Nothing is Mine, Everything Is Yours, O Mercyful Lord Arunachchala! என்னுடையது எதுவுமில்லை, அனைத்தும் உன்னுடையதே, அருளாளா!அருணாச்சலா! தன்னை அறியும் தவமே பெரிதென்று தரணியில் தவம் புரிவோரெல்லாம் சிவனை அறிவார், சிவமே ஆவார்"."Every Visitor to my Dwelling is GOD SHIVA HIM SELF"
திங்கள், 30 நவம்பர், 2020
தத்துவ கிறுக்கன் (கிறுக்கி)
வாலாம்பிகை (சித்தர்களின் தெய்வம்)
ஞாயிறு, 29 நவம்பர், 2020
நீடித்த ஆயுள் தரும் கார்த்திகை தீப வழிபாடு
‘‘ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி’’ என மாணிக்கவாசகர் கூறுவார்.
நினைத்தால் முக்தி தரும் திருவண்ணாமலையில் சிவபெருமான் ஜோதி வடிவாக தோன்றினார். இதை நினைவு கூரும் விதத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தின் போது, திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகின்றது.
தீப வழிபாடு என்பது நீண்ட நெடிய காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. வட நாட்டில் தீப வழிபாடு என்பது ‘தீபாவளி’ என்றும், தெற்கே ‘கார்த்திகை தீபம்’ என்றும் கொண்டாடப்படுகிறது. தேவார பாடல் ஆசிரியர்களில் ஒருவரான திருஞான சம்பந்தர் மயிலாப்பூரில் பாடிய திருப்பதிகத்தில் பூம்பாவை என்ற பெண்ணுக்கு உயிர் கொடுப்பதற்காக பாடிய போது... ‘‘கார்த்திகை விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்’’ என்று பாடியுள்ளார்.
இதன் மூலம் கி.பி 7, 8–ம் நூற்றாண்டில் இருந்தே, கார்த்திகை வழிபாடு சிறப்பாக கொண்டாடப்படுவது தெரிகிறது. தீபத்தின் நடுவில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருள்வதாக ஐதீகம். எனவே தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் முப்பெருந்தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.
அடிமுடி காணாத வரலாறு
படைக்கும் கடவுளாகிய பிரம்மாவுக்கும், காத்தல் கடவுளாகிய திருமாலுக்கும் இடையே ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது. அப்போது சிவபெருமான் ஆதியும், அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியாய் தோன்றினார். ‘இருவரில் யார் எனது அடியையோ (பாதம்), முடியையோ காண்கிறீர்களோ அவர்களே பெரியவர்’ எனக் கூறினார்.
திருமால், வராக உருவம் கொண்டு திருவடிகளை காணச் சென்றார். பிரம்மா அன்னப்பறவை உருக்கொண்டு திருமுடியை காண பறந்து சென்றார். ஆனால் இருவரும் அடியையோ, முடியையோ காணமுடியாமல், அகங்காரங்கள் அழிய பெற்றவர்களாக சிவ பரம்பொருளே உலகின் முழு முதற் பரம்பொருள் என்பதை உணர்ந்துகொண்டனர். தங்களது பிழையை பொறுத்து அருளுமாறு சிவ பெருமானை பிரார்த்தனை செய்தனர்.
உடனே சிவன், சிவலிங்க திரு உருவத்தோடு ஜோதிப்பிழம்பில் இருந்து வெளிப்பட்டார். அப்போது திருமால், பிரம்மா இருவரும் சிவபெருமானை வழிபட்டு உண்மை ஞானம் பெற்றனர். ஜோதிப்பிழம்பு அருணாசலமானது. அதில் இருந்து தோன்றிய சிவலிங்கம் அருணாசலேசுவரர் ஆனார். இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் விதத்தில் தான், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. மாதந்தோறும் கார்த்திகை விரத நாள் வருகிறது. கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை தினத்தை ‘திருக் கார்த்திகை’ என்பர்.
விரதம் இருப்பது எப்படி?
கார்த்திகை முதல் நாளன்று பரணி நட்சத்திர நாளில், பகலில் ஒருவேளை மட்டும் உணவருந்த வேண்டும். கார்த்திகைஅன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். மறுநாள் அதிகாலையில் காலைக்கடன் களை முடித்து நீராடி பாலினை அருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். உமாதேவிக்கு சிவபெருமான் தனது இடப்பாகத்தினை கொடுத்து ஆட்கொண்டதும் இந்நாளில்தான். அன்று ‘‘ஓம் நமச்சிவாய வாழ்க’’ என்று சொல்வது தீராத வினைகளை தீர்த்து வைக்கும். நீங்காத செல்வத்தையும் வழங்கும். நீடித்த ஆயுளை தரும்.
கார்த்திகை விரதத்தை தொடர்ந்து கடைப்பிடித்தால் சுகபோக வாழ்வு வாழலாம். இந்த விரதத்தை 12 ஆண்டுகள் கடைப்பிடித்து நாரத மகரிஷி சப்த ரிஷிகளுக்கு மேலான பதவியை அடைந்தார்.
வீடுகளில் மாலை பவுர்ணமி நிலவு தோன்றும் நேரத்தில் வீட்டு வாசலில் வாழைக்கன்று நட்டு வைத்து அதன்மேல் தீபம் ஏற்றியும், வீடுகளுக்குள் வெளிச்சம் தரும் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றியும் அழகுபடுத்திட வேண்டும். இதைக் கார்த்திகை விளக்கீடு என்றும், சர்வலாய தீபம் என்றும் அழைக்கின்றோம்.
தீபம் இருளை நீக்கிப் பொருளை விளக்கம் பெறச் செய்கிறது. தீபம் பிரகாசமாக இருக்குமிடத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். 12 ஆண்டுகள் விரதமிருந்து முருகனை பிரார்த்தனை செய்வதால் வேண்டும் வரங்களைப் பெறலாம். கார்த்திகை தீபத்தன்று முருகன் ஆலயங்களில் தீப விழா இடம் பெறுவது குமாராலய தீபம் என்று அழைப்பர்.
கார்த்திகை மாதம் முழுவதும் மாலை வீட்டு வாசலில் விளக்கேற்றி வைக்கின்ற பழக்கம் உண்டு. கார்த்திகையன்று முருகன் ஆலயங்களில் மாவிளக்கு போட்டு வழிபாடு செய்வர். ஆலய முன்புறத்தில் காய்ந்த ஓலை, மட்டை, இலைகளால் பனைவடிவில் கட்டப்பட்ட சொக்கப்பனை ஏற்றி ஜோதி வடிவாகக் காட்சியளிக்க செய்வர்.
சிவபெருமான் ஜோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து தரிசனம் செய்வர்.
பூஜைக்கேற்ற விளக்கு
குத்து விளக்கு அல்லது பூஜை விளக்குகளுக்கு வெள்ளி விளக்கு சிறப்புடையது. ஐம்பொன் விளக்கு அடுத்து சிறப்புடையது. வெண்கல விளக்கு அடுத்து சிறப்புடையது. பித்தளை விளக்கு, அதற்கு அடுத்து சிறப்புடையது. எக்காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்கை பூஜைக்கோ, வீடுகளில் ஏற்றுவதற்கோ பயன்படுத்தக் கூடாது. அதைவிட மண் அகல் விளக்கு உத்தமம்.
நெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து அதன் மூலம் தீபம் ஏற்றி, எவரொருவர் ஒரு மண்டலம் (45 அல்லது 48 நாட்கள்) பூஜை செய்கிறார்களோ அவர்களுக்குத் தேவியின் அருள் கிடைக்கும்.
தீபம் ஏற்றும் முறை
முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும், 2–வது வடக்கு நோக்கி ஒரு திரியும், 3–வது மேற்கு நோக்கி, இரு திரியும் ஏற்ற வேண்டும். தெற்கு நோக்கி தீபம் ஏற்ற கூடாது. குளிர்விக்கும் போது, முதலில் மேற்கே உள்ள திரிகளையும், 2–வது வடக்கே உள்ள திரியையும், 3–வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும். ஊதி அணைக்க கூடாது. மேற்கூறிய முறைப்படி 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி எரிய விடுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை சரி செய்யும். குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் குறையும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
சொக்கப்பனை கொளுத்துவது ஏன்?
திருக்கார்த்திகை தினத்தன்று சிவாலயங்களிலும், முருகன் கோவில்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. கோவிலுக்கு அருகில் பனை மரத்தை நாட்டி அதில் பனை ஓலைகளையும், வெடிகளையும் இணைத்து கட்டுகின்றனர். மாலையில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. சில கோவில்களில் பனை ஓலைகளை ஒரு சிறு கூண்டைப்போல கட்டி அதை எரிக்கின்றனர். ஆணவம் எரிகிறது. கூடவே அஞ்ஞானமும் எரிகிறது. இறைவன் ஜோதி வடிவாக காட்சி தருகிறான்.
சிவபெருமான் திரிபுரங்களை எரித்த நாள் திருக்கார்த்திகை நாளாகும். சிவன் எரித்த பாவனையை வெளிப்படுத்துவதற்காக சொக்கப்பனை கொளுத்து கின்றனர். மேலும் அடி, முடி தேடிய விஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும், ஆதி, அந்தம் இல்லாத அருட்பெரும் ஜோதி வடிவமாக சிவபெருமான் காட்சி கொடுத்தார். நெருப்புக்கு முதலும், முடிவும் கிடையாது. சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சி கொடுத்ததை நினைவு கூரும் விதத்திலும் சொக்கப்பனை கொளுத்துகின்றனர்.
விளக்கேற்ற நல்ல நேரம்
கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை விளக்கேற்றினால் புண்ணியம் சேரும். மாலை பிரதோஷ வேளையில் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபம் ஏற்றினால் கல்வி அபிவிருத்தியாகும். திருமண தடை விலகும். வீட்டில் மாலை 6.30 மணிக்கு அனைவரும் அவசியம் விளக்கேற்ற வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது கையால் அணைக்கக் கூடாது. பூவினால் குளிர்விக்கலாம்.
அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அதன்பின்பு 5 நூல் கொண்ட நூல்திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும், மகிழ்ச்சி நிலவும், நல்ல வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியம், மனதுக்கு ஏற்ற வரன் அமையும் மற்றும் சகலவித செல்வங்களும் கிடைத்து வாழ்வில் வளம் பெருகும்.
சனி, 28 நவம்பர், 2020
கார்த்திகை தீபம் ஏற்றும் போது......05.12..2014
"துன்பம் அகற்றும் மலை தொல்வினையை நீக்குமலை,
அன்பர்தமை வாவென்று அழைக்கும்மலை -தன்பகத்தைக்
காட்டுமலை தன்னைக் கருத்தில் உறும்
அன்பர் இடர் வாட்டுமலை அண்ணாமலை.''
பொருள்: நம் துன்பங்களைப் போக்குவதும், முற்பிறவியில் செய்த தீவினைகளைக் களைவதும், அன்பர்களை தன்னிடத்தே வா என்று அழைப்பதும். தன்னை நாடி வந்தவர்களுக்கு திருவடிகளைக் காட்டுவதும், தன்னை எப்போதும் மனதில் இருத்தி தியானிப்பவர்களின் இடர்களை வாட்டுவதுமாகிய மலை திருவண்ணாமலையே.
விளக்கம்: இந்தப் பாடலை தீபமேற்றும் போது பாடினால் பிறப்பற்ற நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.
சீடனின் உரிமை... குருவே சரணம்
மனிதன் என்பவன் தான் இறை என்ற இயல்பிலே இருந்து நிறைவினை உணராத நிலை தனக்குத் தெரிவதாகக் கருதி, மீண்டும் இறையை நோக்கிச் செல்லும் போது, அந்த சுத்த வெளியில் மனதை விரித்தும், ஒடுங்கியும் நின்று பார்க்கும் போது, அங்கே அறிவது (அறிவு + அது) என்று த்வைத மனப் பான்மையிலே இறை உணர்வினை உணர்கிறான். அறிவு என்பது தனது என்று மூலம் என்றும், அது என்பதை இறை என்றும் நினைக்கிறான். அறிவது என்பதிலே அறியப்படுவது என்ற சாட்சி நிலையும் அடங்கியே இருக்கிறது. இந்த சாட்சி அறிவும் இறைனிலை தான் என்றாலும், இறையே தான் சாட்சியாக இருந்து அந்த அனுபவத்தை பதிவு செய்கிறது...
முடிவினில், அறிவது என்பதைத் தாண்டி ஒடுங்கும் போது, அறிவது என்று இரண்டு நிலைகள் ஒடுக்கப்படும் போது, அங்கே முனைப்பு ஒடுக்கப்படுவதைக் காணும் போது, சத்தியமான இறைதத்துவம் அவனுள் ஜொலிக்கிறது.
இறையை உடல் என்ற வடிவத்திலே கண்ட மகான்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களிலே ராமலிங்க வள்ளலார், ராமகிருஷ்ணர் போன்ற மகான்கள் எல்லாம் மன ஓர்மையினால் இறையோடு பேசினர்..
இருப்பினும் இந்த அனுபவம் எல்லாம் மகான்கள் சாதனையாக சிலரால் போற்றப்பட்டாலும், அதே நிலையிலே இருந்து விடவில்லை. மேற்கொண்டு இறையோடு சுத்தவெளியாகக் கரைந்து நின்றனர். இம்மகான்களின் எழுத்துக்கள் சுத்தவெளியினையே தான் மூலக்கருத்தாக இருக்கிறது. விவேகானந்தர் முதன் முறையாக ராமகிருஷ்ணரைப் பார்த்த போது, என்ன இது இவர் மன நிலை சரியில்லாதவரா? என்று நினைத்தாராம்.
சீடனைப் பார்த்தவுடன், ராமகிருஷ்ணர் அப்படியே அவரை அணைத்து, உனக்காக எவ்வளவு நாளாய் காத்துக் கொண்டிருந்தேன் தெரியுமா? எதற்கு இவ்வளவு தாமதமாக வந்திருக்கிறாய்? என்றெல்லாம் கண்களிலே ஆனந்தக் கண்ணீருடனும், சந்தோசத்திலே துடித்தாராம் குரு. அதெல்லாம், உடல் என்ற எல்லைக்குள் இருந்த சீடனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஒரு முறை சித்திகள் பெறுவது பற்றி குரு கேட்ட போது, விவேகானந்தர் குருவிடம் கேட்டாராம்... இந்த சித்திகளால், எனக்கு முக்தி பெறுவதற்கு உதவுமா? என்று கேட்டபோது, ராமகிருஷ்ணர் முக்திக்கு இந்த சித்திகள் உதவாது என்றவுடன்... அப்படி என்றால் எனக்கு அந்த சித்திகள் வேண்டாம் என்றாராம் விவேகானந்தர்... குருவின் கண்களிலே ஆனந்தக்கண்ணீருடன் பெருமையாகச்சொன்னாராம்... பாருங்கள்.. எனது நரேந்திரனை என்று ...
நாம் நமது குருவிற்கு அப்பேர்ப்பட்ட சீடனாக இருப்பது தான் குருவிற்கு உயர் புகழினைத் தர முடியும்.. குருவிற்கு உயர் புகழ் தருவது சீடனின் உரிமை. கடமை. நன்றிக் கடன். அதுவே குரு காணிக்கை.
செவ்வாய், 24 நவம்பர், 2020
தீட்சை என்றால் என்ன ? சிறு விளக்கத்துடன் !
`தீ’ என்றால் மலம். `ஷை’ என்றால் ஒழித்தல்.
மலமாகிய அழுக்கை ஒழித்தலே தீட்சை.
மனிதன் இறைநிலையை அடைவதற்கு மந்திரக்கலை, தந்திரக்கலை, உபதேசக்கலை ஆகிய மூன்று படிநிலைகள் உள்ளன.
மந்திரக்கலை, தந்திரக்கலை இரண்டும் சரியை, கிரியை, யோக நெறிமுறைகளில் உள்ள குருமார்கள் போதிப்பதாகும்.
நான்கு எழுத்து, ஐந்து எழுத்து, ஆறு எழுத்து, எட்டு எழுத்து உள்ளிட்ட பல மந்திரங்களை உச்சரித்து செய்யும் பயிற்சிகள் மந்திரக்கலை ஆகும். இதை போதிப்பவர்கள் மாந்திரீகர்கள் ஆவர்.
முத்திரைகளையும், யந்திரங்களையும் செய்யும் பயிற்சிகள் தந்திரக்கலை ஆகும். இதைப் போதிப்பவர்கள் தாந்திரீகர்கள் ஆவர்.
இந்த இரண்டு கலைகளைக் காட்டிலும் உன்னதமான, ஒப்புயர்வற்ற ஞானநிலைக்கான கலையே உபதேசக்கலையாகும். இதை போதிக்கும் குருமார்கள் ஞானகுரு ஆவார்கள். இந்த ஞானகுருக்களே தன் சீடர்களுக்கு உண்மையான தீட்சைகளை வழங்குகிறார்கள்.
தீட்சைகள் ஆறு வகைப்படும். அவையாவன :
பரிச தீட்சை, நயன தீட்சை, பாவனா தீட்சை, வாக்கு தீட்சை, யோக தீட்சை, நூல் தீட்சை
பரிச தீட்சை :
ஒரு பறவை முட்டையிட்டு, அதன் மேல் உட்கார்ந்து, அதன் உடல் வெப்பத்தினால் முட்டைபொரிந்து குஞ்சு வெளியாவதைப் போன்றது, பரிச தீட்சையாகும். ஞானகுரு தனது திருக்கரத்தினால் சீடருடைய நெற்றியில் தொட்டு, மூலதாரத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி ஆற்றலை மேல் நிலையில்– புருவ மத்தியிலும், தலை உச்சியிலும் – நிலை நிறுத்துவதே பரிச தீட்சையாகும்.
நயன தீட்சை :
ஒரு மீன் முட்டையிட்டு அதனைத் தன் கண்களால் பார்த்து பார்வையின் வெப்பத்தினால் முட்டை பொரிந்து, மீன் குஞ்சு வெளியாவதைப் போன்றது நயன தீட்சை. ஞானகுரு தமது திருக்கண்ணால் சீடரின் கண்களைப் பார்த்து புறத்தில் செல்லக்கூடிய சீடரின் மனத்தை, அகத்தில் பார்க்க அருளுவதே நயன தீட்சையாகும்.
பாவனா தீட்சை :
ஒரு ஆமை கடற்கரையில் முட்டைகள் இட்டு, பின்பு கடலுக்குள் சென்று முட்டைகள் பொரிந்து குஞ்சுகளாக மாறவேண்டும் என்று இடையறாது நினைத்துக் கொண்டிப்பதைப் போன்றது பாவனா தீட்சை ஆகும். ஞானகுரு தன்னைப் போன்றே தன் சீடர்களையும் உடல் உணர்வு நிலையை விட்டு, உயிர் உணர்வில் நிலைக்கச் செய்து, சகஜத்திலேயே வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகமான, எண்ணமற்ற மோனநிலையாம் ஆனந்தப் பெருவெளியில் நிலைக்க வைப்பதே பாவனா தீட்சை.
யோக தீட்சை :
ஞானகுரு தன் அருளால் அகார, உகார, மகார, சிகார, வகார நிலைகளை உணர்த்துவதே யோக தீட்சையாகும். தலை உச்சியாகிய சிகாரத்திலிருந்து 12 அங்குல உயரத்திலுள்ள அண்டத்திலுள்ள பிண்டமான பெருவெளியில் நிலைத்து வெளிக்குள் வெளிகடந்து, சும்மா இருப்பதுவே வகார திருநிலை. இதனை ஞானகுரு, அக அனுபவமாக உணர்த்துவதே யோக தீட்சை ஆகும்.
வாக்கு தீட்சை :
ஞானகுரு, ஞானிகள் அருளிய திருமறைக் கருத்துகளையும், தான் தனக்குள் மெய்ஞான அனுபவமாக உணர்ந்ததையும், இறைத்தன்மையில் நிலைத்து நின்று, உள்ளன்போடு கேட்கும் சீடர்களுக்குச் சொல்லி, அவர்தம் உணர்வில், உயிரில், ஆன்மாவில் கலந்து, ஞான அதிர்வுகளை உருவாக்கி, என்றென்றைக்கும் வழிநடத்துவது வாக்கு தீட்சையாகும்.
நூல் தீட்சை :
சரியை, கிரியை, யோக மார்க்க நூல்களை நீக்கி, ஞானத்திற்காக மட்டும் மெய் உணர்ந்த அருள் ஞானிகள் அருளிய திருமறைகளையும், அவர்கள் அனுபவித்த பேரானந்த அனுபவங்களையும், அதன் வழி நடக்கும் போது ஏற்படும் நிறைவான அனுபவக் கருத்துக்களையும் நூலாக்கி சீடர்களுக்கு வழிகாட்டும் நூலாக அருள்வது நூல் தீட்சையாகும்.
உண்மையில், யோக தீட்சை என்பது மூச்சுப்பயிற்சியோ, வாசியோகம் என்றால் என்னவென்று அறியாமலேயே மூச்சை உள்ளுக்குள்ளே ஊதிச்செய்யும் பயிற்சிகளோ அல்ல. எண்ணமற்று, சகஜத்திலேயே, மனதில் மோனநிலையைப் பெற்று சிவவெளியில் லயமாகி இருப்பதே வாசி யோகம் என்பதைப் புரிந்து கொள்க.
எடுத்த இப்பிறப்பில் தானே மெய்யான ஞானகுருவினைத் தேடிக் கண்டடைந்து, பணிந்து, அர்ப்பணித்து, ஞானதீட்சையைப் பெற்று, மன அழுக்குகளையும், உயிர் மற்றும் ஆன்ம அழுக்குகளையும் நீக்கப் பெற்று, மாசற்று தன்னை உணர்ந்து, தனக்குள் இறை நிலையை உணர்ந்து, இறைத்தன்மையில் இரண்டறக் கலந்து, அதில் கரைந்து என்றும் நித்தியராக வாழ்தலே சிறப்புடையது!
ஞாயிறு, 22 நவம்பர், 2020
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே..
என்னுள்ளே உள்ள குரு தான் இதை செய்தார் என்று எனக்குத் தெரியும்... ஆனால் எங்கும் என்னுள்ளே உள்ள குரு என்ற புதையலை வெளிக் காண்பிக்கவே இல்லை.... குரு என்ற உதவி எப்படி வேலை செய்தது என்பதை அப்படியே சொன்னேன்...
குரு என்ற தொடர்பு என்பதே எனக்குப் போதும், எவருக்கும் போதும் என்ற முடிவு எனக்குள் எட்டி விட்டது... அதன் பிறகு எங்கு எந்தப் பெரிய பிரச்சினை வந்தாலும், முற்றிலும் மாறுபட்ட ஒரு அணுகு முறையை என்னுள்ளே இருந்து வெளிக்காட்டினார் என் இனிய ரமணர்.. அதனால் என்னால் சாதிக்க முடிந்தது...
கண் தெரியாத சீடன் பிரபஞ்சத்தினை பற்றி சொல்வது போல இது...
சீடனின் மன அலைக்கு திருப்பியக்கமாய் குருவானவர் எப்போதும் இயங்கிக்கொண்டிருப்பார்.. இது சத்தியம்...
வியாழன், 19 நவம்பர், 2020
மெய் ஞானம் எனும் விஞ்ஞானம்
ஒவ்வொரு நாடிகளுக்குள்ளும் பிரணவம் ஒவ்வொரு அக்க்ஷரமாக விரிந்து ள்ளது. அந்த அக்ஷரங்களை ஞானத்தால் உணர்ந்த நம் முன்னோர்கள், அவற்றை அடிப்படையாகக் கொண்டு பெயர்களை உருவாக்கினார்கள். 1008 நாடிகளின் அக்ஷரங்களில் உருவானதே சகஸ்ரநாமம் எனப்படுகிறது. அந்த நாமங்களை உச்சரிப்பதன் மூலம் அந்தந்த நாடிகளில் அதிர்வை உருவாக்கி அவற்றின் அவற்றின் இதழ்களை விரியச் செய்வார்கள். அடுத்த படியாக அதிமுக்கியமான 108 நாடிகளின் அக்ஷ்ரங்களில் உருவானதே அஷ்டோத்ர நாமங்கள். 108ல் முக்கியமான 18 கேந்திரங்களை கண்டு அவற்றில் விபூதி தரிக்கச் சொல்கிறார்கள். இன்னும் நுணுக்கமாக ஆராய்ந்து 12 நாடிகளைக் கண்டு அவற்றில் நாமம் இடச் சொல்கிறார்கள். அந்த 12 ஐயும் சுருக்கி 8 ஆக்க விளைந்ததே அஷ்டாச்சரம்.
1க்கு க, 2க்கு உ, 3க்கு ங, 4க்கு ச, 5க்கு ரு, 6க்கு கா,7க்கு எ, 8க்கு அ, 9க்கு சு, 10க்கு ய என்பதாகும் அவை. இதில் எட்டுக்கு அ வும், இரண்டுக்கு உ வும் இருப்பதையும், அவை மந்திர அட்சரங்களான அ, உ என்ற உயிர் எழுத்துகளை குறிக்கவே எட்டிரண்டு என்றுசித்தர்கள் பாடல்களில் மறைபொருளாகச் சொல்கின்றனர். இதனை அகாரம், உகாரம் எனப் பெயரிட்டு, இந்த அ, உ என்ற எழுத்துகளே பல தத்துவங்களுக்கும் அடிப்படையாக உள்ளதால் அதனை மறைவாக எட்டிரண்டு என்றனர்.
அ, உ, ம் என்ற அட்சரங்களே ஓம் எனும் பிரணவ மந்திரத்தில் உள்ளது.அனைத்து மந்திரங்களுக்கும் மூலமானதும் இந்த ஓங்காரம் எனும் பிரணவமே. நாதமாகிய ஒலியும் விந்தாகிய ஒளியும் இணைவதையே 'நாத விந்து கலாதி நமோ நம' என்பார் அருணகிரி நாதர். பஞச இந்திரியங்களால் அறியப்படுவது அகாரம், மனதினால் அறியப்படுவது உகாரம், ஞானத்தினால் மட்டுமே அறியப்படுவது மகாரம். இனறைய விஞ்ஞானம் கண்ணுக்குத் தெரியாத அணுவில் கூட நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான் எனும் மூவகைச் சக்திகள் உள்ளதாக கண்டறிந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
சனி, 31 அக்டோபர், 2020
சித்தன் போக்கு சிவன் போக்கு.!!!
சித்தர் தமிழே உகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தழிழே மகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தமிழே அ+உ+ம கரஞ் சேர்ந்த ஓங்காரம்
சித்தர்களின் பாடல்களில் நிறைய ரகசியங்கள் நிரம்பி இருக்கின்றன.
சுலபமான நிரந்தரமாக குணமாக்கும் மருத்துவ முறை.
பக்தி நெறி, அருவ வழிபாடு, தன்னையுணர்தல், இறைவனின் நிலை அறிதல், இறையோடு ஒன்றுதல் என பல நிலைகளை அவர்கள் கூறியுள்ளார்கள்.
இதை விட மேலான சாகாக் கல்வி என்னும் இறவா நெறி பற்றிக் கூறியுள்ளார்கள். இதுவே சித்தர்கள் பற்றித் தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம் கொள்ளக் காரணமாக அமைகிறது.
அவர்கள் பாடல்களில் அவர்கள் பயன்படுத்தி உள்ள வார்த்தைகளின் நேரடிப் பொருளை கொண்டு நாம் அந்த பாடலுக்கான பொருளை தெரிந்து கொள்ள முயன்றால் அது கேலிக்குரியதாக மட்டுமே இருக்கும். அவர்களது பாடல்களை நமது வெற்று அறிவை கொண்டு புரிந்து கொள்ளுதல் இயலாது.
காரணம் இந்த சித்தர் கல்வி என்பது எவர் ஒருவர் தன்னுடைய வாழ்நாளை இறை நிலையினை அடைவதற்காக செலவிடத் தயாராக இருக்கிறாரோ அவர்களுக்கானது.
உலகியல் செய்து கொண்டு சித்தர்களின் பாடல்களை படித்துப் பொருள் கொள்வது என்பது மிகுந்த சிரமமான காரியம்.
இருப்பினும் சித்தர்களின் அருள் மற்றும் விட்ட குறை இருப்பவர்கள்
பாடலுக்கான உண்மை பொருள் உணரப் பெறுவார்கள்.
சித்தர்களை கேலி செய்பவர்கள் கேலிக்குரியவர்களாக மாறுவார்கள் இது உண்மை, சத்தியம்.
நாம் நினைப்பது போல சித்தர்கள் எண்ணிக்கை வெறும் பதினெட்டு மட்டுமல்ல. சித்தர்கள் கோடிக் கணக்கானவர்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே பாடல்கள் எழுதி வைத்து விட்டு சென்று இருக்கிறார்கள்.
மற்றவர்கள் இறை நிலை அடைந்து ஜீவ சிவ ஐக்கியம் ஆனவர்கள்.
இந்த கல்வியை கற்பதற்கு நாம் கற்ற உலகியல் ஏட்டு கல்வி பயன்படாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
நாம் பிறந்தது முதல் அதிகபட்சமாக நூறு ஆண்டுகள் வாழுகிறோம் என்றால் அதில் அதிகபட்சமாக அறுபது வயது வரை ஒரு நல்ல வேலை செய்வதற்கு குறைந்தது இருபது முதல் இருபத்தைந்து ஆண்டுகள் ஏட்டுக் கல்வி பயில்கின்றோம். அதன் பிறகு அந்த கல்வியை வைத்து அதிகபட்சமாக முப்பது முதல் நாற்பது ஆண்டுகள் பயன் அடைகிறோம். (வேலை செய்து ஊதியம் பெறுவதன் மூலம்) பிறகு முதுமைக்குள் ஆட்பட்டு தள்ளாட்டம் எய்தி, மரணத்தை அடைகிறோம்.
இப்படி அதிகபட்சமாக நாற்பது ஆண்டுகள் பயன்படக்கூடிய கல்விக்கே நாம் இருபது ஆண்டுகள் செலவிட தயாராக இருக்கும்போது. என்றைக்கும் அழியாத நிலையினை தெரிவிக்கும் ஒரு கல்வியினை கற்பதற்கு நாம் எவ்வளவு நேரம் செலவிட தயாராக இருக்கிறோம் என்றால் பதில் பூஜ்யமாகத் தான் இருக்கும்.
ஒரு கதைப் புத்தகத்தைப் படிப்பது போல சித்தர்களின் பாடல்களைப் படித்துப் புரிந்து கொள்ள நினைத்தால் அது முடியாத காரியமாகத்தான் இருக்கும்.
ஒருமையுள் தான் கற்ற கல்வி எழு பிறப்பும் தொடரும் என்று திருவள்ளுவர் சொன்னது இந்த கல்வியைத்தான்.
ஆகவே ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து நம்மை மேல் நிலைக்கு உயர்த்தும் ஒரு கல்வியை சுலபமாக கற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தால் அது ஏமாற்றமாகவே முடியும்.
இந்தக் கல்வியைக் கற்பதற்குச் சீடனை தேர்ந்தெடுப்பதற்கு கூட சாதனா சாதுட்டயம் என்று சித்தர்கள் வைத்து இருந்தார்கள்.
பக்குவப் பட்டவர்களுக்கே அதை போதித்தார்கள்.
காரணம் இது தன்னை உணரும் கல்வி.
ஏம சித்தி எனப்படும் சாதாரண உலோகத்தை, மாற்று உயர்ந்த தங்கமாக மாற்றும் கலை.
சாகா கல்வி எனப்படும் கற்பப் பயிற்சி
தத்துவ நிக்கிரகம் எனப்படும் தத்துவங்கள் அனைத்தையும் விட்டு விலகும் நிலை. கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்னும் ஜீவ சிவ ஐக்கியம்
என்னும் படிகள் உள்ளன.
சித்தர்களின் தத்துவங்களை நாம் சித்தாந்தம் என்றோ, வேதாந்தம் என்றோ, நாதாந்தம் என்றோ, போதாந்தம் என்றோ, கலாந்தம் என்றோ, யோகாந்தம் என்றோ தனி ஒரு அந்தத்திற்குள் அடக்கி விட முடியாது. காரணம் ஒவ்வொரு அந்தத்திலும் சொல்லப்பட்டவை ஒவ்வொரு அனுபவம் மட்டுமே. அதுவே முடிந்த முடிவாக இல்லை.
சித்தர்களின் வார்த்தைகளில் அனைத்து அந்தங்களும் இருக்கும் அதற்காக அவர்கள் ஒவ்வொன்றிலிருந்தும் கொஞ்சம் எடுத்துக் கொண்டார்கள் என்று பொருளல்ல. அவர்களின் உள் அனுபவத்திற்கு பொருந்துபவை மட்டுமே சொல்லப்பட்டிருக்கும். அந்த அனுபவங்கள் ஒவ்வொரு அந்தத்திலும் சிறிது இருக்கலாம். ஆகவே அவர்கள் அனுபவமே வார்த்தைகளாக் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆகவே அவர்கள் வேதாந்திகளா ? அல்லது சித்தாந்திகளா ?
என்று நாம் குழம்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டாம்.
இது மிகப் பெரிய ஆய்வு!
வெள்ளி, 30 அக்டோபர், 2020
சுத்தமான மந்திர உச்சாடனத்தை மனம் லயித்துக் கேட்டால்
மரண பயம் என்பது சிருஷ்டியின் நியதி....
உடலுக்கு மரணம் உண்டு. ஆனால் நாம் உடலையும் கடந்த பேருணர்வை பற்றியிருக்க வேண்டியவர்கள் அன்றோ. அதைக் குறித்து சிந்திப்பதை விட்டு எண்பது கோடி ஆசைகளை வளர்த்துக்கொண்டு ஔவை சொல்வதை போல சாகும் வரை சஞ்சலத்திலே உழல்வதின் பயனென்ன !
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம் போலச்
சாந்துணையும் சஞ்சலமேதான் (நல்வழி -28)
மனிதனுடைய தேவையோ நிதம் ஒரு ஆழாக்கு அன்னம், சுற்றிக்கொள்ள ஒரு துண்டு. அதை விட்டு மற்றவையெல்லாம் தேவையற்ற சுமையே என மேலும் சொல்கிறார் ஔவையார்.
புதன், 14 அக்டோபர், 2020
மரமும் மனிதனும்
மரத்தின் கீழ்அமர்ந்து தவம்செய்து சக்திகளை பெற்று வாழ்ந்தார்கள் நமது முன்னோர்கள்.
ஏன் அப்படி செய்தார்கள் என்றால், மரத்துக்கு, இயற்கைக்கு ஏற்றாற் போல மாறும் தன்மையுண்டு. தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், மரம் காற்றின் மூலமாகவும் சூரியனின் மூலமாகவும் சக்திகளை பெற்று, தண்ணீர் கிடைக்கும் வரை உயிருடன் இருக்கின்றது
அது எப்படிக் கிடைக்கின்றது? எப்படி மனிதன் அந்த சக்திகளைப் பெறுவது என்று தெரிந்து கொள்வதற்காக மரத்தின் கீழ் அமர்ந்து ஆராய்ச்சி செய்தார்கள். அந்த மரத்தின் அத்தனை இலைகளும் சுவாசிக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டார்கள். மரத்தின் எல்லா இலைகளும் சூரியனின் கதிரின் மூலமாகக் கிடைக்கும் சக்திகளைப் பெறுகிறது என்பதையும் கண்டுபிடித்தார்கள்
இதை வைத்துத்தான் மரம் தண்ணீர் இல்லாத போதும் வாழ்கிறது என்று தீர்மானித்தார்கள் .
அப்படி என்றால் மரத்தைப் போலவே நாமும் உணவு இல்லாமல் வாழ முடியுமா என்று உடலை ஆராய்ச்சி செய்தார்கள். அப்பொழுது தான் நமது தலைமுடியாலும் சுவாசிக்க முடிகிறது என்பதைக் கண்டு உணர்ந்திருக்கிறார்கள். அதை அறிந்து கொண்ட சித்தர்கள், தலைமுடியை வளர்த்தார்கள். இதைத் தெரிந்து கொண்டபின்னர் இயற்கையோடு நாமும் ஒன்றி வாழ்ந்தால், நம்மால் இன்னும் பல சக்திகளை பெறமுடியும் என்று உறுதி செய்தார்கள். இதற்காகத்தான் தலைமுடியை வளர்த்தார்கள்.
புதன், 23 செப்டம்பர், 2020
வள்ளலார் சுட்டிக்காட்டும் பாவச் செயல்கள்
அதைப் போலவே நாம் இன்பம் அடையும் பொருட்டு எத்தனையோ பாவச் செயல்களை சுயநலத்தோடு செய்து வாழ்கிறோம். நாம் செய்வது பாவம் என்று உணராமலேயே நிறைய பாவங்களைச் செய்கிறோம். அப்படியே அதைப் பாவம் என்று யாராவது சுட்டிக் காட்டினாலும் அதை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கு பல நியாயங்களைக் கற்பிக்கிறோம். நாலு பேருக்கு நன்மை செய்யுமானால் எந்தச் செயலும் பாவமில்லை என்று முட்டாள் தனமாகப் பேசுகிறோம். அது எத்தனை பேருக்கு நன்மை செய்வதாக இருந்தாலும், பாவச் செயல் என்பது பாவமே அல்லாது புண்ணியமாகாது. பட்டினத்தார் சொல்வது போல சாஸ்வதம் என்று நீ நினைக்கும் எதுவும் கூட வராது. ஆனால், நீ செய்யும் பாவ புண்ணியங்கள் கூட வரும் என்கிறார். அதில் கூட ஒரு நுட்பம் உள்ளது. அதாவது பாவம் மட்டுமல்ல, புண்ணியமும் பல பிறவிகளைத் தரக் கூடியதாகும் என்பதுவே. எனவே பற்றற்ற, மனதின் சம்ஸ்காரங்கள் அற்ற நிலை மட்டுமே, அதாவது பரமாத்மாவை அடைய வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு வாழ்வது மட்டுமே மேன்மை தரக் கூடியதாகும். எதெல்லாம் பாவம் என்று வள்ளல் பெருமான் மனுமுறை கண்ட வாசகத்தில் குறிப்பிடுகிறார் என்று பார்ப்போம்.
1. நல்லோர் மனதை நடுங்கச் செய்வது.
2. வலிய வழக்கிட்டு மானங் கெடுப்பது.
3. தானம் கொடுப்போரை தடுத்து நிற்பது.
4. கலந்த சினேகிதரைக் கலகஞ் செய்வது.
5. மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்வது.
6. குடிவரி உயர்த்திக் கொள்ளை கொள்வது.
7. ஏழைகள் வயிறு எரியச் செய்வது.
8. தர்மம் பாராது தண்டஞ் செய்வது.
9. மண்ணோரம் பேசி வாழ்வழிப்பது.(தன் நிலத்திற்கு அருகில் உள்ள பிறர் நிலத்தை அபகரித்தல்)
10. உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்வது.
11. களவு செய்வோர்க்கு உளவு சொல்வது.
12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.
13. ஆசை காட்டி மோசஞ் செய்வது.
14. வரவுபோக் கொழிய வழியடைப்பது.
15. வேலையிட்டுக் கூலி குறைப்பது.
16. பசித்தோர் முகத்தைப் பாராதிருப்பது.
17. இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்பது.
18. கோள் சொல்லி குடும்பங் கலைப்பது.
19. நட்டாற்றில் கையை நழுவ விடுவது.
20. கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுப்பது.
21. கற்பழிந்தவளைக் கலந்திருப்பது.(கற்பு என்பதை மனம் சார்ந்த விஷயம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.)
22. காவல் கொண்டிருந்த கன்னியை அழிப்பது.
23. கணவன் வழி நிற்போரைக் கற்பழிப்பது.
24. கருப்பமழித்துக் களித்திருப்பது.
25. குருவை வணங்கக் கூசி நிற்பது.
26. குருவின் காணிக்கை கொடுக்க மறப்பது.
27. கற்றவர் தம்மைக் கடுகடுப்பது.
28. பெரியோர் பாட்டிற் பிழை சொல்வது.
29. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.
30. கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைப்பது.
31. ஊன் சுவை உண்டு உயிர் வளர்ப்பது.
32. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.
33. அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்வது.
34. குடிக்கின்ற நீருள்ள குளந்தூர்ப்பது.
35. வெயிலுக்கொதுங்கும் விருட்சமழிப்பது.
36. பகை கொண்டு அயலார் பயிர் அழிப்பது.
37. பொது மண்டபத்தைப் போயிடிப்பது.
38. ஆலயக் கதவை அடைத்தே வைப்பது.
39. சிவனடியாரைச் சீறி வைப்பது.
40. தவஞ் செய்வோரைத் தாழ்வு சொல்வது.
41. சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்வது.
42. தந்தைதாய் மொழியைத் தள்ளி நடப்பது.
43. தெய்வமிகழ்ந்து செருக்கடைவது.
என்று பாவங்களைப் பட்டியலிடுகிறார். படித்துப் பார்த்தால் பெரும்பாலான பாவங்களை நாம் செய்திருக்கிறோம் என்பது புலப்படும். இதை சொல்ல வேண்டிய அவசியம் என்னவென்றால், இதற்கு முன்னால் போனது போகட்டும். இனிமேலும் இது போன்ற பாவங்களைச் செய்யாமல் வாழும் வாழ்வைத் தா என்று இறையாற்றலிடம் வேண்டிக் கொள்வதற்குத்தான். ஏனென்றால் வேண்டுதல் என்பதே நமக்கு நாமே செய்து கொள்ளும் ஒரு சங்கல்பம் தான்.
ஞாயிறு, 6 செப்டம்பர், 2020
சிவயோகம்
சரிதான். சரியான வழியில் போனால் தான் நாம் போக வேண்டிய இடத்திற்குப் போகமுடியும். வழி தவறாக இருந்தால் நாம் போக வேண்டிய இடத்திற்குப் போக முடியாது.
சித்தர்கள் விரல் வைக்காமல் வாசி யோகத்தினை செய்யச் சொல்கிறார்கள். அதைச் செய்தால் முழுமையான பலன் கிடைக்கும். இந்த வகை வாசி யோகம் மறை முகமாகவே நடந்து வருகிறது.
இந்த வகை தான் சித்தர்கள் செய்தவை.
நீண்ட ஆயுளும் பல சக்திகளையும் பெற முடியும். முதலில் நுரையீரலைப் பெரிதாக்கும் பயிற்சி. பிறகு நுரையீரலைப் பலப் படுத்தும் பயிற்சி. இது தான் சரியான வாசியோகமாகும். இதன் சக்தி மிக அதிகம். வாசியோகத்திலேயே அனைத்தும் அடக்கம். முறையாக கற்று அறிந்த குருவின் மூலம் பயிற்சி பெறவேண்டும்.
இயற்கைக்கும் பஞ்சபூதங்களுக்கும்
ஒன்பது கோள்களுக்கும் நமக்கும்
நட்பை ஏற்படுத்துவதே வாசியோகம்
என்னும் சிவயோகம்.
சரம் அறிந்தவன் பரம் அறிவான்!!!
செவ்வாய், 1 செப்டம்பர், 2020
மதம் - ஆத்மா – கடவுள் பற்றி – விவேகானந்தர்
மதங்களும் அவை பற்றிக் கூறும் நூல்களும் கூறும் கருத்துக்களும் பரிசோதித்து அறிய எந்தவித ஆதாரங்களுமில்லை. இவை ஒரு அபிப்பிராயங்களின் மூட்டைகளாகும். ஒவ்வொருவனும் அவனுக்கு பிரியப்பட்ட சொந்தக் கருத்துக்களை சொல்கிறான். அனாலும் மதத்தின் மீது இருக்கும் நம்பிக்கைக்கு பொதுவான ஆதாரம் ஒன்று உள்ளது என்று கூற வேண்டியுள்ளது. அது மதத்தின் மீது மனிதர்களுக்கு பல நாடுகளில் பலவிதங்களான உறுதி மொழிகளை, அபிப்பிராயங்களையும் நியாயப் படுத்துகிறது. இவை பற்றி யெல்லாம் நாம் ஆராய்ந்தால் அவையும் ஒரு பொதுவான அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டதாம் என்பதை நாம் காணலாம்.
இதை அறியும் பொருட்டு முதலில் உலகத்தில் உள்ள பலவிதங்களாக இருக்கின்ற எல்லா மதங்களையும் ஆராய்ந்து பார்க்கும் படி நான் உங்களிடம் சொல்கிறேன். அவை இரண்டு விதமாக பிரிந்து உள்ளதை பார்க்கலாம். ஒன்று நூல்களை ( வேதங்கள், புராணங்கள், பைபிள், குரான் போன்ற ) ஆதாரமாகக் கொண்டுள்ளது. மற்றது நூல் ஆதாரங்கள் இல்லாதது. நூல் ஆதாரங்கள் உள்ளனவோ மிக பெரிய மனிதர்களும் பலராலும் பின்பற்றக் கூடியதாகும் நூல்கள் இல்லாதவை பெரும்பாலும் அழிந்து விட்டன என்று கூறலாம். அப்படி அழியாத மதங்கள் இருந்தால் அவற்றை ஏற்றுக் கொண்டவர்கள் குறைவே. ஆனாலும் அவை யாவற்றிலும் அவை சொல்லும் கருத்துக்கள் எல்லாம் சில தனிப்பட்ட மனிதர்களின் அனுபவங்கள் என்னும் கருத்து ஒற்றுமையை நாம் பார்க்கலாம்.
ஒரு கிருத்துவர் – ஒரு இந்து – ஒரு முகமதியர் இவர்களில் எல்லோரும் தனது மதத்தை நம்புங்கள் என்றும் கிருஸ்த்து, (நபிகள், ராமரை,கிருஷ்ணனை ) இவர்களை கடவுள் அவதாரம் அவரின் தூதர் நம்புங்கள் என்றும் ஓர் ஆன்மாவையும் அவ்வான்மாவின் விசேசமான அவதாரங்களையும் நம்புங்கள் என்று உங்களிடத்துக் கூறுகின்றார். ஆனால் அந்நம்பிக்கைக்கு காரணமான ஆதாரத்தைக் கூறமுடியாது. ஆனால் கிருத்துமதத்தை ஆராய்ந்தால் அது அது அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டதாம். ஏன்னெனில் இயேசு கடவுளைக் கண்டேன் என்று கூறினார். அவரது சிஷ்யர்கள் தங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் உண்டானது என்று கூறினார், இவ்விதமே, புத்தமதம் புத்தரது அனுபவத்தையும், இஸ்லாம் மதம் நபிகளின் அனுபவத்தையும், இந்து மதம் வேத புராண ரிசிகள் எழுதிய அவர்களின் அனுபவத்தைக் ஆதாரமாகக் கொண்டதாம். எல்லோரும் சில தத்துவங்களை அனுபவித்து, அவற்றை ஆராய்ந்து பார்த்து அவைகளோடு உறவாடி அனுபவத்தை வெளிப்படுத்தினார்கள். ஆதலால் உலகத்தில் உள்ள எல்லா மதங்களும் கண்ணுக் தெரிந்த அனுபவம் என்கிற ஒரே அடிப்படையைக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது என்பதுவே உண்மையாகும். எல்லா மதத்தலைவர்களும் கடவுளை பார்த்தனர். தங்கள் சொந்த ஆன்மாவைக் கண்டனர், என்றும் உள்ளது எதிர்காலத்திலும் உறுதி என்று நம்பினர். அவர்கள் அறிந்த அனுபவத்தை வெளிப்படுத்தினர்.
மதத்தை அனுசரிக்கும் இக் காலத்தில் ஒரு கருத்தை வாதிடுகின்றனர். அதாவது முன் காலத்தில் கிடைத்த அனுபவங்களை இன்று காண்பது இயலாத காரியம் என்பதாகும். எல்லா மதத்திலும் அதன் முதல் நிருவனர்களுக்கே அவர்கள் கூறிய அனுபவங்கள் சாத்தியமாகி உள்ளது. ஆனால் இக்காலத்தில் அத்தகைய அனுபவங்களை எங்கும் யாருக்கும் நேரில் கிடைப்பது இல்லை. ஆனால் மக்கள் இக்காலத்தில் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் நான் இதை முற்றிலும் நிராகரிக்கிறேன். அறிவின் கண் ஏதாவது ஒரு தனிப்பட்ட ஓர் அனுபவம் இவ் உலகில் ஒரு தடவை உண்டானதாயின் அவ் அனுபவமும் அதன் முன்னரும் இனியும் என்றென்றும் அவ அனுபவம் கிடைக்கும் என்பதுவே உண்மையாகும். ஒரு பொருள் என்பது உலகில் நிரந்தரமாம் ஆதலால் ஒருதடவை உண்டானது எக்காலத்திலும் உண்டாகும்.
எனவே மதங்கள் என்பது புராதன காலங்களாக உள்ள அனுபவங்களை மாத்திரம் ஆதாரமாகக் கொண்டுள்ளது. ஆனால் அவ் அனுபவங்களின் உண்மை நமக்கு ஏற்படும் வரை அவன் உண்மையான மதத்தினன் அல்ல. இது குறித்து யோகநூல்கள் நமக்கு இத்தகைய அனுபவங்களை உண்டாவதற்கு உரிய வழிகளை சொல்கின்றன. அனால் இதை அனுபவித்து அறியும் முன் மதங்களில் கூறிய கருத்துக்களை ஏற்றுக் கொண்டு அதைப் பற்றி கூறுவது அர்த்தமில்லாததாகும் என்று யோக நூல்களின் ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
ஏன் கடவுளை முன்னிட்டு இத்துனை கருத்து வேறுபாடுகளும் சண்டைகளும் ஏற்பட வேண்டும்? மற்ற காரணங்களை விட கடவுளை முன்னிட்டே அதிகம் இரத்தம் சிந்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மக்கள் ஒவ்வொரு மதத்தினரும் அந்த ஒரு மதத்தின் ஆதிகால உற்பத்தி இடத்தின் அனுபவத்தை அறியாத காரணத்தினால் தான் இவர்கள் தங்கள் முன்னோர்களின் வார்த்தைகளை அப்படியே அனுபவப்படாமல் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டு பிறரையும் நம்பும்படி வற்புறுத்துவதுமாகும். தான் அனுபவித்து அறியாத ஒரு ஆன்மா உண்டென்றும், கண்டறியாத கடவுள் உண்டு என்றும் சொல்ல ஒருவனுக்கு என்ன நியாயம் உள்ளது. ஒருகடவுள் இருப்பது உண்மையானால் அவரை நாம் காண வேண்டும். ஒரு ஆத்மா உண்டு என்றால் அதை நாம் காண வேண்டும். அவ்வாறு நாம் அனுபவித்து அறியாவிடில் அதை நம்பாமல் இருப்பதுவே நலமாம். ஒரு கபட பக்தனாய் இருப்பதை விட ஒரு நாத்திகனாக இருப்பது உத்தமம்.
வியாழன், 6 ஆகஸ்ட், 2020
கோயிலும் மனிதனும்
அந்தச் சக்தியைத் தூண்டினால் மனிதனே கோயிலாக மாறி விடலாம். அந்தச் சக்தியை சாதாரண மனிதனும் பெற்று நன்மை அடையட்டுமென்று அமைக்கப்பட்டது தான் கோயில். நமது உடலில் முக்கியமான சக்தியாக இருப்பவை 6 சக்தி. அந்த 6 சக்தியைத் தான் நாம் ஆறு சக்கரங்கள்
என்கிறோம். அவை ( மூலாதாரம். சுவாதிஷ்டானம். மணிபூரகம். அனாகதம். விசுத்தி. ஆக்ஞை. எனப் படும் ஆறு சக்திமையங்கள். இவை 6 சக்திகளும் சுழன்று கொண்டிருப்பதால் சக்கரம் என்கிறோம். இவை ஆறையும் முறையாகத் தூண்டி விட்டால் நாம் 33 கோடி சக்திகளையும் அடைந்து விடலாம். அதனால் தான் சித்தர்கள் சாதாரண மனிதன், இந்தச் சக்திகளின் நன்மைகளைப் பெற்று, அவர்களும் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதற்காக அமைக்கபட்டதே கோயில் முன்வாசல், கோபுரம், நமது பாதம் உடலில் உள்ள ஆறு ஆதாரச் சக்கரமும் தனித் தனி மையமாகக் கோவிலில் காணலாம். அவை( கர்ப்பக் கிரகம். அர்த்தமண்டபம். மகாமண்டபம். அபிஷேக மண்டபம். அலங்கார மண்டபம். சபா மண்டபம்) எனப்படுபவை. இவைகள் இக்காலத்துக் கோயில்களில் காணப்படுவதில்லை. பழங்காலக் கோயில்களில் காணமுடியும்.
சிலர் கோயில் கொடி மரத்தை ஆண்குறி என்கிறார்கள். உண்மையில் அது ஆண் குறியல்ல. அது நமது முதுகு எலும்பு.
இந்த முறையில் அமைக்கபட்ட பழங்கால கோவில்கள் சக்தி வாய்ந்தவை. காரணம், இயற்கையாகவே பூமியில் சில இடங்களில் மின்காந்த சக்தி இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அந்த இடத்தில் கோயில்களை அமைத்தார்கள். அந்த இடத்திற்கு பிணி உள்ளவரோ அல்லது மனச் சஞ்சலத்துடன் வந்தால் அந்த சக்தியானது நமது உடலில் புகுந்து சக்கரங்களில் சக்தி இயக்கத்தை இயக்கும்.
அதன் பிறகு அந்தக் குறை நம்மை விட்டு நீங்கி விடும். இதனால் தான் அம்மை போன்ற வியாதி வருபவரை கோயிலில் தங்க வைத்து தீர்ந்ததும் அழைத்து வருவது.
இந்த சக்தியானது மனித உடலில் எப்படிசெல்கிறது என்றால் நமது மார்பகத்தில் இருக்கும் விசுத்தி என்கிற சக்கரத்தின் வழியாக, இந்தச் சக்கரமானது எந்த வித சக்தியானாலும் உள் இழுக்கும் தன்மையுடையது. இதனால் தான் கோயில் உள்ளே போனால், ஆண்கள் சட்டையைக் கழட்டிவிட்டுப் போக வேண்டும் என்பது.
பெண்களுக்குத் தங்கத்தில் தாலி போட்டிருப்பதால் அந்தத் தாலியானது அந்தச் சக்தியை ஈர்த்துக் கொள்ளும். இதை வைத்துத் தான், தூங்கும்போது மார்பில் கை வைத்து படுக்கக் கூடாது என்பார்கள். இரவில் நமக்கு சில இயற்கையின் சக்திகள் கிடைக்கிறது. அதை நமது உடலுக்குப் போகாமல் நாம் கை வைத்து அடைத்து விடுவோம். இதுவே காரணம்.
இந்த வகை சக்தி இயற்கையாகவே ஒருகாயில் இருக்கிறது என்றால் அது தான் உருத்திராடசம்.
சனி, 1 ஆகஸ்ட், 2020
நீ நீயாகவே இரு
சாகாகலையைச் செய்து தேர்ச்சியடையும் முன் அவர் காலமாகி விட்டால் திரும்பவும் பிறந்து சாகாக் கலையில் விட்ட படியிலிருந்து தொடங்குவார்கள் இது சத்தியம்.
சித்தக் கலையில் சாகாக்கலையும், கண்னையும் உன்னையும் பற்றி பயிற்சி தரவில்லை என்றால் அவர் உண்மையான குரு அல்ல. இந்த மூன்றையும் தந்து விட்டால் அவரே சிறந்த குரு. அவரை சாகும் வரை பிடித்துக் கொள்ளுங்கள். அது உங்களைச் சாகவிடாது.
குருவிற்கு செய்யும் முதல் துரோகம் குரு கற்பித்த கலையை மறப்பது.
குரு சீடனுக்கு செய்யும் துரோகம் தேவையில்லாத வேலைக்கு உள்ளாக்குவது. குரு இறைக்கு செய்யும் பாவம் சீடனுக்குத் தேவையான பயிற்சியை தராமல் மறைத்து வைத்திருப்பது.
குரு சீடர்களுக்கு கற்பிக்கப் படும் கல்வியை இறைக்கு செய்யும் பணிவிடையாக நினைத்து எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் தரும் கல்வியே இறைத் தொண்டாகும்
சீடன் குருவிற்கு செய்யும் காணிக்கை தீய செயலையும் தீமையை நாடாமல் இருப்பதுவே முதல் குரு காணிக்கையாகும். இரண்டாவதுவே பணம், இத்யாதி எல்லாமும்.
செவ்வாய், 21 ஜூலை, 2020
“வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே!
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க என்றும் வாழ்கவே:
…………………………………
………………………………….
திருச்சுழி என்னும் தலத்து உதித்த செல்வன் பாதம் வாழ்கவே;
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே.”
திருச்சுழி என்னும் தலத்து உதித்த செல்வன் பாதம் வாழ்கவே;
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே.”
ஞாயிறு, 5 ஜூலை, 2020
நல்ல குரு யார்?
மதாச்சாரியன்:
தனக்குப் பொருள் வரக்கூடிய வழிமுறைகளைப் பயிற்றுவித்து, அதைப்
பின்பற்றினால் சுவர்க்கம் கிட்டும், அது கிட்டும், இது கிட்டும் என
ஆசைகாட்டி அதன் மூலம் பொருள் தேடுவோன்.
காரியக் குரு:
ஆரம்பத்தில் பற்றற்றவர் போலப்பேசி, பின்னர் “நீ நல்ல சீடனாயிருக்கிறாய். ஆகவே, உனக்கு மட்டும் இந்த மந்திரங்களை உபதேசிக்கிறேன். இதனால் எல்லாம் சித்தியாகும். ஆனால் தட்சணை கொடுக்கவிடில் சித்திக்காது” எனக் கூறிப் பணம் பிடுங்குவர்.
ஞானகுரு:
மந்திர தந்திர கலைகளை விலக்கி ஞானமார்க்க வழிகளை ஆய்ந்து, அனுபவித்து உணர்ந்து பக்குவமுள்ள சீடனுக்குப் பிரதி பலன் கருதாது உரைத்து வழிநடத்தும் குரு. பொருள் பிடுங்காதவனே நல்ல குரு.
இப்பொழுதெல்லாம், நல்ல ஞானாசிரியன் கிட்டுவதரிதே. ஆகவேதான் பெரும்பாலும் போலி குருக்களைச் சென்றடைகிற மாதிரி நிலைமைகள்
என்னை தேடி எனக்குள் ஒரு பயணம்....... என்னைத் தொலைப்பதற்கு....
மனிதனும் தெய்வமாகலாம்..
அன்பர்களே....குருவ ருளே திருவருள்!........குருவு
வாழ்த்துக்களுடன்.....நன்றி....