மெய்கண்ட என்றால் உண்மையை கண்ட என்பது பொருள். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் சுந்தரர் ஞானம் பெற்ற தலத்தில், 780 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் மெய்கண்ட நாயனார். இந்த தலத்திற்கு பெயர் திருவெண்ணெய் நல்லூர் ஆகும்.
பக்தி என்னும் நிலையை தாண்டி, தான் யார் என்னும் கேள்விக்கு பதில் அளிக்கும் அறிவே சித்தாந்தம்.
சைவ மதத்தை தழுவி ஞான நிலையை அடைபவர்கள் "சைவ சித்தாந்தம்" என்னும் உயர் அனுபவத்தை நம் முன் வைக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக 12 முதல் 14ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் தோன்றிய பாடல்களே மெய்கண்ட சாத்திரங்கள். மொத்தம் 14 சாத்திரங்கள் உள்ளது, 4 பெயர்களால் ஏற்ற பட்டுள்ளது. இதனில் மெய்கண்ட தேவர் எழுதியது 12 சூத்திரங்கள். இவர் குருவின் பெயர் பரஞ்சோதி முனிவர்.
மெய்கண்டார் ஜீவசமாதி திருவெண்ணெய் கோவில் அருகே உள்ளது. ஆதீனத்தில் இருப்பதால் வாசல் மதியம் மூடுவதில்லை. தியானம் செய்ய ஒரு அருமையான இடம். இதை எழுதும் பொது ஈஸ்வரபிரசாத் அய்யா சொன்னது நினைவுக்கு வருகிறது..... . பக்தி என்னும் நிலையை தாண்டி, தான் யார் என்னும் கேள்விக்கு பதில் அளிக்கும் அறிவே சித்தாந்தம்.
சைவ மதத்தை தழுவி ஞான நிலையை அடைபவர்கள் "சைவ சித்தாந்தம்" என்னும் உயர் அனுபவத்தை நம் முன் வைக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக 12 முதல் 14ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் தோன்றிய பாடல்களே மெய்கண்ட சாத்திரங்கள். மொத்தம் 14 சாத்திரங்கள் உள்ளது, 4 பெயர்களால் ஏற்ற பட்டுள்ளது. இதனில் மெய்கண்ட தேவர் எழுதியது 12 சூத்திரங்கள். இவர் குருவின் பெயர் பரஞ்சோதி முனிவர்.
"மெய் என்ன என்று உணர்வே இந்த மெய். இது மெய்".