சராசரி மனிதன் கற்பனை செய்து கூட பார்க்கமுடியாத அரிய பெரிய விஷயங்களை எல்லாம் விஞ்ஞானம் நம் கண்முன்னே விரித்து வைக்கிறது. அற்புதமான வளர்ச்சி. கடவுள் துகளைக் கூட கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால் கடவுளை ? அதைக் கண்டுபிடிக்க விஞ்ஞானத்தால் முடியாது. வானவெளி எங்கும் தேடி அலைந்தாலும், பிரபஞ்சத்தின் எல்லைக்கே கூட போனாலும் அதை விஞ்ஞானக்கண் கொண்டு காணமுடியாது. ஆதியும் அந்தமுமில்லாத அந்த சக்தியை கண்டறிய விஞ்ஞான உபகரணங்களால் முடியாது. விஷணுவாலும், பிரம்மாவாலும் கண்டுபிடிக் முடியாத அடிமுடியில்லாத அந்தப் பரம் பொருளை விஞ்ஞானம் நெருங்கவே முடியாது. இது கதையாகக கூட இருக்கலாம். ஆனால் அதில் ஒளிந்திருக்கும் சூட்சுமக் கருத்து இதுதான், அதாவது இந்த பிரபஞ்சமெங்கும் நிரம்பி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிற ஒரு மகாசக்தியை குறிப்பிட்ட ஒரு இடத்துக்குள் தேடுவது என்ன? எங்கும் பரவியுள்ள சக்திக்கு ஆரம்பம் என்ன ? முடிவு என்ன ? அப்படி என்றால் கடவுளைக் காணவே முடியாதா ? கடவுளின் சாட்சியாக நீயே இருக்கும் போது வெளியேபோய் தேடுவதென்ன ? இதுதான ஞான விசாரம். இதுதான் ஆன்ம தரிசனத்திற்கு இட்டுச் செல்லும் இராஜபாட்டை. அந்த மகா சகதியின் பிரிதியாக இருந்தும் அதை ஏன் அடைய முடியவில்லை. மனம் தான் காரணம். மனமும் மனம் சாரந்த உணர்வுகளுமே காரணம். அதனால் நம்முள்ளே ஏற்படும் பதிவுகளும் அதன் விளைவுகளுமே காரணம். பதிவுகளை நீக்கி, களங்களைப் போக்கி நம்முள் ஆன்மாவாக இயங்கும் பிரபஞ்ச சக்தியை தூய்மைப்படுத்தினால் அது தன்னாலேயே அந்த மகாசக்தியுடன் இணைந்து கொள்ளும் .அதுவே ஆன்ம தரிசனம். அதவே முக்தி. அதுவே ஞானம்.
கீழான ஆசைகள் மற்றும் காமம் உள்ளோரிடம் குதம், ஜனனேந்திரியத்தின் அருகில் உள்ள மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம் ஆகிய கேந்திரங்களில் உலகாயத மனம் உழல்கிறது.
அந்த மனம் தூய்மைப் படுத்தப்படும் போது அது தொப்புள் பக்தியில் உள்ள மணிபூரகம் என்கிற கேந்திரத்திற்கு எழும்பி ஆற்றலையும் ஆனந்தத்தையும் தருகிறது. அது மேலும் தூய்மைப் படுத்தப்படும் போது இதயப் பகுதியில் உள்ள அனாஹதம் என்கிற கேந்திரத்திற்குச் செல்கிறது. அப்போது பேரானந்தம் விளைவதோடு, இஷ்ட தேவதையின் ஒளி பொருந்திய வடிவத்தைக் காட்டுகிறது. இன்னும் தூய்மையடைய அடைய பக்தியும் தியானமும் ஆழ்ந்து நிற்கும் போது மனமானது தொண்டைப்பகுதியிலுள்ள விசுத்தி என்கிற சக்கரத்திற்கு சென்று அளவுக்கதிகமானற ஆற்றலைத் தருவதோடு ஆனந்தத்தையும் விளைவிக்கிறது.இந்த சக்கரத்திற்கு போனாலும் கூட மனமானது புலன் மயக்கத்தால் மீண்டும் கீழ்நிலைகளுக்கு வந்துவிட வாய்ப்பு உண்டு. இரு கண்களுக்கும் இடையே உள்ள ஆக்ஞா சக்கரத்தை யோகி அடைகையில் சமாதியை, பிரம்மானந்தத்தை அனுபவிக்கிறார். பக்தனுக்கும் பிரம்மனுக்கும் இடையிலான வேறுபாட்டைக் குறித்த லேசான அனுபவம் மட்டும் இருக்கிறது. அதையும் தாண்டி சாதகர் ஆயிரம் இதழ் கொண்ட தாமரையான ஸகஸ்ராரத்தை அடைகையில் நிர்விகல்ப சமாதி ஏற்படுகிறது. இரண்டற்ற நிலையான பிரம்ம ஐக்கியம் ஏற்பட்டு விடுகிறது.எல்லா பேதங்களும் மறைகின்றன. இப்போது தான் குண்டலினி சிவனோடு ஐக்கியமாகி விடுகிறார். தேவைப்படும் போது விசுத்திக்கு வந்து சாதகர்களுக்கு அறிவுரைகள் கூறி லோக ஷேமத்தில் ஈடுபடலாம். இதுவே இறைவனைக் காண்பது அல்லாமல் இறைவனைக் புறக் கண்கொண்டு கண்டவரில்லை. இதுவே உண்மையாகும். பேராற்றலோடு இணைவதே இறைவனை அகக்கண் கொண்டு கண்டதாக சொல்லப்படுகிறது.
பிரபஞ்ச சக்தியின் மையங்களையே நாம் சக்கரங்கள் என்றழைக்கிறோம். சொல்லப் போனால் உயிருள்ள உடலில் பிராணவாயுவால் வெளிப்படுத்தப்படும் பிராண சக்தியின் கேந்திரங்கள் இவை. பரம் பொருள் இந்த மையங்கள் அல்லது கேந்திரங்கள் வழியாக வெளிப்படுகையில் பல்வேறு பெயர்களைப் பெறுகிறது. ஸ்தூலப் புலன்களுக்கு இந்த சக்கரங்கள் புலப்படாது.மரணத்தின் போது உறுப்புகள் சிதைவுறுகையில் அவை மறைந்து போகின்றன. ஆன்மீக சாதகர்களுக்கு பலவிதமான அதிசயமான ஒலி,ஒளி, காட்சி அனுபவங்கள் வாய்க்கும் அதைக்குறித்து இன்னொரு பதிவில் பார்ப்போம்