புதன், 10 ஜூன், 2020

மெய்யான குருவின் வழிகாட்டுதல்

ஆனமீகத்தில் தன்னையறிதலையே ஞானம் என்கிறோம். ஞானம் என்பது சலனமில்லாத பரிபூரண நிலை. இந்த ஞானம் எப்போதும் நமக்குள்ளேயே தான் இருக்கிறது. அதை உணரவைத்து, உற்று நோக்கி குறையவும் தெளியவும் மெய்யான குருவின் வழிகாட்டுதல் அவசியமாகின்றது.
 இந்தப் பரிபூரண நிலையே சித்த நிலை அல்லது சமாதி நிலை என்கிறோம். சித்த  நிலை என்பது எதிர்பார்ப்பில்லாதது. கருணையும், அன்பும் பெருகிய ஒரு நிலை. தாமே அதுவாக உணர்ந்த உயரிய நிலை. இந்த நிலையை எய்தியவர்கள் எவரும் தங்களைத் தாங்கள்  ஞானம் அடைந்தவர் என்று சொல்லிக் கொள்வதில்லை, . 

ஞானத்தேடலை உணர்ந்தவர்களை, மெய்யான குரு அவர்களைத் தேடி வந்து ஆட்கொண்டு வழி நடத்துவார். அப்போது அந்த மேலான குருவின் பாதங்களை கள்ள மனமின்றிப் பற்றிப் பணிந்து பயன் பெற வேண்டும் என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்,
 
உள்ளங்கையிற் கனிபோல பொருளை
உண்மையுடன் காட்டவல்ல உண்மைக்கு குருவைக் 
கள்ளமனந் தன்னைகத்   தள்ளிக் கண்டு கொண்டன்பாய்க்  களித்துக்  களித்து  நின்று ஆடுபாம்பே!

பாம்பாட்டிச்சித்தர்.