மகான் கொங்கண மகரிஷி அருளிய கவியின் சாரம்:
மனித வர்க்கத்தில் ஒரு சிலர் நெறியுடன் வாழ்ந்தும், பக்தி செலுத்தியும் வருவார்கள். நோக்கம், கடவுளை அடைய வேண்டும் என்பதற்காக. கடவுளை அடைய வேண்டும என்றால் உண்மை பொருளை அறிந்தவர்களுடைய ஆசி வேண்டும். ஆசி இல்லாமல் நாம் என்ன முயன்றாலும் வீடுபேறு அடைய முடியாது.
வீடுபேறு அடைய விரும்புகின்றவர்கள், மகான் கொங்கண மகரிஷி - அருளிய கடைக்காண்டம் 500ல் எழுபத்தாறாம் கவியான அகத்திய மாரிஷி நமா என்றென்று நாமஜெபம் செய்ய வேண்டும் என்றும், அப்படி நாமஜெபம் செய்து வந்தால் ஆசான் அகத்தீசர் அவர்கள் நமது உணர்வோடும் உணர்ச்சியோடும் நாடி நரம்புகளில் ஊடுருவி, தேக கசடை நீக்கி அஷ்டமா சித்தியையும் தருவார். அதுமட்டுமல்ல குளிகை என்று சொல்லப்பட்ட வாசியையும் நடத்தி வருவார். மேலும், மலமாயையும், மனமாயையும் மற்றும் தேகபந்த பாசத்தையும் நீக்கி, நமக்கு அகத்தீசன் காவி உடை தருவார். ஆசான் அகத்தீசர் காவி உடை தந்தால் அதற்கு பிறகு ஆசான் அகத்தீசர் ஆசிபெற்ற எண்ணிலடங்கா ஞானிகள் நமக்கு உற்ற துணையாக இருந்து அருள் செய்வார்கள்.
எனவே, அகத்தீசனை திருவடியை உருகி தியானம் செய்து வந்தால், யாராலும் அடைய முடியாத மேற்கதி அடையலாம். அகத்தீசனை பூஜை செய்து வருகின்ற மக்களுக்கு எந்த தடைகளும் இருக்க முடியாது. அவர் ராஜயோகம் பெற்ற பெருமை கொள்வார். ஆசான் அகத்தீசர், சுப்ரமணியர் என்று சொல்லப்பட்ட மூலக்கனலில் தோன்றியவராவார்.
எனவே, அகத்தீசரை பூஜை செய்து வருகின்ற அன்பர்களுக்கு ஆயிரத்தெட்டு அண்டத்திலுள்ள தேவர்களெல்லாம் கைகட்டி சேவை செய்வார்கள். ஆகவே ஆசான் அகத்தீசன் பெருமைக்கு ஈடு இவ்வுலகில் இல்லை. எனவே ஆசான் அகத்தீசனை பூஜிப்போம்! எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ்வோம்!!.
ஐயனே போற்றி போற்றி அருள்பெற்ற தேவே போற்றி
மெய்யனே போற்றி போற்றி மெய்சுடர் அணிந்தாய் போற்றி
கையனே போற்றி போற்றி காசினி முனிவா போற்றி
உய்யனே எனையாட் கொண்ட உந்தியில் உதிக்குந்தேவே
உந்தியிலுதிக்குந்தேவே ஒருபொருள் உகந்தாய் போற்றி
சிந்தையில் நினைந்த போதே திருநட மிட்டாய் போற்றி
வந்தித்தேன் உந்தன் பாதம் வானமுந் திறந்தாய் போற்றி
அந்தித்தேன் குருவே ஐயா அடியினைப் போற்றி போற்றி
மகான் புலத்தியர் - 3.
போற்றென்ற அடியேன் உள்ளம் பூரண மதுவும் காட்டி
சாற்றென்று யோக ஞானம் சாதனம் அதுவுங்காட்டி
ஆற்றென்ற கபால தீட்சை அருள்பெற்ற சமாதி காட்டி
யேற்றென்ற வாசி காட்டி யெனையாண்ட சரணம் போற்றி
சரணத்தில் விழுந்தேன் கோவே சச்சிதானந்த மூர்த்தி
சரணத்தில் முன்ன மின்னம் தானது கருக்கஎன்னக்
கரணத்தில் வழலை தானுங் கபாலத்தில் ஒழிந்து போக
அரணத்தில் உதித்த பாதம் அறுசுவை ஒழித்துப்போடே
மகான் புலத்தியர் - 4.
குருவடி பொற்றாள் சரண்சரணம் கும்பமுனியே சரண்சரணம்
திருவடி நாதா சரண்சரணம் சித்தர்களின் அருளே சரண்சரணம்
அருள்வடி வானாய் சரண்சரணம் அமரர்கள் கோவே சரண்சரணம்
பொருளடி மூலங் காட்டிற்று போதித்த குருவே சரண்சரணம்
போதித்த குருவே சரண்சரணம் பொதிகை வளர்அம்பலர் சரணம்
வேதித்தெனையே ஆட்கொண்ட விமலா சரணம் மெய்ஞ்ஞானம
சாதித்த தேவே சரண்சரணம் சமுசயந்தீர்த்தாய் சரண்சரணம்
ஓதித்தருவாய் சரண்சரணம் உண்மைப்பொருளே சரண்சரணம்.
மகான் புலத்தியர் - 5.
லபிக்கவழி(சித்திக்க வழி) சொல்லுகிறேன் ஆத்தாளே நந்திதிருமூலரையும்
லபிக்கக்காளாங்கியையும் ஆத்தாளே நாதாந்தபோகரையும்
சத்திசிதம்பரமும் ஆத்தாளே சட்டமுனி பூசைசெய்வாய்
உத்தமக்கொங்கணரை ஆத்தாளே உசிதமாய் பூசைசெய்வாய
கருவூரார் ஆனந்தர் ஆத்தாளே கண்டு வழிதெரிந்தோர்
ஒருநெறியாய் இவர்களையும் ஆத்தாளே உண்மையுடன் பூசைசெய்தால்
சண்டாளன் ஆனாலும் ஆத்தாளே தான் வேதைகாண்பானே
கண்டசேதி சொன்னேன் நான் ஆத்தாளே.
மகான் அழுகண்ணர் - 6.
அகத்தியரே பெரும்பேற்றை அடைந்தோர் ஆவார்
அம்மம்மா வெகுதெளிவு அவர் வாக்குத்தான்
அகத்தில் உறைபொருள் எல்லாம் வெளியாய்ச் சொல்வார்
அவர்வாக்கு செவி கேட்க அருமையாகும்
அகத்தியரின் பொதிகையே மேருவாகும்
அம்மலையும் அகத்தியரின் மலையுமாகும்
அகத்தியரின் அடையாளம் பொதிகைமேரு
அவர்மனது அவரைப் போல் பெரியார் உண்டோ.