வியாழன், 26 பிப்ரவரி, 2015

சித்தர்களைக் காண ஒரு மந்திரம்! ( காகபுசுண்டர் பெரு நூல் காவியம் )

சித்தர்கள் விருப்பபட்டால்தான் அவர்கள் நமக்கு காட்சி தருவார்கள். மனம் செம்மைப் பட்டால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம், நம் உள்ளத்தில் மெய்ஞானம் தோன்றும்.
அதுமட்டுமல்ல, அவர்கள் சமாதிக்கு நம்மை அழைத்துபோய் தரிசனம் தந்து மீண்டும் இருக்கும் இடத்தில் விட்டுவிடுவர். அவர்கள் நம் கண் எதிரில் ஸ்தூல உடலோடு வந்து காட்சி தந்து நமக்கு கட்டளைகளும் இடுவர். அவர்களின் மூச்சு ஓட்டத்தை விளக்குகிறார்கள், தங்க ஜாலம் செய்து காட்டுகின்றனர். இது போல் இன்னும் பல உள்ளது.
இந்த தரிசன பாக்கியம் நம்முடைய கடந்த பிறவியின் தொடர்ச்சியாக இருக்கலாம், அல்லது இந்த பிறவியில் கலியுகத்தில் ஓரளவுக்கு மற்றவர்களுக்கு துன்பம் தராமல் இருக்கும் நெறிகளின் விளைவாகவும் இருக்கலாம் அல்லது இந்தப் பிறவியோடு விடுதலை கிட்டும் கட்டமாகவும் இருக்கலாம். மெய்யாக உணர்ந்து ஆழ்ந்த நம்பிக்கையோடு பயன்படுத்துவோர் யாரோ அவர் தாமே உத்தம பாக்கியசாலிகள் ...... இப்படிக்கு ..ரமணி. N 
பதிணெண் சித்தர்களைக் காண ஒரு அருமையான மந்திரம் உள்ளது.இது சித்தர்கள் பெரிய ஞானக்கோவை ( ரத்தின நாயக்கர் அண்டு சன்ஸ் ) நிஜானந்த போதத்தில் வெளியிடப்பட்டு மிக சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.  அந்த மந்திரம் இதோ…
சித்தர்கள்  பாடி வைத்த ( செய்த ) தமிழ்ப் பாடல்களின் உண்மைப் பொருள் உணர்ந்துஅனுபவத்தைப் பெறாமல் , உணராமல் இருந்தால் அகங்காரமாய்ப் பேசினால் சிறுகுடலும் , பெருங்குடலும் புரண்டு  பெரும் துன்மடைவார்கள். சித்தர்கள்  பாடி வைத்த ( செய்த ) தமிழ்ப் பாடல்களின் உண்மைப் பொருள் உணர்ந்து அறிந்து கொள்ளவும் , சித்தர்களைக் காண்பதற்கு ஒரு மூலமான மந்திரம் உள்ளது.சைதன்யமான இறையைப் போற்றி எந்நேரமும்  ஓம் சிங் ரங் அங் சிங் என்று ஒரு ( பூரணம் ) கோடித் தடவை வேறு சிந்தனையில்லாமல்  உருவேற்றினால், வேதாந்த சித்தர்களை வசமாய்க் காணலாம் .அவர்களை வசமாய்க் கண்டால் சகல சித்துக் குதவியாகும் , என்று கூறுகிறார்.எனவே அவர்களை வசமாய்க் காண இந்த மந்திரத்தை  உபயோகித்து பயன் பெறுவீர்களாக!!!

காயத்திரி மந்திரத்தை எல்லாப் பிராமணர்களும் மூச்சுப் பயிற்சியுடன்  கூடிய பயிற்சியை  சங்கற்பம் என்பார்கள் .அது விசுவாமித்திரரால் உருவாக்கப்பட்டது.விசு என்றால் ஆகாயம் .ஆகாயத்துக்கு மித்திரன் என்றால் நண்பன் என்று பொருள்.ஆகாயக் கூறான உயிர்க் கூறு இயற்கையில் உள்ளது போல் நம்முடலில் மிகுமானால் நம்முடலும் இயற்கை போல் அழியாமல் இருக்கும்.
அதாவது ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல் செய்ய வேண்டும் என்பார்கள்.ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல்தான் இருக்கிறது.அதாவது உயிர் பிரிந்த போது பழுதுள்ள மூன்று பூதங்களான ஆகாயம் உயிருடன் ஓடிவிடும் , வாசித்துக் கொண்டிருக்கும் காற்று பின்னால் ஓடிவிடும் ,  காற்றில்லாவிட்டால் நெருப்பு அணைந்துவிடும் , மண்ணும் , நீரும் மட்டும் பிணமாகக் கிடக்கும்.இயறகையில் விண்தான் இந்த பூமி , முதலான அனைத்துக் கோள்களையும் , அண்ட பேரண்டங்களையும் தாங்கி சரியான விதியில் சுழற்றுகின்றது. நம்மால் இரண்டு பந்துகளை ஒரு குடத்தில் போட்டு ஒன்றுடன் ஒன்று மோதாமல் சுழற்ற முடியுமா ? இத்தனை கோடி அண்டங்களையும் , பல கோடி பிரபஞ்சங்களையும் , பற்பல கோடிக் கோடி சூரியன்களையும்  அத்துடன் சேர்ந்த  பல கிரகங்களையும் ஒன்றுடன் ஒன்று மோதாமல் சுழற்றும் இந்த விண் என்ற பூதம் எவ்வளவு ஆற்றல் பெற்று மற்ற பூதங்களைவிட அளவில் பெரிதாய்த் திகழ்கிறது .
எனவே விண் பூதத்தை இயற்கையில் உள்ளது போல உடலில் அதிகரித்தால் நம்  உடலும் இயற்கையைப் போல அழிவற்றதாய்த் திகழும் .அப்படிப்பட்ட சாகாக் கலையை ஓதுவிக்கும் நம் தமிழ் மொழி எப்பேர்ப்பட்ட மொழி.நாம் எப்படிப்பட்ட ஞான நாட்டில் , ஞான பூமியில் பிறந்திருக்கிறோம்.அப்படிப்பட்ட ஆகாயக் கூற்றை உடலில் அதிகரிக்க இந்த மந்திரம் உதவும்.
அதே போல இந்த மந்திரத்தை  ஓம் என்று மூச்சை உள்ளிழுக்கவும் , பின் சிங் என்று வெளியில்  விடவும் , ரங் என்று மூச்சை உள்ளிழுக்கவும் , பின் அங் என்று வெளியில்  விடவும், மீண்டும் சிங் என்று மூச்சை உள்ளிழுத்து கடைசியா மூச்சை ஏதும் சொல்லாமல் வெளியில்  விடவும் , மீண்டும் மேற்படி மந்திர சங்கல்பத்தை தொடரவும்  இவ்வாறு செய்தால் 48 நாளில் நினைத்த சித்தரைக் காணலாம்.இதை சங்கற்ப தரிசனம் என்று சொல்லலாம்.நாம் எந்த ரகசியத்தை கொண்டு செல்லவில்லை.சித்தர்கள் சொன்ன ரகசியத்தை சொல்லியே செல்கிறோம் .நீங்களும் சித்தர்களை தரிசனம் செய்து  இறையை தரிசிக்கலாம்.மேலான ஞான ரகசியத்தையும்  அடையலாம்.எம்மிடம் ஏதும் ரகசியம் இல்லை.

மெய்கண்ட தேவர்

மெய்கண்ட என்றால் உண்மையை கண்ட என்பது பொருள். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் சுந்தரர் ஞானம் பெற்ற தலத்தில், 780 வருடங்களுக்கு  முன் வாழ்ந்தவர் மெய்கண்ட நாயனார். இந்த தலத்திற்கு பெயர் திருவெண்ணெய் நல்லூர் ஆகும்.
பக்தி என்னும் நிலையை தாண்டி, தான் யார் என்னும் கேள்விக்கு பதில் அளிக்கும் அறிவே சித்தாந்தம்.
சைவ மதத்தை தழுவி ஞான நிலையை அடைபவர்கள் "சைவ சித்தாந்தம்" என்னும் உயர் அனுபவத்தை நம் முன் வைக்கிறார்கள்.  அதன் ஒரு பகுதியாக 12 முதல் 14ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் தோன்றிய பாடல்களே மெய்கண்ட சாத்திரங்கள். மொத்தம் 14 சாத்திரங்கள் உள்ளது, 4 பெயர்களால் ஏற்ற பட்டுள்ளது. இதனில் மெய்கண்ட தேவர் எழுதியது 12 சூத்திரங்கள். இவர் குருவின் பெயர் பரஞ்சோதி முனிவர்.
மெய்கண்டார் ஜீவசமாதி திருவெண்ணெய் கோவில் அருகே உள்ளது. ஆதீனத்தில் இருப்பதால் வாசல் மதியம் மூடுவதில்லை. தியானம் செய்ய ஒரு அருமையான இடம். இதை எழுதும் பொது ஈஸ்வரபிரசாத் அய்யா சொன்னது நினைவுக்கு வருகிறது..... . 
"மெய் என்ன என்று உணர்வே இந்த மெய். இது மெய்".


மகான் கொங்கண மகரிஷி -

மகான் கொங்கண மகரிஷி அருளிய கவியின் சாரம்:

மனித வர்க்கத்தில் ஒரு சிலர் நெறியுடன் வாழ்ந்தும், பக்தி செலுத்தியும் வருவார்கள். நோக்கம், கடவுளை அடைய வேண்டும் என்பதற்காக. கடவுளை அடைய வேண்டும என்றால் உண்மை பொருளை அறிந்தவர்களுடைய ஆசி வேண்டும். ஆசி இல்லாமல் நாம் என்ன முயன்றாலும் வீடுபேறு அடைய முடியாது.
          வீடுபேறு அடைய விரும்புகின்றவர்கள்,  மகான் கொங்கண மகரிஷி  - அருளிய கடைக்காண்டம் 500ல் எழுபத்தாறாம் கவியான அகத்திய மாரிஷி நமா என்றென்று நாமஜெபம் செய்ய வேண்டும் என்றும், அப்படி நாமஜெபம் செய்து வந்தால் ஆசான் அகத்தீசர் அவர்கள் நமது உணர்வோடும் உணர்ச்சியோடும் நாடி நரம்புகளில் ஊடுருவி, தேக கசடை நீக்கி அஷ்டமா சித்தியையும் தருவார். அதுமட்டுமல்ல குளிகை என்று சொல்லப்பட்ட வாசியையும் நடத்தி வருவார். மேலும், மலமாயையும், மனமாயையும் மற்றும் தேகபந்த பாசத்தையும் நீக்கி, நமக்கு அகத்தீசன் காவி உடை தருவார். ஆசான் அகத்தீசர் காவி உடை தந்தால் அதற்கு பிறகு ஆசான் அகத்தீசர் ஆசிபெற்ற எண்ணிலடங்கா ஞானிகள் நமக்கு உற்ற துணையாக இருந்து அருள் செய்வார்கள்.
          எனவே, அகத்தீசனை திருவடியை உருகி தியானம் செய்து வந்தால், யாராலும் அடைய முடியாத மேற்கதி அடையலாம். அகத்தீசனை பூஜை செய்து வருகின்ற மக்களுக்கு எந்த தடைகளும் இருக்க முடியாது. அவர் ராஜயோகம் பெற்ற பெருமை கொள்வார். ஆசான் அகத்தீசர், சுப்ரமணியர் என்று சொல்லப்பட்ட மூலக்கனலில் தோன்றியவராவார்.
          எனவே, அகத்தீசரை பூஜை செய்து வருகின்ற அன்பர்களுக்கு ஆயிரத்தெட்டு அண்டத்திலுள்ள தேவர்களெல்லாம் கைகட்டி சேவை செய்வார்கள். ஆகவே ஆசான் அகத்தீசன் பெருமைக்கு ஈடு இவ்வுலகில் இல்லை. எனவே ஆசான் அகத்தீசனை பூஜிப்போம்! எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ்வோம்!!.
ஐயனே போற்றி போற்றி அருள்பெற்ற தேவே போற்றி
மெய்யனே போற்றி போற்றி மெய்சுடர் அணிந்தாய் போற்றி
கையனே போற்றி போற்றி காசினி முனிவா போற்றி
உய்யனே எனையாட் கொண்ட உந்தியில் உதிக்குந்தேவே
உந்தியிலுதிக்குந்தேவே ஒருபொருள் உகந்தாய் போற்றி
சிந்தையில் நினைந்த போதே திருநட மிட்டாய் போற்றி
வந்தித்தேன் உந்தன் பாதம் வானமுந் திறந்தாய் போற்றி
அந்தித்தேன் குருவே ஐயா அடியினைப் போற்றி போற்றி
மகான் புலத்தியர் - 3.
போற்றென்ற அடியேன் உள்ளம் பூரண மதுவும் காட்டி
சாற்றென்று யோக ஞானம் சாதனம் அதுவுங்காட்டி
ஆற்றென்ற கபால தீட்சை அருள்பெற்ற சமாதி காட்டி
யேற்றென்ற வாசி காட்டி யெனையாண்ட சரணம் போற்றி
சரணத்தில் விழுந்தேன் கோவே சச்சிதானந்த மூர்த்தி
சரணத்தில் முன்ன மின்னம் தானது கருக்கஎன்னக்
கரணத்தில் வழலை தானுங் கபாலத்தில் ஒழிந்து போக
அரணத்தில் உதித்த பாதம் அறுசுவை ஒழித்துப்போடே
மகான் புலத்தியர் - 4.
குருவடி பொற்றாள் சரண்சரணம் கும்பமுனியே சரண்சரணம்
திருவடி நாதா சரண்சரணம் சித்தர்களின் அருளே சரண்சரணம்
அருள்வடி வானாய் சரண்சரணம் அமரர்கள் கோவே சரண்சரணம்
பொருளடி மூலங் காட்டிற்று போதித்த குருவே சரண்சரணம்
போதித்த குருவே சரண்சரணம் பொதிகை வளர்அம்பலர் சரணம்
வேதித்தெனையே ஆட்கொண்ட விமலா சரணம் மெய்ஞ்ஞானம
சாதித்த தேவே சரண்சரணம் சமுசயந்தீர்த்தாய் சரண்சரணம்
ஓதித்தருவாய் சரண்சரணம் உண்மைப்பொருளே சரண்சரணம்.
மகான் புலத்தியர் - 5.
லபிக்கவழி(சித்திக்க வழி) சொல்லுகிறேன் ஆத்தாளே நந்திதிருமூலரையும்
லபிக்கக்காளாங்கியையும் ஆத்தாளே நாதாந்தபோகரையும்
சத்திசிதம்பரமும் ஆத்தாளே சட்டமுனி பூசைசெய்வாய்
உத்தமக்கொங்கணரை ஆத்தாளே உசிதமாய் பூசைசெய்வாய
கருவூரார் ஆனந்தர் ஆத்தாளே கண்டு வழிதெரிந்தோர்
ஒருநெறியாய் இவர்களையும் ஆத்தாளே உண்மையுடன் பூசைசெய்தால்
சண்டாளன் ஆனாலும் ஆத்தாளே தான் வேதைகாண்பானே
கண்டசேதி சொன்னேன் நான் ஆத்தாளே.
மகான் அழுகண்ணர் - 6.
அகத்தியரே பெரும்பேற்றை அடைந்தோர் ஆவார்
அம்மம்மா வெகுதெளிவு அவர் வாக்குத்தான்
அகத்தில் உறைபொருள் எல்லாம் வெளியாய்ச் சொல்வார்
அவர்வாக்கு செவி கேட்க அருமையாகும்
அகத்தியரின் பொதிகையே மேருவாகும்
அம்மலையும் அகத்தியரின் மலையுமாகும்
அகத்தியரின் அடையாளம் பொதிகைமேரு
அவர்மனது அவரைப் போல் பெரியார் உண்டோ.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

                    

 தேங்காய் சுவாமிகளின் உருவ  படம் 

ஸ்ரீ தேங்காய் சுவாமிகளின் சித்தர் பீடம் புதுச்சேரியில் இருந்து வில்லியனூர் செல்லும் சாலையில், வில்லியனூர் துணை மின்நிலையத்தின் எதிரில் ஒரு சிறிய தகர கொட்டகையில் உள்ளது.

ஸ்ரீ தேங்காய் சுவாமிகளிடம் வரும் பக்தர்கள் தேங்காயுடன் வருவார்கள்.அதை அவர் உடைத்து அந்த மூடியின் உள்ளே வெள்ளை பகுதியில் இவர் கண்களுக்கு மட்டும் தெரியும் எழுத்துக்களை படித்து மக்கள் மனதில் உள்ளவற்றை கூறுவார். பின் அந்த மூடியின் ஒரு பகுதியை எடுத்து சென்று பூஜையில் வணங்க எல்லா துயரமும் போகுமாம்.

இதனால் இவரை தேங்காய் சுவாமிகள் என்று அழைத்தார்கள். ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள் கிழமை விசேஷ பூஜையும் செய்து சிறப்பித்து வருகிறார்கள்.


சனி, 21 பிப்ரவரி, 2015

அருட்தொண்டால் பயன்காண்போர்கள் நாதழுக்கப் பெருமையோடு போற்றுவார்கள்..

Thoughts on Ego & Silence
வாழ்க வளமுடன்.

குருவினால் உண்டான பயனை விளக்குவது கூட குருவின் பெருமையை பரப்புவது தான்.
உன் முனைப்பு நிலவு ஒளி ரவியால் போல
உயர் குருவின் ஒளி என்றே உணர்ந்தடங்கு.
குருவினால் தான் இந்தப்பேச்சே உண்டாகிறது என்று இருக்கும் போது தன்முனைப்பு தனை அங்கே எங்கும் கண்டுபிடிக்க முடியாது போகிறது.
வாதிட ஒன்றும் இல்லை. அவரவருக்கு குருவினால் உண்டான அனுபவத்தை அவரவர் முன்படர்ந்து சொல்வது குருவிற்கு நாம் செய்யும் சிறு காணிக்கையே.
மொழிப்புலமை உள்ள இருவர் தங்கள் கருத்தை சொன்னால் அது முனைப்பை எளிதாக வெளிக்காட்டும். அகங்காரமாக இருக்கும் ஒவ்வொருவரின் பேச்சும் அதன் தொனியும்.
குருவினால் அகத்தவத்திலே உயர்கிற எந்த இருவரும், ஒருவரின் கருத்து மற்றவருக்கு ஒத்துப்போய்விடும். ஏனெனில், அனுபவம் உள்ளே ஒன்று தான். ஒருவரின் பயணம் ரயிலில் என்றால் மற்றவரின் பயணம் விமானத்தில் என்று இருக்கும். அவ்வளவே. ஆனால் இருவரின் பயணமும் குருவை நோக்கியே என்ற விதத்திலே ஒத்துப்போய்விடுவார்கள்.
ராமகிருஷ்ணர் முன் யார் எந்த கடவுளின் மீது பாடல் பாடினாலும் கூட அதோடு ஒன்றிப்போய் அழுதுவிடுவாராம்.
குருவிடம் சரணடைந்த பல சீடர்கள் ஒன்று சேர்ந்தால்... அங்கே மௌனமன்றோ இருக்கும்?!
நான் ஆகாயம் இல்லை, நிலம் இல்லை, நீர் இல்லை, காற்று இல்லை, பஞ்ச பூதங்கள் ஒன்றும் இல்லை. இந்திரியங்களும் இல்லை. அண்டமும் இல்லை. அணுவும் இல்லை. விளக்கமற்றதும்,முடிவற்றதும், பிரம்மமாகவும் இருக்கிற சிவன் மாத்திரமே " நான்" என்று அத்வைதத்தை சொன்ன பாலகன் ஆதிசங்கரனைப்போல, இதெல்லாம் நானா என்று என்று தவத்திலே உணர்ந்து, குருவிடம் ஒன்றாக இருக்கிற குருவின் சீடர் இருவருக்கு பேச்சு எப்படி இருக்க முடியும்?
கரூரில் ஜீவ சமாதி ஆகியிருக்கும் பிரம்மேந்திரர், தவ சீலர். இளமையிலே வாதத்திலே அனைவரையும் அடக்கினாராம்... ஊரே பாராட்டியதாம். அதை கேள்விப்பட்ட அவரது குரு, ஊர் வாயை எல்லாம் அடக்கக் கற்றுக்கொண்ட நீ உனது வாயை அடக்க இன்னமும் கற்றுக்கொள்ளவில்லையே என்றாராம்..
அத்தோடு அவர் தனது வித்வான் பதவியை உதறி விட்டு மௌனத்திலே ஆழ்ந்தாராம்.
கடுந்தவம் செய்தாராம். அவரின் வாழ்விலே பல சாதனைகள் செய்தாராம். ஆனால் மௌனத்திலே வாழ்ந்து, கரூரிலே ஜீவ சமாதியில் ஆழ்ந்தாராம்.
யார் வாயை அடைத்தாலும் கூட, குருவின் கட்டளை வரும் போது எந்த சீடனும் மௌனத்தை விட்டு விலகி வரப்போவதில்லை. அதுவரை பேச்சு, எழுத்து என்று அங்கும் இங்கும் இருக்கவேண்டியது தான்.
குரு போதும் என்றால், அனைத்தும் நின்று விடும். எனது இருப்பும் கரைந்து விடும். எதற்க்கு விட்டு வைத்திருக்கிறாரோ என் அப்பன்?!

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

மகான் காகபுஜண்டர் அருளிய கவியின் சாரம்:

மகான் காகபுஜண்ட மகரிஷி 7

உலத்தில் தன்னை அறிந்து தம்முள் இருக்கும் அரும்பொருளாகிய பரம்பொருளை தவமுயற்சியால் தட்;டி எழுப்பியவர்கள்தான் ஞானிகளாவர். அந்த வரிசையில் காகபுஜண்டர் என்று சொல்லப்பட்ட ஞானியே மிக உயர்ந்தவர் ஆவார். அவர் பலகோடி யுகங்கள் வாழ்கின்றவர். யுகம் முடியும் காலத்தில் காக்கை வடிவாக உருமாறி, மீண்டும் உலகத்தில் உயிரினங்கள் தோன்றும்போது மக்களுக்கு மக்களானவர்களுக்கு மனமிரங்கி உபதேசிப்பார். இவரும் ஆசான் அகத்தீசருடைய சீடராவார். ஆசான் அகத்தீசருக்கு எண்ணிலடங்கா ஞானிகள் சீடர்கள் ஆவர்.

அகத்தீசன் பெருமையை கணக்கிட்டு சொல்வதற்கு யாராலும் முடியாது. ஆசான் புஜண்ட மகரிஷி அவர்கள் காகபுஜண்டர் காவியம் ஆயிரத்தில் "அகத்தியரே பெரும்பேற்றை அடைந்தோர் ஆவார்" என்று முதல் வரியில் சொல்லியுள்ளார்.

ஆசான் அகத்தீசர் அவர்கள் அரும்பெரும் தவம் செய்தவர். அவரை காலையில் பத்து நிமிடம், "ஓம் அகத்தீசாய நம" என்றும், மாலையில் அதேபோல் பத்து நிமிடம் நாமஜெபம் செய்து வந்தால் அவர் பெற்ற பெரும் அருளை நமக்கு வழங்குவார். அவருடைய பாடல்கள் அத்தனையும் சாதாரண கல்வி கற்றவரும், எளிதில் படிக்கக்கூடிய முறையில் மிக ஆழமான கருத்துக்களை எளிய முறையில் பாடியுள்ளார். ஞானம் என்பது இன்னதென்று சொல்லமுடியாத ஒரு ரகசியம் ஆகும். அந்த ரகசியங்களை எவ்வாறு சொன்னால் வருங்கால தொண்டர்கள் உணர முடியுமோ? அதற்கேற்றாற்போல் வெளியாக பாடியுள்ளார். மேலும், அவர் பாடல் கேட்பதற்கு இனிமை உடையதாகவும் இருக்கும். அவர் தவம் செய்து தங்கிய இடம், பொதிகை மலை என்ற மேருவாகும். பொதிகை மலைக்கு அரசனும் அவரே ஆவார். அவருடைய கருணையே மேருமலைக்கு ஒப்பாகும். அவர் கருணையால்தான் இதற்குமுன் பலகோடி ஞானிகளும் கடவுள்தன்மை அடைந்துள்ளார்கள். மேலும், வருங்காலத்திலும் பலகோடி மானுடர்கள் பாவத்திலிருந்து விடுபட்டு கடவுள்தன்மை அடைய இருக்கிறார்கள். எனவே, அகத்தீசன் நாமத்தை சொன்னால் நவகோடி சித்தர்களும் நமக்கு உற்ற துணையாக இருந்து மலமாயையும், மனமாயையும், பந்த பாசத்தையும் நீக்கி என்றும் அழியாத பேரின்ப வாழ்வு தருவார்கள்.

நாம் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான வேதங்களையும் மற்றும் நூல்களையும் படித்தபோதிலும் அதிலுள்ள நுட்பங்கள் நமக்கு புரியாது. ஆனால் "ஓம் அகத்தீசாய நம" என்று நாம நாமஜெபம் செய்தால் எல்லா நூல்களையும் படித்து அறிய முடியாத ஞான ரகசியங்களை நாமே அறிந்து உய்ய முடியும்.

ஒருசிலர் பல சாஸ்திரங்களை படித்துபடித்து முதுமை வந்து இறந்து போனாரே தவிர ஒரு கடுகளவும் உண்மை தெரிந்துகொள்ளவில்லை. காரணம், ஆசான் திருவடியை பூஜைசெய்துபூஜைசெய்து ஆசி பெறவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றுவதில்லை. ஞானவாழ்வு என்பது குரு அருளால்தான் கைகூடும் என்று புண்ணியவான்களுக்கு மட்டுமே புலப்படுவதாகும். நல்வினை இருந்தால்தான் குருவருள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். புண்ணிய பலம் இல்லாத கசடர்கள் தம்தம் திறமை கொண்டு முன்னேற முயற்சிப்பார்கள். இவர்களெல்லாம் களம் சார்ந்த பதராகும். அவர்களிடம் உண்மையை உணர்ந்தவர்கள் சொன்னாலும் யார் உபதேசமும் எனக்கு தேவையில்லை, எனக்கு கல்வி உள்ளது நானே படித்து தெரிந்து கொள்வேன் என்பார்கள். 
மகான் காகபுஜண்டர் உலக மக்கள் பால் கருணை கொண்டு மேற்கண்ட பாடலை அருளியுள்ளார். வருங்கால ஆன்மீக தொண்டர்களுக்கு இந்த பாடலே உபதேசமாகும். எனவே அகத்தீசனை பூஜித்து ஆசிபெற்று கொள்வோம்! பெரும்பேற்றை பெற்று பேரின்பம் பெறுவோம்!!.
காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மசித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புத்தானே.

மகான் புலத்தியர் - 3.

போற்றென்ற அடியேன் உள்ளம் பூரண மதுவும் காட்டி
சாற்றென்று யோக ஞானம் சாதனம் அதுவுங்காட்டி
ஆற்றென்ற கபால தீட்சை அருள்பெற்ற சமாதி காட்டி
யேற்றென்ற வாசி காட்டி யெனையாண்ட சரணம் போற்றி
சரணத்தில் விழுந்தேன் கோவே சச்சிதானந்த மூர்த்தி
சரணத்தில் முன்ன மின்னம் தானது கருக்கஎன்னக்
கரணத்தில் வழலை தானுங் கபாலத்தில் ஒழிந்து போக
அரணத்தில் உதித்த பாதம் அறுசுவை ஒழித்துப்போடே

மகான் புலத்தியர் - 4.

குருவடி பொற்றாள் சரண்சரணம் கும்பமுனியே சரண்சரணம்
திருவடி நாதா சரண்சரணம் சித்தர்களின் அருளே சரண்சரணம்
அருள்வடி வானாய் சரண்சரணம் அமரர்கள் கோவே சரண்சரணம்
பொருளடி மூலங் காட்டிற்று போதித்த குருவே சரண்சரணம்
போதித்த குருவே சரண்சரணம் பொதிகை வளர்அம்பலர் சரணம்
வேதித்தெனையே ஆட்கொண்ட விமலா சரணம் மெய்ஞ்ஞானம
சாதித்த தேவே சரண்சரணம் சமுசயந்தீர்த்தாய் சரண்சரணம்
ஓதித்தருவாய் சரண்சரணம் உண்மைப்பொருளே சரண்சரணம்.

மகான் புலத்தியர் - 5.

லபிக்கவழி(சித்திக்க வழி) சொல்லுகிறேன் ஆத்தாளே நந்திதிருமூலரையும்
லபிக்கக்காளாங்கியையும் ஆத்தாளே நாதாந்தபோகரையும்
சத்திசிதம்பரமும் ஆத்தாளே சட்டமுனி பூசைசெய்வாய்
உத்தமக்கொங்கணரை ஆத்தாளே உசிதமாய் பூசைசெய்வாய
கருவூரார் ஆனந்தர் ஆத்தாளே கண்டு வழிதெரிந்தோர்
ஒருநெறியாய் இவர்களையும் ஆத்தாளே உண்மையுடன் பூசைசெய்தால்
சண்டாளன் ஆனாலும் ஆத்தாளே தான் வேதைகாண்பானே
கண்டசேதி சொன்னேன் நான் ஆத்தாளே.

பதஞ்சலி முனிவர்

பதஞ்சலி இன்று உலகெங்கும் பிரபலமாகக் பின்பற்றப் படும் யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் பதஞ்சலி ஆவார். இவர் சித்தர்களுள் ஒருவராகக் கருதப் படுகின்றார். இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது. இவர் வாழ்ந்தது தமிழகத்திலுள்ள சிதம்பரம் ஆகும். பதஞ்சலி யோகத்தின் இந்த சூத்திரமளவுக்கு புகழ்பெற்ற சூத்திரங்கள் நமது மரபில் குறைவு. தேவைப்பட்ட இடத்திலும் தேவைப்படாத இடத்திலும் சகட்டு மேனிக்கு இந்த சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது . இவ்வாறு பலவகையான அறிஞர்களால் பலவிதமாக பயன்படுத்தப்படுவதனால் மிதமிஞ்சி விளக்கப்பட்டு ஒரு கட்டத்தில் இச்சூத்திரமே ஓர் அடர்ந்த புதர் போல ஆகிவிட்டிருக்கிறது . ஆகவே நாம் இதன் சொற்களை மட்டுமே கணக்கில் கொண்டு பேசுவது நல்லது என்பது என் எண்ணம். ஓர் உவமை .பிரபஞ்சத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அது எல்லா திசையிலும் பரவி விரிந்து சென்றபடியே இருப்பதாக கண்டார்கள். காற்று நிரம்பும் பலூன் ஒன்று விரிவடைகையில் அதில் உள்ள புள்ளிகள் விலகி செல்வது போல பால் வழிகள் விலகி செல்கின்றன என்றார்கள். இது ·ப்ரிஜோ காப்ரா தன் தாவோ ஆ·ப் ·பிசிக்ஸில் அளிக்கும் உவமை. இவ்வாறு பால் வழிகள் விலகி செல்லும் வேகத்தை கணக்கிட்டார்கள் . அதை எதிர் திசைக்கு போட்டு பார்த்து இப்பிரபஞ்சம் எப்படி ஒரே பொருளாக ஒரு காலத்தில் இருந்திருக்க கூடும் என்று கண்டடைந்தார்கள். எப்போது பெருவெடிப்பு ஒன்று நிகழ்ந்து அதன் துகள்கள் நட்சத்திர மண்டலங்களாக மாறி விலகிச் செல்ல ஆரம்பித்திருக்கும் என்று கண்டார்கள். இதை நாம் மனதுக்கும் ஓர் உதாரணமாக போட்டுப் பார்ப்போம். நாம் நம் மனதை அறியும்போது அது ஓயாமல் இயங்கியபடியே இருப்பதைக் காண்கிறோம். நாம் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் அது செயல்பட்டபடியே இருக்கிறது அல்லவா? நாம் மனம் என்று சொல்வது எதை? மனதின் பிம்பங்களின் இந்த ஓட்டத்தைத்தான். ஆனால் மனம் என்பது அதுதானா? எந்தக் கருவி அந்த படங்களை தயாரிக்கிறது? எது அவற்றை ஒளிபரப்புகிறது ? எதன் மீது அவை ஓடுகின்றன? அதை பார்ப்பது எந்த விழி? மனம் என்பது எண்ணங்களின் தொடரோட்டமும் அந்தத் தொடரோட்டத்தை அறியும் இன்னொரு ஓட்டமும் ஆகும். அவற்றில் எது எதை கண்காணிக்கிறது என்பது அந்தத் தருணத்தில் நாம் எப்படி உணர்கிறோம் என்பதைப்பொறுத்தது மட்டுமே. நாம் மனதைக் கவனிக்க ஆரம்பித்ததுமே நாம் கவனிக்கிறோம் என்பதைக் கவனிக்க ஆரம்பிக்கிறோம். ஆம், மனம் இயங்கியபடியே இருக்கும் நிலையில் சாதாரணமாக நம்மால் அதை அறிய முடியாது. அப்படி அறிய முயன்றோமெனில் அம்முயற்சி இன்னொரு மன ஓட்டமாக மாறி ஏற்கனவே ஓடியபடி இருக்கும் மற்ற மன ஓட்டங்களுடன் கலந்து விடும். பெரும்பாலானவர்கள் தியானம் செய்யும்போது இதோ நான் தியானம் செய்கிறேன்.ஆம் நான் தியானம் செய்கிறேன் . அடாடா நான் தியானமல்லவா செய்கிறேன் . சரி இனி தியானம் செய்யலாம். சரி மீண்டும் முயன்று பார்ப்போம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மையாகும். இங்கே உள்ள சித்த விருத்தி என்ற சொல் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது. உளச்செயல்என்று உள்ளத்தை வரையறுக்கிறது பதஞ்சலி சூத்ரம். அதாவது மனதை ஒரு அமைப்பாக அல்லது பொருளாக அது காணவில்லை. ஒரு நிகழ்வாகவே காண்கிறது. தீபோல. அது ஒரு நிகழ்வு மட்டுமே. மனமெனும் ஓயா நிகழ்வே மனம். மனமெனும் நிகழ்வை மனம் அறிவதே மனம். அந்த அறியும் மனம் எது? அதுவும் நிகழ்வா? அந் நிகழ்வில் மாறாதுள்ள விதி என ஏதும் உள்ளதா? நட்சத்திர மண்டலங்களை எதிர்த் திசைக்கு கொண்டு செல்ல வைப்பது போல பிரிந்து சிதறி செல்லும் நம் மனதையும் நேர் எதிர்த் திசைக்குச் செல்ல வைத்தால் அவை சென்று சேரும் அந்த துவக்கப்புள்ளி எதுவாக இருக்கும்? யோசித்திருக்கிறோமா? காமம் குரோதம் மோகம் அகங்காரம் என்று விரியும் இந்த ஓயாத மன நாடகத்தின் விதைகள் எங்கே உள்ளன? ஆன்மீக தாகம் ,அறிவுத்தாகம், விடுதலைத் தாகம், சுயத்துக்கான தவிப்பு என்றெல்லாம் நாம் அடையாளம் கொடுக்கும் இச்சா சக்தியின் ஊற்றுக் கண்கள் எங்குள்ளன? யோகம் என்றால் மனதைக் கையாள்வதற்கான ஒரு பயிற்சி.  கையாளும் விஷயத்தை முதலில் அறிந்தாக வேண்டும். அதற்கு மனதை நிறுத்தி அதை கூர்ந்து கவனிக்கவேண்டும். எனவே தான் மனதை கட்டுப்படுத்துதல் , நிறுத்துதல் என நிரோதத்தை முதலிலேயே பதஞ்சலி சொல்கிறார்.    இது நம் மூல நூல்களில் பலவற்றின் முக்கியமான இயல்பாகும். எது அந் நூலின் சாராம்சமான கருத்தோ அது முதலிலேயே சொல்லப்பட்டுவிடுகிறது. உதாரணமாக ஈசாவஸ்ய உபநிடதம் முதல் வரியிலேயே அதன் மையக் கருத்தைச் சொல்லிவிடுகிறதுஇவற்றிலெல்லாமே இறை குடிகொள்கிறது . பதஞ்சலி யோக சூத்திரம் முன்வைக்கும் யோக தரிசனத்தை நாம் சாங்கிய தரிசனத்தின் துணைத் தரிசனமாகவே கற்கவேண்டும். இந்து ஞான மரபின் அனைத்து குருகுல அமைப்புகளிலும் கபில முனிவரின் சாங்கிய காரிகையும் பதஞ்சலி யோக சூத்திரங்களும் சேர்த்தே கற்பிக்கப்பட்டன. சொல்லப்போனால் ஆறு தரிசனங்களையும் ஒன்றாகவே கற்பது சிறந்தது. நாராயண குருவின் உவமையை இங்கே நினைவுகூரலாம். ஐந்து தரிசனங்களும் ஐந்து விரல்களைப் போன்றவை. அவை ஒன்றுசேர்ந்து செயல்பட்டாக வேண்டும். அந்த ஐந்து விரல்களில் வேதாந்தம் சுட்டு விரல் என்றும் யோகம் கட்டை விரல் என்றும் சொல்லப் படுவதுண்டு.அதாவது பிற அனைத்துத் தரிசனங்களுடனும் இணைந்து செயல்படும் தன்மை யோகத்துக்கு உண்டு. யோகம் ஒரு தரிசனத்துடன் இணையும்போது அது செயல் வடிவம் கொள்கிறது. ஆனால் கடந்த ஐம்பதாண்டுகளாக யோகம் உலகளாவ பெற்ற கவனம் காரணமாக யோகசூத்திரம் மைய இடத்துக்கு வந்துவிட்டிருக்கிறது. பல குரு குலங்களில் பதஞ்சலி யோக சூத்திரம் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. பதஞ்சலி யோகசூத்திரம் பிற தரிசனங்களின் துணை இல்லாமலேயே நிற்கக் கூடிய ஒரு சுதந்திரமான பிரதி என்ற கௌரவம் அதற்கு கைவந்திருக்கிறது. ஆகவே இன்று அதை சாங்கிய தரிசனத்தின் ஒரு பகுதியாக கருத வேண்டியதில்லை. எங்காவது சூத்திரங்கள் புரியாமல் ஆகுமென்றால் மட்டும் சாங்கிய தரிசனக் கருத்துக்களை தொட்டுக் கொண்டால் போதும். இத்தகைய மாறுதல் மரபுக்கு உகந்ததா என்ற கேள்வி எழலாம். இதன் மூலம் நாம் எதையாவது இழக்கிறோமா என்பது இன்னும் பொருத்தமான கேள்வி. காலமாறுதல்கள் பல விஷயங்களை தவிர்க்க முடியாதவையாக ஆக்குகின்றன என்பதே அதற்குப் பதில். நாம் இன்று கல்வி கற்கும் முறையும் சரி, சிந்திக்கும் முறையும் சரி, விவாதிக்கும் முறையும் சரி, நம் மரபு சார்ந்தவை அல்ல. நம்முடைய மரபான அறிவியங்கியல் இப்போது ஒரு பழைய விஷயமாக ஆகிவிட்டிருக்கிறது. பண்டைக் காலத்தில் கருத்துக்களை நியாய சாஸ்திர அடிப்படையில் விவாதித்தார்கள். உண்மையை புறவயமாக வகுத்துக் கொள்வதற்கும் விவாதிப்பதற்குமான தர்க்க அடிபப்டைகளை வகுத்துச் சொல்லும் சிந்தனை முறையே நியாயம். ஆறு தரிசனங்களில் ஒன்றாகவும், வைசேஷிக தரிசனத்தின் கிளையாகவும் விளங்கிய நியாயம் பின்னர் தனித்த வளர்ச்சியை அடைந்தது. அது வைசேஷிகத்தில் இருந்து முழுமையாகவே பிரிக்கப்பட்டது. நியாயம் ஒரு பிரபஞ்ச தரிசனம் என்ற நிலையில் இருந்து எல்லா பிரபஞ்ச தரிசனங்களையும் வகுத்துக் கொண்டு விவாதிப்பதற்கான அடிப்படைத் தர்க்கக் கட்டுமானமாக ஆகியது. இந்த வளர்ச்சிக்கு பௌத்தம் ஆற்றிய பங்களிப்பு மிக மிக முக்கியமானதாகும். பௌத்த ஆசிரியர்களில் அஸங்கர், வசுபந்து, நாகார்ஜ்ஜுனர், திக்நாகர், தர்மகீர்த்தி போன்று பெரும்பாலானவர்கள் நியாயத்துக்கு தங்கள் உரை ஒன்றை வழங்கியிருக்கிறார்கள். இந்த உரைகள் வழியாக நியாயம் மீண்டும் மீண்டும் பிறவி கொண்டு வளர்ந்தது. சென்ற நூற்றாண்டு வரைக்கும் நியாயமே நம்முடைய விவாத அரங்குகளை தீர்மானித்தது. நியாயம் கற்பதென்பது அறிவுச் செயல்பாட்டின் அடிப்படையாகக் கருதப்பட்டது. இன்றும்  கூட நாம் பழைமையான குருகுலங்களில் மரபான தத்துவக் கல்வி கற்றவர்களிடம் நம்முடைய அறிதல்களைப் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. அவர்களின் கல்வி, நியாய அடிப்படையில் அமைந்ததாக இருக்கிறது. ஆங்கிலக் கல்வி இந்தியாவில் பரவியபோது மேலைநாட்டு அறிவியங்கியல் நம்மிடையே செல்வாக்கு பெற்றது. ஐரோப்பிய சிந்தனைகள் அனைத்துமே கிரேக்க தர்க்கவியலை அடிபடையாகக் கொண்டவை. ஆங்கிலக் கல்வி இந்தியாவில் பரவிய ஆரம்ப நாட்களில் தர்க்கவியல் மிக முக்கியமான ஒரு கல்வியாக இருந்தது. தர்க்கவியலின் ஒரு பகுதியாகவே மேலைத்தத்துவம் கற்பிக்கப்பட்டது. தர்க்கவியலில் பட்டப்படிப்பும் பட்டமேற்படிப்பும் படிப்பதும் ஆதாரமான கல்வியாகக் கருதப்பட்டன. காரணம் அன்றைய பிரிட்டிஷ் அரசால் முன்னிறுத்தப்பட்ட சட்டம், அறிவியல் என்ற இரு துறைகளும் கிரேக்க தர்க்கவியலில் வேரூன்றியவை. அவையே நம் இன்றைய நவீன வாழ்க்கையை உருவாக்கின. ஆகவே மெல்லமெல்ல நியாயத்தின் அறிவியங்கியல் காலாவதியானது. அக்காலத்தில் இந்தியவியல் [இண்டாலஜி] உருவாகியது. இந்திய மூல நூல்கள் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழியாக்கம்செய்யப்பட்டன. இந்திய ஞானத்தை கிரேக்க தர்க்கவியல் சார்ந்து புரிந்துகொள்ளும் பெருமுயற்சி என்று நாம் இந்தியவியலை வகுத்துக் கொள்ளலாம். இந்தியவியல் வழியாகவே நாம் அனைவரும் இந்திய ஞான மரபை புரிந்து  கொண்டிருக்கிறோம். இது ஒரு வரலாற்று விபத்து. பல நூற்றாண்டுக் கால இடை வெளியால் நம் மரபான கல்வியமைப்புகள் அழிந்தன. நம்முடைய பொதுக் கல்வியும் மரபான முறையை அறவே மறந்து மேலைக் கல்விமுறையை சார்ந்ததாக ஆகியது. எனவே வேறு வழியில்லை விவேகானந்தருக்கும் ராம கிருஷ்ண பரம ஹம்ஸருக்கும் இடையேயான உரையாடலில் இந்த முரண்பாடு மீண்டும் மீண்டும் மேலெழுந்து வந்ததை விவேகானந்தர் பலவாறாகப் பதிவுசெய்திருக்கிறார். குறிப்பாக உருவ வழிபாடு சார்ந்து அவருக்கும் ராமகிருஷ்ணருக்கும் நிகழ்ந்த உரையாடலையும், பின்னர் விவேகானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப்புரிந்து கொண்டதையும் உதாரணமாகச் சொல்லலாம். ராமகிருஷ்ணர் வேதாந்தி. பிரம்மமே நான்என உணர்ந்து சமாதி யோகத்தில் அமர்பவர். ஆனால் கிருஷ்ணபக்தியிலும் காளிபக்தியிலும் ஆடிப் பாடி நெகிழ்ந்து கண்ணீர் விட்டு திளைக்கவும் செய்தார். அதை ஏற்க விவேகானந்தரால் முடியவில்லை. ஒன்று இன்னொன்றை மறுப்பது என்று அவர் புரிந்துகொண்டார்.   நீண்ட ஒரு ஆன்மீகப் பரிணாமத்திற்குப் பின்னரே அதி தூய ஆன்மீக அனுபவமும் உருவ வழிபாடு சார்ந்த பக்தியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று உணர்ந்தார். இதே முரண்பாட்டை நாராயணகுருவுக்கு நடராஜகுருவுக்கும் இடையேயான உரையாடல்களிலும் நாம் காணமுடியும். விவேகானந்தர் பிற்பாடு ஆற்றிய பெரும்பணி என்பது இந்தியவியல் உருவாக்கி அளித்த மேலைத் தர்க்கரீதியான இந்திய சிந்தனைக் கட்டுமானத்த்தில் உள்ள இடைவெளிகளை கீழைத் தர்க்கத்தின் அறிதல்கள் மூலம் நிரப்புவதைத்தான்.   அதையே நடராஜ குருவும் செய்தார் என்று சொல்லலாம். நியாயத்தைப்போலவே யோகமும் அதன் மூலத் தரிசனமாகிய சாங்கியத்தில் இருந்து பிரிந்து தனியான வளர்ச்சியை அடைந்தது. அதை நிகழ்த்தியவர்களும் பௌத்தர்களே. பௌத்த யோகாசார மரபுக்குப் பின்னர் யோகம் என்பதே முற்றிலும் இன்னொன்றாக ஆகிவிட்டது. பின்னர் அந்த யோக மரபையே அத்வைதம் போன்ற பிற்காலத்தைய வேதாந்த மரபுகள் எடுத்தாண்டன. இன்று நாம் காணும் யோகம் என்பது உண்மையில் இவ்வாறு பல படிகளிலாக பரிணாமம் கொண்டு வளர்ந்துவந்த ஒன்று. அந்த ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் மூல நூலாக நின்றுகொண்டிருக்கிறது பதஞ்சலி யோக சூத்திரம். இந்திய மரபில் ஒரு சிறப்பியல்பு உண்டு என்பதை நாம் காணலாம். பெரும்பாலும் மூல நூல்களை மறுவாசிப்பும் மறுவிளக்கமும் கொடுப்பதன் மூலமே சிந்தனை பரிணாமம் கொள்கிறது. பதஞ்சலி யோக சூத்திரமும் அவ்வாறு வளர்ந்தது தான். இந்த உரை வரை. ஆக, இந்த நூற்றாண்டில் நாம் பதஞ்சலி யோக சூத்திரத்தை அணுகும்போது அணுகும் அறிவுச் சூழலும் மாறி விட்டிருக்கிறது. அந் நூலைப் பொருள் கொள்ளும் முறையும் மாறியிருக்கிறது. மேலைத் தருக்கப் பின்னணியில் பௌத்தம் வழியாக வளர்ந்து வந்த யோகத்தை நாம் இன்று வாசிக்கிறோம். ஆகவே அதை ஆறு தரிசனங்களில் ஒன்றாக வாசிக்க ஆரம்பிப்போம் என்றால் அது அதைச் சுருக்குவதாகவே அமையும். இன்றைய உலகளாவிய சிந்தனைச் சூழலில் யோகத்தை நாம் எப்படி வாசிப்பது? வழக்கமாக செய்யப்படும் இரு வகை வாசிப்புகள் உண்டு. ஒன்று மத ரீதியான வாசிப்பு. பண்டைய ரிஷிகள் கண்டடைந்த மெய்ஞ் ஞானத்தின் இறுதி வடிவம் அது என்று எடுத்துக் கொண்டு அதை வழிகாட்டிக் கட்டளைகளாக மட்டும் காண்பது.                 இரண்டு, பண்டைய சிந்தனைகளை தெரிந்து கொள்ளும் வரலாற்று ரீதியான ஆர்வம். இரண்டுக்கும் அவற்றுக்கான பங்களிப்பு உண்டு. அவற்றுக்கும் அப்பால் ஒரு வாசிப்புச் சாத்தியமும் உண்டு என்பதைச் சுட்ட விரும்புகிறேன். கிரேக்க தத்துவ நூல்கள் கிரேக்க மதம் மற்றும் கிரேக்கப் பண்பாட்டின் விளைவுகள்.   ஆனால் மேலைத் தத்துவம் அவற்றை தத்துவ மூல நூல்களாகக் கண்டு காலந் தோறும் வளர்ந்து வரும் தத்துவ சிந்தனைகளுடன் தொடர்பு படுத்தி விவாதித்துக் கொண்டே இருக்கிறது.  அத்தகைய ஒரு வாசிப்பு பதஞ்சலி யோக சூத்திரம் போன்ற நூல்களின் அடிப்படை மெய்யறிதல்களை மானுடப் பொதுவாக ஆக்கவும்மானுட சிந்தனையின் அனைத்து தளங்களுடனும் இணைத்து விரிவாகப் புரிந்து கொள்ளவும் உதவக் கூடியதாகும். அதுவே இன்றைய அடிப்படைத் தேவை என்பது என் எண்ணம். இவ்வாறான நவீன வாசிப்பில் நாம் தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டிய நவீனச் சிந்தனைகள் மூன்று தளங்களைச் சார்ந்தவை. ஒன்று தத்துவம். மேலைத் தத்துவ சிந்தனை என்பது தொடர்ச்சியான வளர்ச்சிப் போக்கு கொண்ட ஒன்று. அத்தகைய ஒரு சீரான வளர்ச்சி இந்திய சிந்தனையில் இல்லை என்பது உண்மை. அதற்கு பல காரணங்கள் உண்டு என்றாலும் முக்கியமான காரணம் இந்தியாவில் இன்று இந்திய சிந்தனை கற்பிக்கப்படுவதில்லை என்பதே. நாம் எட்டாம் வகுப்பு படிப்பதற்குள் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் வரை அறிமுகம் செய்து கொண்டு விடுகிறோம். இந்திய தத்துவத்தை சிறப்புப் பாடமாக எடுத்து பட்ட மேற்படிப்பு   படித்தாலொழிய கபிலரை  நாம் அறிமுகம் செய்து கொள்ள முடியாது. அத்துடன் நம் கல்வி முறையின் அடித்தளமாக இருப்பது மேலை நாட்டு அறிவியலும் தத்துவமும் தான். ஆகவே நம்முடைய சிந்தனை முறையின் அடியில் இந்திய தத்துவ மரபின் அம்சமே இல்லை. இதனால் நம்மால் இந்திய தத்துவ மரபை ஒரு தொல்பொருள் என்ற அளவில் தகவல்களாக மட்டுமே அணுக முடிகிறது. அதை நம் சிந்தனைகளுக்கான கருவியாகக்கொள்ள முடிவதில்லை. ஆகவே நம் தத்துவ மரபு நவீன கால கட்டத்தின் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்படியாக வளர்க்கப்படவில்லை. சிற்சில விதிவிலக்கான தனிச் சிந்தனையாளர்கள் மட்டுமே கண்ணுக்குப் படுகிறார்கள். அது போதாது. ஒரு தத்துவ மரபு ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தின் பொதுச் சிந்தனையின் உள்ளே  செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது மட்டுமே அதில் உண்மையான வளர்ச்சி நிகழமுடியும்.  கிரேக்க தத்துவ மரபு ஐரோப்பிய சிந்தனையின் அடித்தளமாக எப்போதுமே இருந்து கொண்டிருக்கிறது. இன்றைய நவீன சிந்தனையாளன்கூட கிரேக்க மரபில் இருந்துதான் தன் கருதுகோள் உருவாக்கத்தை தொடங்குகிறான், ஏற்றோ மறுத்தோ. ஆகவே மேலைத் தத்துவத்தில் உண்மையான வளர்ச்சி உள்ளது. மேலும் இந்திய சிந்தனை சார்ந்த எதுவுமே உதவாத பழங்குப்பை என்று சொல்ல நாம் ஒரு நூற்றாண்டாக பழக்கப் பட்டிருக்கிறோம். மெக்காலேயின் புகழ் பெற்ற மேற்கோளில் அவர் ஒட்டு மொத்த இந்திய சிந்தனை
அனைத்தையும் சேர்த்தால் கூட பத்தாண்டு கால பிரிட்டிஷ் இலக்கியம் மற்றும் தத்துவ சிந்தனையின் அளவுக்கு நிகராகாது என்று சொல்கிறார். மெக்காலேயில் தொடங்கும் நம் கல்வித்துறை தலைமுறை தலைமுறையாக நம்மிடம் அந்த எண்ணத்தை உருவாக்குகிறது. அதை ஒரு மானசீகமான அடிமைத்தனம் எனலாம். ஆனால் நம்முடைய பேரறிஞர்கள் இலக்கியவாதிகள் என பலர் அந்த எண்ணத்தை மீற முடியாதவர்கள். உதாரணமாக, நான் நன்கு அறிந்த இலக்கியவாதியான சுந்தர ராமசாமி இந்திய சிந்தனை என்பது அர்த்தமில்லாத பழங்கால தர்க்கங்களும் மூடநம்பிக்கைகளும் கலந்தது என்று எண்ணினார்.அவை காலாவதியாகிவிட்டன என்று குறிப்பிட்டார். ஆனால் அவருக்கு இந்திய சிந்தனை பற்றி எளிய அறிமுகம் கூட இருக்கவில்லை. அதேசமயம் மூவாயிரமாண்டு பழமையுள்ள சாக்ரடீஸ்,பிளேட்டோ, அரிஸ்டாடில் சிந்தனைகள் மானுட சிந்தனையின் அடித்தளங்கள் என்று அவர் சொல்வார், அவை அவருக்கு பழங்குப்பைகள் அல்ல. இந்திய சிந்தனைகளை மத சிந்தனைகள் என அவர் சொன்னபோது சாக்ரடீஸும் கிரேக்க மதத்துக்குள் நின்றவரல்லவா, அவரும் ஆத்மா போன்ற உருவகங்கள் வழியாக சிந்தித்தவர் அல்லவா என்று நான் கேட்டேன். அப்போதுதான் அச் சிந்தனைகளிலும் அவருக்கு பெரிதாக அறிமுகம் இல்லை என்று உணர்ந்தேன். ஆனால் இந்த மனப்பிம்பம் அவரில் ஆழ வேரூன்றியிருந்தது. இது சராசரியான ஒரு இந்திய மனத்தின் அமைப்பு. நம்மைச் சூழ்ந்துள்ள பெரும்பாலானவர்கள் இந்தத் தளத்திலேயே இருக்கிறார்கள் என்பதைக் காணலாம். ஆகவே மேலைத் தத்துவத்தின் அடிப்படைகளுடனும் இன்றைய பரிணாமத்துடனும் பதஞ்சலி யோக சூத்திரத்தை நாம் ஒப்பிட்டு வாசிக்கும் போது ஏராளமான புதிய சாத்தியங்களைக் கண்டடைய முடியும். அதற்கு பதஞ்சலி யோக சூத்திரத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நாம் தத்துவப்படுத்திக் கொள்ள வேண்டும்.  மேலைத்தத்துவம் உருவாக்கியிருக்கும் கோட்பாடுகளுடன் அவற்றை இணைத்து யோசிக்க அது நமக்கு உதவும் இரண்டாவதாக, மேலை உளவியல். பதஞ்சலி யோக சூத்திரத்துடன் ஒப்பு நோக்கையில் மேலை உளவியல் குழந்தைப் பருவத்திலேயே இருக்கிறது என்பதே என் எண்ணம். அதை முக்கியமான சில உளவியலாளர்களுடனான உரையாடலிலும் நான் கேட்டதுண்டு. மேலும், மேலை உளவியலின் பல ஆதாரக் கோட்பாடுகள் பதஞ்சலி யோகம் போன்ற கீழை யோகவியலில் இருந்து கடன்பெற்றவை. ஆனால் மேலை உளவியல் நவீன அறிவியலுக்குரிய தர்க்கத்தைக் கொண்டிருக்கிறது. அதாவது கிரேக்க தர்க்கவியலில் இருந்து பிறந்து இன்று எல்லா சிந்தனைகளுக்கும் அடிப்படையாக இருக்கும் மேலை அறிவியங்கியலில் அது அமைந்திருக்கிறது.  நாம் கல்விக்கூடங்களில் கற்பதும் சிந்திப்பதும் அதில்தான். ஆகவே பதஞ்சலி யோகம் போன்ற பண்டையச் சிந்தனைகளை நாம் மேலை உளவியலுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது அவற்றை புரிந்துகொள்வதும் விவாதிப்பதும் எளிதாகிறது. பதஞ்சலி யோகத்தை உளவியலும் உளம் கடந்த இருப்பு குறித்த ஆய்வும் என்று பொதுவாக வகுத்துக்கூறலாம். அதன் அடிப்படைகள் பல மேலை உளவியலை வைத்துப்பார்த்தால் புரிந்துகொள்ள எளிதானவை. அதே சமயம் பதஞ்சலி சொல்வதை நிரூபிக்கமேலை உளவியலை துணைகொள்வது போன்ற அபத்தமும் வேறில்லை. பட்டப்படிப்புப் பாடத்தை பத்தாம் வகுப்புப் பாடத்தை வைத்து நிரூபிக்க முயல்வது போன்றது அது மூன்றாவதாக, மொழியியல். பதஞ்சலி அடிப்படையில் மனித இருப்பு அல்லது தன்னிலை குறித்த தரிசனத்தை முன்வைக்கிறார் எனலாம். சமகாலச் சிந்தனையில் இந்த கருதுகோள்கள் குறித்த விரிவான ஆய்வுகள் மொழியியலில்தான் நிகழ்ந்துள்ளன. ஆகவே மொழியியலின் கோட்பாடுகளை பதஞ்சலியை புரிந்துகொள்ள பயன்படுத்தலாம். அத்தகைய ஒரு நவீன வாசிப்புக்கு இன்றியமையாத தேவை பதஞ்சலி யோகசூத்திரத்தை நவீன மனநிலையுடன் அணுகுவதாகும். நவீன மனநிலை என்றால் நான் இப்படி வகுத்துக் கொள்கிறேன்.
1. ஒரு ஞானத்தை ஒரு இனம், மொழி, மதம், பண்பாட்டுக்குள் நிறுத்தி விடாமல் மானுடப் பொதுவான ஞானமாக அதை எடுத்துக்கொண்டு ஆராய்வது.
2. ஒரு ஞானத்தை ஒரு குறிப்பிட்ட காலத்தின் வெளிப்பாடாகக் கருதாமல் எப்போதைக்குமான ஞானமாக எடுத்துக்கொண்டு ஆராய்வது
3. அதன் மீது பக்தியோ வெறுப்போ இல்லாத தர்க்கபூர்வ அணுகுமுறை அத்தகைய ஒரு வாசிப்பு பதஞ்சலியை நமக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டு வரக்கூடும் இத்தகைய ஓர் ஆய்வுக்கு முன் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உள்ளது.   தாந்திரீக மரபு உருவாக்கியிருக்கும் தியான, உபாசனை முறைகளுக்கும் பதஞ்சலிக்கும் நேரடித் தொடர்பு இல்லை. அவை வேறு வேறு. பல ஆசிரியர்களின் யோக முறைகளில் இந்த மயக்கம் நிகழ்ந்து பல வகையான புரிதல் இடர்களை உருவாக்கியிருக்கிறது. பலர் பதஞ்சலி யோக சூத்திரத்தையே தாந்திரீக பாணியில் விளக்குவதையும் நான் வாசித்திருக்கிறேன். நெடுங்காலமாகவே யோக மரபும் தாந்த்ரீக மரபும் இரு தனிப்போக்குகளாக செயல்பட்டு வந்துள்ளன. இரு மரபுகளும் கொண்டும் கொடுத்தும் வளர்ந்தவை என்பதனால் அவற்றுக்கு இடையே பல பொதுக் கூறுகளும் உண்டு என்பதை மறுக்கமுடியாது. இந்து தாந்த்ரீக மதங்களும் சரி, பௌத்தத்துக்குள் உள்ள வஜ்ராயனம் போன்ற தாந்த்ரீக பிரிவுகளும் சரி, யோகத்தை தங்களுக்காக மறு ஆக்கம் செய்து கையாண்டன என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். ஆனாலும் அவை இரண்டும் வேறு வேறுதான். என்ன வேறுபாடு? அடிப்படையே வேறு வேறு என்பதுதான். யோகம் தன் மனத்தை அவதானிப்பதில் தொடங்குகிறது. அதை கட்டுப்படுத்தி அதன் ஆழங்களை அறியும் ஒரு தொடர் செயல்பாடு அது. மனத்தின் வெளிப்பாடுகளில் அதற்கு ஆர்வம் இல்லை. அதன் மூலத்தை நோக்கிச் செல்வதையே அது இலக்காகக் கொள்கிறது. அதற்காக பலவகையான பயிற்சிகளை அது உருவாக்கிக் கொள்கிறது. அத்தனை பயிற்சிகளுக்கும் நோக்கம் அகத்தை அறிந்து கடந்து சென்று அதன் சாரத்தில் அமர்தல் மட்டுமே. நேர் மாறாக தாந்த்ரீக மரபு என்பது மன வெளிப்பாடுகளையே முதலில் கருத்தில் கொள்கிறது. மனத்தின் வெளிப்பாடுகளை ஒவ்வொன்றாக பயின்று அறிந்து வென்று கடந்துசெல்லுதல் அதன் வழிமுறை. அச்சம் காமம் வன்முறை போன்று மனத்தின் ஆதார வெளிப்பாடுகள் ஏராளமானவை. ஒவ்வொன்றையும் அறிவதே தாந்த்ரீகம் முன்வைக்கும் விடுதலை மார்க்கமாகும்.                         கடந்து செல்லுதலே விடுதலை அல்லது முக்தி என்பது அதன் அறிதல். மனம் வெளிப்படுவது குறியீடுகள் வழியாகவே. ஆகவே தாந்த்ரீகம் குறியீடுகளை ஏராளமாக உருவாக்கிக் கொள்கிறது. நம்முடைய புராணங்கள் சிற்பங்கள் போன்ற ஏராளமான குறியீடுகள் தாந்த்ரீகத்தால் உருவகிக்கப்பட்டவையே. அதே போல நம் உடல், மனம் பற்றியும் தாந்த்ரீகம் ஏராளமான குறியீடுகளை உருவாக்கியிருக்கிறது.  அக் குறியீடுகளை பேருண்மையான உண்மைகளாக எடுத்துக் கொள்வர்கள் பலர்.  தாந்த்ரீகம் இரு வழிகளை கடைப் பிடிக்கிறது. அவை இடது வலது என பிரிக்கப்பட்டு வாமாசாரம் தட்சிணாச்சாரம் என்று சொல்லப்படுகின்றன. மனவெளிப்பாடுகளை அறிய அவ்வெளிபபடுகளையே மனதால் நிகழ்த்தி அதன் எல்லையை அறிவது ஒரு வழி. அதாவது காமத்தை வெல்ல காமத்தையே பழகுவது.
அச்சத்தை வெல்ல அச்சமூட்டுவதற்குள்ளேயே நுழைவது.  மரணத்தை அச்சமென்றால் சுடு  காட்டு பிணம் மீது அமர்ந்து தியானம் செய்வது போன்ற ஒரு உக்கிரமான வழி அது. இதுவே இடதுமுறை. அல்லது வாமாச்சாரம். மன வெளிப்பாடுகளை வெல்ல அவ்வெளிப்பாடுகளை உன்னதமாக்கிக் கொள்ளலாமென்பது இன்னொரு வழி. காமத்தை வெல்ல அதை குறியீடாக ஆக்கி அக்குறியீட்டை கலைகளாக ஆக்கி அக் கலையின் உன்னதங்கள் வழியாக காமத்தை அறிந்து கடந்து செல்லலாம். அச்சம் வன்முறை அருவருப்பு என அனைத்தையுமே அவ்வாறு கடந்து  செல்லலாம். உன்னதமாக்கல் என்பது இம் முறையின் முக்கியமான வழி முறை. சடங்குகள் பூஜை முறைகள் கலைகள் என அதற்கு பல வழிகளை அது கண்டடைந்துள்ளது. இது வலதுமுறைதட்சிணாச்சாரம். நாம் தமிழ் சித்தர் மரபு என்று சொல்லும் மரபில் இரு வகை தாந்த்ரீகர்களும் உள்ளனர். இரு மரபுகளுமே யோகத்தை தங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்கின்றன.   இவ்விரு மரபுகளும் பலவகையான உருவகங்களையும் குறியீடுகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.அக்குறியீடுகள் எளிமையான சித்தர் பாடல்கள் வழியாக சாதாரண மக்களிடம் வரும்போது அவை அப்படியே நேரடியாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. 
இவ்வாறு யோகம் குறித்து ஏராளமான நம்பிக்கைகள் நம்மிடையே புழங்குகின்றன. உடலில் உள்ள மூலாதாரம் முதலிய ஒன்பது சக்திமுனைகள் பற்றிய பேச்சு ஓர் உதாரணம்.
அவை முறையே காமம்,பசி,மூச்சு,பேச்சு,இதயம், சிந்தனை, உள்ளுணர்வு, உயிருணர்வு, பேருணர்வு என்ற நிலைகளைச் சுட்டுபவை. ஆனால் உடம்பிலேயே அவை உள்ளன, தொட்டுக்கூட பார்க்க முடியும் என்ற அளவில் அவை புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. தியானத்தில் நெற்றிப்பொட்டில் ஒளி தெரிவது போன்ற பல நம்பிக்கைகள் இவ்வாறு தாந்த்ரீக உருவகங்களை நேரடியாக எடுத்துக்கொள்வதன் விளைவுகளே. இன்னும் அடுத்தபடிக்குச் சென்று அணிமா, மகிமா போன்ற அட்டமா சித்திகளும் யோகத்தால் வசமாகும் என்றும் முக்காலமும் தெரியும் என்றும் சொல்லக்கூடியவர்கள் உள்ளனர்.  சிலர் கல்லைக் கடித்து தின்னுதல் போன்ற ஹடயோக வித்தைகளையும் யோகத்துடன் தொடர்புறுத்துகிறார்கள். அவையெல்லாமே தாந்த்ரீக மரபின் குறியீடுகள். பதஞ்சலி யோகத்துக்கும் அவற்றுக்கும் தொடர்பில்லை என்பதை உணரலாம். அத்தகைய எளிய உருவகங்களை உதறி விட்டுத் தான் நாம் பதஞ்சலி யோகத்தை அணுக வேண்டும். பதஞ்சலி யோகம் மாய வித்தையோ, ரகசிய வித்தையோ ஒன்றும் அல்ல. அது மிக திட்டவட்டமாக எழுதப்பட்டு புறவயமாக முன்வைக்கப்பட்ட ஒரு ஞானம். அதை குரு மரபுகளில் தெளிவாகவே கற்றறிந்திருக்கிறார்கள். அதில் சில பகுதிகள் நமக்கு விளங்காதவையாக இருக்கலாம்ஏனென்றால் அது பயிலப்பட்ட மரபுகளில் பதினேழாம் நூற்றாண்டு முதல் ஓர் அறுபடல் உள்ளது.  அதில் இடைச் செருகல்களும் இருக்கலாம். ஆனாலும் அது திட்டவட்டமான ஒரு தத்துவ -நடைமுறை நூலேயாகும்.

வியாழன், 19 பிப்ரவரி, 2015

மகான் ரோமரிஷி - 8



நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை
நீங்காதார் குலம் தழைக்க நிதியாவானைச்
செஞ்சாலி வயற்பொழில்சூழ் தில்லை மூதூர்ச்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமுமில்லை ஒரு வினையுமில்லை
வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்பாம்.

தனிப்பாடல் - 9.

போடுவது திலதமடா மூலர் மைந்தர்
போகர் கருவூராரைத் தியானம் பண்ணு
நாடுநகர தனிலுள்ள ஜீவசெந்து
நாதாக்கள் சித்தருக்கும் தோணாதையா
ஏடுதனில் எழுதினதோர் பாடல் என்று
எண்ணாதே ஒருநாளும் தப்போ இல்லை
தேடினபேர் பொருள்கோடி தனமீந்தாலும்
செப்பாதே இக்கருவை(ரகசியத்தை) உலகத்தோர்க்கே.

புதன், 18 பிப்ரவரி, 2015

மகான் அழுகண்ணர் - 6.

அகத்தியரே பெரும்பேற்றை அடைந்தோர் ஆவார்
அம்மம்மா வெகுதெளிவு அவர் வாக்குத்தான்
அகத்தில் உறைபொருள் எல்லாம் வெளியாய்ச் சொல்வார்
அவர்வாக்கு செவி கேட்க அருமையாகும்
அகத்தியரின் பொதிகையே மேருவாகும்
அம்மலையும் அகத்தியரின் மலையுமாகும்
அகத்தியரின் அடையாளம் பொதிகைமேரு
அவர்மனது அவரைப்போல் பெரியார் உண்டோ.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

முதல் சித்தன் சிவன்

“சிவனைப் புராண நாயகனாகக் கொள்வதைக் காட்டிலும் வரலாற்று நாயகனாகக் கொள்வது பொருந்தும்.

சித்தர் இலக்கியங்கள் மூலம் சிவனே முதல் சித்தன் என்பதற்கான சான்றுகளைக் காணலாம்.
“பொதிகையிலே எனைப் பார்க்க சிவனும் வந்தார்
பூரணனே தெய்வமென்று போற்றிச் செய்து
இதமாகக் கற்பமுறை யாவும் கேட்டேன்”
“சுகமாக நாகமது தரித்த ஈசன்
சுந்தரிக்குச் சொல்ல என்பால்
சூட்டினான்பார்”
“நீ கேளு புலத்தியனே கற்ப மார்க்கம்
நின்மலமாம் சதாசிவனார் எனக்குச் சொன்னார்”
“சாரித்த நாற்பத்து முக்கோ ணத்தைச்
சதாசிவனார் வகுத்தபடி சாற்றி னேனே”
“சருகுமுனி எனும்பேர் சிவன் தந்தார் பாரே”
“நாரிமுனி பாகனார் அருளால் சொன்னார்”
“சிவனார் உரைத்தமொழி பரிவாய்ச் சொன்னார்”
“பாதிமதி அணிந்தவர்தான் சொன்னதிது”
“சொல்லவே தேவிக்குச் சதாசிவன்தான்
சொல்லிடவே தேவியும் நந்திக்குச் சொல்ல”
“தாரணிந்த ஈசனன்று ஆயிக்குச் சொல்ல
தாயான ஈஸ்வரியும் நந்திக்குச் சொல்ல”

என்பன போன்ற ஒத்த கருத்துகள் சித்தர் இலக்கியங்களில் காணமுடிகிறது.

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

"புனித தீர்த்தம்"

இந்தியாவில் ஆன்றோர்கள் புனித ஆலயங்களின் வழிபாடுகள் மூலம் சூட்சுமமாக உடல் நோயும் ,  உள நோயும் நீங்கி நலம் பெற வழி வகுத்துள்ளனர்

ஆலயங்களை வலம் வருதல்,அங்கங்கள் பூமியில் பட விழுந்து வணங்குதல், அங்கப்பிரதட்சணம் செய்தல்,காவடி எடுத்தல்,திரு மண் இடுதல்,திரு நீறு ,
சந்தனம்,குங்குமம்,அணிதல் ,திருத்துழாய்(துளசி) வில்வம்,பயன்படுத்துதல் போன்ற ஆன்மீக செயல்பாடுகள் அனைத்தும் உடலும் ,உள்ளமும் நலம்பெற
அமைந்துள்ளன.

ஆலய வழிபாட்டு முறைகளில் தலை சிறந்ததாகப் புனித தீர்த்தம் வழங்குதல் அமைந்துள்ளது.  வைணவ திருத்தலங்களில் வழங்கும்"துளசி தீர்த்தம்"
இரத்தத்தை சுத்தம் செய்வதுடன்,உடலில் பிராணசக்தி மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலுப்படுத்துகின்றது. துளசி தீர்த்தம் தொடர்ந்து அருந்தி
வருபவர்களுக்கு கேன்சர் எனப்படும் புற்று நோய் வராது
என்பது மருத்துவ உண்மையாகும்.  சைவத் திருத்தலங்களில் வழங்கும் "வில்வ தீர்த்தம்"
குன்மம்,வயிற்றுக்கடுப்பு,மேகவாயு,போன்றவைகளைப் போக்குகின்றது.அல்சர் எனப்படும் குடல்ப் புண்ணையும் போக்குகின்றது.
ஆலயங்களில் வழங்கப்படும் மேற்கண்ட இரண்டு தீர்த்தங்களும் முறைப்படி தயார் செய்தால் இம்மருத்துவ குணங்கள் நிச்சயம் உண்டு.
நாம் வீட்டிலேயே செய்து உண்டு பயன்பெறக்கூடிய ஒரு புனித தீர்த்தம் முறையை இப்போது பார்ப்போம்.இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை
நீக்கி நல்வாழ்வு அளிக்கும் குணம் கொண்டது.
"புனித தீர்த்தம்"
1,ஏலம், - 2,இலவங்கம்,- 3,வால்மிளகு,-4,ஜாதிப்பத்திரி, 5,பச்சைக் கற்பூரம், இவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு  பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு சேர்க்கவும்.
 முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக்கொள்ளவும்.பிறகு பச்சைக் கற்பூரத்தையும் பொடித்துஇதனுடன் கலந்து கொள்ளவும். இதனை பாட்டலில் பதனம்
செய்து பூஜை அறையில் வைக்கவும்.
இந்த  தீர்த்தப் பொடியை திரிகடி அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன்  அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும்.
 இதனுடன் சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து
அருந்தலாம்.வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து  அருந்தலாம்.  
 இருதயம்,இரைப்பை பலம் பெறும்,கண்கள் பற்றிய நோய் யாவும்  நீங்கும்,நரம்புத்தளர்ச்சி,சளி,சுவாச காசம் நீங்கும். இரத்தம்  சுத்தியாகும்,பித்த ரோகங்கள்,வாந்தி,தலை சுற்றல், மயக்கம்,வாய்க்கசப்பு,மூச்சடைப்பு,வயிற்று வலி,கழிச்சல், மார்பு வலி,மாரடைப்பு,போன்றவைகள் நீங்கும். இரத்தம்
பெருகும் . 
 இது  உடலைப் பற்றிய நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து முறையாகும்.இது அனுபவத்தில்  கை கண்ட அரிய முறையாகும்.

புதன், 11 பிப்ரவரி, 2015

ஆதிசங்கரர், ஒவ்வொரு நட்சத்திரத்தினருக்கும் அருளிய ஸ்ரீ சிவ பஞ்சாட்சர நட்சத்திர மாலா ஸ்லோகம்


ஆதிசங்கரர், ஒவ்வொரு நட்சத்திரத்தினருக்கும் அருளிய ஸ்ரீ சிவ பஞ்சாட்சர நட்சத்திர மாலா ஸ்லோகத்தை தினமும் படியுங்கள். சகல பாக்கியமும், செயல்களில் வெற்றியும் கிடைக்கும்.

* அசுவினி
ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய
தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய
பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய
* பரணி
கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய
சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய
பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய
* கார்த்திகை
இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நம: சிவாய
துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய
அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய
* ரோகிணி
ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய
பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய
சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய
* மிருகசீரிடம்
வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய
ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய
காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய
* திருவாதிரை
ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய
ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய
ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய
* புனர்பூசம்
காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய
ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக ய வர்மணே நம: சிவாய
ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய
* பூசம்
ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய
சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய
மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய
* ஆயில்யம்
யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய
ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய
அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய
* மகம்
தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்ாத வேதஸே நம: சிவாய
அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய
உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய
* பூரம்
ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய
ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய
ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய
* உத்திரம்
தீனமான வாளி காம தேனவே நம: சிவாய
ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய
தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய
* ஹ ஸ்தம்
ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய
ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய
ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய
* சித்திரை
ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய
மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய
நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய
* சுவாதி
ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய
பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய
சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய
* விசாகம்
பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய
தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய
ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய
* அனுஷம்
மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய
கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய
அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய
* கேட்டை
ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய
அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய
கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய
* மூலம்
திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய
தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய
ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய
* பூராடம்
அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய
ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய
பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய
* உத்திராடம்
கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய
சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய
குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய
* திருவோணம்
விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய
சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய
கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய
* அவிட்டம்
அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய
ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய
விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய
* சதயம்
ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய
பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய
தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய
* பூரட்டாதி
புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய
தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய
யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய
* உத்திரட்டாதி
அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய
* ரேவதி
சூலினே நமோ நம: கபாலினே நம: சிவாய
பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய
சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய.