சனி, 1 ஆகஸ்ட், 2020

நீ நீயாகவே இரு

சித்தர்களின் ரகசியமான ஒன்றில் சாகாக் கலை என்பதும் ஒன்று. அது அவ்வளவு சீக்கிரம் போலிகளின் கையில் கிடைப்பது கஷ்டம். அப்படியும் கிடைத்து விட்டால் அது போலிகளின் பாக்கியம் என்று கூட சொல்லலாம். இந்தப் பிறவியில் அப்படிக் கிடைத்ததை வைத்துக் கொண்டு ஆன்மாவை மீண்டும் பிறக்காமல் ஆக்குவதற்ச் செல்வது நல்லது. அதைத் தவற விட்டு விட்டு வேறு பாதையில் போய்ப் பலவித்தைகளைக் கற்றுக் கொண்டு சாகாக் கலையை மறந்து விட்டால் திரும்ப மறு ஜென்மத்தில் கிடைப்பது கஷ்டம்.


சாகாகலையைச் செய்து தேர்ச்சியடையும் முன் அவர் காலமாகி விட்டால் திரும்பவும் பிறந்து சாகாக் கலையில் விட்ட படியிலிருந்து தொடங்குவார்கள் இது சத்தியம்.

சித்தக் கலையில் சாகாக்கலையும்,  கண்னையும் உன்னையும் பற்றி பயிற்சி தரவில்லை என்றால் அவர் உண்மையான குரு அல்ல. இந்த மூன்றையும் தந்து விட்டால் அவரே சிறந்த குரு. அவரை சாகும் வரை பிடித்துக் கொள்ளுங்கள். அது உங்களைச் சாகவிடாது.

குருவிற்கு செய்யும் முதல் துரோகம் குரு கற்பித்த கலையை மறப்பது.
குரு சீடனுக்கு செய்யும் துரோகம் தேவையில்லாத வேலைக்கு உள்ளாக்குவது. குரு இறைக்கு செய்யும் பாவம் சீடனுக்குத் தேவையான பயிற்சியை தராமல் மறைத்து வைத்திருப்பது.

குரு சீடர்களுக்கு கற்பிக்கப் படும் கல்வியை இறைக்கு செய்யும் பணிவிடையாக நினைத்து எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் தரும் கல்வியே இறைத் தொண்டாகும்

சீடன் குருவிற்கு செய்யும் காணிக்கை தீய செயலையும் தீமையை நாடாமல் இருப்பதுவே முதல் குரு காணிக்கையாகும். இரண்டாவதுவே பணம், இத்யாதி எல்லாமும்.  

ஆகவே நல்ல குருவை தேடிக்கொள்ளுங்கள், ஞானம் பெற்று வாழுங்கள் !!!

செவ்வாய், 21 ஜூலை, 2020

“வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே!

ரமணாச்ரமத்தில் பகவான் வந்து ஐம்பது வருடங்கள் ஆனதை ஒட்டி பொன்விழா கொண்டாடப்பட்டது. அதற்காக நிர்மாணிக்கப்பட்ட ஜூப்ளி ஹாலில் ரமணர் அமர்ந்திருந்தார். பக்தர்கள் பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்து கொண்டிருந்தனர்.
ஒரு பக்தர் குழு, சிவப்பிரகாசம் பிள்ளை இயற்றிய,
“வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே;

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க என்றும் வாழ்க
ரமணாச்ரமத்தில் பகவான் வந்து ஐம்பது வருடங்கள் ஆனதை ஒட்டி பொன்விழா கொண்டாடப்பட்டது. அதற்காக நிர்மாணிக்கப்பட்ட ஜூப்ளி ஹாலில் ரமணர் அமர்ந்திருந்தார். பக்தர்கள் பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்து கொண்டிருந்தனர்.
ஒரு பக்தர் குழு, சிவப்பிரகாசம் பிள்ளை இயற்றிய,
“வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே;
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க என்றும் வாழ்கவே:
…………………………………
………………………………….
திருச்சுழி என்னும் தலத்து உதித்த செல்வன் பாதம் வாழ்கவே;
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே.”
- என்னும் “ரமண பாத மாலை”யைப் பாட ஆரம்பித்தனர். அதில், “ரமணன்” என்று வரும் இடங்களிலெல்லாம் “ரமணர்” என்றே பாடினர். ”ரமணன் பாதம் வாழ்கவே” என்று பாடினால் அது பகவானுக்கு மரியாதைக்குறைவு என்று எண்ணிய அவர்கள், அவ்வாறு அரும் இடங்களில் எல்லாம் மரியாதை விளியாக ”ரமணர் பாதம் வாழ்கவே” என்று சொல்லியே பாடி முடித்தனர்.
பாராயணம் முடிந்தது. உடனே பகவான் அமர்ந்திருந்த பக்தர்களிடம், “ஆஹா.. பிரமாதம். நன்னா பாடினா! ரமணன்னா மரியாதைக்குறைவு போலிருக்கு! அதான், ’ரமணர்’ ’ரமணர்’ன்னு பாடியிருக்கா! அப்போ சிவனைக் கூட இனிமே நாம ”சிவர்”, ”சிவர்”ன்னுதான் சொல்லி பாடணும் போலயிருக்கு. பேஷ்.. பேஷ்…” என்றார், கிண்டலாக.
பக்தர்கள் பகவானின் அந்த நகைச்சுவையை ரசித்தனர். அதேசமயம் சில பக்தர்கள் மட்டுமே, “’ரமணன்’ என்றழைத்தாலும், ‘ரமணர்’ என்றழைத்தாலும் எல்லாம் ஒன்றுதான். ரமணர் என்பது அந்த உடலல்ல. அது எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கும் பரிபூரண ஆத்மா. அதை உணர்வதே முக்திப் பேறு” என்பதைப் புரிந்து பகவானைத் தொழுதனர்.

………………………………….
திருச்சுழி என்னும் தலத்து உதித்த செல்வன் பாதம் வாழ்கவே;
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே.”
- என்னும் “ரமண பாத மாலை”யைப் பாட ஆரம்பித்தனர். அதில், “ரமணன்” என்று வரும் இடங்களிலெல்லாம் “ரமணர்” என்றே பாடினர். ”ரமணன் பாதம் வாழ்கவே” என்று பாடினால் அது பகவானுக்கு மரியாதைக்குறைவு என்று எண்ணிய அவர்கள், அவ்வாறு வரும் இடங்களில் எல்லாம் மரியாதை விளியாக ”ரமணர் பாதம் வாழ்கவே” என்று சொல்லியே பாடி முடித்தனர்.
பாராயணம் முடிந்தது. உடனே பகவான் அமர்ந்திருந்த பக்தர்களிடம், “ஆஹா.. பிரமாதம். நன்னா பாடினா! ரமணன்னா மரியாதைக்குறைவு போலிருக்கு! அதான், ’ரமணர்’ ’ரமணர்’ன்னு பாடியிருக்கா! அப்போ சிவனைக் கூட இனிமே நாம ”சிவர்”, ”சிவர்”ன்னுதான் சொல்லி பாடணும் போலயிருக்கு. பேஷ்.. பேஷ்…” என்றார், கிண்டலாக.
பக்தர்கள் பகவானின் அந்த நகைச்சுவையை ரசித்தனர். அதேசமயம் சில பக்தர்கள் மட்டுமே, “’ரமணன்’ என்றழைத்தாலும், ‘ரமணர்’ என்றழைத்தாலும் எல்லாம் ஒன்றுதான். ரமணர் என்பது அந்த உடலல்ல. அது எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கும் பரிபூரண ஆத்மா. அதை உணர்வதே முக்திப் பேறு” என்பதைப் புரிந்து பகவானைத் தொழுதனர்.

ஞாயிறு, 5 ஜூலை, 2020

நல்ல குரு யார்?



ஒரு நல்ல குரு தேவை. அவர்  குணமென்ன?

மதாச்சாரியன்:
தனக்குப் பொருள் வரக்கூடிய வழிமுறைகளைப் பயிற்றுவித்து, அதைப்
பின்பற்றினால் சுவர்க்கம் கிட்டும், அது கிட்டும், இது கிட்டும் என
ஆசைகாட்டி அதன் மூலம் பொருள் தேடுவோன்.

காரியக் குரு:


ஆரம்பத்தில் பற்றற்றவர் போலப்பேசி, பின்னர் “நீ நல்ல சீடனாயிருக்கிறாய். ஆகவே, உனக்கு மட்டும் இந்த மந்திரங்களை உபதேசிக்கிறேன். இதனால் எல்லாம் சித்தியாகும். ஆனால் தட்சணை கொடுக்கவிடில் சித்திக்காது” எனக் கூறிப் பணம் பிடுங்குவர்.

ஞானகுரு:

மந்திர தந்திர கலைகளை விலக்கி ஞானமார்க்க வழிகளை ஆய்ந்து, அனுபவித்து உணர்ந்து பக்குவமுள்ள சீடனுக்குப் பிரதி பலன் கருதாது உரைத்து வழிநடத்தும் குரு. பொருள் பிடுங்காதவனே நல்ல குரு.

இப்பொழுதெல்லாம், நல்ல ஞானாசிரியன் கிட்டுவதரிதே. ஆகவேதான் பெரும்பாலும் போலி குருக்களைச் சென்றடைகிற மாதிரி நிலைமைகள் 
உருவாகிறது. 

உங்களில் ஒவ்வொருவருக்கும் ஞான குரு கிடைக்க 
என் மனப்பூர்வமான ஆசிர்வாதங்களும், வாழ்த்துக்களும்.. உரித்தாகட்டும் !!!.


மீண்டும்  தொடர்கிறேன்..... 

என்னை தேடி எனக்குள் ஒரு பயணம்....... என்னைத் தொலைப்பதற்கு....




இந்த உள்நோக்கிய  பயணத்தில் 
நான்கு வருடங்கள்  இடைவெளியாகிவிட்டது. 

இதற்கு முன்னர்   எனக்கு கிடைத்த ஆக்கங்களை  உங்களுடன்  பகிர்ந்து கொண்டேன். இப்போது  படித்தவை 
களை விடவும்,  குருமுகமாக அறிந்தவைகளையும் + உணர்ந்தவைகளையும் எனது வரை முறைக்கு உட்பட்டு 
இங்கு பதிவிட வந்திருக்கின்றேன்.
மக்களை நல்வழிப்படுத்த யோகம், ஞானம் ஆகியன பற்றியுள்ள சித்தர் பாடல்களை இயன்றவரை எடுத்துரைத்தல் நலம்” என்பது எம் கோட்பாடு.
"அன்னையின்  திருவடி சரணம்  "


“குருவடி சரணம் "   

என் குருவின் பாதம்  பணிந்து எழுத ஆரம்பிக்கிறேன் !

குரு வார்த்தை. தியானத்திற்கு முக்கியம், 

குரு வடிவம் மோட்சத்துக்கு 
முக்கியம்.   'உங்களை விழிக்கச்  செய்பவர் தான் குரு'. "ஞானிகளைப்  பூஜிப்போம், ஞானம் பெற்று வாழ்வோம் ",  
"அன்னதானம் செய்வோம், கர்மவினையைத் தகர்ப்போம் ".

மனிதனும் தெய்வமாகலாம்.. 
அன்பர்களே....குருவ ருளே  திருவருள்!........குருவுக்கு மேலான தத்துவம் இல்லை....
குருவருளை மிஞ்சி ஏதுமில்லை.. 

குருவை வணங்கி, அவரது திருவடிகளில் நம்முடைய வாழ்வைச்  சமர்ப்பிக்க வேண்டும். மனித உருவத்தில்  குருவே மேலானவர். அவருடைய மேற்பார்வையில் தான் நாம் சாதனை புரியவேண்டும்.  

எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் சரணம் அடைய வேண்டும்.எனவே மகான்களை, சித்தர்களைப்  போற்றித்  துதியுங்கள் குருவ ருளும்.....இறையருளும் உங்களை எப்போதும் காத்து வழி நடத்தட்டும் !

வாழ்த்துக்களுடன்.....நன்றி.....

மீண்டும் தொடர்கிறேன் ....

புதன், 1 ஜூலை, 2020

தன் உயிரை அறிவதும் உணர்வதும் இறைவனை அறிவதுமாகும். தன்னை அறிவதே கடவுளை அறிவதாகும்!



"உயிரே கடவுள்".  உண்மை இதுவே!  ஞானம் இதுவே! இதை அறிவதற்காக‌வே    குருவின் உபதேசம்! இதை உணர்வதே திருவடி தீட்ஷை. . இதனை அறிந்து உணர்ந்து தவம் செய்ப‌வ‌னே இறைவனை அடைவான். 

மனிதனாக எக்குறையுமின்றி பிறந்து ஞான  ஒருவரைப்  பணிந்து ஞான உபதேசம் திருவடி தீட்ஷ பெற்று தவம் செய்து தன உயிராக இறைவன் இருப்பதை உணர்ந்து ஊனே ஒளி உடலாக மாறப் பெறலாம். ஞானம் பெறலாம். மனிதனாகப் பிறந்தது இதற்காகவே தான். உயிரை  தான் என்று உணரவே. ஒளி உடம்பு ஆவதற்காகவே.

தன் உயிரை அறிவதும் உணர்வதும் இறைவனை அறிவதுமாகும். தன்னை அறிவதே கடவுளை  அறிவதாகும்.

வெள்ளி, 26 ஜூன், 2020

ஆன்மாவை இழந்து உலகத்தையே வென்றாலும் மனிதனுக்கு கிடைக்கப் போகும் லாபம் தான் என்ன ?]




                                                                          கபீர்

உண்மையிலேயே வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது என்ன என்ற கேள்வி நம்மில் பெரும்பாலருள் எழுகிறது.
உலகத்தவர் பார்வையில் பெரும் தனம் தேடியவன் வெற்றி பெற்றவன். புகழ் அடைந்தவன் வெற்றி பெற்றவன். அதிகாரங்களை அடையப் பெற்றவன் வெற்றி பெற்றவன்.
ஆனால் ஞானிகள் இந்த கருத்தின் அடிப்படையையே தவறு என்று கருதுகின்றனர் போலும். 
கபீர்தாஸ் சொல்வதைப் பாருங்கள்.
"நன்று அடியார்க்கு தோல்வியே, புவியோர்க்கு சேரட்டும் வெற்றியே
வென்றவர் போவார் எமபுரமே, தோற்றவர் அடைவார் அரியிணையே".  
 அரியிணை =ஹரியின் இணையடி; எமபுரம் = பிறவிச் சுழல்]கபீர்தாஸரின் கருத்தை பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்த புனித இக்னேஷியஸ் லயோலா என்ற கிருத்துவ போதகரும் வலியுறுத்தினார். அவர் கிருத்துவ மதத்தில் ஜெசுயிட்(Jesuit) வழிமுறையை பாரீஸ் பல்கலைக் கழகத்தில் துவக்கியவர். ஸ்பெயின் தேசத்து போரில் தன் கால்களை இழந்து பின்னர் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பியவர். மண் ராஜ்யத்தை விட்டு விண் ராஜ்ஜியத்திற்கான தன் போராட்டத்தை ஆரம்பித்தவர்.
அவரை விட இளையவரான கல்லூரி ஆசிரியர் பிரான்ஸிஸ் சேவியரிடம்(1506- 1551) அடிக்கடி சொல்வதுண்டாம்.
“Master Francis! What shall it profit a man if he gains the whole world and loses his own soul?"
[பிரான்ஸிஸ் பெருந்தகையே! ஆன்மாவை இழந்து உலகத்தையே வென்றாலும் மனிதனுக்கு கிடைக்கப் போகும் லாபம் தான் என்ன ?]

அறிவு கூர்மை மிகுந்தவர் பிரான்ஸிஸ். அவருடைய பேருரைகளை கேட்க பல்கலை கழகத்தில் மக்கள் திரளாகக் கூடினர். அவர் ஒரு பன்மொழி வித்தகர். வாலிப வயதினரான அவருக்கு மிக நல்ல எதிர்காலம் காத்திருந்தது. நல்ல குடும்பம், செல்வம், புகழ் என்பன போன்ற வெற்றி அவருடைய காலடியிலே கிடந்தது என்றும் சொல்லலாம்.
ஆனால் இக்னேஷியஸ் லயோலாவின் கேள்வி பிரான்ஸிஸ் சேவியரின் மனதில் ஆன்மீகக் கனலை கொழுந்து விட செய்தது.
லயோலாவுடனான சத்சங்கம் அவரை இறைவனின் சேவைக்கென தன்னை அர்ப்பணித்துக் கொள்ளத் தூண்டியது. தம் பதவியை துறந்தார். இக்னேஷியஸ் லயோலாவை தமது குருவாகக் கொண்டு பிரார்த்தனையிலும் தியானத்திலும் நேரத்தை செலவிட்டார். தனது செல்வத்தையெல்லாம் ஏழை எளியவர்க்கு வழங்கி விட்டு கால்நடையாக ஜெருசலேமுக்கு தலயாத்திரை மேற்கொண்டார். ஏசுவின் புகழை சென்ற இடமெல்லாம் பரப்பினார். எவரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை. தனக்கு பிறர் கொடுக்க முன் வந்த வெகுமதிகளை வாங்க மறுத்தார். அவருடைய தன்னலமற்ற இந்த பண்பு மக்களை அவர் பக்கம் ஈர்த்தது.

முதன் முதலாக இறைப்பணிக்கென 1542 -ல் கடற்பயணம் மேற்கொண்டார். கப்பலில் சீமான்களோடு அமர்ந்து உணவு அருந்த வேண்டியவர் சாமானியர்களோடு அமர்ந்து உணவு உண்டார். நோயுற்றவர் அருகிலிருந்து சிகிச்சை அளித்தார். தமது முப்பத்தி ஆறாம் வயதில் மேற்கு கடற்கரையில் கோவாவில் வந்திறங்கினார். நீண்ட பயணத்தினால் உடல்நலம் மிகவும் குன்றியிருந்தது. ஆனால் உற்சாகம் குறைந்திருக்கவில்லை.
பொது இடங்களில் எல்லாம் அவருக்கு வரவேற்பு என்பது கிடையாது. அன்னியராகக் காணப்படும் ஒருவரிடம் எவரும் நெருங்கிப் பழகத் தயங்குவர். கூடவே புதுப் புது மொழிகள் அதனால் வரும் பிரச்சனைகள். இந்தியா தவிர இலங்கை, சீனா ஜப்பான் என பல நாடுகளிலும் இறைத் தூதர் ஏசுவின் புகழ் பாடி இருபது ஆண்டுகள் பல இன்னல்களுக்கிடையே சேவை புரிந்தார்.
இப்போது சொல்லுங்கள்! அவரது வாழ்க்கை வழிமுறை வெற்றிக்கானதா தோல்விக்கானதா?
சாமானியர்கள் பார்வையில் பிழைக்கத் தெரியாதவர், ஆனால் கபீரின் பார்வையில் அவரே வென்றவர். விண்ணுலகை சொந்தமாக்கிக் கொண்டவர். தன்னலம் பாராது பிறர் மேன்மைக்காக உழைக்கும் எவருக்கும் இறைவன் தன் கதவுகளை திறந்து வைத்துக் காத்திருக்கிறான்.

இறைவன் அருள் வேண்டுமானால் முதலில் பணிவு மனப்பான்மை வேண்டும். தமக்கு வருவதை எல்லாம் அவனருளாகக் கொள்ளும் மனப்பக்குவம் வரவேண்டும். அப்படி ஒரு நிலைக்காக எப்படி நம்மை இறைவன் வழிப்படுத்துகிறான் என்பதை இந்த ஆங்கிலக் கவிதை அழகாக சொல்கிறது
I asked God for strength, that I might achieve
I was made weak, that I might learn humbly to obey..
I asked for health, that I might do great things
I was given infirmity, that I might do better things..

I asked for riches, that I might be happy
I was given poverty, that I might be wise..
I asked for power, that I might have the praise of others
I was given weakness, that I might feel the need of God
I asked for all things, that I might enjoy life
I was given life, that I might enjoy all things


இந்த உண்மையை அறியாது உலகை வெற்றி கொள்ள முயலுவோர் போக்கை பகவத்கீதை வெண்பா சிறப்பாக சித்தரிக்கிறது.
நினைத்ததை அடைந்தேன் இன்று, நில்லேன், வேறொன்றை
நினைத்து அதை அடைவேன், இன்னும் நிசம் காண்- எனக்கோ
அதுவுண்டு இதுவுண்டு, எது பெரிது எங்குண்டோ
அதுவும் எனக்கே உடைமையாம் (16:13 )
எண்ணம் பல மனதில், என்றும் ஒரே குழப்பம்
மண்ணில் மயக்க வலைப்பட்டே- கண் தெரியார்
ஆழ்வர், இவர் காம அனுபவத்திற் சிக்குண்பார்
பாழ் நரகமே சம்பளம்
. (16: 16)

[பகவத்கீதை வெண்பா, மூன்றாம் பாகம்: ஏ பெரியத்தம்பிப்பிள்ளை (1976) தனலக்குமி புத்தகசாலை, சுன்னாகம், இணைய வழி தரவிறக்கம்]
பலப்பல வெற்றிகளுக்காக மதி மயங்கி, வாழ்க்கையை கழித்தோர் கடைசியில் சம்பாதித்தது ‘பாழ் நரகமே” என்பது, கபீர்வென்றார் போவார் எமபுரமே என்று சொல்வதை உறுதி செய்ததாகிறது.
இந்த இக்கட்டிலிருந்து தப்பித்துக் கொள்ள இக்னேஷியஸ் லயோலா அவர்களின் தினசரி பிரார்த்தனையை மனதில் வைத்தால் முத்திக்கு வழி தேடலாம்.
Dearest Lord,
Teach me to be generous.
Teach me to serve you as you deserve;
To give and not to count the cost;
To fight, and not to heed the wounds;
To labor, and not to seek to rest;
To give of myself and not to ask for reward,
Except the reward of knowing that I am doing
YOUR WILL.

செவ்வாய், 23 ஜூன், 2020

இறையை நோக்கிய பயணம் .....

"நீ”, “நான்” என்னும் இருமையற்ற ஒருமையில், ஒன்றுகலந்து பக்தி செய்தல் (சன்மார்க்கம்). அதுவே, மனமடங்கி, எண்ணம் அறுத்துப் பேரானந்தம் கிட்டும் நிலை ஞானம். அந்த நிலையின் பெயர், சாயுச்சியம். அதாவது, இறைவனுடன் ஒன்று கலந்து வாழுதல். நாம் முதன்முதலில் அரிச்சுவடி (LKG) படிக்கிறோம். பின்னர் முதல் வகுப்புக்கு வருகிறோம். நம் கல்வியின் திறம் மேம்படுகிறது. ஆயினும், அரிச்சுவடியில் இருப்பவனைப் பார்த்து அவனுக்கு ஒன்றும் தெரியவில்லையென இகழக்கூடாது. முதல் வகுப்பில் படிக்கும்பொழுது, மணலில் வீடு கட்டி விளையாடுகிறோம். ஆனால், ஆறாம் வகுப்பில் படிக்கும்பொழுது சீட்டுக்கட்டு அட்டையில் வீடுகட்டி மகிழ்கிறோம். அப்போது மணல் வீட்டை வீடு என ஒத்துக் கொள்வதில்லை. நிலை மேம்பட்டபொழுது, மெய்யாகவே(உடலாகவே) செங்கல் வைத்துக் கட்டியதைத்தான் வீடு என ஒத்துக்கொள்கிறோம். நிலை வேறுபடப்பட உண்மை நமக்குப் புரிய ஆரம்பிக்கிறது.

அதுபோலத்தான் ஆண்டவனையடையும் வழிமுறைகளும். முதலில் இறைவன் இருக்கிறான் எனக்காட்டவே தாய்தந்தை கோவிலுக்கு அழைத்துச் சென்று இதுதான் இறைவன் என சுட்டுகிறார்கள். அங்குதான் சரியை ஆரம்பம். சரியையில் கிரியை ஆக்கிரமிக்கிறது. புறச் சடங்குகளால் மட்டும் இறைவனை அடையமுடியும் என நம்புகிறோம். நம்பிக்கை தவறெனக் கூறவில்லை. கிரியையில் மனமொடுங்கினால் அங்கே இறையுண்டு. எங்குதானில்லை?

கிரியைக்கு அடுத்த நிலை யோகம். யோகம் என்பது பயிற்சி முறையே. அதிலும், இராசயோகம், வாசியோகம், இன்னும் பல பிரிவுகள் உண்டு. அதிலும், என் வழிதான் சிறந்தது எனக் கூறுதலாகாது. ஒரு வழியில் செல்வோரை மற்றவர் இகழக்கூடாது. பயிற்சி முற்ற விளைவு ஆரம்பம். ஞானம் முளைக்கும்.

ஈங்கு முதலில் இறைவன் யார்? எனத் தெளிதல் மிக இன்றியமயாத ஒன்று. அண்டமாகிய அகிலத்தில் உள்ளது இப்பிண்டமாகிய உடலிலும் உண்டு என ஆன்றோர் கூறியுள்ளனர். அண்டத்தையும் பிண்டத்தையும் படைத்தவன் இறைவன். இவ்வண்டத்தில் இறைவனைத் தேடுதல் எளிதோ? அல்ல, பிண்டத்தில் தேடுதல் எளிதோ?

அண்டத்தில் இறைவனைத் தேடுதல் சரியை, கிரியை.

பிண்டத்தில் தேடுதல் யோகம், ஞானம்.

இறைவன்தான் எல்லாவற்றையும் படைத்தான்; எங்குமுளான். அப்போது பிண்டத்திலும் இருக்கவேண்டுமல்லவா? எங்கே?

பரமசிவன் கைலாயவாசி; உயர்ந்த மலைமேல் உள்ளவன். பிண்டமாகிய நம் உடலின் உச்சியே மலையுச்சி.  ஆக, இறைவன் நம்முடலில்  உள்ளான். அண்டத்தில் தேடுவதை விட நம் உடலுக்குள் தேடுதல் எளிதல்லவா? நம் ஆயுளில் குறுகிய காலத்தில் காலன் வருமுன் கண்டுகொள்ளலாமல்லவா? அதிவிரைவில் இறைவனையடைய வழி ஞானமே என்பதன் பொருள் இதுதான்.

இறைவன் உருவகிக்கப்பட்டுளான். பிண்டத்தில் அறிவாகி, அறிவில் உணர்வாகி, உணர்வில் நினைவாய், நினைவில் கருத்தாகி நிற்பவனே இறைவன். நினைவைப் பிடிக்கவே யோகம், ஞானம்.


"அறிவை அறிவால் அறிவதே அறிவு !!!!!!"

"மனித வாழ்க்கை என்பது நமக்குக் கொடுக்கப்படும் கடைசிச் சந்தர்ப்பம். சரியாக பயன்படுத்தினால், ஞானி...."

வியாழன், 18 ஜூன், 2020

நான்யார்? . சுவாசம் என்றால் என்ன?.



சுவாசம் என்பது ஒரு தன்னிச்சை (Automatic)செயல். உடல், உயிர் இவை இரண்டும் ஒன்றுக்குள் ஒன்று பின்னி பினைந்திருக்க அவசியம் சுவாசம் தேவை. 

உடலுள் உயிர் இருக்கின்றதா? உயிருள் உடல் இருக்கின்றதா? என்பதை அவரவர் அனுபவத்தின்கண் கண்டறியலாம். மனிதன் ஒரு பொம்மைக்கு சாவி கொடுத்து இயங்க செய்கின்றான் என்று வைத்துக்கொள்வோம். அவன் கொடுத்த சாவியின் வேகம் குறைந்ததும் பொம்மையின் இயக்கம் தன்னாலே நின்றுவிடும். அதேபோன்று நம்மை படைத்த இறைவன் நமக்கும், நமது வினைகளுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட அளவு விசை கொடுத்து தாயின் கருவறையிலிருந்து,  பூமிப் பந்தில் இறக்கி வைத்து  இயங்க விடுகின்றான்.
அவன் கொடுத்த விசை ஒவ்வொருவருக்கும் வேறுவேறு விதமாக இருக்கும். ஒருவருக்கு ஒரு முடுக்கு விசை, மற்றொருவருக்கு இரு முடுக்கு விசை, பிறிதொருவருக்கு மூன்று முடுக்கு விசை, இதேபோன்று பலருக்கும் பல்வேறு வகையில் பலதரப்பட்ட முடுக்கு விசை கொடுத்து தன்னிச்சையாக இயங்க வைத்து வேடிக்கை பார்க்கின்றான். இதற்கு மற்றைய சுவாசித்தலைக் கொண்ட உயிரினங்களும் விதிவிலக்கல்ல. ஆனால், அவன் கொடுத்த விசையினால் தன்னிச்சையாக இயங்க வைத்ததோடுமின்றி இங்கே மனித இனங்களுக்கென்று தன்னிச்சையாக செயல்படும் புத்தியையும் கூடவே கொடுத்து இயங்க வைத்துள்ளான். அவன் கொடுத்த விசையின் (சுவாசத்தின்) காலம் முடிவதற்குள், தனக்கென்று கொடுத்துள்ள புத்தியைக் கொண்டு நாம் குட்டிக் கரணம் போடலாம், தோப்புக் கரணம் போடலாம், வீராவேசம் காட்டலாம், பிறரை அழிக்க நினைக்கலாம், அலைபேசி, கணிணி , நானோ மேட்டர், ரோபோ ,   இன்னும் என்னென்னவோ செய்யலாம். அல்லது ஏன் என்னை இப்படி விசை கொடுத்து இயங்க வைத்தாய் என்று இறைவனிடமே அழுது புலம்பி சண்டைக்கும் போகலாம். எல்லாம் செய்யலாம். கூடவே சுவாச பயிற்சியும்  செய்யலாம். 

இறைவன் கொடுத்த விசையின் காலம் முடிவதற்குள் நான் யார் என்பதை அறிந்து பரம்பொருளிடம் சரணாகதி அடைவது தான் ஒரு வழி. சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும் இதைத்தான் சொல்கின்றனர். அப்படி இறைவனிடம் சரண் அடையும் வழிகளில் (மார்க்கங்களில்) இந்த சிவயோகசாரம் தொடரில்  கூறப்படும் வழியும் ஒன்று. இறைவன் கொடுத்த சாவியின் விசைக்காலம் முடிவதற்குள்,  இறைவனிடம் முழுசரணாகதி அடையாவிட்டால், விசைக்காலம் முடிந்தவுடன் மீண்டும் நம்மை கையிலெடுத்து மீண்டும் விசை கொடுத்து விளையாட விட்டு வேடிக்கை பார்ப்பான் இறைவன். நிற்க, மனிதன் சராசரி ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியில் விடுகிறான் எனவும், இந்த கணக்கில் ஒரு நாளில் 21,600 முறை சுவாசிக்கிறான் எனவும் நம் முன்னோர்கள் அறிந்து கூறியுள்ளனர். எத்தனை நாள் நாம் சுவாசிப்போம் என்று யாராலும் கூறமுடியாது.(விதிவிலக்கு: சித்தர்கள்) சுவாசம் என்பது அவசியமான ஒன்று. நான் சுவாசிக்க மாட்டேன் என்று யாராலும் அடம் பிடித்து கூறமுடியாது. ஆனால் அந்த சுவாசத்தை (விசையை) முறைப்படுத்தி இறைவன் கொடுத்த விசையின் வேகம் குறைவதற்குள்(ஆயுள் முடிவதற்குள்), நான் யார் ? என்ற கேள்வியை எனக்குள் நானே கேட்டு, அதன் விடையாக,  நான் பிரம்மத்தின் சொரூபம். ஆனால் நானே பிரம்மம் அல்ல.   எனது தாயும், தந்தையும், சுற்றத்தார் அனைவரும், உலக ஜீவராசிகள் அனைத்தும் அந்த பிரம்மத்தின் சொரூபம்தான் என்பதை அறிந்து, நான் எனும் எனது ஜீவஆத்மா பிரம்மத்தோடு ஐக்கியமாக முயற்சிசெய்வேன். 

ஒருக்கால் விசை முடிவதற்குள் என்னால் இறைவனோடு ஐக்கியமாக முடியாவிட்டால், ஒன்றும் கவலைப்படமாட்டேன். மறுபடியும் இறைவனிடம் வாய்ப்பு கேட்டு, விசை கொடுக்கச் சொல்லி மன்றாடி கேட்டுப் பெற்று (நீ விளையாடற ஆட்டம் எனக்கு தெரியும். இந்த தடவையாவது நான் ஜெயிக்கிறேன்னு சொல்லி) மீண்டும் இந்த பூமியில் விளையாட வருவேன். 
உண்மையை சொல்லப்போனால்  84 இலட்ச்சம் உயிரினங்கள், உப பிரிவுகள், மரமாக பிறந்தால், ஆயிரக் கணக்கான வருடங்கள்,  மலைப்பிரதேசத்தில் பிறந்தாலும்  நூற்றுக்கணக்கான வருடங்கள், 
இப்படியாக,  மனிதப் பிறப்பை திரும்ப எப்போ கிடைக்கப் பெறுவோம் என்பதே தெரியாத தருணத்தில், இந்த கிடைத்தற்கரிய மனிதப் பிறப்பை, நம் பிறப்பு அறுப்பதற்கு   ,சரியான குருவைத் தேர்ந்தெடுத்து பிறப்பை அறுப்பதே உங்கள் பிறப்பின் நோக்கமாக கொள்க. 


மீண்டும் தொடர்கிறேன்.....

புதன், 10 ஜூன், 2020

மெய்யான குருவின் வழிகாட்டுதல்

ஆனமீகத்தில் தன்னையறிதலையே ஞானம் என்கிறோம். ஞானம் என்பது சலனமில்லாத பரிபூரண நிலை. இந்த ஞானம் எப்போதும் நமக்குள்ளேயே தான் இருக்கிறது. அதை உணரவைத்து, உற்று நோக்கி குறையவும் தெளியவும் மெய்யான குருவின் வழிகாட்டுதல் அவசியமாகின்றது.
 இந்தப் பரிபூரண நிலையே சித்த நிலை அல்லது சமாதி நிலை என்கிறோம். சித்த  நிலை என்பது எதிர்பார்ப்பில்லாதது. கருணையும், அன்பும் பெருகிய ஒரு நிலை. தாமே அதுவாக உணர்ந்த உயரிய நிலை. இந்த நிலையை எய்தியவர்கள் எவரும் தங்களைத் தாங்கள்  ஞானம் அடைந்தவர் என்று சொல்லிக் கொள்வதில்லை, . 

ஞானத்தேடலை உணர்ந்தவர்களை, மெய்யான குரு அவர்களைத் தேடி வந்து ஆட்கொண்டு வழி நடத்துவார். அப்போது அந்த மேலான குருவின் பாதங்களை கள்ள மனமின்றிப் பற்றிப் பணிந்து பயன் பெற வேண்டும் என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்,
 
உள்ளங்கையிற் கனிபோல பொருளை
உண்மையுடன் காட்டவல்ல உண்மைக்கு குருவைக் 
கள்ளமனந் தன்னைகத்   தள்ளிக் கண்டு கொண்டன்பாய்க்  களித்துக்  களித்து  நின்று ஆடுபாம்பே!

பாம்பாட்டிச்சித்தர்.

வெள்ளி, 5 ஜூன், 2020

மகாகவி காட்டும் மரணத்தை வெல்லும் வழி


இடம் : புதுச்சேரி
பாரதியும், குவளைக்கண்ணன் சுவாமிகளும் உரையாடுகிறார்கள்:

பாரதி : கண்ணா, ஆழ்வார்கள் எத்தனை பேர்?
குவளையார் : பன்னிரெண்டு பேர்
பாரதி : ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் எத்தனை?
குவளையார் : நாலாயிரம்
பாரதி : அப்படியா, அவர்கள் பன்னிரெண்டு பேர், நாலாயிரம் பாடினார்கள்.
நான் ஒருவனே ஆறாயிரம் பாடுகிறேன் பார்!


பாரதியின் மனோதிடத்தை என்னென்று சொல்வது. இப்புவியின் மீதேறி, அதன் நடுவில் ஒரு சிம்மாசனம் வைத்து, அதன் மீது அமர்ந்தவனாயிற்றே. என்ன, அவ்வாறு அவனால் நெடுநேரம் அமர முடிவதில்லை. அவனியிலே மாந்தர் படும் அல்லல் கண்டு ஓடோடி வந்து விடுகிறான். இங்கே, நாலாயிரம் போல், நானொரு ஆறாயிரம் படைப்பேன், நான் ஆறாயிரம் படைத்தால், அந்த ஆழ்வார்கள் படைத்த நாலாயிரம் போல வரும் என நினைத்தானோ!ஆறாயிரம் பாடுகிறேன் பார் - இப்படிச் சொல்லி முடித்த உடனேயே ஆறாயிரம் பாடும் சங்கற்பத்தினை மேற்கொண்டார். அன்றே பாரதியார் மௌன விரதத்தினைத் துவங்கினார். நாற்பது நாளாக தொடர்ந்தது. எப்போதும் ஏதாவது பாடிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கும் பாரதி, மௌனத்தில் இருந்தார்!. மாங்கொட்டைசாமி மற்றும் குள்ளச்சாமி எனுப்படும் சித்தர் - அவரையே பாரதி - தன் மோனகுரு என்கிறார். அதோடு கோவிந்தசாமி மற்றும் யாழ்ப்பாணத்துச்சாமி ஆகியோரின் தாக்கமும் இருந்திருக்கிறது. இவர்கள் மூவரின் நேரடித் சந்திப்புகளும், அரவிந்தரின் அருகாமையும், புதுவையில் பாரதியின் சுதந்திர வேட்கையைத் தணித்து, ஆன்ம தாகத்திற்கு உரமூட்டின.
தேசத்தார் இவன்பெயரைக் குள்ளச்சாமி
தேவர்பிரான் என்றுரைப்பார்;தெளிந்த ஞானி
பாசத்தை அறுத்துவிட்டான்,பயத்தைச் சுட்டான்;
பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்;
நாசத்தை அழித்துவிட்டான்;யமனைக் கொன்றான்;
ஞானகங்கை தனைமுடிமீதேந்தி நின்றான்;
ஆசையெனும் கொடிக்கொருதாழ் மரமே போன்றான்,
ஆதியவன் சுடர்பாதம் புகழ்கின் றேனே. (19)
என குள்ளச்சாமியைப் புகழ்கிறார் பாரதி. இதேபோல், கோவிந்தசாமியையும், யாழ்ப்பாணத்து சாமியையும் புகழந்து பாவிசைக்கிறார் இந்தப் பகுதியில்.

மௌனவிரதம் முடித்து, ஆறாயிரம் எழுதத் துவங்குகிறார். ஆனால், அந்தோ, அது அறுபத்தாறோடு நின்றுவிடுகிறது. இதற்கு காரணம் தன் ஆத்ம சக்தியினை வைத்து, விடுதலை பெற்றுத்தருகிறேன் பார், என்கிற வீராவேசமாக புதுவையை விட்டுக் கிளம்பியதாக இருக்கலாம். எனினும் அந்த 66 பாடல்களில் நமக்குத் தரும் அருஞ்செய்திகளில் இருந்து சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறேன்.

'எனக்கு முன்னே பல சித்தர்கள் இருந்தனர், யானும் வந்தேன் - ஒரு சித்தன் இந்நாட்டில்' என்று தன்னையும் ஒரு சித்தனாக அறிமுகப்படுத்திக் கொண்டு துவங்குகிறார். கடவுள் வாழ்த்தாக, பாராசக்தியைத் துதிக்கிறார். அடுத்ததாக,

மரணத்தை வெல்லும் வழி என்னும் தலைப்பிட்டுச் சொல்கிறார்:

பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்:
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்,
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்;
அன்னோர்கள் உரத்ததன்றிச் செய்கையில்லை
அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ? (4)
பொன்னான திருவடிகளே சரணம் எனப் போற்றியபின், அறிவேன் இந்த உண்மையெல்லாம்,
எந்த உண்மையெல்லாம்?
என் முன்னோர்கள் 'எவ்வுயிரும் கடவுள்' என்றதை.

கடவுள் எங்கே இருக்கிறார்? என்கிற தலைப்பிட்டு,

சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே?
சொல்'' லென்று இரணியந்தான் உறுமிக் கேட்க,
நல்லதொரு மகன் சொல்வான்:-'தூணி லுள்ளான்
நாரா யணந்துரும்பி லுள்ளான்'என்றான்.
வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை.
மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை;
அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை;
அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ ? (15)
என்கிறார்.
தொடர்ந்து அடுத்தா பாட்டில் தெள்ளத் தெளிவான விளக்கம் சொல்வார்:
...
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே. (16)
அடுத்ததாக அச்சம், ஆசை, கோபம் ஆகியவை அசுர குணங்கள். மரணமில்லா பெருவாழ்விற்கு இவை மூன்றும் விலக்கல் வேண்டும் என்கிறார்.

அடுத்து,
...
விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால்,
வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம்,தேம்பல் வேண்டா;
தேம்புவதில் பயனில்லை,தேம்பித் தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்குமினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்! (10)

நஞ்சுண்டும் சாகமல் இருப்பது கற்றால், வேறென்ன வேண்டும்?
நெஞ்சில் உரமும், நேர்மைத்திறனும் கொண்டு தேம்பாமல், அஞ்சாமல் வாழ்வோம் புவியினிலே.
அடுத்ததாக 'பொறுமையின் பெருமை' என்கிற பகுதியில் இடம் பெற்றுள்ள நான்கு பாடல்களில் ஒன்று,

தணிகைமலை உறையும் வேலனை பொறுமையின் பெருமையெனச் சொல்கிறார்:
திருத்தணிகை மலைமேலே குமார தேவன்
திருக்கொலுவீற்றிருக்கும் அதன் பொருளைக் கேளீர்!
திருத்தணிகை என்பதிங்கு பொறுமை யின்பேர்.
செந்தமிழ்கண்டீர், பகுதி'தணி'யெனுஞ்சொல்,
பொறுத்தமுறுந் தணிகையினால் புலமை சேரும்,
'பொறுத்தவரே பூமியினை ஆள்வார்'என்னும்
அருத்தமிக்க பழமொழியும் தமிழி லுண்டாம்.
அவனியிலே பொறையுடையான் அவனே தேவன்! (11)
பின்னர் 27ஆம் பாடல் முதல் 36ஆம் பாடல் வரை உபதேசம் எனத்தலைப்பிட்டு பத்து பாடல்கள் எழுதி இருக்கிறார். இவையெல்லாம் சித்தர் பாடல்கள் போல் இருப்பன....
வாசியை நீ கும்பகத்தால் வலியக்கட்டி 
மண்போல, சுவர்போல வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றி னுள்ளே 
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்;
பேசுவதிற் பயனில்லை; அனுபவதாற் 
பேரின்ப மெய்துவதே ஞான மென்றான் (28)
வாசி : மூச்சு; கும்பகம் : மூச்சை அடக்கியாளும் யோகமுறை
கிணற்றில் ஆழத்தில் பிம்பமாய் ஆதவன் தெரிவதுபோலே, ஈசனை, உன் ஆன்மாவில் சச்சிதானந்தத்தின் பிம்பமதைக் காணத்தெளிவாய். இதைப்பேசிப் பயனில்லை. உன்னால் உன்னில் உணர்ந்தால் மட்டுமே அது ஞானம்.

பாரதி அறுபத்தாறு - முழுமைக்கும் இங்கே பார்க்கவும்.

சுத்த அறிவே சிவம் என்று பறைசாற்றும் பாரதி, எல்லா உயிர்களிலும், எல்லா திடப்பெருள்களிலும் இருப்பது இறைவன் என அறுதியிட்டுக் கூறுகிறார். மேலே பாரதி சொல்லும் அசுர குணங்களை அழித்து அச்சம் ஒழித்து, பொறுமையுடன் அந்த இறைவனை, பார்க்கும் இடத்திலெல்லாம் நந்தலாலாவின் வண்ணத்தில் பார்க்கத் தெரிந்தவரே, மரணத்தை வெல்வார் என்பது திண்ணமன்றோ!

மரணத்தை வெல்லும் வழி சொன்ன பாரதி ஏன் மாண்டான் என்போர் சிலர். மாண்டதெல்லாம் மரணமில்லை மதியிலிகாள், மரணத்தை வென்ற பின்னே, மரணம் வருமோ பின்னே? காலனைக் காலால் மிதித்தவனுக்கு ஏது மரணம்? ஸ்தூல உடலில், பரமனைப்பார்த்த பின்னே, இந்த உடலும் ஒரு பொருட்டோ, என அதனைத் துய்த்த பாரதி, அமரன். பாரலுகில் இவனைப்போல் இன்னொருவன் இருந்ததில்லை, இனி இருக்கப்போவதும் இல்லை.

வியாழன், 21 மே, 2020

தியானம்

மந்திர தியானம்

==============

முதலில் தியானம் செய்வதற்கு பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமர வேண்டும்.  நமது வலது நாசியில் சுவாசம் நடக்கும் நேரம் பார்த்து மந்திரத் தியானம் செய்ய வேண்டும்.

நமது மனதிற்குள்ளேயே சொல்ல வேண்டும். 
அந்த மந்திரம் நமது உடலில் அதிர்வை உண்டாக்கும் வகையில் சொல்ல வேண்டும்.
நமக்காக மந்திரம் சொல்லும் போது நம என்று முடிக்க வேண்டும்.
பிறருக்காகவோ அல்லது யந்திரம் வைத்து மந்திரம் சொல்லும் போது நமஹ என்று முடிக்க வேண்டும்.
அதாவது சின்ன எடுத்துக்காட்டு சிவயநம, என்ற பஞ்சாட்சர மந்திரத்தை நமக்காக சொல்லும்போது ஓம் சிவாய நம என்று சொல்ல வேண்டும். மற்றவர்களுக்காக சொல்லும்போது ஓம் சிவாய நமஹ என்று சொல்ல வேண்டும்.

எந்த மந்திரமானாலும் மந்திரமாக பலிதமாக்கும் போது மந்திரத்தின் முன் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை சேர்த்தே சொல்ல வேண்டும்,

மந்திரம் சொல்லும் போது பக்கத்தில் உள்ளவர் காதுக்கு கேட்கும் படி சொன்னால் 50% சதவீதப் 
பலன் கிடைக்கும், நமது காதுக்குக் கேட்கும்படி சொன்னால்,  70% சதவீதப் பலன் கிடைக்கும். நமது மனதிற்குள் சொன்னால் 90% சதவீத பலன் கிடைக்கும். உடலில் தொண்டைக்கும் ஆசன வாய்க்கும்  இடையில் அதிர்வை உண்டாகும்படி சொன்னால் 100% பலனை அடைய முடியும்.

சரம் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். அதாவது வாசி யோகம் தெரிந்திருக்க வேண்டும்.  அப்பொழுது தான் சுவாசம் பார்க்கத் தெரிந்திருக்கும்.

வியாழன், 16 ஏப்ரல், 2020

{வாசியோகம்} யோகத்தின் விரிந்த நிலையும் அதன் ஒழுங்கமைப்பும்

பலர் யோகங்களைப் பற்றி தங்களுக்கு அறிந்தவையையே முதன்மைப் படுத்தி வருகிறார்கள்.அதைப்போல் வாசி யோகத்தைப் பற்றி பலர் பலவிதமாக தங்கள் கருத்துக்களை முன்னிலைப் படுத்துகிறார்கள். சித்தர்கள் கலையான வாசியோகம் மறைபொருளாகவே உணர்த்தப்படுகிறது. தவமியற்ற, தவமியற்ற சாதகனுக்கு அதன் சூட்சுமங்கள் செயலுக்கு வந்துவிடும். மிகப்பெரும் பொறுமை இங்கே தேவைப்படுகிறது.

வாசியோகத்தை பற்றி இதுவரை முறையாக பயிலாதவர்கள் அது என்ன வகையான யோக முறை என்று அறிந்திடாமலும். மற்றும் அதை பயிற்சி செய்து பார்க்காமலும் தங்கள் கருத்துக்களை முகநூலில் மற்றும் வலை தளத்தில் ஏற்றி வருகிறார்கள்.
வாசியோகம் பல வகைகளில் பல காலங்களில் இயற்றப்படுகிறது. முறையாக பயின்றவர் அதன் சக்தியை அடக்கியாள்வார்கள். 
நேரமும் காலமும் அதற்கு மிகப்பெரிய பலம்.  இதை  என் குருவிடம் கண்டிருக்கிறேன். வாசியோகம் ஒரு சிலரால் மட்டுமே முறையாகத் தெளிந்த ஞானம் உடையவர்களால்  பயிற்றுவிக்கப்படுகிறது. சித்தர் கலையான இந்த யோகம் பல முறைகளில் கையாளப்படுகிறது. எதுவாகிலும். முறையான முதல் தவத்தில் அது காண்பித்துக் கொடுக்கப்படுகிறது. முதல் தவம் தவறானால் முற்றிலும் கோணம் எனக்கேற்ப. அடுத்த படிகள் சாதகனால் மட்டும் கடக்கப்படுகிறது. பின்னர் வருடங்கள் கூடக் கூட சாதகன் புவியீர்ப்பு  விசை விட்டு வெளியேறிப் பறந்து விடுகிறான். தாங்கள் கூறும் வார்த்தைகள் சிதறி அங்குமிங்கும் பரவி அதனிடத்தில் ஒன்றிவிடுகிறது. கிரகங்கள் அசையும் வகைக்கேற்ப சிதறிய வகைகள் ஒன்றுகூடி பிம்பத்தை உருவாக்கிக் கொடுத்து விடுகிறது.
தவ விஞ்ஞானி என்ற சொல் இப்பொழுது எல்லா யோக மையங்களிலும் உயர்த்தி ஒலிக்கப்படுகிறது. காரணம் காலம் கடந்து போய்விட்ட காரணத்தாலும் சொல்லிக் கொடுத்த தவங்கள் இறுதிக்கு
உள்ளான பலனைக் கொண்டு வரவில்லை என்பதாலும்,  இவ்வாறு புதிதாக தவ விஞ்ஞானி என்ற சொல் முன்னிறுத்தப்படுகிறது. வெளிப்படையான காரணம் தவங்கள் முறையான அடுக்குகளில் பின்பற்றப்படவில்லை என்பதே..

இயக்கமற்ற நிலையில் பயணிக்கும் யோகி எவ்வாறு இயக்க நிலையில் வேலை செய்யும் விஞ்ஞானி  அளவிற்கு தங்களைக்   கொண்டு வர முடியும்?. அவ்வாறு வந்தால் இருப்பு நிலை இரகசியங்களைப் பாதுகாத்து விடும். யோகி சமாதி நிலைக்குப் போகாமல் இறக்க நேரிடலாம்.  இயற்கை தங்களை ஆராய விடுவதில்லை. ஆகையால் இது தவறான வாதம். பெரியோர்  இதை அறிந்து கொள்வீர்களாக.

முறையான தவங்கள் ஒருவரது சுயத்தை அழித்து விடும். வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விடும். வாழ்க்கையின் எல்லை வரை கொண்டு செல்லும் இயல்புடையது. யோகம் நம்மை உடைத்து எறிந்து விடும். விளிம்பு நிலைக்குக் கொண்டு போய் பயமுறுத்தும். படிப் படியாக தவம் கூடும் வருடங்களில் சாதகன் தன்னை இழந்து மிரண்டு போய் விடும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். தாங்கள் தங்கள் கட்டுக்குள் இல்லை என்பதை அறிந்து கொள்ளும் நிலையில் தன்னை இயற்கையிடம் இழப்பதை தவிர வேறு மாற்று வழியே  அவனுக்கு  இருப்பதறகில்லை.

வாசியோகம் சாதகனை மயக்கமுறச் செய்து விடும்.  அவன் அண்டசராசரங்களைக் கட்டி ஆள்பவன் ஆகிறான். காலம் செல்ல அதன் அரண்கள் உடைத்தெறியும் போது தாங்கள் நினைப்பதை இயற்கை கேட்டு அதன் வழியில் தங்களுக்கு வழி விடுகிறது என்பதை உணர்ந்தே வருகிறான். மனப்  பிரமையில் மூழ்கி விடுகிறான். இயற்கை தனக்குக் கீழ் படியும் போது பயந்தேயிருக்கிறான்.
இவ்வாறு வருடங்களை யோகி சிறிது சிறிதாக இழந்து விடுகிறான். திரும்பிப் பார்க்கையில் தாங்கள் எல்லாம் இழந்து விட்டதாகவே உணர்கிறான். ஆகையால் யோகிகள் அன்பானவர்களை தவிர மற்றவரை  தூக்கி எறிந்து  விடுகிறார்கள்.

உண்மையான தவம் ஆளைச்  சிதைத்து விடும். சரியான வாசியோகம் செய்கிறவர்கள் தனித்தே இருக்கிறார்கள். அவர்களுடைய மிகப்பெரிய பலம் என்பது தங்களைச் சுற்றி உள்ளது, தங்கள் கட்டுக்குள் உள்ளது என்பதை உள்ளதை உணர்ந்த பின்பு அமைதியாக இருக்க வேண்டியுள்ளது என்பதே.

அன்பர்களே இதை எழுதுவது தாங்கள் உண்மையை உணர்ந்து அதன் வழியை வடித்தெடுத்து, உண்மை யோகத்தை கற்று உணர வேண்டியே எழுத நேர்ந்தது. இதை இப்படி எழுத  விரும்புவதன்  காரணம் செயல் யோகம் அதன் வடிவெடுத்தவுடன் அதன் உருவத்தை இயற்கை நிலைக்கே தள்ளிச் சென்று சாத்திவிடும் என்பதைப் புரிந்து கொண்டு, உணர்ந்துகொள்ளலாம். இறுதியாய் அதன் பாகங்களை மட்டும் நம்மால் எடுக்க முடியும் என்பதை தவம் இயற்றுபவர் உணர்ந்து கொள்வார் என்ற காரணமும் ஆகும்.

செவ்வாய், 5 நவம்பர், 2019

குருவே சரணம் குருவின் திருவடி சரணம்.



என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இதனை எழுதுகிறேன்.

வாசியோகத்தை பற்றி இதுவரை முறையாகப் பயிலாதவர்கள் அது என்ன வகையான யோக முறை என்று அறிந்திராமலும். மற்றும் அதைப்
பயிற்சி செய்து பார்க்காமலும் தங்கள் கருத்துக்களை முகநூலிலும் மற்றும் வலைத் தளத்திலும்  ஏற்றி வருகிறார்கள்.
வாசியோகம் பல வகைகளில் பல காலங்களில் இயற்றப்படுகிறது. முறையாக பயின்றவர் அதன் சக்தியை அடக்கியாள்வார்கள். நேரமும் காலமும் அதற்கு மிகப் பெரிய பலம்.  இதனை  என் குருவிடம் கண்டிருக்கிறேன். வாசியோகம் ஒரு சிலரால் மட்டுமே முறையாகத் தெளிந்த ஞானமுடையவர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. சித்தர் கலையான இந்த யோகம் பல முறைகளில் கையாளப்படுகிறது. எதுவாகிலும். முறையான முதல் தவத்தில் அது காண்பித்துக் கொடுக்கப்படுகிறது. முதல் தவம் தவறானால் முற்றிலும் கோணம் எனக்கேற்ப. அடுத்த படிகள் சாதகனால் மட்டும் கடக்கப்படுகிறது. பின்னர் வருடங்கள் கூடக் கூட சாதகன் புவியீர்ப்பு  விசைவிட்டு வெளியேறிப் பறந்து விடுகிறான். தாங்கள் கூறும் வார்த்தைகள் சிதறி அங்குமிங்கும் பரவி அதனிடத்தில் ஒன்றி விடுகிறது. கிரகங்கள் அசையும் வகைக்கேற்ப சிதறியவகைகள் ஒன்றுகூடி பிம்பத்தை உருவாக்கிக் கொடுத்து விடுகிறது.
Sage scientist தவவிஞ்ஞானி என்ற சொல் இப்பொழுது எல்லா யோக மையங்களிலும் உயர்த்தி ஒலிக்கப்படுகிறது. காரணம் காலம் கடந்து போய்விட்ட காரணத்தாலும் சொல்லிக்கொடுத்த தவங்கள் இறுதிக்குள்ளான பயனைக் கொண்டு வரவில்லை என்பதாலும் இவ்வாறு புதியதாக தவவிஞ்ஞானி என்ற சொல் முன்னிறுத்தப்படுகிறது. வெளிப்படையான காரணம் தவங்கள் முறையான அடுக்குகளில் பின்பற்றப் படவில்லை.

இயக்கமற்ற நிலையில் பயணிக்கும் யோகி எவ்வாறு இயக்கநிலையில் வேலை செய்யும் விஞ்ஞானி  அளவிற்கு தங்களை  கொண்டு வர முடியும்?. அவ்வாறு வந்தால் இருப்பு நிலை இரகசியங்களைப் பாதுகாத்து விடும். யோகி சமாதி நிலைக்குப் போகாமல் இறக்க நேரிடலாம். இயற்கை தங்களை ஆராய விடுவதில்லை. ஆகையால் இது தவறான வாதம். பெரியோர்  இதை அறி்ந்து  கொள்வீர்களாக.

முறையான தவங்கள் ஒருவரது சுயத்தை அழித்து விடும். வாழ்க்கையை புரட்டிப்போ ட்டு்விடும். வாழ்க்கையின் எல்லைவரை கொண்டுச் செல்லும் இயல்புடையது. யோகம் நம்மை உடைத்து எறிந்து விடும். விளிம்பு நிலைக்குக் கொண்டுப் போய் பயமுறுத்தும். படிப் படியாக தவம் கூடும் வருடங்களில் சாதகன் தன்னையிழந்து மிரண்டு போய்விடும் நிலைக்கு தள்ளப்படுகிறான். தாங்கள் தங்கள் கட்டுக்குள் இல்லை என்பதை அறிந்து கொள்ளும் நிலையில் தன்னை இயற்கையிடம் இழப்பதை தவிர வேறு மாற்று வழியே  அவனுக்கு  இருப்பதில்லை.

வாசியோகம் சாதகனை மயக்கமுறச் செய்து விடும். அண்டசராசரங்களைக் கட்டி ஆள்பவன்ஆகிறான் அவன். காலம் செல்ல அதன் அரண்கள் உடைத்தெறியும் போது தாங்கள் நினைப்பதை இயற்கை கேட்டு அதன் வழியில் தங்களுக்கு வழி விடுகிறது என்பதை உணர்ந்தே வருகிறான். மனப்  பிரமையில் ழூழ்கி விடுகிறான். இயற்கை தனக்கு கீழ்படியும் போது பயந்தேயிருக்கிறான்.
அவ்வாறு வருடங்களை யோகி சிறிது சிறிதாக இழந்து விடுகிறான். திரும்பிப் பார்க்கையில் தாங்கள் எல்லாம் இழந்து விட்டதாகவே உணர்கிறான். ஆகையால் யோகிகள் அன்பானவர்களைத்தவிர மற்றவரை  துாக்கியெறிந்து  விடுகிறார்கள்.

உண்மையான தவம் ஆளை சிதைத்தவிடும். சரியான வாசியோகம் செய்கிறவர்கள்.தனித்தேயிருக்கிறார்கள். அவர்களுடைய மிகப்பெரிய பலம் என்பது தங்களை சுற்றி உள்ளது தங்கள் கட்டுக்குள் உள்ளது என்பதை உள்ளதை உணர்ந்த பின்பு அமைதியாக இருக்கவேண்டியுள்ளது என்பதே.

அன்பர்களே இதை எழுதுவது தாங்கள் உண்மையை உணர்ந்து அதன் வழியை வடித்தெடுத்துஉண்மை யோகத்தை கற்று உணர வேண்டியே எழுத நேர்ந்தது. 
உலகில் பல ஆன்மாக்கள் தோன்றி மறைகின்றன. பல ஆன்மாக்கள் கல்வி, செல்வம், புகழ், அரசியல், விஞ்ஞானம், தொழில் என்று பலவகையான விஷயங்களில் முன்னேறி தன் அனுபவங்களை இவ்வுலகிற்கு தந்துவிட்டுச் செல்கிறது. இதில் மனித வாழ்க்கையின் மிக உயர்ந்த வாழ்க்கையான ஆன்ம (ஞான) வாழ்க்கை தான் மிகப்பெரிதும் மதிக்கப்படுகின்ற வாழ்க்கையாகும்.
ஆகவே இந்த வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களை இவ்வுலகிற்கு பல ஞானிகள் வெளிப்படுத்திச் சென்று இருக்கிறார்கள். இவையெல்லாம் மனிதனுடைய வாழ்க்கையையும், அறிவையும் மேம்படச் செய்வதற்காகத்தான், இந்த வகையில் நான் சொல்லப்போகும் விஷயங்கள் என்னுடைய ஆன்ம அனுபவத்தால் அறிந்த விஷயங்கள். ஆகவே நான் சொல்லப்போகும் இவ்விஷயங்கள் உலகத்தின் எந்த ஒரு மதத்திற்கோ, இனத்திற்கோ, கலாச்சாரத்திற்கோ எதிரான விஷயம் அல்ல. இது முற்றிலும் ஆன்மாவின் அனுபவமும், ஆன்ம ரகசியமும் ஆகும். எல்லோரும் இதைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும், மேலும் இதைபற்றி ஆராய்ச்சி செய்யவேண்டும். இதுவே ஒவ்வொரு ஆன்மாவின் கடமையாகும். நானும் இந்த ஆன்ம இரகசியத்தை ஆராய்ச்சி செய்து அதன் உண்மையை கண்டறிந்து இவ்வுலகிற்கு சொல்ல விரும்புகிறேன்.

செவ்வாய், 22 அக்டோபர், 2019

சித்தர்களின் மூலிகை

தனி மூலிகைக்  காயகற்பம் 
சித்தர்கள் காயகற்பங்களை உண்டு தங்களின் உடலுக்கு நோய்கள் வராமலும், தங்களின் உடலை வலுவூட்டவும் செய்தனர். தனி மூலிகைகளைக் கொண்டே காயகற்பம் செய்தனர். அவ்வாறு சித்தர்கள் எடுத்துக்கொண்ட சித்தர்களின் மூலிகை காயகற்பங்களாவன:
அகத்தியர் 100 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

கோரக்கர் கஞ்சா மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர், கஞ்சா மூலிகை உட்பட 90 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

நந்தீசர் 100 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

ரோமரிசி 71 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

குகைகன்னார் 71 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

மச்சமுனி வல்லாரை மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர், வல்லாரை மூலிகை உட்பட 71 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

ராமதேவர் 71 மூலிகை காயகற்பங்களை உண்டவர், முக்கிய மூலிகையாக கருநீலி கற்பம் உண்டார்.

திருமூலர் 66 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

போகர் கொல்லங்கோவை மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர், கொல்லங்கோவை மூலிகை உட்பட 44 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

சட்டமுனி 21 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

கொங்கணர் பொற்றிலைக்கையான் மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர், பொற்றிலைக்கையான் மூலிகை உட்பட 16 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

காளங்கிநாதர் சிவகரந்தை மூலிகையை கற்பம் செய்து உண்டவர். 

சிவயோகி கரிசாலை மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர்.

கஞ்சமலை கருநீலி மூலிகையை கற்பம் செய்து உண்டவர்.

பதஞ்சலி செருப்படை மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர்.

பத்தர் செங்கற்றாழையை கற்பம் செய்து உண்டவர்.

நரை, திரை, மூப்பு, சாக்காடு வெல்ல தமிழ் சித்தர்கள் பல அரிய மூலிகைகளை பயன்படுத்தினர். மக்கள் நலனுக்காக சில மூலிகைகளின் பெயர்களை இங்கே தொகுத்துள்ளோம். இதன் அடையாளங்கள், பண்புகள் மற்றும் குணப்படுத்தும் நோய்களை வெகு விரைவில் அளிக்கப்படும்.

அழுகண்ணி
தொழுகண்ணி
கணைஎருமை விருட்சம்
தில்லை விருட்சம்
சதுரமரம்
தும்புராமரம்
அரி நெல்லிமரம்
சரள தேவதாருமரம்
சோதி விருட்சம்
கருவாழை
கருஊமத்தை
மலை அரளி
பப்பரப்புளிய மரம் - பஞ்சவேதி
சோம விருட்சம்
எட்டி மரம்
வெள்ளெருக்கு மரம்
சிகப்பு கீழ்க்காய் நெல்லி
குங்கிலிய மரம்
தான்றி மரம்
காயா மரம்
சிகப்பு தூதுவேளை
செங்கரிப்பான்
சர்க்கரை வேம்பு
வன்னி மரம்
தேவதாருமரம்
இந்திர வீர மரம்
வேம்பின் மேற் புல்லுருவி
கல்லத்தி மரம்
குருக்கத்தி மரம்
சேங்கொட்டை மரம்
சீந்தில் கொடிகள்
வேர்ப்பலா மரம்
கருங்கொடு வேலி
கருந்துத்தி
செந்தகரை
செங்கடுக்காய் மரம்
வெள்ளைப் பணல் முருங்கை
பேய்ச்சுரை
குருவரிக்கற்றாழை
மஞ்சள்பூ தைவேளை
செங்கற்றாழை
செந்நாயுருவி
அமிர்தவள்ளி
உரோம விருட்சம்
கருநெல்லி மரம்
நாகப்படக் கற்றாழை
வெண்நாவல்
வனப்பிரமி
முப்பிரண்டை
கரிப்பான்
சோதிப் புற்கள்
சிவந்த இலைக்கள்ளி
செங்கொடிவேலி
சாயா விருட்சம்
சேர்ந்தாடும் பாவை
பஞ்சதரு
சஞ்சீவி மூலி
உரோம வேங்கை மரம்
இருப்பவல் செடி
கணங்க விருட்சம்
பவளத்துத்தி
கருநொச்சி
கருநாரத்தை
நாகதாளி
சிவந்தபுனல் முருங்கை
பால்ப்பட்டை
அகில் மரம்
பாதிரி மரம்
கடுக்காய் மரம்
தேற்றான் மரம்
கரப்புன்னை
கல் தாமரை
முண்டக விருட்சம்
சிறியா நங்கை
ஆயில் மரம்
மயிலை மரம்
பிறாய் மரம்
கெட்டிவஞ்சி மரம்
கொஞ்சி மரம்
தொனியா மரம்
பிர்மதரு
கருக்குவாச்சி மரம்
ஊக்குணா மரம்
கைவலாக்கை மரம்
கணங்க விருட்சம்
பொற் சீந்தில்
வெண் துத்தி
திருகுக்கள்ளி
மிளகரணை
கானற்பலா 
வெள்ளை வேம்பு
இரத்தப்பலாசு மரம்
நேத்திரஞ்சிமிட்டி
வல்லாரை
சிவனார் வேம்பு
வெள்ளை நீர்முள்ளி
ஓரிலை தாமரை
பூமி சர்க்கரைகிழங்கு
ஆடு தின்னாப்பாளை
ஆடாதோடை
சீதா செங்கழுநீர்
செவ்வாழை
நெல்லி மரம்
வேலிப்பருத்தி கொடிகள்
துத்திச்செடிகள்
சத்திரப்பூடு
பொற்றலைக்கையான்
பாற்சொரி மரம்
வரை ஆலமரம்
செவ்வள்ளிக்கொடி
பலூனி மரம்
செங்கும்ரி வரை ஆலமரம்
கருங்கரிப்பான்
செந்தும்பை
கருந்தாமரை
குமரிக்கற்றாழை
பொற்பூ தைவேளை
நாகதாளிக்கள்ளி

அதிகாயசித்தி மூலிகைகள்:

பொற்சீந்தில்
விழுதி இலைக்கிழங்கு
பேய்ச் சுரை 
சர்க்கரை வேம்பு 
கருப்புச்சித்திர மூலம்
வெள்ளைப் பூ தூதுவேளை 
பேய்க்கடலை
கருமருது 
கருஞ்சிற்ற கத்தி 
கரு நெல்லி 
நாகதாளி 
நாறுகரந்தை
மால்தேவிவிதை