செவ்வாய், 22 அக்டோபர், 2019

சித்தர்களின் மூலிகை

தனி மூலிகைக்  காயகற்பம் 
சித்தர்கள் காயகற்பங்களை உண்டு தங்களின் உடலுக்கு நோய்கள் வராமலும், தங்களின் உடலை வலுவூட்டவும் செய்தனர். தனி மூலிகைகளைக் கொண்டே காயகற்பம் செய்தனர். அவ்வாறு சித்தர்கள் எடுத்துக்கொண்ட சித்தர்களின் மூலிகை காயகற்பங்களாவன:
அகத்தியர் 100 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

கோரக்கர் கஞ்சா மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர், கஞ்சா மூலிகை உட்பட 90 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

நந்தீசர் 100 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

ரோமரிசி 71 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

குகைகன்னார் 71 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

மச்சமுனி வல்லாரை மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர், வல்லாரை மூலிகை உட்பட 71 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

ராமதேவர் 71 மூலிகை காயகற்பங்களை உண்டவர், முக்கிய மூலிகையாக கருநீலி கற்பம் உண்டார்.

திருமூலர் 66 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

போகர் கொல்லங்கோவை மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர், கொல்லங்கோவை மூலிகை உட்பட 44 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

சட்டமுனி 21 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

கொங்கணர் பொற்றிலைக்கையான் மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர், பொற்றிலைக்கையான் மூலிகை உட்பட 16 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

காளங்கிநாதர் சிவகரந்தை மூலிகையை கற்பம் செய்து உண்டவர். 

சிவயோகி கரிசாலை மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர்.

கஞ்சமலை கருநீலி மூலிகையை கற்பம் செய்து உண்டவர்.

பதஞ்சலி செருப்படை மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர்.

பத்தர் செங்கற்றாழையை கற்பம் செய்து உண்டவர்.

நரை, திரை, மூப்பு, சாக்காடு வெல்ல தமிழ் சித்தர்கள் பல அரிய மூலிகைகளை பயன்படுத்தினர். மக்கள் நலனுக்காக சில மூலிகைகளின் பெயர்களை இங்கே தொகுத்துள்ளோம். இதன் அடையாளங்கள், பண்புகள் மற்றும் குணப்படுத்தும் நோய்களை வெகு விரைவில் அளிக்கப்படும்.

அழுகண்ணி
தொழுகண்ணி
கணைஎருமை விருட்சம்
தில்லை விருட்சம்
சதுரமரம்
தும்புராமரம்
அரி நெல்லிமரம்
சரள தேவதாருமரம்
சோதி விருட்சம்
கருவாழை
கருஊமத்தை
மலை அரளி
பப்பரப்புளிய மரம் - பஞ்சவேதி
சோம விருட்சம்
எட்டி மரம்
வெள்ளெருக்கு மரம்
சிகப்பு கீழ்க்காய் நெல்லி
குங்கிலிய மரம்
தான்றி மரம்
காயா மரம்
சிகப்பு தூதுவேளை
செங்கரிப்பான்
சர்க்கரை வேம்பு
வன்னி மரம்
தேவதாருமரம்
இந்திர வீர மரம்
வேம்பின் மேற் புல்லுருவி
கல்லத்தி மரம்
குருக்கத்தி மரம்
சேங்கொட்டை மரம்
சீந்தில் கொடிகள்
வேர்ப்பலா மரம்
கருங்கொடு வேலி
கருந்துத்தி
செந்தகரை
செங்கடுக்காய் மரம்
வெள்ளைப் பணல் முருங்கை
பேய்ச்சுரை
குருவரிக்கற்றாழை
மஞ்சள்பூ தைவேளை
செங்கற்றாழை
செந்நாயுருவி
அமிர்தவள்ளி
உரோம விருட்சம்
கருநெல்லி மரம்
நாகப்படக் கற்றாழை
வெண்நாவல்
வனப்பிரமி
முப்பிரண்டை
கரிப்பான்
சோதிப் புற்கள்
சிவந்த இலைக்கள்ளி
செங்கொடிவேலி
சாயா விருட்சம்
சேர்ந்தாடும் பாவை
பஞ்சதரு
சஞ்சீவி மூலி
உரோம வேங்கை மரம்
இருப்பவல் செடி
கணங்க விருட்சம்
பவளத்துத்தி
கருநொச்சி
கருநாரத்தை
நாகதாளி
சிவந்தபுனல் முருங்கை
பால்ப்பட்டை
அகில் மரம்
பாதிரி மரம்
கடுக்காய் மரம்
தேற்றான் மரம்
கரப்புன்னை
கல் தாமரை
முண்டக விருட்சம்
சிறியா நங்கை
ஆயில் மரம்
மயிலை மரம்
பிறாய் மரம்
கெட்டிவஞ்சி மரம்
கொஞ்சி மரம்
தொனியா மரம்
பிர்மதரு
கருக்குவாச்சி மரம்
ஊக்குணா மரம்
கைவலாக்கை மரம்
கணங்க விருட்சம்
பொற் சீந்தில்
வெண் துத்தி
திருகுக்கள்ளி
மிளகரணை
கானற்பலா 
வெள்ளை வேம்பு
இரத்தப்பலாசு மரம்
நேத்திரஞ்சிமிட்டி
வல்லாரை
சிவனார் வேம்பு
வெள்ளை நீர்முள்ளி
ஓரிலை தாமரை
பூமி சர்க்கரைகிழங்கு
ஆடு தின்னாப்பாளை
ஆடாதோடை
சீதா செங்கழுநீர்
செவ்வாழை
நெல்லி மரம்
வேலிப்பருத்தி கொடிகள்
துத்திச்செடிகள்
சத்திரப்பூடு
பொற்றலைக்கையான்
பாற்சொரி மரம்
வரை ஆலமரம்
செவ்வள்ளிக்கொடி
பலூனி மரம்
செங்கும்ரி வரை ஆலமரம்
கருங்கரிப்பான்
செந்தும்பை
கருந்தாமரை
குமரிக்கற்றாழை
பொற்பூ தைவேளை
நாகதாளிக்கள்ளி

அதிகாயசித்தி மூலிகைகள்:

பொற்சீந்தில்
விழுதி இலைக்கிழங்கு
பேய்ச் சுரை 
சர்க்கரை வேம்பு 
கருப்புச்சித்திர மூலம்
வெள்ளைப் பூ தூதுவேளை 
பேய்க்கடலை
கருமருது 
கருஞ்சிற்ற கத்தி 
கரு நெல்லி 
நாகதாளி 
நாறுகரந்தை
மால்தேவிவிதை