்களும் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதற்காக அமைக்கபட்டதே கோயில் முன்வாசல், கோபுரம், நமது பாதம் உடலில் உள்ள ஆறு ஆதாரச் சக்கரமும் தனித் தனி மையமாகக்  கோவிலில் காணலாம். அவை( கர்ப்பக் கிரகம். அர்த்தமண்டபம். மகாமண்டபம்.  அபிஷேக மண்டபம். அலங்கார மண்டபம். சபா மண்டபம்)  எனப்படுபவை.  இவைகள் இக்காலத்துக் கோயில்களில் காணப்படுவதில்லை.  பழங்காலக்  கோயில்களில்  காணமுடியும்.

சிலர் கோயில் கொடி மரத்தை ஆண்குறி என்கிறார்கள்.  உண்மையில் அது ஆண் குறியல்ல. அது நமது முதுகு எலும்பு. 
இந்த முறையில் அமைக்கபட்ட பழங்கால கோவில்கள் சக்தி வாய்ந்தவை. காரணம், இயற்கையாகவே பூமியில் சில இடங்களில் மின்காந்த சக்தி இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அந்த இடத்தில் கோயில்களை அமைத்தார்கள்.  அந்த இடத்திற்கு பிணி உள்ளவரோ அல்லது மனச் சஞ்சலத்துடன் வந்தால் அந்த சக்தியானது நமது உடலில் புகுந்து சக்கரங்களில் சக்தி இயக்கத்தை இயக்கும்.

அதன் பிறகு அந்தக் குறை நம்மை விட்டு நீங்கி விடும். இதனால் தான் அம்மை போன்ற வியாதி வருபவரை கோயிலில் தங்க வைத்து தீர்ந்ததும் அழைத்து வருவது.

இந்த சக்தியானது மனித உடலில் எப்படிசெல்கிறது என்றால் நமது மார்பகத்தில் இருக்கும் விசுத்தி என்கிற சக்கரத்தின் வழியாக,  இந்தச் சக்கரமானது எந்த வித சக்தியானாலும் உள் இழுக்கும் தன்மையுடையது.  இதனால் தான் கோயில் உள்ளே போனால், ஆண்கள் சட்டையைக் கழட்டிவிட்டுப் போக வேண்டும் என்பது. 

பெண்களுக்குத் தங்கத்தில் தாலி போட்டிருப்பதால் அந்தத் தாலியானது அந்தச் சக்தியை ஈர்த்துக் கொள்ளும். இதை வைத்துத் தான், தூங்கும்போது மார்பில் கை வைத்து படுக்கக் கூடாது என்பார்கள்.  இரவில் நமக்கு சில இயற்கையின் சக்திகள் கிடைக்கிறது. அதை நமது உடலுக்குப் போகாமல் நாம் கை வைத்து அடைத்து விடுவோம். இதுவே காரணம்.

இந்த வகை சக்தி இயற்கையாகவே ஒருகாயில் இருக்கிறது என்றால் அது தான் உருத்திராடசம்.