திங்கள், 5 ஆகஸ்ட், 2013

ஸ்ரீ பிரம்மநாயகம் சுவாமிகள்

 “திருச்சிற்றம்பலம்”“அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே!”

அன்புருவாய் அருள்வடிவாய் அனைவருக்கும் ஆனந்தத்தை அருளிக்கொண்டிருக்கும் தன்னை உணர்ந்த ஞானி ஸ்ரீ பிரம்மநாயகம் சுவாமிகள் பற்றிய தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறோம்.


தனது ஐந்து வயது பருவத்தில் யோக நெறியில் புகுந்த சுவாமிகள் சுரன்டை எனும் ஊரில் கோயில் அமைத்து அங்கேயே தான் பலகாலம் யோகம் புரிய ஓர் பாதாள குகை அமைத்து அதனுள் பலவருடம் உணவின்றி உறக்கம் இன்றி அவன் உணர்வே என்று ஒரே நோக்கத்துடன் நிஷ்டை புரிந்துள்ளார்.

தான் பெற்ற அருமருந்தை, பிறவிப் பிணி நீக்கும் பெருமருந்தை அனைவரும் பெற்று இன்புற, மெய்ஞான நாட்டம் உள்ளவர்க்கு அவ்வழியை உபதேசித்து வருகின்றார்.பற்பல சித்திகள் கைவர பெற்றும் அவற்றை பொருட்கொள்ளாது பிரம்மத்தையே தன் நாயகனாக கொண்டு பிரம்மாநாயகமாக திகழ்கின்றார்.
சாரியை !, கிரியை !, யோகம்!, ஞானம்! என்று அனைத்திலும் விளக்கம் தரும் சுவாமிகள் தனக்கே உரிய கணீர் குரலில் பாடும் சிவவாக்கியர் பாடல்:ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மண்டு போன மானிடர்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறைந்த கோடியே
அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்ச பூத பாவிகள்
அஞ்செழுத்தில் ஓர் எழுத்தை கூட அறிந்து கூற வல்லீரே
 ?
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே!
இப்பாடலுக்கு விளக்க்கம் தருவதுடன் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து நேரத்தை வீண் செய்யாமல் தன்னுள் இருக்கும் ஜோதியை காணவேண்டும் என்று உணர்த்தி:
உருத்தெரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருதினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரே !
விருததரும் பாலர் ஆவர் மேனியும் சிவந்திடும்
அருட் தரித்த நாகர் பாதம் அம்மை பாதம் உண்மையே !
 
Tree behind Vinayagar temple
என்ற பாடலுக்கு தான் ஓர் உதாரணமாய் ஒளிர்ந்து பொன்போன்ற மேனியுடன் அன்பு உள்ளத்துடனும் நம்மை அறியாமல் நம்முள் தேடலை விதைக்கும் அவர்தம் பேச்சு ஓர் அறிய பொக்கிஷம் ஆகும்.
 
 
His Holiness Surandai Sri Brahmnanayagam Swamigal