செவ்வாய், 27 நவம்பர், 2012

மலை வலத்தின் சிறப்பு


  பெரும்பாலான திருத்தலங்களில் தெய்வங்கள் மலைமேல் இருப்பதுண்டு. ஆனால் திருவண்ணாலையில் மலையே தெய்வமாகவும் வழிபாட்டிற்குரியதாகவும் உள்ளது. "அருணன்"் என்றால் சூரியன் - நெருப்பின் நிறமான சிவப்பைக் குறிக்கும். "அசலம்" என்றால் கிரி என்றும் மலை என்றும் பொருள். எனவே அருணாசலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருள். இம்மலையில் உயரம் 2688 அடி.
அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி வந்துள்ளது.
எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது. அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிÐங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது.
இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு. அதன் காரணமாக மலைவலம் வருவது சிறந்தது. குறிப்பாக பௌர்ணமி நாளன்று மலைவலம் வருவது மிகவும் சிறப்பான பலன்களைத்தரும். காரணம் பௌர்ணமி நாளில் விசேடமாக எண்ணற்ற சித்தர்கள் நடமாட்டம் இருப்பதாகவும், மூலிகைக் காற்றுகளின் மணம் வீசுவதால் மனத்திற்கு அமைதியும், உடல் நலத்திற்கு நன்மையும் ஏற்படுவதால், இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமியன்று மலைவலம் வந்தும் அருள்மிகு அண்ணாமலையாரை தரிசித்தும் எல்லா நலன்களும் பெறுகிறார்கள் என்பது கண்கூடாக காணும் உண்மை.

திருவண்ணாமலை - தலப் பெருமை

திருவண்ணாமலை - அண்ணாமலையண்ணல்
உலகமெல்லாம் போற்றப்படுவது சைவ சமயம். சைவத்திருத்தல நகரம் திருவண்ணாமலை. எந்நாட்டவருக்கும் இறைவன் தென்னாடுடைய சிவன். அந்த சிவப்பெயர்களில் சிறந்து ஓங்குவது அண்ணாமலையண்ணல்.

நால்வரால் பாடல்பெற்ற திருத்தலம்
திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலானோர் அண்ணாமலையாரை வந்து தரிசித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள். மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து (வைணவத்தில் மார்கழி மாதத்திற்கு திருப்பாவை இருப்பது போல) சைவத்திற்கு மார்கழியில் "திருவெம்பாவை" (20) பாடல்களையும், திருவம்மானை பதிகங்களையும் இயற்றி உள்ளார். கிரிவலப்பாதையில் அடியண்ணாமலை என்னும் இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோயில் இருப்பதை இன்றும் காணலாம்.
திருமுறைத்தலம்
திருமுறைப் பாடல் பெற்ற 275 திருத்தலங்கள் (சிவன் கோயில்கள்) திருமுறைத்தலங்கள் எனப் போற்றப்படுகின்றன. இவற்றில் 22 திருத்தலங்கள் நடுநாட்டில் (தமிழ்நாட்டின் ஒரு பகுதி) அமைந்துள்ளன. இந்த 22 தலங்களில் மிகவும் சிறப்புடையது திருவண்ணாமலை ஆகும்.
முக்தி தரும் தலம்
முக்தி தரும் தலங்கள் நான்கென சிவ புராணம் குறிப்பிடுகிறது. அவற்றுள் திருவண்ணாமலையும் ஒன்று. நினைத்தாலே முக்தி தரும் தலம் இது.
பஞ்ச பூதத் தலம்
இந்தப் பிரபஞ்சம் இயங்க ஐந்து பெரும் சக்திகள் தேவை. "நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்" என்ற இந்த பிரிவுகளை பஞ்சபூதம் என்று சொல்கிறார்கள். "பிரிதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம்" என்ற இந்த ஐந்து பஞ்ச பூதங்களுக்கும் தலம் அமைத்து நம்முன்னோர் வழிபட்டு ஆனந்த பரவசம் எய்தினர். இவற்றில் 'தீ' என்கிற அக்னித்தலமாக திருவண்ணாமலையை, நம் முன்னோர் வழிபட்டனர். அக்னியே அனைத்திற்கும் மூலம். ஈஸ்வரன், அருணாசலேஸ்வரனாக, மலை உருவில் காட்சி வழங்கும் திருவண்ணாமலை, பஞ்சபூத ஸ்தலங்களுள் மிகவும் விசேஷமானது.
ஆதாரத்தலம்
ஆறு ஆதாரத்தலங்களில் மணிப்பூரக தலமாக விளங்குவது திருவண்ணாமலையாகும். சூரியன், சந்திரன், அஷ்டவசுக்கள் முதலான தெய்வங்களே வழிபட்டதான சிறப்புடையது.

ஞானிகளும் துறவிகளும்
இத்தலம் சித்தர்களின் சரணாலயமாகவும் விளங்குகிறது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டுச்சித்தர் இத்தலத்திற்கு உரியவராக விளங்குகிறார்.
மகான் சேஷாத்திரி சுவாமிகள்
அருணகிரிநாதர், விருபாஷதேவர், குகைநமச்சிவாயர், குருநமசிவாயர், தெய்வசிகாமணி, அருணாசல தேசிகர், மகான் சேஷாத்திரி சுவாமிகள், பகவான் ரமண மகரிஷி, யோகி ராம் சுரத்குமார் முதலான
ஞானத்தபோதனர்களை தனது ஜோதியில் இணைத்துக்கொண்ட மகத்துவம் உடையது திருவண்ணாமலை.
All rights 2012 (c) Reserved. Site designed & maintained by Arunachaleswarar Temple, Tiruvannamalai

திருவண்ணாமலை தல வரலாறு

லிங்கோத்பவர்
படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும் காக்கும் கடவுளாகிய திருமாலும் இருவருமே பெரியவர்கள் என்று தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக்கூற திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார். பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார். முடியைக் காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவன் தலை முடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் சிவன் முடியை காண எவ்வளவு துèரம் உள்ளது என்று கேட்க, தாழம்பூ தான் சிவனாரின் சடையில் இருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டு அருக்கிறேன் என்று கூற, பிரம்மன் முடியைக்காணும் முயற்சியை விடுத்து தாழம்பூவிடம் ஒரு பொய் சொல்லும்படி கூறினார்.
திருமாலிடம், சிவன் முடியை பிரம்மன் கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாழம்பூ சாட்சி சொல்ல, முற்றும் உணர்ந்த சிவபெருமான், பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், பொய்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜைக்கு உதவாது என்றும் சாபமிட்Ðடார். திருமாலும், பிரம்மனும் தான் என்ற அகந்தை நீங்கிட உலகுக்கு உணர்த்த சிவபெருமான் அடியையும், முடியையும் காணமுடியாத ஜோதி பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. அது மஹாசிவராத்திரி நாளாகும்.
இங்குள்ள அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி வந்துள்ளது. ஜோதி பிழம்பாக இருந்த சிவபெருமான் திருமாலும், பிரம்மனும் பணிந்து பிரார்த்திக்க அவர்களின் பிரார்த்தனைக்கு இறங்கி சிவபெருமானே சிவலிங்க திருஉருக்கொண்டு மலையின் அடிப்பாகத்தில் அடைந்துள்ள இடம் இத்திருக்கோயில் ஆகும்.

அர்த்தநாரீஸ்வரர்
உமாதேவியார் விளையாட்டாக சிவபெருமுèனின் கண்களை தன் கையால் மூட உலகம் எங்கும் இருளாயிற்று. ஜீவராசிகள் இருளில் இன்னல்கள் அடைந்தன. இந்த பாவம் தீர்க்க வேண்டி உமாதேவியார் காஞ்சி மாநகரத்தில் மணலை லிங்கமாக அமைத்து பூஜை செய்துவரும் நாளில் சிவபெருமான் îதான்றி திருவண்ணாமலை சென்று தவமியற்றி தமது இடப்பாகம் பெறுமாறு அருளிச் செய்தார். சிவபெருமான் கட்டளைப்படி பார்வதி தேவியார் திருவண்ணாமலைக்கு வந்து பவழக்குன்று மலையில் பர்ணசாலை அமைத்து கௌதம முனிவரின் உதவியால் தவம் செய்தார். தவத்தை மகிடாசூரன் என்பவன் கெடுத்து வந்தான். உமாதேவியார் துர்க்éயாக உருவெடுத்து மகிடாசூரனை வதம் செய்து, கார்த்திகை மாதம் பௌர்ணமி கூடிய கிருத்திகை பிரîதாஷ கால்த்தில் மலை மேல் ஜோதி ஸ்வரூப தரிசனம் கண்டு சிவபெருமான் இடப்பாகம் பெற்று உமாதேவியார் அமர்ந்தார்.
அதனைக் குறிக்கும் வகையில் கார்த்திகை தீபத்தன்று மாலை சரியாக 6.00 மணிக்கு அர்த்தநாரீஸ்வர மூர்த்தி எழுந்தருளி காட்சி கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

முருகப்பெருமான் நேரில் îதான்றுதல்
அருணகிரிநாதர் முருகப்பெருமானின் தீவிர பக்தர். அரசவைப்புலவராக இருந்த சம்பந்தன் காளி தேவியிடம்் வரங்கள் பல பெற்றவர். அருணகிரிநாதரின் புகழில்Ð பொறாமையுற்ற சம்பந்தன் தனக்கும் அருணகிரிநாதருக்குமிடைய ஒரு போட்டியை ஏற்பாடு செய்யுமாறு மன்னரைக் கேட்டுக்கொண்டார். அதாவது இருவரில் யார் தங்களுடைய கடவுளை நேரில் îதான்றச் செய்விப்பது என்பது தான் போட்டி.
இப்போட்டியில் சம்பந்தனால் தனது தெய்வமான காளியைத் îதான்றச் செய்ய இயலவில்லை. ஆனால் அருணகிரிநாதர் வேண்டுதலின் பேரில் முருகப்பெருமான் நேரில் காட்சியளித்தார். இந்நிகழ்ச்சிக்குப்பின் இத்தலம் முருகபக்தர்கள் யாத்திரை செல்லும் புகழ் மிக்க தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

சிவபெருமானால் வள்ளாள மகாராஜாவின் அகந்தை அகற்றப்பட்ட சம்பவம்
வள்ளாள மகாராஜா இக்கோபுரத்தைக் கட்டி முடித்தவுடன் தன் சாதனையை எண்ணி கர்வமுற்றார். அவருக்கு பாடம் புகட்ட எண்ணிய சிவபெருமான் பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முதல் ஒன்பது நாட்களும் வள்ளாள மகாராஜா கோபுரத்தின் வழியாக செல்ல மறுத்து விட்டார். தன் தவறை உணர்ந்த மன்னர் இறைவனிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். அதன் பின் பத்தாவது நாளில் இக்கோபுரத்தின் வழியாக செல்ல இறைவன் ஒப்புக்கொண்டார். சிவபெருமானின் இச்செயல் வள்ளாள மகாராஜாவிற்கு மட்டுமின்றி அகந்தையுற்ற ஒவ்வொருவருக்கும் பாடமாக அமைந்துள்ளது.

முருகப்பெருமானால் அருணகிரிநாதர் காப்பாற்றப்பட்ட சம்பவம்
தனது இளமைக் காலத்தில் விரக்தியுற்ற அருணகிரிநாதர் வள்ளாள மகாராஜா கோபுரத்தின் உச்சியிலிருந்து குதிப்பதற்கு முயற்சியுற்றார். முருகப் பெருமான் அருணகிரிநாதருக்கு காட்சியளித்து அவரது உயிரைக் காப்பாற்றினார். இச்சம்பவத்திற்குப் பின் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியருளினார்.
வள்ளாள மகாராஜாவின் ஈமக்கிரியைகளை அருணாசலேசுவரரே செய்து வருதல்
எல்லா நற்குணங்களும் நிரம்பியவர் வள்ளாள மகாராஜா என்று அருணாசல புராணம் கூறுகிறது. நேர்மை, கொடைத்தன்மை மற்றும் அருணாசலேசுவரர் மீது அளவிலா பற்று கொண்டவர் இவர். இம்மன்னருக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை இவருடைய பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான் இவருக்கும் இவர் மனைவிக்கும் குழந்தையாக îதான்றினார். இறைவனின் அருளை வியந்து இத்தம்பதியினர் அக்குழந்தையைத் தழுவும் போது இறைவன் மறைந்து விட்டார்.
பின்னர் இறைவனிடம் தன் மனக்குறையை வெளிப்படுத்திய போது, இறைவன் அவருக்கு காட்சியளித்து மன்னர் தன் கடமைகளை சரிவர செய்து வர வேண்டுமென்றும் அவருடைய ஈமக்கிரியைகளை தானே செய்வதாகவும் வாக்களித்தார். இப்போது கூட ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதத்தில் வள்ளாள மகாராஜாவின் திதி நாளன்று அருணாசலேசுவரர் பள்ளிகொண்டாபட்டு என்ற கிராமத்தில் எழுந்தருளி மிகுந்த சம்பிரதாயங்களுடன் ஈமக்கிரியைகள் செய்வது வழக்கம். இவ்விழாவிற்கு மாசிமகம் தீர்த்தவாரி என்று பெயர்.

யானை திறை கொண்ட விநாயகர்
ஒரு சமயம் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த அரசர் ஒருவர் போரிட்டு இப்பகுதியைக் கைப்பற்றிய பின் தன் படை வீரர்களுடன் இவ்விடத்தில் தங்கியிருந்தார். அன்று இரவு யானை ஒன்று தன்னையும் தன் படைவீரர்களையும் விரட்டியடிப்பதாகக் கனவு கண்டார். இது குறித்து விசாரித்த போது தான் தவறுதலாக விநாயகப் பெருமானால் பாதுகாக்கப்பட்டு வரும் புனிதத் தலத்தில் தங்கியுள்ளதாக அறிந்தார். தன் தவறை உணர்ந்த அவ்வரசர் விநாயகப் பெருமானிடம் மன்னிப்பு வேண்டியதுடன் தன்னுடைய யானைகளையும் விநாயகப் பெருமானுக்கு காணிக்கையாக அளித்தார்.

கிளி கோபுரம்
ஒரு சமயம் விஜய நகர் மன்னர் பிரபுட தேவராயர் கண் பார்வை இழந்து துன்பமடைந்தார். மன்னரின் நம்பிக்கைக்குகந்த புலவர் சம்பந்தாண்டான் பாரிஜாத மலரைக் கொண்டு சிகிச்சை செய்தால் கண்பார்வை திரும்பக் கிடைக்கும் என்றும் இப்பணியைச் செய்ய வல்லவர் அருணகிரிநாதார் தாம் என்று கூறினார். மன்னரும் இதை ஏற்று அருணகிரிநாதரை பாரிஜாத மலரைக் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார்.
பாரிஜாத மலர் சொர்க்கத்தில் இருப்பதால் அருணகிரிநாதர் Ð கூடு விட்டு கூடு பாயும் திறமையால் ஒரு இறந்த கிளியின் உடலுக்குள் தன் உயிரைப் புகுத்தினார். உயிரற்ற தன் உடலை ஓரிடத்தில் கிடத்தி விட்டு பாரிஜாத மலரைக் கொண்டு வரச் சென்றார். ஆனால் மலரைக் கொண்டு வருவதற்குள் புலவர் சம்மந்தாண்டனது சூழ்ச்சியினால் அருணகிரிநாதரின் அவர் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டது. தன் பூத உடல் மீண்டும் திரும்பப் பெற முடியாதோல் அருணகிரிநாதர் கிளி வடிவில் வாழ்ந்து கந்தரனுபூதி முதலான பாடல்கனை இயற்றினார்.
இக்கோபுரத்தின் கலசத்தில் அருணகிரிநாதர் கிளி உருவாக அமர்ந்து சென்றதால் இதற்கு கிளி கோபுரம் என்ற பெயர் வழங்கலாயிற்று.

ஞாயிறு, 25 நவம்பர், 2012

கிரி வலம்!

 
திருவண்ணாமலையை ஒரு முறை வலம் வருவதற்கே, பக்தர்கள் சிரமப்படுகிறார்கள். ஆனால், மனதில் தைரியத்துடன் ஒரே நாளில் ஐந்து முறை தொடர்ந்து சுற்றுவதற்கு மனபலம் இருந்தால் பிறப்பற்ற நிலை ஏற்படும் என அண்ணாமலை புராணம் தெரிவிக்கிறது. அண்ணாமலையின் சுற்றளவு 14 கி.மீ. ஐந்து முறை நடந்தால் 70 கி.மீ ஒரே நாளில் நடக்க வேண்டும். முடியும் என நினைக்கும் பக்தர்கள், இதயநோய் இல்லாதவர்கள், நல்ல ஆரோக்கியம் உடையவர்கள், இளைஞர்கள் இதற்கான முயற்சியை எடுத்தால் வாழ்நாள் முழுவதும் ஆன்மபலம் கிடைப்பதுடன் எதிர்கால துன்பங்களிலிருந்தும் விடுபடலாம்.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

அருணாசல மகிமை....

“சீல முனிவோர்கள் செறியு மலை..
சிந்திப்பார் முன் நின்று முக்தி வழங்கு மலை..
ஞான நெறி காட்டு மலை..
ஞான முனிவோர்கள் நித்தம் நாடு மலை..

அஞ்ஞானக் கங்குல் அகற்று மலை – அன்பருக்கு
மெய்ஞானச் சோதி விளக்கு மலை
ஞானத் தபோதனரை வா என்று அழைக்கு மலை
அண்ணாமலை”

-என்றெல்லாம் போற்றப்படும் திருவண்ணாமலை திருத்தலம், அண்ணாமலை என்றும் அருணாசலம் என்றும் அழைக்கப்படுகின்றது. அருணாசலம் என்பதைப் பிரித்தால் அருணம் + அசலம் என்று வரும். அருணம் என்றால் நெருப்பு. அசலம் என்றால் மலை. ஆகவே இது நெருப்பு மலையாக விளங்குகிறது. அதனால் தான் இதனை அக்னி பர்வதம் என்றும் அழைப்பர் பெரியோர். இந்த அக்னி பர்வதமாகிய நெருப்பு மலையே அருணாசலமாகக் காட்சியளிக்கிறது. அண்ணாமலை என்றால் அண்ண முடியாத மலை என்பது பொருளாகும். அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்பது பொருள். ஆக யாவரும் எளிதாய் நெருங்க இயலாத பரம் பொருளே இங்கு அண்ணாமலையாய், அருணாசலமாய் வீற்றிருக்கிறது என்பதே உண்மை. இது வெறும் கல் மலை எல்ல. பல்வேறு அதிர்வுகளைத் தன்னகத்தே கொண்டது என்பதே உண்மை.
மலை தோன்றிய வரலாறு:
ஒரு முறை அயனுக்கும் அரிக்கும் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. இருவரும் தத்தம் தொழில்களை மறந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில் இருவருக்கும் இடையே பெரும் போரும் மூண்டது. பாதிக்கப்பட்ட தேவர் முதலானோர் சிவனைச் சரணடைந்தனர். சிவன் அவர்களுக்கு அபயம் அளித்தார். போர் புரிந்து வரும் இருவருக்கும் இடையில் பெரும் அக்னி மலையாக தோன்றினார். இந்த ஒளி மலையைப் பார்த்த திருமாலும், பிரம்மனும் அளவு கடந்ததுள்ள இந்த மலையின் அடியையும், முடியையும் யார் முதலில் காண்கின்றரோ அவரே பெரியவர் என்பதாக முடிவு செய்தனர்.

பிரம்மா அன்னப்பறவையாய் மாறி ஈசனின் திருமுடி தேடிச் சென்றார். விஷ்ணுவோ வராக அவதாரம் எடுத்து சிவனின் திருவடி தேட முற்பட்டார். அடி முடியை இருவரும் காண முடியாததால் தாம் தான் உயர்ந்தவர் என்ற எண்ணம் நீங்கி சிவனைச் சரண் அடைந்தனர். (சிவனின் தலையிலிருந்து விழுந்த தாழம்பூவை சாட்சியாகக் கொண்டு சிவனின் திருமுடியைக் கண்டதாக பிரம்மா பொய் கூறியதும் அதனால் சீற்றமுற்ற சிவன் பிரம்மாவுக்கு வழிபாடு இல்லாமல் போகக் கடவது என்றும், தாழம்பூவை இனி தன் பூஜையில் பயன்படுத்தக் கூடாது என சபித்ததும் தனிக்கதை)
சினம் தணிந்த சிவபெருமான் ‘நாம் இத்தலத்தில் அருள்பாலித்ததால் இன்று முதல் இத்தலத்தைச் சுற்றிலும் மூன்று யோசனை தூரம் வரைக்கும் தூய்மையான புனித பூமியாக விளங்கும். அகண்ட ஒளி வடிவாயுள்ள இம்மலை சிறிய உருவம் கொண்ட மலையாக ஆகும். இத்தலத்தை நினைப்பவர்களுக்கு பிறவி நோய் நீங்கும். இந்த மலையும், நகரமும் பிரளய காலத்திலும் அழிவின்றி நிற்கும். கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் மலையின் உச்சியில் யாம் காண்பிக்கும் பேரொளியைக் கண்டு தொழுவோர்க்கும் அவர் தம் இருபத்தொரு தலைமுறையில் உள்ளவர்களுக்கும் வீடு பேறு உண்டாகும்’ என்று கூறி ஆசிர்வதித்தார்.
மலையின் சிறப்பு:
இம்மலை பிறப்பு, இறப்பினை நீக்க கூடியது. ஆதலால் மலைமருந்து என்றும், சிகப்பு நிறம் உடையதால் அருணாகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மலையே இலிங்க வடிவாக இருப்பதால் இம்மலையைச் சுற்றுவது இறைவனையே சுற்றி வருவதற்கு சமாகக் கருதப்படுகிறது. பௌர்ணமி தோறும் பல இலட்சம் பக்தர்கள் இங்கு மலை வலம் வருகின்றனர். இம்மலையின் பெயரினை அடிக்கடி சொல்லி வருவது திரு ஐந்தெழுத்தை (ஓம் நமசிவாய) கோடி முறை உச்சரிப்பதற்குச் சமம் என்பது புராணம் கூறும் செய்தியாகும்.

இம்மலையின் சிறப்பை,
“தர்சனாத் அப்ரஸதசி
ஜனனாத் கமலாலயே
காச்யாந்கி மரணான் முக்த்தி
ஸ்மரணாத் அருணாசலே:”

“கயிலையைக் கண்டால் முக்தி. திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் மரணமடைந்தால் முக்தி. அருணாசலத்தை நினைத்தாலே முக்தி.” என்ற பொருள் தணிக்கும் மேற்கண்ட ஸ்லோகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அண்ணாமலை வெறும் மலையல்ல; இன்னும் பற்பல யோகியர்களும் சித்தர்களும் தவம் செய்யும் அற்புத மலை. யுகம் தோன்றித் தோன்றி அழிந்தும் மாறாத ஒரே மலை. உள்ளுக்குள் பல்வேறு அசைவுகநிளைத் தன்னகத்தே கொண்ட மலை. உலகின் பல இடங்களில் இருந்தும் பல யோகியர்களும், சித்தர்களும், மகான்களும் இன்னமும் இங்கே வந்து தவம் புரியும் பெருமை மிக்க மலை. காந்தம் இரும்பை இழுப்பது போல தன் பேரொளியால் ஞான வேட்கை உடையோர்களை தன்னகத்தே இழுக்கும் மலை.
அதனால் தான் இம்மலையின் சிறப்பை குரு நமசிவாயர் தமது ‘அண்ணாமலை வெண்பா’வில்
தொண்டர் பணியுமலை..
தந்த்ர மலை யந்த்ர மலை..
சாற்றிய பஞ்சாக்கரமாம் மந்த்ர மலை..
பிறவி நோய்க்கு மருத்து மலை..
அண்ணாமலைஎன்றும்

தொண்டர் இணங்கு மலை..
வானோரும் ஏனோரும் போற்றி வணங்கு மலை..
தன் அடியார் செய்த குறை எல்லாம் மறக்கு மலை..
நாளும் குறைவிலாச் செல்வம் அளிக்கு மலை.. என்றும்

பற்பலவாறு புகழ்ந்து பாடியிருக்கிறார்.
இம்மலையின் வேறு பெயர்கள்:
கவுரி நகர், தேகநகர்,அண்ணாமலை, அண்ணாநாடு, அண்ணாவூர், அருணாசலம், சிவலோக நகர், வாயு நகர், அறிவு நகர், தூய்மை நகர், தென்கயிலாயம், சோணமலை, அருணகிரி, முக்தி புரி, மோட்ச புரி என இம்மலைக்கு பல பெயர்கள் உண்டு. இப்பூவுலகம் என்றைக்கு உண்டாயினவோ அன்றே உண்டான மலை அண்ணாமலை. சித்தர்கள், முனிவர்கள், ஞானிகள் அனைவரும் இம்மலையினைச் சிவலிங்கமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர்.

கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் திருவுருவம் கொண்டுள்ளது அண்ணாமலை. இத்தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால் தான் ஆன்றோர் பலர் இன்னமும் காலணி அணியாதுதான் இப்பகுதிக்குச் செல்வர்.
ஆலயச் சிறப்பு:
திருவண்ணாமலை கோயில் 25 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. ஆறாம் பிரகாரம் என்று அழைக்கப்படும் வெளிப்பிரகாரத்தில் மிக உயர்ந்த கருங்கல்லினால் கோயில் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு உள்ளது. நான்கு திசையிலும் வானை முட்டும் நான்கு கோபுரங்கள் அமைந்துள்ளன. கிழக்கு கோபுரம் ராஜ கோபுரம் என அழைக்கப்படுகிறது. இந்த கோபுரம் 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது. தென்னிந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய கோபுரம் இது தான். இதன் அடிநிலை நீளம் 135 அடி. அகலம் 98 அடி.

தெற்கு திசை கோபுரம் திருமஞ்சன கோபுரம். மேற்கு திசையிலுள்ள கோபுரம் பேய்க் கோபுரம் எனவும், வடக்கு திசையிலுள்ள கோபுரம் அம்மணி அம்மாள் கோபுரம் எனவும் அழைக்கப்படுகின்றது. இங்குள்ள கிளி கோபுரம் மிகவும் சிறப்பானது. இப்போதும் இங்கு பச்சைக் கிளிகள் வசிக்கின்றன. இங்குள்ள மண்டபத்தின் அருகில் தான் அருணகிரிநாதர் தம் உடலைக் கிடத்தி விட்டு பாரிஜாத மலரைக் கொணர்வதற்காகக் கூடு விட்டுக் கூடு பாய்ந்து கிளி ரூபத்தில் இந்திரலோகம் சென்றார்.
இராஜ கோபுரத்தில் நுழைந்தவுடன் வலது புறத்தில் ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள்ளது. ஆயிரங்கால் மண்டபத்துள் ரமண ரிஷி வழிப்பட்ட பாதாள லிங்கேஸ்வரைக் காணலாம்.
ஒரு காலத்தில் இவ்வாலயம் படைக்கலன்கள் பாதுகாக்கப்படும் கூடமாக இருந்திருக்கிறது. பல்வேறு மன்னர்கள் இக்கோயிலுக்கு திருத்தொண்டு புரிந்துள்ளனர். கோபுரத்திளையனார் சன்னதி, கம்பத்திளையனார் சன்னதி போன்றவை சிறப்புப் பெற்றவை. சம்பந்தாண்டானுடன் அருணகிரிநாதருக்கு நடந்த போட்டியில், அருணகிரிக்காக முருகன் தோன்றி காட்சி அளித்த பெருமைக்குரிய சன்னதி இது. முருகன் கம்பத்தில் காட்சி அளித்தார். அதனால் கம்பத்திளையார் என முருகனுக்கு பெயர் வந்தது.
இதன் தென்புறமாக சிவகங்கை புண்ணிய நதி தீர்த்தம் அமைந்துள்ளது. சர்வ சித்தி விநாயகர் சன்னதியின் கீழ் புறமாக சிவகங்கைக் குளம் அமைந்துள்ளது. பெரிய நந்தியின் எதிரி வல்லாள மகாராஜன் கோபுரம் காணப்படுகிறது.
ஆலயத்தின் உள்ளே அண்ணாமலையார் வீற்றிருக்கிறார். தனிச்சன்னதியில் உண்ணாமுலை அம்மன் காட்சி தருகிறார். அண்ணாமலை சன்னதியின் பின்புறத்தே வேணுகோலன் புல்லாங்குழலுடன் காட்சி தருகிறார். லட்சுமி, சரஸ்வதி, ஷண்முகநாதரும் தனிதனிச் சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணா ரமுதக் கடலே போற்றி

-என்ற பாடல் அண்ணாமலையாரின் சிறப்பை விளக்குவதாகும்.
சுந்தரரைத் தவிர ஞானசம்பந்தர், அப்பர், வாதவூரர் ஆகிய மூவரும் இத்தலத்து இறைவனைத் தொழுதேத்திப் பாடியுள்ளனர். வள்ளலார், அருணகிரி நாதர், குரு நமசிவாயர், குகை நமசிவாயர், ஈசான்ய ஞான தேசிகர், பகவான் ரமண மகரிஷி உட்பட பலர் இத்தலத்து இறைவனையும், இம்மலையையும் பாடிப் பரவியுள்ளனர்.
இம்மலைப்பாதைகளில் சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம், ரமணாஸ்ரமம், யோகி ராம் சுரத் குமார் (விசிறி சாமியார்) ஆஸ்ரமம், ஈசான்ய ஞான தேசிகர் மடம், அடிமுடிச் சித்தர் ஜீவ சமாதி ஆலயம் போன்ற பல ஞானியரது ஆஸ்ரமங்களும், ஜீவ சமாதிகளும், பல கோயில்களும் உள்ளன. இங்குள்ள மலைப் பாதையில் அஷ்ட லிங்கங்கள் உள்ளன. மலை வலத்தின் போது அவர்களையும் வணங்குதல் வேண்டும்.
கிரிவலம்:
இம்மலையின் சுற்றளவு 14 கி.மீ. கிரிவலத்தை எங்காவது துவங்கி, எப்படியாவது முடித்தல் கூடாது. அதன் பெயர் கிரி வலமும் அல்ல. முதலில் ஆலயத்தின் புறத்தே இருக்கும் பூத நாராயணரிடம் மலையைச் சுற்றுவதற்கு அனுமதி வாங்கிக் கொள்ள வேண்டும். அவர் தான் இம்மலையைக் காவல் காக்கிறார். அதன் பின் விக்னங்கள் ஏதும் இல்லாமல் சிறப்பாய் மலை வலம் முடிய வேண்டும் என்று வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்கி வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஆலயம் சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தல் வேண்டும். அதன் பின் வெளியில் வந்து ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு மலை வலத்தை ஆரம்பிக்க வேண்டும்.

நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லுதல் கூடாது. இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். இடப்புறமாகவே நடந்து செல்ல வேண்டும். மலை சுற்றும் போது கைகளை வீசிக்கொண்டும், பேசிக்கொண்டும் நடக்கக் கூடாது. நமச்சிவாய நாமத்தை உச்சரித்துக்கொண்டே நடந்து செல்லல் வேண்டும். அங்கும் ஆடிக் கொண்டும், பாடி, ஓடிக் கொண்டும் செல்லக் கூடாது. அமைதியாலவே செல்ல வேண்டும்.
மலை வலம் வரும்போது அருணாசலேஸ்வரின் கிழக்கு கோபுரத்தில் துவக்கி முடிக்கும் போது அருணாசலேஸ்வரரை வணங்கினால் தான் மலைவலம் முடிந்ததாகப் பொருள். அருணாசலேஸ்வரரின் கிழக்கு வாயிலில் இருந்து மலை வலம் வர ஆரம்பிக்க வேண்டும். மலையின் எட்டு திசைகளிலும் தன் பாவங்களை போக்க்கிக் கொள்வதற்காக வழிபட்ட அஷ்டதிக்கு பாலகர்களில், கிழக்கிற்கு அதிபதியான இந்திரன் வழிபட்ட இந்திரலிங்கத்தை முதலில் வழிபடவேண்டும். மலை சுற்றும் சாலையில் உள்ள நந்திகேசுவரர் சன்னதியை வணங்கி வழிபட்டு பின்னர் தான் மலைவலம் வர வேண்டும். தென்கிழக்கு திசைக்கு அதிபதியான அக்னி பூஜை செய்த அக்னி லிங்கம் உள்ளது. இதன் அருகில் சிம்ம தீர்த்தம் உள்ளது.
வழியில் உள்ள சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் மகத்தான மந்திர சக்தி வாய்ந்தது. கேட்ட வரத்தைத் தர வல்லது. இங்கு கிட்டத்தட்ட 22க்கு மேற்பட்ட மகான்கள் ஜீவ சமாதியில் உள்ளனர். வழிபடுதல் சிறப்பு. தொடர்ந்து ரமணாஸ்ரமம் ஆன்ம அமைதியைத் தர வல்லது. சற்றுத் தொலைவில் விசிறி சாமியார் ஆசிரமம் அமைந்துள்ளது. மன அமைதியைத் தர வல்லது. தியானம் செய்ய ஏற்ற இடம் அது.
அடுத்து வழியில் தெற்கு திசைக்கு அதிபதியான எமன் பூஜை செய்து வழிப்பட்ட எமலிங்கம் உள்ளது. எமன் கட்டளை நிறைவேற்றும் கின்னரர் முதலானோர் இங்கிருந்து தான் புறப்பட்டு செல்லுகின்றனர் என்பது ஐதீகம்.
அடுத்து தென்மேற்கு திசைக்கு அதிபதியான நிருதி, சிவனை வழிப்பட்ட நிருதி லிங்கம் உள்ளது. இங்கு வணங்கிய பின்பு தெற்கிலிருந்து மேற்கில் திரும்பும் வளைவில் நின்று மலையை தரிசிக்க வேண்டும். இந்த இடம் பார்வதி தேவிக்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான காட்சி அளித்த இடம் ஆகும். ஆதலால் இங்கு மலையின் முகப்பில் தெரியும் நந்தியின் தலையை வணங்கிச் செல்ல வேண்டும். அடுத்து அருணாசலேஸ்வரின் கோயிலுக்கு நேர் எதிரில் திருநேர் அண்ணாமலை கோயில் உண்டு. இங்கு உண்ணாமுலை அம்மன் தீர்த்தம் அருகிலேயே உள்ளது. அதனை வழிபட வேண்டும்.
அடுத்து சூரியன் வழிபட்ட லிங்கம். மேற்கு திசைக்கு அதிபரான வருணன் வழிபட்ட வருண லிங்கம் ஆகியவை உள்ளது. அதனை வழிபட்ட பிறகு பிரம்மன் வழிபாடு செய்து பாவங்களை போக்கி கொண்ட ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலை அடி அண்ணாமலையார் என்று அழைப்பர். இங்கு அவசியம் தரிசனம் செய்தல் வேண்டும்.
அதற்கடுத்து வடமேற்கு திசைக்கு அதிபதியான வாயுலிங்கம் உள்ளது. சிறிது தூரம் சென்றால் வட திசைக்கு அதிபதியான குபேரன் வழிபட்ட குபேர லிங்கம் காணப்படும். அடுத்து இடுக்கி பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கிருந்து மலையை பார்த்தால் ஐந்து முகங்கள் தெரியும். இது சிவனின் ஐந்து திருமுகங்களை குறிக்கக்கூடியது. இதனை பஞ்ச முக தரிசனம் என்பர். அடுத்து மலை வல பாதையில் இருந்து சுடுகாட்டுக்கு பிரியும் தனிப் பாதையில் சென்றால் வட கிழக்கு அதிபரான ஈசானன் வழிபட்ட ஈசான லிங்கம் உள்ளது. இதனையும் வழிபட்டு, வழியில் உள்ள ஈசான்ய மடத்தில் ஜீவ சமாதியாக உள்ள ஈசான்ய ஞான தேசிகரையும் வணங்க வேண்டும். அதன் பிறகு அருணாசலேஸ்வரர் கோயில் சென்று தரிசித்த பிறகுதான் மலைவலம் பூரணத்துவம் அடைகிறது.
மலை வலம் வர உகந்த நாட்கள்:
எல்லா மாதங்களும் கிரி வலத்திற்கு ஏற்ற மாதங்களே! இருந்த போதும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பௌர்ணமி காலங்கள் மலை வலத்திற்கு ஏற்ற காலங்களும், மாதங்களும் ஆகும்.

புராண காலத்தில் பார்வதி தேவியார் சிவனின் இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் தன் பரிவாரங்களூடன் மலையை வலம் வந்தார். அப்போது சிவன் காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம் அளித்தார் என்பது வரலாறு. சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் ஒவ்வொரு மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷ காலத்தில் மலை வலம் வந்தனர். இன்றும் சூட்சும ரீதியாக வந்து கொண்டிருக்கின்றனர்.
சந்திரன் நம் மனத்துக்கு (எண்ணத்திற்கும்) காரகன். பௌரணமியன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில் கிரகித்து பூர்ண நிலவாக, அதிகக் கலைகள் கொண்டவனாக சந்திரன் விளங்குகிறான். இதனால் பௌர்ணமி மலை வலம் வருவது சாலச்சிறந்தது என பெரியோர்களால் போற்றப்பட்டது.
அமாவாசை, பிறந்த நாள், திருமண நாள், பிரதோஷம், சிவராத்திரி போன்ற புண்ணிய தினங்களிலும் மலை வலம் வரலாம்.
சிவன் கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமையாக இருக்கும். சோமவாரம், சோமப் பிரதிஷணம் போன்றவற்றின் மூலம் நாம் இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். ஆனால், திருவண்ணாமலை அக்னி மலை. அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. அக்னிக்குரிய கிரகம் அங்காரன். ஆகவே இந்தக் கோயிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்கிழமை அன்று தான் விசேஷ வழிபாடு நடக்கின்றது. செவ்வாய் கிழமை அன்று வழிபடுவோர் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. சத்குரு சேஷாத்ரி சுவாமிகளும் செவ்வாயன்று மலை வலம் வருதலை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார்.
ஊழ்வினைகளை நீக்கக்கூடியது அண்ணாமலையார் கோயில். பிறவிப்பிணி நீங்க வேண்டும் என விரும்பும் எவரும் மலை வலம் வருவதால் தத்தம் கர்மாவை குறைத்து கொள்ள முடியும்.
‘அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே!’ -என்கிறது தேவாரமும்.
மலை சுற்றி வரவேண்டும் என நினைத்து ஓரடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடி எடுத்து வைத்தால் ராஜ சூர்ய யாகம் செய்த பலன் கிடைக்கும் மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். நான்காவது அடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களும் பலன் கிடைக்கும். மலையைப் பற்றியும், மலை சுற்றுவதைப் பற்றியும் நினைப்பவர்களுக்கே இந்தப் பலன் என்றால், மலை சுற்றுபவர்களுக்கு கிடைக்கும் பலன்…??? அவர்கள், கைலாசத்திற்குள் நுழைந்து பிறப்பு இறப்பாகிய பிணி நீங்கி, மோட்சமாகிய உயர் பதவியை அடைவார்கள் என்று அருணாசல புராணம் தெரிவிக்கின்றது.
ஞாயிற்றுக் கிழமை சுற்றினால் சிவபதவி கிடைக்கும்
திங்கட்கிழமை சுற்றினால் இந்திர பதவி கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமை சுற்றினால் கடன்,வறுமை நீங்கும்.
புதன்கிழமை சுற்றினால் கலைகளில் தேர்ச்சி, முக்தி கிடைக்கும்.
வியாழக்கிழமை சுற்றினால் ஞானிகளாவார்கள்.

வெள்ளிக்கிழமை சுற்றினால் விஷ்ணு பதம் அடையலாம்.
சனிக்கிழமை சுற்றினால் நவக்கிரக தோஷம் நீங்கும்.

நாற்பத்தெட்டு நாட்கள் அதிகாலையில் கணவனும், மனைவியும் நீராடி மலைவலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும். கர்ம வினைகள் அனைத்தும் தொலையும். அமாவாசை அன்று சுற்றினால் மனதில் உள்ள கவலைகள் போகும். மனம் நிம்மதி அடையும். பாவங்கள் அனைத்தும் நீங்கும். பித்ரு தோஷங்கள் நிவர்த்தியாகும்.
ஆகவே, மலை வலம் வருவோம். மன நலம் பெறுவோம்.
அருணாசல அருணாசல அருணாசல

ஓம் நமசிவாய!!!

குரு அவ்வளவு முக்கியமா???

குரு அவ்வளவு முக்கியம் என்று சொல்கிறீர்கள் ஆனால் இந்த கலியுகத்தில் இது சாத்தியமா?

ஆனால் ஏன் குரு குரு என்று ஓட வேண்டும்? அந்த குருவே நம்மை ஆட்கொள்ள மாட்டாரா? ராமகிருஷ்ணர் விவேகானந்தரை சீடனாக்க எவ்வளவு முயன்று வெற்றி பெற்றார். பின்னர் அவரருளால் விவேகானந்தர் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே.



குரு என்று நாம் தேடி சிந்தயை குழப்பிகொள்ளாமல் குரு கிடைப்பார் என்ற நிலை இருந்தால் அது தானாக நடக்கும். இல்லையே அந்த ஈசனே குருவாக வந்து அருள் புரிவார்.

பட்டினத்தார் சித்தரின் கதை அனைவருக்கும் தெரிந்ததே. ஈசன் வந்து அவருக்கு உபதேசம் செய்து அவரை ஆட்கொண்டாரல்லவா.???
அதே மாதிரித்தான். எங்களில் ஒவ்வொருவரையும்...

எல்லாம் அற என்பது ....... என்னை இழந்த நலம்...

உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனும் நீயலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுர பூபதியே.

கந்தர் அனுபூதியில் உள்ள உயர்ந்த பாட்டுக்களில் ஒன்று இதுவெனக் குறிப்பிடுகிறார் வாரியார் சுவாமிகள். அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதியில் இரண்டாவது பாடலான இதற்கு வாரியார் சுவாமிகளின் விளக்கவுரை இப்படி அமைகிறது...

இங்கு எல்லாம் அற என்பதற்கு மெய், வாய், நாசி, செவி, மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் முதலியவைகள் அற்று என்பது பொருள்.

'எல்லாம்' என்பது புறப்பற்று. 'என்னை' என்பது அகப்பற்று. என்றைக்கு இந்த அகப்பற்றும், புறப்பற்றும் ஒழிகின்றனவோ, அன்றைக்குத்தான் நலம் பெறுவோம்.

ஞான பண்டிதனை வேண்டுகின்றபோழுது 'மனம், வாக்கு, காயம்' ஒன்றுபட்டு 'என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா' என்கின்றார் யோக நிலையிலிருந்து அருணகிரிநாதர். அதாவது கண்ணிருந்து காணவில்லை. காதிருந்து கேட்கவில்லை. நாசி இருந்து நுகரவில்லை. நாக்கு இருந்து சுவைக்கவில்லை. மனம் சிந்திக்கவில்லை. புத்தி நிச்சயிக்கவில்லை. சித்தம் எதையும் எண்ணவில்லை, அஹங்காரம் கொண்டெழுப்பவில்லை. வெறும் தனி நிலை அது.

உல்லாச, நிராகுல, யோக, இத, சல்லாப, விநோதனும் நீ அலையோ, இங்கு 'உல்லாசம்' என்ற சொல்லுக்குப் பொருள் எந்தக் காலத்திலும் மாறுபாடு இல்லாமல் ஒரு தன்மையாக இருத்தல்; அதாவது புத்தியில் சஞ்சலமில்லாமல் இருப்பது; ஏற்றத் தாழ்வு இல்லாத வாழ்வு.

'நிராகுல' என்றால் துன்பம் இல்லாதவன். அதாவது ஞான மயமானவன் என்று அர்த்தம். இதற்கு நேர் அர்த்தம் அறிவு வடிவானவன். அறிவுள்ளவனுக்குத் துன்பம் இருக்காது. அறிவில்லாதவன் துன்பத்தை அடைவான். அறிவில்லாதவனுக்கு மேலும் மேலும் துன்பங்கள் இருந்துகொண்டேதானிருக்கும். அறிவிருப்பவனுக்குத் துன்பம் நேரும். ஆனால் துன்பத்தை அடையமாட்டான். அறிவிலே தெளிவு இருந்தால் துன்பம் வராது. இன்பத்திற்குக் காரணம் அறிவு.

'யோக' : யோகத்தால்தான் இன்பம் வரும். கணவனும், மனைவியும் ஒன்றுபட்டால் சிற்றின்பம். ஆன்மாவும், இரையும் ஒன்றுபட்டால் பேரின்பம். இரண்டு காட்சிகள் ஒன்று சேர்ந்தால்தான் இன்பம்.

'உல்லாசம்' என்றால் உண்மை; அதாவது 'சத்து'; 'நிராகுல' என்றால் அறிவு; அதாவது 'சித்து'; 'யோகம்' என்றால் இன்பம்; அதாவது 'ஆனந்தம்'; 'சத்து', 'சித்து', 'ஆனந்தம்' சச்சிதானந்தம். 'சச்சிதானந்தமாகிய கடவுளே' என்று பொருள்.

'இதம்' என்றால் நினைவு. அதாவது நினைத்தல்; 'சல்லாபம்' என்றால் பேசுதல்; 'விநோதம்' என்றால் செய்தல். சத்தும், சித்தும், ஆனந்தமுமாய், அதாவது சச்சிதானந்த வடிவமாக இருக்கும் ஆண்டவன், இதம், சல்லாபம், வினோதன், அதாவது, நினைத்தல், பேசுதல், செய்தல் ஆகிய இந்த மூன்றும் நமக்கு உண்டாக வேண்டுமென்று நினைக்கிறான், சச்சிதானந்தம் வேண்டுமென்று நினைக்கிறான். ஆண்டவன் உண்மை வடிவாயிருந்து நமக்கு எல்லாம் செய்கின்றான்.

'உல்லாச நிராகுல யோக...' இதற்கு இன்னோர் அர்த்தமும் உண்டு.

உல்லாசம் என்றால் என்றைக்கும் ஒரே தன்மையாக இருப்பது. அதுதான் மேலானது. அதற்க்கு மேலானது ஒன்றும் கிடையாது. மேலான மலை எது? அதுதான் திருப்பரங்குன்றம். அதுவே மூலாதாரம்; அதாவது உல்லாசம்.
  1. நிராகுலம் என்றால் துன்பமற்று ஞானமயமாக இருப்பது. அதாவது திருச்செந்தூர். அது சுவாதிஷ்டானம்.
  2. யோகம் - யோக நிலையாகிய இன்பத்தைத் தருவது பழநி மலை; அது மணிபூரகம்.
  3. இத - இதமாக இருப்பது சுவாமிமலை. அது அநாகதம்.
  4. சல்லாபம் என்றால் மலைகள் தோறும் விளையாடுதல். குன்றுதோறாடல்; அது விசுத்தி.
  5. விநோதம் - பழமுதிர் சோலை - அது ஆக்ஞை.

உல்லாசம் என்றால் மூலாதாரம்; நிராகுலம் என்றால் சுவாதிஷ்டானம்; யோகம் என்றால் மணிபூரகம்; இதம் என்றால் அநாகதம்; சல்லாபம் என்றால் விசுத்தி; விநோதம் என்றால் ஆக்ஞை; இந்த ஆறு ஆதாரங்களில் எழுந்தருளியுள்ள பெருமானே! இதற்கெல்லாம் உரியவன் நீ அல்லவா? ஆகையினாலே, என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபூபதியே! எனக்கு நீ உபதேசம் செய்ய வேண்டும். உபதேசிப்பது எந்த இடமாக இருக்க வேண்டும்? 'யானோ மனமோ எனை ஆண்ட இடம்...'

சித்தர்களின் ஜீவசமாதி

சித்தர்களின் ஜீவ சமாதி பீடமே கலியுகத்தில் வணங்கத்தக்க இடமாகும்.ஏனெனில்,பிரபஞ்ச ஆற்றலை (இறைசக்தியை)இப்பூமியில் நிரந்தரமாக நிலைப்படுத்தி வைத்துள்ள இடமேசித்தர்களின் ஜீவசமாதி பீடங்களாகும்.

தற்போது உள்ள பழங்கோவில்கள் எல்லாம் சித்தர்களின்
மறைவிடங்களே.அவர்களின் ஜீவசமாதி மீது தான் புகழ் பெற்ற
கோவில்கள் அமைந்துள்ளன என்பது உண்மை.அவர்களின்
ஆற்றலே அங்கு பிரகாசிக்கிறது.

திருமலை திருப்பதி - சித்தர் மகான் கொங்கனவர்
பழனி மலை முருகன் -- சித்தர் மகான் போகர்

சித்தர்களின் ஜீவசமாதியை வணங்கினால் ஆண்டவனை வணங்கியதாகும். ஆண்டவனை வணங்கினால் அவர்களை வணங்கியதாகும். அங்கு சென்று ஊணுருக, உயிருருக,விழி கசிய தியானிப்போர்க்கு அப்பீடத்தில் குடி கொண்டிருக்கும் சித்தர் பெருமக்கள் தாம் பெற்றுள்ள பேராற்றலால் பக்தர்கள்
குறையை போக்கி,நல்வழி அருளுகிறார்கள்.
இது முற்றிலும் உண்மை.

அனைத்திற்கு அப்பாலும், அனைத்திலுமாய் நின்று இப்பிரபஞ்சங்களை
தம் விருப்பம் போல் படைத்து-இயக்கும் பரம்பொருள், ஞானிகளின்
உள்ளே நடம் புரிகிறார்.

சிற்பங்கள் கட்டின கோவிலிலே அங்குத்
தற்பரன் வாழ மாட்டான்- குதம்பாய்
தற்பரன் வாழ மாட்டான்.
சித்தர்கள் ஞானிகள் ஜீவசமாதியில்
தற்பரன் நித்யம் தாண்டவம் புரிவானடி-குதம்பாய்
தாண்டவம் புரிவானடி.-குதம்பை சித்தர்.

ஞானிகளை சத்திய நிலையில் தெளிந்தறிதலினால் பரம்பொருளை
அறிய முடியும். பரம்பொருளை அறிந்துணர சித்தர்களின்
ஜீவசமாதியை பூஜிக்க வேண்டும்.

புண்ணிய பூமி, வேதபுரி என காலங்காலமாக,அகத்தியர்
முதல் அரவிந்தர் வரைஅனைவரையும் அரவணைத்து அவர்களின்
அருள் சாதகத்திற்கு,இறை சாதகமாக்கிய நம் புதுவை
மண்ணில் ஜீவ சமாதியாகியுள்ள சித்தர்கள் அநேகபேர்.
அவர்களில் பிறமதத்தினரும் உண்டு என்பதுவும் நம்
மண்ணின் பெருமை.
இவ்விதம் நமக்கு தெரிந்தும் இன்னும் தெரியாத பல சித்தர்கள் உலவி, தம் அருள் ஆற்றலால் புண்ணியமாக்கிய பூமிதான் நம் புதுவைமண்.இப்படி புதுவையிலும் அதை சுற்றியுள்ள பிற இடங்களிலும் உள்ள சித்தர்களின் ஜீவ
பீடத்திற்குச் சென்று வழிபட்டு அவர்களின் பேரருளை பெறுவோமாக..

சனி, 8 செப்டம்பர், 2012

மூன்று ஆசைகளை வெல்லுங்கள்

 வினோபாஜியின் தத்துவம்

*தர்ம சாஸ்திரங்களில் மனித மனங்களை புத்திர பாசமுள்ள மனது, பொருளால் பெருமைப்படும் மனது, புகழை விரும்பும் மனது எனப்  பிரித்துள்ளனர். இவற்றை வென்றவர்கள் மனதை வென்றவர்கள் ஆவார்கள்.
* புத்திர பாசத்திற்காகத் தான் திருமணம் செய்கிறோம். குழந்தைகளைப் பெறுகிறோம். சிற்றின்பத்திலேயே மூழ்கிவிடக் கூடாது.
* இரண்டாவது பொருளாசை. பொருள் இல்லாமல் உலகில் வாழ முடியாது. எனவே, பிறரைக் கெடுக்காமலும், யாரையும் வஞ்சிக்காமலும் நல்லவழியில் பொருள் தேட வேண்டும்.
* மூன்றாவதாக புகழ் வாசனை, புகழ் நாட்டம் மிதமாக இருந்தால் யாருக்கும் தீங்கில்லை. தன்னலம் கருதாமல் பிறருக்கு தொண்டு செய்வதால் உண்டாகும் புகழ் ஒருமனிதனுக்கு அவசியமானதே. பிறரைக் கெடுப்பதற்காக தன்னைத் தானே உயர்த்தி புகழ்ந்து கொள்ளுதல் கொடுமையானதாகும். இந்த மூன்றும் மனிதனின் செயல்பாடுகளுக்கு தூண்டு கோலாகவும், அவனை உயர்நிலைக்கு இட்டுச்செல்வதற்கும் மட்டுமே பயன்பட வேண்டும்.

தமிழ் வளர்த்த தருமையாதீனம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்

சிவப்பிரகாச சுவாமிகள், காஞ்சிபுரத்தில் இறைவன் திருவருளால் பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையை பறிகொடுத்துவிட்டதால்
தனது தமையன் வேலாயுதம், கருணைப்பிரகாசம், தமக்கை ஞானாம்பிகை ஆகியோருடன் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். தனது தந்தையின் குருவான குருதேவரை தரிசித்து. அவருடனே தங்கியிருந்து கல்வி கற்றார். சிவஞானத்தில் பெருநிலை அடையப்பெற்ற குருதேவரிடம் தீட்சை பெற்றார். சதா சிவசிந்தனையிற் திளைத்திருந்தார், சுவாமிகள். திருவண்ணாமலை கிரிவலத்தின் பெருமையை தன் உள்ளுணர்வால் உணர்ந்து புறப்பட்டார்.
ஒவ்வொரு முறை வலம் வரும் பொழுதும் அருணாச்சலேஸ்வரர் மேல் பாடல் பாடி-அன்றைய தினத்தில் 100 பாடல்கள் இயற்றினார்.
அதற்கு “சோண சைல மாலை” என்று பெயர். சுவாமிகள் மேலும் ஆழ்ந்த கல்வி பயில வேண்டும் என்ற ஆசையினால் தமது சகோதரர்களுடன் தென்னகப் பிரயாணம் தொடங்கினார். திருச்சிக்கருகில் உள்ள பெரம்பலூரில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து சிவபூஜையை செய்து வந்தார்.
அங்கிருந்து திருநெல்வேலி வந்து தாமிரபரணி ஆற்றங்கரையருகில் உள்ள சிந்துபூத்துறைக்கு வந்து சேர்ந்தார்.அவ்வூரிலுள்ள தர்மபுர ஆதினத்து கட்டளை தம்பிரான் வெள்ளியம்பல சுவாமிகளுக்கு சீடனாக இருந்து கல்வி கற்க விரும்பினார்.
வெள்ளியம்பலவாணர் தருமை ஆதீனம் நான்காம் பட்டத்தில் விளங்கிய குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரியாரிடம் சிவதீட்சை பெற்றவர்,காசிக்கு சென்று குமரகுருபரரிடம் கல்வி பயின்றவர். அத்தகைய இலக்கண இலக்கிய செம்மலிடம் மாணாக்கன் ஆவதைப் பெரும் பேறாகக் கருதினார் சிவப்பிரகாச சுவாமிகள்.
சிவப்பிரகாசரின் தமிழார்வத்தை அறிந்த முனிவர்- அவரின் ஆற்றலை அறிய விரும்பி “கு” என்று தொடங்கி “கு” என்று முடித்து இடையே ஊருடையான் என்று வருமாறு நேரிசை வெண்பா ஒன்று பாடுமாறு ஆணையிட்டார். சுவாமிகளும் தயங்காமல் உடனே பாடிக் காட்டினார்.
வெண்பாவைக் கேட்டவுடன் சிவப்பிரகாசரின் ஆற்றலைக் கண்டு வெள்ளியம்பல சுவாமிகள் மிகுந்த வியப்புற்றார்.அவரை அப்படியே ஆரத் தழுவிகொண்டார்.” இத்தகைய ஆற்றல் படைத்த உமக்கா தமிழ் சொல்லித்தர வேண்டும் “ என்று கேட்டார். வெள்ளியம்பல சுவாமிகள், சிவப்பிரகாசரை தன்னுடன் இருத்திக்கொண்டு சுவாமிகளின் சகோதரர்களாகிய வேலாயுத சுவாமிகள், கருணைப்பிரகாச சுவாமிகள் ஆகிய இருவருக்கும் பதினைந்து நாட்களில் ஐந்திலக்கணங்களையும் கற்றுக் கொடுத்தார்.
சிவப்பிரகாசரின் எண்ணம் நிறைவேறியது. மகிழ்ச்சியில் மலர்ந்தார். பெரம்பலூரில் தனக்கு காணிக்கையாக கொடுத்த முந்நூறு பொற்காசுகளை தனது குருவின் காலடியில் சமர்ப்பித்தார்.வெள்ளியம்பல சுவாமிகளோ,” இவை எமக்கு வேண்டா, அதற்குப் பதிலாக திருச்செந்தூரில் எம்மை இகழ்ந்து பேசுதலையே இயல்பாக கொண்டு திரியும் ஒரு தமிழ்ப்புலவனின் அகங்காரத்தை ஒடுக்கி எம் கால்களில் விழச் செய்ய வேண்டும் “என்றார்.
குருவின் அவாவை நிறைவேற்றும் பொருட்டு திருச்செந்தூர் புறப்பட்டார். கோவிலினுள் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானை தரிசித்து விட்டு-வலம் வந்தார்.அப்பொழுது முனிவர் சொன்ன அப்புலவனைக் கண்டார். புலவனும், சுவாமிகளைக் கண்டு இவர் வெள்ளியம்பல
சுவாமிகளிடமிருந்து வந்தவர் என்பதையறிந்து வசை மாறி பொழிந்தான். இருவருக்கும் விவாதம் முற்றியது.
புலவன் சுவாமிகளை பந்தயத்திற்கு அழைத்தான். இருவரும் நீரோட்டகயமகம் பாடவேண்டும் என்றும் யார் முதலில் முப்பது பாடலை பாடி முடிக்கிறார்களோ அவரே ஜெயித்தவர்- தோற்பவர் மற்றவர்க்கு அடிமையாக வேண்டும் என்றான். சிவப்பிரகாச சுவாமிகளும் சிறிதும் தயங்காது பாடி முடித்தார். ஆனால் புலவனால் ஒரு பாடல் கூட பாட முடியவில்லை-வெட்கித் தலைகுனிந்து சுவாமிகளிடம் சரணடைந்தான்.
அதற்குச் சுவாமிகள் அடியேன் வெள்ளியம்பல சுவாமிகளின் அடிமை-நீர் அவருக்கே அடிமையாதல் முறை” என்று கூறி தம் குருநாதரிடம் அழைத்துச் சென்று அவருக்கே அடிமையாக்கினார்.
வெள்ளியம்பல சுவாமிகள் அகங்காரம் கொண்ட புலவனின் அகந்தையை அடக்கி அவனுடைய கவனத்தை பரம் பொருளிடத்தே செலுத்த வைத்து “நல்வாழ்வு-வாழ்ந்து வா” என்று கூறி அனுப்பி வைத்தார். குருநாதரிடம் பிரியாவிடை பெற்று தமது இளவல்களுடன் துறைமங்கலம் வந்து, பின்னர் அங்கிருந்து வாலிகண்டபுரத்தின் வடமேற்கு திசையிலுள்ள திருவெங்கையிலே சில காலம் தங்கி சிவபூஜை செய்துவந்தார்.
வள்ளல் அண்ணாமலை ரெட்டியார் கட்டி தந்த மடத்தில் தங்கியிருந்தவாறே -திருவெங்கைக் கோவை,திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கையுலா, திருவெங்கை அலங்காரம் என்னும் நான்கு நூல்களைத் தந்தருளினார். சிவப்பிரகாச சுவாமிகள், தமது உடன்பிறந்தவர்களுக்கு திருமணம் செய்து வைத்து-அண்ணாமலை ரெட்டியாருடன் புனித பயணம் புறப்பட்டார்.
சிதம்பரத்திற்கு வந்து, அங்கு ஆத்ம சாதனையில் தீவிரமாக இறங்கினார். அங்கு சிவப்பிரகாச விசாகம்,தருக்க பரிபாஷை, சதமணிமாலை, நான்மணி மாலை முதலிய நூலகளை செய்தருளினார். அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு வந்து சிவபெருமானை தரிசனம் செய்து -சில காலம் தங்கியிருந்து விட்டு-பின்னர் காஞ்சிபுரத்திற்கு புறப்பட்டார்கள். வழியில் சாந்தலிங்க சுவாமிகளை கண்டு அளவளாவி மகிழ்ந்து, அவருடன் சிவஞான பாலய சுவாமிகளை தரிசிக்க புதுவை வந்து,அங்கிருந்து பிரம்மபுரம் வந்து சேர்ந்தனர்.
சாந்தலிங்க சுவாமிகள், சிவஞான பாலைய சுவாமிகளின் பேராற்றலை -பெருமைகளை வானளாவ புகழ்ந்து கூறி, அவரைப் பற்றி ஒரு பா பாடுங்களேன் என்றார்.அதற்கு சிவப்பிரகாச சுவாமிகள்- இறைவனைத் துதிக்கும் நாவால் மனிதனை துதியேன் என்று கடுமையாக கூறி விட்டார்.
இருவரும் அருகிலுள்ள புத்துப்பட்டு ஐயனார் கோவிலின் பின்புறம் அன்றிரவு தங்கினர்.சிவப்பிரகாச சுவாமிகளின் கனவில் முருகப் பெருமான் மயில் வாகனத்தோடு காட்சியளித்தார். நிறைய பூக்களை முருகப்பெருமான் சுவாமிகளிடம் கொடுத்து இவற்றை ஆரமாக தொடுத்து எமக்குச் சூட்டுவாய் என்றருளினார்.
காலையில் கண் விழித்ததும் சாந்தலிங்க சுவாமிகளிடம் கனவில் முருகப் பெருமான் வந்ததை தெரிவித்தார். சாந்தலிங்க சுவாமிகள்,சிவஞான பலைய சுவாமிகளுக்கு, முருகப் பெருமான் குரு.அவர் மீது பேரன்பு கொண்டு பெரும் பூஜை செய்து வருகிறார்-தேசிகர். சிவஞான பாலைய சுவாமிகளின் பெருமையை உணர்த்துவதற்காகவே முருகபெருமான் சிவப்பிரகாச சுவாமிகளின் கனவில் வந்து உணர்த்தியுள்ளார்- என்று விளக்கினார். மறுநாள் சிவஞான பாலைய சுவாமிகளை இருவரும் சந்தித்தனர். தாலாட்டு, நெஞ்சு விடு தூது என்ற இரு பிரபந்தங்களைப் பாடி தேசிகர் சன்னிதானத்தில் அரங்கேற்றினார்-சிவப்பிரகாச சுவாமிகள்.
சிவஞான பாலைய சுவாமிகளும், சிவப்பிரகாச சுவாமிகளுக்கு ஞானாபதேசம் செய்தார். இருவரும் குருவின் சீடர்களானார்கள்.சிவஞான பாலைய சுவாமிகளின் சொற்படியே தன் தமக்கையை சாந்தலிங்க சுவாமிகளுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.தேசிகரிடம் விடைபெற்று, காஞ்சிபுரத்திற்கு வந்து கன்னட மொழியில் எழுதப்பட்ட விவேக சிந்தாமணி என்னும் நூலின் ஒரு பகுதியை தமிழில் வேதாந்த சூடாமணி என்று மொழிபெயர்த்தார்.மேலும் சித்தாந்த சிகாமணி, பிரபுலிங்கலீலை என்ற நூல்களை எழுதினார். திருப்பள்ளியெழுச்சி, பிள்ளைத்தமிழ் என்ற இரண்டு நூல்களைதன் ஞானாசிரியர் மேல் பாடினார்.
காஞ்சிபுரத்தை விட்டு புறப்பட்டு கூவம் என்னும் சிவத்தலத்தை அடைந்து திருக்கூவப்புராணம் பாடி அருளினார். அங்கிருந்து புறப்பட்டு பொம்மையாபாளையத்திற்கு வந்து தன் ஞானாசிரியரை தரிசித்து லிங்கதத்துவம், அனுபவம், ஈசனின் உறைவிடம் அவத்தைகள் போன்ற நுணுக்கமான தத்துவ விஷயங்களை தெரிந்துகொண்டார். பின்னர் விருத்தாசலம் புறப்பட்டார்.
சிவஞான பாலைய சுவாமிகள் இறைவனோடு கலந்த செய்தியை ள்விப்பட்டு மறுபடி பிரம்மபுரத்திற்கு வந்தடைந்தார். குருவின்
சந்நிதானத்தில் வீழ்ந்து, அழுது புலம்பினார். தம் குருவின் மீதிருந்த அளவற்ற அன்பினால் பலமுறை வீழ்ந்து வீழ்ந்து வணங்கினார்.
பொம்மையார்பாளைய கடலோரத்தில் அமர்ந்து மணலிலே “நன்னெறி” வெண்பா நாற்பதையும் தன் விரலால் எழுத, அங்குள்ளோர் அதை
எழுதிக் கொண்டனர்.
காலம் வேகமாக சென்றது. பிரம்மபுரத்திலிருந்து புறப்பட்டு புதுவை வந்து சிவதலங்களை வணங்கி விட்டு,நல்லாத்தூர் வந்து சேர்ந்தார்.அது ஒரு சிற்றூர்.எங்கு பார்த்தாலும் நுணா மரங்களும், கள்ளிக் காடுகளுமாக இருந்தது. அவ்வூரில் ஒரு சிவன் கோவிலும் இருந்தது. அக்கோயிலின் அருகே உள்ள நுணா மரத்தின் கீழ் அமர்ந்து தன் தவத்தை மேற்கொண்டார்.
அதிகாலையில் எழுந்து நல்லாற்றிலிருந்து புறப்பட்டு வில்லியனூர் அருகே ஓடும் அற்றில் நீராடுவார்.அங்குள்ள வில்வ இலைகளை
சிவபெருமான் பூஜைக்காக பறித்துக் கொண்டு, நல்லாற்றூருக்கு அதிகாலையிலேயே சென்று விடுவார்.
அங்கு இவ்வாறு இருக்கும் பொழுது, சிவஞான மகிமையும்அபிஷேக மாலையும் நெடுங்கழி நெடிலும், குறுங்கழி நெடிலும்,நிரஞ்சன மாலையும், கைத்தலமாலையும் சீகாளத்திப்புராணத்தில் கண்ணப்பச் சருக்கமும், நக்கீரச்சருக்கமும் எழுதினார்.
பல ஆண்டுகள் ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டிருந்தார்.தவம் முடிந்தது.தவ சித்தி பெற்றார்.சுவாமிகளின் பூஜைகள் பலிக்கத் தொடங்கின.அவருக்கு முப்பத்திரண்டு வயது வந்தது. தாம் சிவமாகும் காலம் வந்ததை உணர்ந்தார். புரட்டாசி மாதம- பௌர்னமி திதியில் பரம்பொருளோடு ஐக்கியமானார்.
எங்கு சுவாமிகள் சித்தி அடைந்தாரோ அங்கேயே சுவாமிகளை சமாதி வைப்பதற்காக அங்குள்ள நுணா மரம் வெட்டப் பட்டது.அந்த நுணா மரத்தின் கீழ் தான் சுவாமிகள் தவம் செய்வது வழக்கம். வெட்டப் பட்ட நுணா மரத்தை அங்குள்ள ஒரு வீட்டில் கொண்டு போய்ட்டார்கள். அக்கணமே அந்நுணா மரம் எரிந்து சாமபலாகியது.ஆனால் வீட்டிலிருந்த வேறு எந்தவொரு பொருளையும் அந்நெருப்பு தீண்டவில்லை.
சுவாமிகளின் காலம் 17-ம் நூற்றாண்டாகும்.சுவாமிகள் வாழ்ந்தது 32 ஆண்டுகள். சுவாமிகளின் நூல்களிலே ஆழ்ந்த சைவ சித்தாந்தக் கருத்துக்கள்,தெளிவான உயிர்நிலைத் தத்துவங்கள், மெய்ப் பொருளைக் காட்டுகின்ற விரிவான தர்க்க பாஷை யாவும் மலை போல் குவிந்துள்ளன. முப்பத்திரண்டு வயதில் முப்பத்திரண்டு தெய்வீகத் தத்துவங்களை செந்தமிழில் தந்தருளியவர் ஓம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

என்றும் இளமையாக வாழ சான்றோர் கூறும் எளிய வழி!

அனைவருக்கும் என்றும் இளமையாகவே இருக்க வேண்டும் என்ற என்ற ஆசை இருக்கும். அதற்கு சான்றோர்கள் மிகவும் எளிய ஒரு வழியை கூறுகின்றனர். ஓரடி நடவேன், ஈரடி கடவேன், இருந்து உண்ணேன், படுத்து உறங்கேன் என்பதே அது, அதற்கான விளக்கம் ஓரடி நடவேன்.. நமது உடம்பின் நிழல் கால் அளவில் ஓர் அடியாக இருக்கும் உச்சிப்பொழுது நேரத்தில் நான் வெளியில் நடக்க மாட்டேன். உச்சி வெயில் ஆகாது. ஈரடி கடவேன் - அதாவது, ஈர அடி கடவேன், ஈரமான இடங்களில் நீண்ட நேரம் நிற்பதோ, நடப்பதோ கூடாது என்பதால் அப்படி நடக்க மாட்டேன். இருந்து உண்ணேன் - ஏற்கெனவே நான் சாப்பிட்ட உணவு வயிற்றில் இருக்கும் போதே மேலும் உண்ண மாட்டேன். நன்கு ஜீரணமான பின்புதான் மறுபடியும் சாப்பிடுவேன். படுத்து உறங்கேன் - தூக்கம் வந்த பிறகுதான் படுக்கைக்கு செல்வேன். படுத்துக் கொண்டு தூக்கம் வரவில்லையே என நினைத்தபடி படுக்கையில் கிடக்கமாட்டேன். இதுவே நீண்டநாள் இளமையோடு வாழும் ரகசியம் என குறிபிடுகின்றனர் சான்றோர்.

சனி, 1 செப்டம்பர், 2012

கடையிற் சுவாமிகள்

 
கடையிற் சுவாமிகள் இலங்கையின் ஒரு சித்தராகக்  கருதப்படுவதுடன், இலங்கையின் சித்தர் பரம்பரையின் ஆரம்பமாகவும் அறியப்படுகிறார். இவர் ஆதிகடைநாதன் என்ற பெயராலும் அறியப்படுகிறார்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த சித்தர்களில் இவர் முதலாமவராக குறிப்பிடப்படுகிறார்.
இவர் தென்னிந்தியாவின் பெங்களூரில் ஒரு நீதிபதியாக கடமை புரிந்து வந்தார்.   கொலை வழக்கு ஒன்றில்  குற்றவாளி கொலையாளிதான் என்று தீர்ப்பாகியது. யூரிகளும் குற்றவாளியைக் கொலையாளியே என்று தீர்ப்பளித்துவிட்டனர். நீதிபதியாக இருந்த இவருள்ளே தூக்குத் தண்டனை கொடுப்பதற்கு நான் யார் என்ற தத்துவ விசாரணை எழுந்தது. இந்த மனக் குழப்பங்கள் காரணமாக நீதிபதித் தொழிலைக் கைவிட்டு குரு ஒருவரிடம் சென்று ஆன்மீக வாழ்க்கையை ஆரம்பித்தார்.
இவருடைய தீட்சைப் பெயர் முத்தியானந்தா என்பதாகும்.
இலங்கைக்கு வருதல்
வைரமுத்துச் செட்டியார் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவரே முத்தியானந்தாவாக இருந்த கடையிற்சுவாமிகளை இலங்கைக்கு வருமாறு 1860ம் ஆண்டளவில் அழைத்ததுடன் அவர் இலங்கை வரவும் காரணமாக இருந்தார்.  கப்பல்  ஒன்றின் மூலம் இலங்கையை வந்தடைந்த இவர் முதன்முதல் வந்திறங்கிய இடம் ஊர்காவற்றுறை. அங்கிருந்து கால்நடையாக யாழ்ப்பாணம் நோக்கி வந்து மண்டை தீவில் குடியிருந்தார்.
யாழ்ப்பாணம் வந்த இச்சித்தர் தங்கியிருந்த இடம் பெரிய கடை ஆகும். இதன் காரணமாகவே கடையிற் சுவாமிகள் என்ற பெயர் இவருக்கு உருவானது.

முக்கிய வாழ்க்கைக் குறிப்புக்கள்
  • இவருக்கென்றொரு அடியார் கூட்டம் இருந்தது. அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் ஆசிகளையும் இவர் வழங்கிவந்தார்.
  • ஜாதி பேதம் பாராட்டாமல் இவர் செய்த நடவடிக்கைகள் சில இவருக்கெதிரான சிலரையும் உருவாக்கியது.
  • இவரது அன்பர்கள் மாமிச, மது விருந்தளித்தாலும் அவற்றையும் இவர் உட்கொண்டிருக்கிறார்.
  • இவருடைய நடவடிக்கைகள் மன நோயாளரின் நடவடிக்கைகளை ஒத்திருந்தமையால் காவல் துறையினர் இவரைப்பிடித்து கொழும்பு மனநல மருத்துவமனக்கு அனுப்புமுகமாக சிறையில்  அடைத்து வைத்திருந்தனர். (மறுநாள் திறந்து பார்த்தபோது இவர் சிறையில் இருக்கவில்லை என்றொரு கதை இருக்கிறது)
  • இறுதிக் காலத்தில் இவர் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த நீராவியடியில் வெளியில் எங்கும் செல்லாது வாழ்ந்து வந்தார்.


 

புதன், 1 ஆகஸ்ட், 2012

அகத்தியர் எழுதிய நூல்கள்


 
அகத்தியர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:
  1. அகத்தியர் வெண்பா
  2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
  3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
  4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
  5. அகத்தியர் வைத்தியம் 1500
  6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
  7. அகத்தியர் கர்ப்பசூத்திரம்
  8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
  9. அகத்தியர் வைத்தியம் 4600
  10. அகத்தியர் செந்தூரம் 300
  11. அகத்தியர் மணி 4000
  12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
  13. அகத்தியர் பஸ்மம் 200
  14. அகத்தியர் நாடி சாஸ்திரம்
  15. அகத்தியர் பக்ஷணி
  16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
  17. சிவசாலம்
  18. சக்தி சாலம்
  19. சண்முக சாலம்
  20. ஆறெழுத்தந்தாதி
  21. காம வியாபகம்
  22. விதி நூண் மூவகை காண்டம்
  23. அகத்தியர் பூசாவிதி
  24. அகத்தியர் சூத்திரம் 30
போன்ற நூல்களை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும்
  1. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
  2. அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வியாழன், 19 ஜூலை, 2012

ஸ்ரீ கணபதி சுவாமிகள் (தென் காசி)

      தென் காசியில் சமாதி கொண்டு இன்றும் அருள் பலித்து வரும் கணபதி சுவாமிகள் அந்த இடத்தில அடங்கி 120 ஆண்டுகள் ஆகின்றனவாம் திருசெந்தூர் கோவிலை கட்டிய மூவர் சமாதிகள் கோவிலுக்கு தெற்கே கடற்கரையில் உள்ளன. அம்மூவருள் ஒருவராகிய மௌன குரு சுவாமிகளே ஸ்ரீ கணபதி சுவாமிகளின் குரு. சுவாமிகள் பரிபூரணமடைந்த விபரம் தெரிய வில்லை. நாள் நட்சத்திரம் தெரியா விடின் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் பூஜை செய்தல் போதும் எனும் நியதிப்படி ஸ்ரீ கணபதி சுவாமிகளுக்கு மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் குரு பூஜை நடத்தபடுகிறது .


இவரது சமாதி கோயில் அமைந்துள்ள இடம் :
தென் காசியில் ப.எண் 104எ /2, பு.எண் 150 வாய்க்கால் பாலம் என்னும் முகவரியில் ஸ்ரீ முருகன் சிமெண்ட் டைல் வொர்க்ஸ் வளாகத்துள் சுவாமிகளின் சமாதிக்கோவில் உள்ளது கருவறையுள் இரண்டடுக்குகள் உள்ள பெரியதும் அதன் மேல் சிறியதுமான கருங்கல் மேடையே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது கிழக்கு நோக்கிய சன்னதி.

வெள்ளி, 13 ஜூலை, 2012

குருவும் பிரிவும்


தானே புலனைந்தும் தன் வசமாகும்
தானே புலனைந்தும் தன் வசம் போகும்
தானே புலனைந்தும் தன்னில் மடைமாறும்
தானே தனித்தெம்பிரான் தனை சிந்தித்தே!

இது திருமூலரின் வார்த்தைகள்....

குருவின் மேல் கொண்டுள்ள எண்ணமானது,இயல்பூக்க நியதியின் அடிப்படையிலே, நினைப்போருக்கு காலங்களின் அளவுகோல்களை கடந்து உதவுகிறது குருவின் ஆற்றல்....

குரு என்பவரின் உதவியானது நாம் புலனைக் கொண்டு கணிக்கும் எதையும் தாண்டி இருந்து அமைகின்றது. இதனால் குறிப்பிட்டு சொல்லமுடியாத அளவிலே அவரின் உதவி எல்லை அற்றிருக்கிறது...
குருவின் கவிதை என்பது வெறும் தமிழின் செழுமைக்காக நமக்கு தரப்பட்டதல்ல.... நாம் கைகளை தட்டி கரகோசம் எழுப்பி ஆரவாரம் செய்து விட்டு போக குருவின் கவிதை ஒன்றும் பொழுது போக்கானது அல்ல... ஒவ்வோர் எழுத்தும் அணுவிலே நம்மை ஒன்ற வைக்கும் தொண்டு...

அவரின் கவிகளை நாம் சொல்வது நம்முடைய அறிவை உயர்த்தத்தான்.... எட்ட வில்லை அறிவிற்கு என்றால் உள்ள இயற்கைத் தத்துவம் எங்கே ஒளிந்து கொள்ளும்? என்று நமது குரு கேட்பார்....
சோதிப்போர் புலனிறிவில் என்னைக்காணார்...
சுய நிலையை அகத்துணர அவர் நான் ஒன்றே...
குருவானவர் நம்மோடு பேசிக் கொண்டிருந்த போதும் கூட அவர் கண்டங்களைத் தாண்டி தன்னை அண்டும் சீடனுக்குத் தேவையானதைத் தந்துகொண்டே தான் இருந்தார். இப்போதும் கூட அவரை நினைக்கும் போதே அவரின் திருப்பியக்க ஆற்றல் சரியாக இருக்கிறது... அவர் சமாதி அனுபவம் பெற்றது 60வருடத்திற்க்கு முன்னால்.... அவர் தன்னுடைய உடலை விட்டு பிரிந்து நின்றது அப்போது தான்...
குருவின் உடலை விட்டு நிரந்தரமாக சமாதி ஆனது தான் சமீபத்தில் நடந்தது... ஆனால் குரு நம்மை விட்டு பிரிந்து விட்ட நாள் என்று ஏதாவது உண்டா? எப்படி அது நிகழும்? ஏது அந்த நிலை? சிந்தித்து பாருங்கள்...
நாம் குருவின் சமாதி நாளை பிரிந்து விட்ட நாள் என்று சொல்கிறோம்... இன்னும் என்னென்னமோ அறிவிற்க்கு சிறிதும் சம்மந்தமற்ற செயல்களை செய்கிறோம்... ஆனால் குரு நம் அறிவோடு நிரந்தரமாக இணைந்து விட்ட நாள் என்று ஆனந்தப்பட வேண்டிய நாள் அது... தவத்திலே அறிவை அறிவிலே செலுத்தி அவரின் அகலாத நிலையை உணரவேண்டிய நாள் தான் அந்த சமாதி ஆன மார்ச் மாதம் 29ம் தேதி 2006...
என்னமோ துக்கப்படுவது போலவும், துக்க நாளை போஸ்டர் அடித்து மகிழ்வதுமான அந்த செயல்கள் நம்மை அவரை நோக்கி கொண்டு செல்லாது...
அதற்குத்தான் குரு எழுதினார்...
சோதிப்போர் புலனறிவால் என்னைக் காணார்...என்று.
புலனைக்கொண்டு குருவை பார்க்காதே மானிடனே என்று குருவே அறிவித்தது இருக்கிறார்....
குரு சொல்லாத கருத்தே இல்லை... இறப்பிற்குப் பின்னர் உயிரின் நிலை என்ற பகுதியிலே,
துரியாதீத தவத்தை செய்து பழகியோர் உயிர் பிரியும் போது, பழக்க நிலையான அந்த இறை வெளியோடு தானாகவே சென்று கலந்து விடும் என்று தெளிவாக எழுதி இருக்கிறார்....
இதிலே மாற்றுக்கருத்து உண்டோ? இருந்தால், விளக்கும் வகையில் அறிவு இருந்தால் நமது அன்பர்களுக்காக எழுதுங்கள்.... சொல்லுங்கள்...
நிறைய விசயங்களைச் சொல்லலாம்.... ஆனால் குரு நம்மை விட்டு பிரிந்த நாள் என்றும், இறந்து விட்ட நாள் என்று சொல்லிக்
கொண்டு அலைவோர்கள் இனிமேலாவது மனவளக்கலை புத்தகத்தை கொஞ்சம் கொஞ்சம் படிக்க ஆரம்பித்து தவப் பயிற்சியை தொடங்க                 வேண்டியது அவசியம்...
குரு நம்மை விட்டு பிரிந்து இருக்கிறாரா? அல்லது நாம் குருவை விட்டு பிரிந்து இருப்பதாகக் கற்பனை செய்துகொள்கிறோமா?
குரு இறை வெளியிலே இருக்கிறார் என்றிருக்கும் போது, நம்மை விட்டு குரு பிரிந்து விட்டார் என்று சொல்கிறோமே, அது எப்படி பொருந்தும்?நாம் குருவை/இறைவெளி விட்டு பிரிந்து இருப்பதாகக் கற்பனை செய்துகொள்கிறோமா?
தவத்திலே குரு இறைவெளியை விட்டும், நாம் வெளியை விட்டும் விலகியதாக ஏதாவது உணர்ந்தாரா?
நாம் எங்கே? குரு எங்கே? இறை நிலை எங்கே? அத்வைதம் குருவின் தத்துவம் என்று சொல்கிறோமே... அது எப்படி? அத்வைத முறைப்படி குரு, நாம், இறைனிலை என்று எப்படி பிரிவு இருக்க முடியும் என்று விளக்கிச் சொல்ல முன் வந்தால் நன்றாக இருக்கும்....
குரு நம்மை விட்டு போய் விட்டார் என்று இனிமேல் எவர் சொல்ல நினைப்பதற்க்கு முன்பாக, குரு எங்கே இருக்கிறார் என்று எல்லோருக்கும் சொல்லிவிட்டுத்தான் மற்றவற்றை பார்க்கவேண்டும்... அது வரை குருவைப் பற்றித்தெரியாத, முட்டாள்தனமான எதையும் வெளியில் சொல்லக்கூடாது.... சொல்லி, விளக்கும் அறிவு வரும் வரை அந்த தெரியாத விசயத்திலே அடக்கி வாசிப்பது தான் சிறந்தது...
உடலைப் பிடித்துக்கொண்டு அறிவை ஒதுக்காதீர்கள்.... நமது முட்டாள் தனத்திற்குத் துணையாக குரு இருக்கமாட்டார்...
அறிவைப்பிடித்துக்கொண்டு குருவை பாருங்கள்....
நமது உயர்வு என்பது குருவின் மேல் உள்ள அன்பின் ஆழத்தைப்பொறுத்து இருக்கிறது.... நமது பதவியும் கௌரவமும், செல்வமும் நமக்கு ஒரு போதும் குருவை உணர்த்தாது....

வெள்ளி, 8 ஜூன், 2012

ஓம் நமசிவாய - யாரெல்லாம் கூறலாம்?


நல்ல மனமும் நல்ல குணமும் உள்ள யாரும் நம சிவாய மந்திரத்தை கூறலாம். இதற்கு எந்த வித கட்டுப்பாடும் கிடையாது.

தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு ஒரு 5 நிமிடம் அவன் முன் அமர்ந்து தூய நினைவோடு தூய அன்போடு அவன் முன் அவன் நாமத்தை சொன்னால் அவன் மனமும் உருகும் அவன் அருளும் கிடைக்கும்.

ஓம் நமசிவாய
சிவ நமசிவாய
சிவாய நம சிவ
சிவ சிவ நம சிவ
சிவாய நம சிவாய
.

அதன் பிறகு நீங்கள் இயல்பாக உங்கள் பணிகளை தொடரலாம்.

அனைத்தும் ஜயமே அனைத்தும் இன்பமே

சிவாய நம என சொல்வோர்க்கு அபாயம் ஒருபோதுமில்லை.

ஓம் நம சிவாய





திருச்சிற்றம்பலம்

இது முழுக்க முழுக்க என்னுடைய கருத்து.

செவ்வாய், 5 ஜூன், 2012

அருள்மிகு பாம்பாட்டி சித்தர் குகை கோயில்.

 

கோவையை அடுத்துள்ள புகழ் பெற்ற மருதமலையில் அமைந்துள்ளது பாம்பாட்டி சித்தர் வாழ்ந்த குகை கோயில்.
தனது வாழ்வியல் காலத்தில் மருத்துவ மூலிகைகள் நிறைந்த மருதமலையில் குடிகொண்டு வெகு காலம் வழிபாடு செய்து வந்தார் .சுமார் 200 வருடங்களுக்கு முன் வாழ்ந்ததாக கருதப்படும் பாம்பாட்டி சித்தர் இன்று நாம் வழிபாடும் குகை கோயிலில் உள்ள சுரங்கம் மூலமாக சென்று ஆதிமுலஸ்தானம் சென்று மருதமலை முருகனை பெருமானை வழிபாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

சுயம்புவாக ஸர்ப்ப வடிவத்தில் அமைந்துள்ள கற்சிலையும்
நந்திகேஸ்வரருடன் கூடிய சிவலிங்க பார்வதி சமேத பாம்பாட்டி சித்தர் எழுந்தரிளியுள்ள தெய்வீக சந்நிதியில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்ய சித்தர்பெருமானின் பரிபூர்ண ஆசீர்வாதம் கிடைப்பதை உணரலாம் .
அமாவாசை பௌர்ணமி ஆகிய நாட்கள் இவருக்கு உகந்த
நாட்கள் ஆகும்.நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து
வழிபட்டு வர தோஷம் நீங்கும்

திங்கள், 4 ஜூன், 2012

தவழ்ந்து சென்று தரிசனம் காணலாம்





காலாங்கிநாதர் சீனாவில் சமாதி கொண்டதாக பலர் கூறினாலும், அந்தப் புதிரை போகர்தான் தெளிவாக ஒரு பாடலில் விடுவிக்கிறார். தமிழ்நாட்டில்தான் அவர் சமாதி கொண்டதாக கூறுகிறார்.
“ஆதியென்ற சிதம்பரமே திருமூலராச்சு
அவருடன் பதினெண் பேரதிலே யாச்சு
சோதியன்ற காலாங்கி நாதர் தாமும்
துலங்குகின்ற காஞ்சிபுரந் தனிலே யாகும்”
காஞ்சிபுரத்தில் எங்கு எனும் குறிப்பு காணப்படவில்லை. ஆனால், நிச்சயம் நாமெல்லாரும் அவரின் சமாதியை வணங்கிக் கொண்டிருப்போம் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், பொதுவாகவே இந்தியாவிலுள்ள கோயில்களை பல வகைகளாக பிரிக்கலாம். ரிஷிகளால் பூஜிக்கப்பட்ட லிங்கமாக இருந்து ஆலயமாக உருவெடுத்திருக்கலாம். தேவர்களால் வணங்கப்பட்டு அதுவும் ஆலயமாக மாறியிருக்கலாம். அதற்கும் அப்பால் சித்தர்களின் ஜீவ சமாதிகளும் காலகிரமத்தில் பெரிய ஆலயங்களாக விளங்குகின்றன என்பது எல்லோரும் அறிந்த உண்மை. மேலே கண்ட பாடல்படி பார்த்தால் காஞ்சிபுரத்திலுள்ள பிரசித்தி பெற்ற கோயில் ஏதாவது ஒன்று காலாங்கிநாதரின் சமாதியாக இருக்கலாம். எப்போதுமே ஞானியரின் ஜீவ சமாதிகளுக்கு தனித்துவமான ஆகர்ஷண சக்தி இருக்கும். காலாங்கிநாதர் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருந்ததாக போகர் தன்னுடைய பாடலில் தெரிவிக்கிறார்.
“புகலுவேன் காலாங்கி நாதருக்கு
சரியுடனே மூவாயிரம் சொச்சமப்பா
சாங்கமுடன் வயதுதான் என்னலாகும்”
என்று உறுதிபடக் கூறுகிறார்.
சதுரகிரி எனும் பெயர் காரணத்தை ஓரிடத்தில் அழகாக தெரிவிக்கிறார். ‘‘தானான வேதங்கள் நான்கு
மொன்றாய்ச் சார்ந்திங்கோ ருருவாகச் சமைந்ததாலே” என்கிறார். நான்கு வேதங்களும் இங்கு நான்கு மலையாக உருவெடுத்ததால் இதற்கு சதுரகிரி என்று பெயரோ என வியக்கிறார். மேலும், இங்கு வசிப்போரை
எல்லோரும் சித்தர்கள் என்று ஏன் கூறுகிறார்கள் தெரியுமா?
‘‘தேனான மகாலிங்க ரடியைப்போற்றி
செய்து சதா சேவித்து யோகநிஷ்டை
ஊனான வுடலெத்தோர் புரிவதாலே
உயர்முனிவர் சித்தரெனப் பேருற்றாரே”
எப்போதும் மகாலிங்கத்தையே வணங்கி, திவ்ய பாதங்களையே போற்றி, அங்கேயே யோகநிஷ்டையில் அமர்ந்தார்கள். இவ்வாறு பிறவியாகிய உடலெடுத்தோர்கள் பக்தி செய்ததாலேயே உயர் முனிவர் சித்தர் என உயர்நிலையில் நின்றார்கள். இங்கு மகாலிங்கத்திடம் சரணாகதி உற்ற அந்தக் கணமே ஜீவன் சித்தனாகும் என்கிறார்.
சதுரகிரியில் கோரக்கரும், போகரும் காட்டிய ஒவ்வொரு சித்தரின் குகைக்கான வழியைப்போல காலாங்கிநாதரும் ஒவ்வொருவருடைய இருப்பிடத்தையும் தெரிவிக்கிறார். ‘‘குன்றந்த சாய்வோரம் செல்லும்பாதை கூடினால் நவசித்தர் குகையொன்றுண்டு”. தாணிப்பாறையிலிருந்து மேலே கொஞ்சம் சென்றால் சிறுமலைகளை காணலாம் என்றும் அதன் ஓரமாக பார்த்தால் ஒன்பது சித்தர்களையும் ஒரே குகையில் சந்திக்கலாம் என்று ஓரிடத்தை கூறுகிறார். இன்னும் கொஞ்சம் கடந்தால், ‘‘உயர்ந்திருக்கும் மலையருகில் குகையைப்பாரே பாரப்பா அக்குகையினுள்ளே பாம்பாட்டிச் சித்தருமங் கிருப்பார்கண்டு” என்று பாம்பாட்டி சித்தரை தரிசிக்கும் வழியை தெரிவிக்
கிறார்.
இதற்குமுன்பே வணிகன் ஒருவனுக்கு கோயில் கட்டுவதற்காக உலோகத்தை தங்கமாக்கும் தைலத்தை செய்தார் என்று பார்த்தோம். அதை பிலாவடிக் கருப்பருக்கு அருகே கிணற்றினுள் வைத்து மூடி வைத்தார் என்பதையும் பார்த்தோம். இதை அவரே தன்னுடைய பாடலில்,
‘‘நோக்கியே தேவியையும் கருப்பனையும்
நொடிக்குள்ளே தருவித்துக் காவல்வைத்துப்
பாக்கியே யிருந்ததிந்தத் தயிலந்தன்னைப்
பாதுக்காத்து இருங்களெனப் பகர்ந்திட்டேன்” என்று உறுதிபட தெரிவிக்கிறார். அதை யாருக்கு கொடுக்க வேண்டுமென்றும் கூறுகிறார். ‘‘சிகரமறி சித்தர்முனி முத்தர் வந்தால் திறந்தெடுத்துக் கொடுங்களென்று செப்பி வந்தோம்” என்கிறார். அதாவது சித்தர்களான முனிவர்கள் வந்தால் நீங்களே திறந்து எடுத்துக் கொடுங்கள் என்று கருப்பனுக்கு ஆணையிட்டிருக்கிறார். அப்போது யாருக்கு கிடைக்காது என்பதை, ‘‘அகரம்மாமறி யாமூடர்க்கும் அரும்பாவி கருமிகட்கு மிதுகிட்டாது” என்று வெளிப்படையாகவே கூறுகிறார்.
எல்லா சித்தர்களுக்குமே காலாங்கிநாதர் மீது மிக்க மரியாதை உண்டு. அதிலும் சதுர
கிரியில் காலாங்கிநாதரை தரிசிப்பதை தங்கள் பாக்கியமாக அவர்கள் கருதினர். அப்படிப்பட்ட காலாங்கிநாதர் குகை எனப்படும் தவசிப்
பாறையைப் பார்க்கலாம்.
தவசிப்பாறை என்னவோ சிறு குகைதான். ஆனால், அதன் மீது பெரிய பாறைகள் அடுக்கி வைத்தது போன்ற அமைப்பை உடையது. மிக மிக குறுகிய வாயில். படுத்துக் கொண்டே கைகளால் தேய்த்துத் தேய்த்து பத்தடி தூரம் நகரவேண்டும். பிறகு தவழ்ந்து செல்லும் அளவுக்கு இடமிருக்கும். அப்படியே இடமும் வலமுமாக சுமார் முப்பதடி தூரம் வரை படுத்துக் கொண்டும், தவழ்ந்தும் சென்றால் குகையில் இறுதியில் சிறு சிவலிங்கத்தை தரிசிக்கலாம். இந்த லிங்கம் யாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று தெரியவில்லை. எப்போதேனும், யாரேனும் வந்தால் அதற்கு பூஜை செய்கிறார்கள். அவ்வளவுதான். சற்று பருமனானவர்கள் உள்ளே சென்று வருவது சிரமமான காரியம். உள்ளே இருக்கும் கனத்த அமைதி நம்மை தியான நிலைக்கு செலுத்துகிறது. குகைக்குள் சென்று வரும்போது உள்ளத்தை யாரோ துடைத்து விட்டது போன்று இருக்கிறது. எவ்வளவு சித்தர்கள் உள்ளே கூடி தவத்தில் ஆழ்ந்திருப்பார்கள் என்கிற பிரமிப்பே நிம்மதி தருகிறது.
தவசிப்பாறைக்குள் ஆர்வமுள்ளவர்கள் தரிசித்தாலே போதும். ‘‘இவ்ளோ தூரம் சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு வந்துட்டு இதைப் பார்க்காம எப்படி போறது” என்றெல்லாம் சிலர் கட்டாயப்படுத்துவார்கள். மேலும், வயதானவர்களும், பெண்களும் குழந்தைகளோடு ஏறத் துணிவதும் அவ்வளவு நல்லதல்ல.
குகைக்கு வெளியேயிருந்து பார்த்தால் சுந்தரமகாலிங்கத்தின் தோற்றம் அற்புதமாக இருக்கும். எப்போதும் தென்றல் வீசியபடி இருக்கும். இந்த இடத்திலிருந்து பார்க்க மூன்று மலையும் சமமாக இருப்பது புரியும். இயற்கையின் அழகும், அதன் முரண்பாடும் என்னவிதமான பூமி இது என்கிற திகைப்பும், நான் எனும் அகந்தையை அடித்து வீழ்த்தும். இதனால்தான் சித்தர்கள் இதுபோன்ற இடங்களுக்கு நம்மையும் அழைக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றும். தவசிப்பாறையிலிருந்து மலையில் உச்சியாகவே பயணித்து கொஞ்சம் கீழிறங்கினால் பெரிய மகாலிங்கத்தை தரிசிக்கலாம். ஒருகணம் அதை காணும்போது நம் மேனி சிலிர்த்துப் போடுகிறது. அப்படி என்னதான் அங்கு இருக்கிறது?

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

குருவின் ஆசீர்வாதம்.......

எல்லாம் வல்ல இறை அருளின் கருணையால் அனைவரும் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞ்ஞானம் பெற்று வாழ வாழ்க வளமுடன்.
முன்பெல்லாம் பிறரை வாழ்த்தக்கூட சமஸ்கிருதத்தை பயன்படுத்தினர். நாளடைவில் அந்த மொழியின் செறிவு மனிதரிடம் குறைந்து போக, இப்போதெல்லாம் வாழ்த்துவதற்க்கு சமஸ்கிருத மொழியை பயன்படுத்தினாலும், அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வோர் கணக்கிலே குறைவே.
பிறரை வாழ்த்துவதென்பது, தன்னை இணைத்து மனதார வாழ்த்துவதில் தான் முழுமை பெறுகிறது. தன்னை இணைக்காமல் மேலோட்டமாக எது கூறினாலும், அதன் பயன் குறைவே.
தன்னை இணைப்பது என்றால்
இறை நிலையோடு எண்ணைத்தை கலக்கி விட்டு
ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க்க
நிறை நிலையே தானாக உணர்வதாகும்.
என்று உரைப்பார் நம் குருனாதர்.
அந்த மாதிரி எண்ணத்தை இறை நிலையோடு கலக்க விட்டு விழிப்பாக தன் இருப்பு எங்கே என்று நோக்கின்... அந்த நிறை நிலையாகிய இறை நிலையே தான் என்று உணர முடிகின்றது...
நிறை நிலையே தான் நான் என்றால், என்ன பேச முடியும்?
பாரதி சொல்வாரே...
தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!...
அது போல, தன் இருப்பே இறை நிலை என்றாகும் போது, பிறரை வாழ்த்துவதிலே கூட நம் தனிப்பட்ட முனைப்பு எழ வேண்டிய தேவையே இல்லாது போகின்றது..
முனைப்பு என்பது... மௌனத்திலே இருந்து அசையும் கணத்திலே இருக்கின்றது. மௌனத்திலே அளவு கடந்து இருக்கின்ற இருப்பு ஆனது, சுருங்கிப்போய் முனைப்பாக ஆகின்றது.
அதனால் தான் விரிந்து நின்று வாழ்த்தினார் நம் குரு...
அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள் , நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்க வளமுடன்...
முனைப்பின்றி தன்னை இறையோடு இணைப்பதன் மூலம் தான் இப்படி ஒருவரால் வாழ்த்த முடிகின்றது...

இதற்க்கு மேல் வாழ்த்து உயர்ந்து இருக்க முடியாது.
இந்த வார்த்தை மிக சுருக்கமாக, புரிகின்ற மாதிரி எளிமையாக இருக்கிறதால் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
எல்லாம் வல்ல இறை நிலையே தான் எங்கு எப்போதும் நிறைந்து எப்போதும் இடைவிடாது இருக்கின்றது என்கிற போது, வாழ்த்துவதற்க்கு தனியாக முனைப்பு தேவை இன்றிப்போகிறது.

எது எப்போதும் இருக்குமோ, அதுவே தான் அறிவு. அதுவே சத்தியம் என்கிறது அத்வைத சித்தாந்தம்.
இது தான் நடக்க வேண்டும் என்றால், இறை என்ற ஒன்றின் வலிமையை நாம் மறந்து விடுகின்றோம்...மறுத்து விடுகின்ற மாதிரி ஆகிறது. முனைப்பு மேலோங்கும் போது, இருப்பு காணாமல் போகின்றது. இறை நிலையே வலிமையானது என்ற சொல் மறுக்கப்படுகிற மாதிரி ஆகின்றது.
இது தான் நடக்க வேண்டும் என்ற முனைப்பை விட, இறை நிலையாகிய மௌனமே சிறப்பு என்று மௌனத்தில் ஆழ்ந்தனர் மகான்கள்!
அந்த மௌனத்திலே நிற்கின்ற போது, அதன் அர்த்தத்தை புரிய வைக்க பேசினது தான்... அருட்காப்பு.
எனக்கு இது வேண்டும்... அது வேண்டும் என்கிற குறுகிய நோக்கத்தை விட, இறை என்ன செய்ய வேண்டுமோ அதன் வலிமையே மிஞ்சட்டும்! சத்தியமே ஜெயிக்கட்டும் என்று ஆழ்ந்து போவது தான் மௌனமும்... இந்த அருட்காப்பும்.
அருட்காப்பு சொல்லும் போது, இறை நிலை தவத்திலே இருந்து அசைகிற போது உணரும் அழுத்தத்தோடு ஆழ்ந்து அமைதியோடு சொல்ல வேண்டும்... அந்த வாழ்த்து நிஜமாக நிகழ்ந்து விடும்... உதாரணத்திற்க்கு, நம் குருவானவர் எப்போதும் பேசினாலும், சாதாரணமாக பேசும் வார்த்தையை விட, இந்த வாழ்த்துக்களை மிக அமைதியாக/ வித்தியாசமாகச் சொல்வார்... அவரின் இயல்பான பேச்சிற்க்கும் அவர் வாழ்த்துவதற்க்கும் அழுத்தம் மாறுபட்டிருப்பதை ,அவர் பேசும் போது கவனித்துப்பார்த்தால் புரியும்.
நம்மை சுற்றி எது நிகழ்ந்தாலும், காலத்தால் இயற்கையை மீறி எதுவும் நிகழ்ந்து விடாது. இறை நிலையை மீறிய வலிமை எதுவும் இல்லை என்பது அதன் அழுத்தத்தை உணர்ந்தால் தான் நமக்கு இயல்பான நம்பிக்கையாக அமையும். அது வரை அமைதியும், ஆனந்தமும் முழுமையாகாது.
மௌனத்திலே கரைந்து கருணையை இயல்பாக்கி, அருட்காப்பு கொண்டு இந்த பிரபஞ்சத்திலே வாழும் அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வாழ்த்திக்கொண்டே இருப்போம்...
எந்த நிலையிலும் கூட, இறை நிலை இல்லாது போனது இல்லை. எல்லாவற்றையும் ஈர்த்துக்கோள்ளும் அந்த அழுத்தமானது, இயற்கையாக தன் ஆற்றலினால், நெறியை மெலோங்க வைக்கும்...
எல்லாம் புரிந்தவனும், ஏதும் அறியாதோரும் தான் எதுவும் பேசாமல் இருக்கிறார்கள்... மற்றவர்கள் எல்லாம் மௌனத்தை விட்டு விலகி நின்று வருந்துகின்றார்கள்!
அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லாத்தொழில்களிலும் உறு துணையாகவும் பாதுகாப்பாகவும் வழி நடத்துவதுமாகவும் அமையுமாக!