சிவார்ப்பணம்

Nothing is Mine, Everything Is Yours, O Mercyful Lord Arunachchala! என்னுடையது எதுவுமில்லை, அனைத்தும் உன்னுடையதே, அருளாளா!அருணாச்சலா! தன்னை அறியும் தவமே பெரிதென்று தரணியில் தவம் புரிவோரெல்லாம் சிவனை அறிவார், சிவமே ஆவார்"."Every Visitor to my Dwelling is GOD SHIVA HIM SELF"

இடுகைகள் இல்லை. எல்லா இடுகைகளையும் காண்பி
இடுகைகள் இல்லை. எல்லா இடுகைகளையும் காண்பி
முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

என்னைப் பற்றி

எனது படம்
Arivumathi. N
சிவமே என்று தொழுவோர்க்கு அகமே சிவம் எனும் தத்துவத்தை எளிதில் புரியவைப்பான்.சித்தன் தன்னை ஏன் சித்தன் என்று கூறுவதில்லை? ஏனெனில் சித்தத்தை உணரும்போது மௌனமாகிவிடுவர்கள் . ஈசன் என்ற நினைப்பில் தம்மை முழுமையும் அர்பணித்து விடுவார்கள்.கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை. வாழ்க்கையில் பல கரடு முரடான பாதைகளை சந்தித்து வந்தவள் நான். கடவுளை காண முடியாதா என ஏங்கிக்கொண்டிருக்கும் பல இதயங்களை போல என் இதயமும் காத்து இருந்தது என்பது உண்மை. அதிகப் பட்சமாக அதை பகிர்ந்து கொள்வதற்கு எனக்கு அனுமதி இல்லை என்பதே உண்மை.. அவனையே குருவாக முழு மனதோடு ஏற்றுக்கொள்ளும் போது அவர் அருள் நிச்சயம் கிடைக்கும்.அவன் அருளால் அவன் தாள் வணங்க, அனைத்தும் அம்சமாக கிடைக்கும்.அதற்காக உங்களின் நேரத்தை வீணடிக்காதிர்கள் என்பதே என் கருத்து.அவன் செயலும் அவனை அன்றி யாரும் அறியார். இது ஏற்கனவே எழுதப்பட்டதோ எழுதப்படாததோ என்பது எனக்கு தெரியாது ஆனால் இதுதான் நிசப்தமான உண்மை.அண்ட சராசரங்களும் அகில லோகத்தையும் ஆட்டுவிக்கும் கடவுளுக்கு தெரியாதா நமது தேடல் என்னவென்று? தேவை என்னவென்று? அவனை நாடி,அவன் அருளை தேடி,அவன் பாதம் தொழுவோர்க்குஅன்பே உருவாக அவன் காட்சி கிடைக்கும்!உங்களுக்கும் குருவருளால் எல்லாம் சித்திக்க வேண்டுகிறேன்...
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

உங்கள் தேடல் தான் என்ன?

"All life is Yoga" வாழ்க்கை முழுவதுமே யோகம்! இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது! வாழ்க்கையின் எந்த ஒரு அம்சத்தையும், அனுபவத்தையும் நிராகரிக்காத முழுமையான பார்வை இது.சித்தர்களைப் படிப்பதில்,அவ் வெண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் மிக்க ஆர்வம் உள்ளவள். நவ கோடாணு கோடி சித்தர்கள் இப் பிரபஞ்சத்திலே இருக்கின்றார்கள். நம் கண்ணுக்கு புலப்படவில்லை என்பதால் இல்லை என்று நம்மால் சொல்லிட முடியுமா?

உங்களின் தேடல் தான் என்ன?
இந்த கேள்வியை நீங்கள் படித்த உடன் உங்களுக்குள் கண்டிப்பாக தேடிப் பார்ப்பீர்கள். என்ன தான் உங்களின் தேவை என்று. ஆனால் ஒரு நிமிடம் இந்த கேள்வியை படித்ததும் தயவு செய்து உங்களின் தேடல் தான் என்ன என்று அமைதியாக ஒரு நிமிடம் யோசித்து தெளிவு பெறுங்கள். அதற்கான முயற்சியில் இறங்குங்கள். அனைத்தும் அவன் அருளால் அம்சமாக நடந்தேறும். இது நாள் வரையில் என் வாழ்க்கையை நடத்துபவனும் அவனே. நடத்திக் கொண்டிருப்பவனும் அவனே.
பலர் தேடித் தேடி கடைசி வரையில் விடைகாண முடியாமல் அப்படியே வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். சிலர் விடை கண்டு பிடித்தாலும் கடைந்தேற முடியாமல் போய் விடுகிறது, அதற்கு காரணம் இந்த கலியுகம்,.பலர் குருவைத் தேடித் தேடி நேரத்தை செலவழித்து விடுகின்றனர். ஆனால் இந்த கலியுகத்தில் குரு கிடைக்க வேண்டியவர்களுக்கு மட்டும் தான் குரு கிடைப்பார் என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
இறையை நீங்கள் மனதார நினைத்து நினைவால் தினமும் ஆராதனையும் பாராயணமும் செய்தால் அந்த இறையே குருவாக உங்களுக்கு வந்துதிப்பார். அல்லது உதிக்க வைப்பார். ஏன் இது??? நிற்க, யோசிக்க.
இறையே உங்களுக்காக உதவ வரும் போது ஏன் ஒரு குரு...அவரே குருவாகி விடுவாரே எனும் போதினிலே..!
யாரும் காலத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. எல்லாம் அவன் அருளாலே என்று விட்டு விடுங்கள் . ஆனால் அவனை உறுதியாக பிடித்துக் கொள்ளுங்கள் அது போதும்.
அதுவும் இந்த கலிகாலத்தில் அவனை அடைவது மிகவும் கடினம் ., அப்படி மீறி அவனை அடைபவர்கள் எப்பேர் பட்டவர்கள் என்று சொல்லித் தெரிவதில்லை.
எப்படி எப்படியோ இறையைத் தேடுபவர்களில் இப்படியும் அடையலாம் என்று ஒரு குறிக்கோளே இல்லாமல் தேடியவர்களில் நானும் ஒருத்தி. பக்கத்திலேயே இருப்பான் ஆனால் இருக்கமாட்டான் அவன் தான் இறைவன்,.
ஆனால் எப்போதும் அவன் நம்மை வழி நடத்துவான் என்று உறுதியாக நம்புங்கள்.
சிவமே என்று தொழுவோர்க்கு அகமே சிவம் எனும் தத்துவத்தை எளிதில் புரியவைப்பான் அவன்.
எல்லா மதத்திலும் பல நல்ல விசயங்களும் சில இந்த கால கட்டத்துக்கு தேவையில்லாத விசயங்களும் இருக்கின்றன. ஒரு அன்னப் பறவை போல தேவையானவற்றை கடைப் பிடித்து தேவை இல்லாதவற்றை விலக்கினாலே நல் வழி புலப்படும்.அந்த தெளிவே நம்மை ஞானத்தை நோக்கி இட்டுச் செல்லும்.
சித்தர்களை என்று வணங்க ஆரம்பிகின்றோமோ அன்றே ஞானத்திற்கான வாயில் திறக்கப் படுகிறது.
எவ்வளவு இருந்தாலும், ஞானம் தான் மனிதன் அடைய வேண்டிய உன்னத லட்சியம். அதை நோக்கிப் பயணிப்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமை. ஞானப் பயணமே நம் லட்சியப் பயணம்.

கடவுளை நாம் ஏற்றுகொண்டிருக்கிறோமா இல்லையா என்பது ஒரு விஷயமே அல்ல. அவர் நம்மை ஏற்றுக் கொள்ளும் நிலைமையில் நம்முடைய வாழ்க்கையும் செயல்பாடும் இருக்கிறதா என்பதையே அனைவரும் ஆராய வேண்டும் என்பது என் அபிப்பிராயம். நல்லவனாக இருந்து நாலு பேருக்கு நம்மால் இயன்ற நன்மையை செய்வதை விட மிகப் பெரிய ஆன்மிகம் இந்த உலகில் எதுவும் இல்லை. "சிவார்ப்பணம்" எனது வலையத்தள மின் நூலகம்’.நீங்களும் இந்த மின் நூல் நிலையத்திற்குள் நுழைந்து உங்களுக்கு விருப்பமான பகுதிகளை வாசிக்கலாம். இவை உங்களுக்குப் பயன்படுபவையாக இருக்க விரும்புகின்றேன்.
நன்றி

என்றென்றும் நட்புடன்,
அறிவுமதி. N
கனடாவிலிருந்து..
ஐப்பசி 14, 2010

எனது வலைப்பதிவு பட்டியல்

  • சிவார்ப்பணம்
    நீடித்த ஆயுள் தரும் கார்த்திகை தீப வழிபாடு
    5 ஆண்டுகள் முன்பு
  • Spiritual Path ஆன்மீகப் பாதை
    திருக்குறள் விளக்கம்
    10 ஆண்டுகள் முன்பு

Pages

  • Home

பின்பற்றுபவர்கள்

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2021 (1)
    • ▼  ஆகஸ்ட் (1)
      • முழுமையான வாழ்க்கை வாழ வேண்டும்
  • ►  2020 (28)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (4)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (5)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (1)
  • ►  2019 (2)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
  • ►  2017 (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2016 (27)
    • ►  டிசம்பர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (8)
  • ►  2015 (73)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (9)
  • ►  2014 (5)
    • ►  டிசம்பர் (1)
    • ►  ஜூன் (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2013 (49)
    • ►  டிசம்பர் (4)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (9)
    • ►  ஜூன் (10)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2012 (19)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (3)
    • ►  ஏப்ரல் (1)
  • ►  2010 (9)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (2)
எத்ரியல் தீம். Blogger இயக்குவது.