செவ்வாய், 13 டிசம்பர், 2016

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமானரகசியங்கள்!!!

திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. 

பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். 

எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இது தான். 

இத்தலத்தில் தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி,திருவெம்பாவை, 

திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின்ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் 

கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின்மூலத் தலம். ஆதாரத் 

தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம். 
நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் !
அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில்ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின்உள்ளே ஆறு 

பிரகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள 

லிங்கம் (பால ரமணர்தவம் செய்த இடம்), 3 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாதமண்டபம் என அமைந்த ஆலயம்.
ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற  இரு பெரிய குளங்கள்

உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். 

பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு.
மூன்று இளையனார்!
இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில்  வணங்கப்

பெறுகிறார்.
அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந்தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு 

கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு

மண்டபத் தூணில் காட்சி தருகிறார்.
அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது,

தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.
கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகேயுள்ளது.
காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான். ஆடிப்பூரத்தன்று 

மாலை, ஆலயத்தின்உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா

நடத்தும் ஆலயமும் இதுஒன்றுதான். திருவிழா நாட்களில் திட்டி 

வாசல் வழியே உற்சவ மூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான். அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.
ஒன்பது கோபுரங்கள்!
கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடிஉயரம்); தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடிஉயரம்); மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்);வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடிஉயரம்).
சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்
சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், 

இம்மலையை தரிசிக்க ருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து 

இங்கு வரவழைக்கும்.

கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், 

திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும்,துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.
மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர்.இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்டலிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம்

அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொருவகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.
உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்!
திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் 

கண்களை அன்னைபராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே 

இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க

பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் 

இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் 

தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு 

சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை 

சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னைப் 

பிரியாதிருக்க தங்கள் திருமேனியில்எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என 

சக்தி வேண்டினார். அதற்கு சிவபெருமான்,அண்ணாமலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார்.
அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி 

ஒன்று உண்டானது. அப்போது ‘மலையைஇடதுபுறமாக சுற்றிவா’ என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது 

மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக 

காட்சியளித்தார். இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 

மலையளவு பயன்!
நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான 

பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள். 

அப்போது பெய்த அமுத மழைத்துளி மலை மீது பட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்க பலம் கொடுத்ததால் தான் 

இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.
கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும். திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும். மகாதீப தரிசனம் கண்டால்,அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.
கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்-நேர்க்கோட்டில் இருக்காது. இதன்வழியே படுத்து நெளிந்து, வளைந்து தான் வெளிவரவேண்டும். இதனால் குழந்தைப்பேறு கிட்டும்; கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், 

தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் 

அமைந்துள்ளன.  இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும்.
பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்!
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. 

அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம். திருஅண்ணாமலையார் கோயிலில் 

அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது.கோயிலுக்கு உள்ளே பே கோபுரத்துக்கு 

வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும்,அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக 

அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம். 

அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது. கோயிலில் தரிசனம் 

செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.
பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு 

வழிபாடுகள் நடைபெறுகிறது. பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி 

தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் 

அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் 

பாத தரிசனத்தை நாம் காணலாம். திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம்.
அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞான

தேசிகர், குருநமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி,

தெய்வசிகாமணி தேசிகர்,விருப்பாட்சிமுனிவர், சேஷாத்ரி சுவாமிகள், 

இசக்கிசாமியார், விசிறி சாமியார்,அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, 

சடைச் சாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள்,

பத்ராசல சுவாமி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.
கார்த்திகை ஜோதி மகத்துவம்!
அண்ணாமலையார் தீபம் என்பது திரு விளக்கின் விஸ்வரூபம்.  தீபம் என்பது லட்சுமிதேவியின் வடிவத்தையும் (சுடர்),

சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின்சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு 

தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் 

என்பது ஆன்றோர் மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக 

கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின்

அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீபஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் 

கிடைக்கும் என்கின்றன.எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம்

ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா 

நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன்தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும்,இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், 

இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக்

கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் 

என்பது நம்பிக்கை. சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் 

உச்சியில் மகாதீபவடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.

தீபத் திருவிழா!
உலகப் புகழ்பெற்ற தீபத்திருவிழா 12 நாட்களுக்கு திருவண்ணாமலையில் நடைபெறும்.

தினமும் காலையும், மாலையும் பஞ்சமூர்த்திகள்

சிறப்பு அலங்காரத்துடன் பலவகைவாகனங்களில் பவனி வருவார்கள். ஐந்தாம் நாள் வெள்ளி ரத உற்சவமும், ஏழாம் நாள் ரதஉற்சவமும் சிறப்பாக 

நடைபெறும். பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேர்களில் உலாவருவார்கள். சுவாமி தேர் பெரியது. அடுத்தது அம்மன் தேர். இதை பெண்களே வடம் பிடித்துஇழுப்பார்கள்.
பரணி தீபம்!
பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறை முன் 

மிகப்பெரிய கற்பூரக்கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். 

இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு 

ஏற்றுவார்கள். அதன்பின்உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள்.இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.
மகாதீபம்!
மாலை 6.00 மணிக்கு இந்த பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்துகொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பறையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளேசென்றுவிடுவார். 

இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போதே வாசல் வழியே பெரிய

தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். 

இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர்.

மக்கள் கோஷமாக"அண்ணாமலைக்கு அரோஹரா' எனக்கூறி தரிசனம் கண்டபின், 

இல்லம் சென்று வீடுமுழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்து விட்டு விரதம் முடிப்பார்கள்.
ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3,000 கிலோபசுநெய், 1,000 மீட்டர் காடா துணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள்.
தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள் தான். . இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று 

இவர்கள்ஆலயத்தில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கௌரவித்த பின் தீபம் ஏற்றும்பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். 

மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்துவிடுவார்கள். ஜலால தீப 

அடையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள். இத்தீபம் 11நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும்.
திருப்புகழ் மண்டபம் ஆலயத்தில் அமைந்துள்ளது. இங்குதான் 

சமயச் சொற்பொழிவுகள்நடைபெறும். இவ்வாலயம் முழுவதும் சுற்றிப்

பார்க்க மூன்று மணி நேரம் ஆகும்.
லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை 

தரிசிப்போம்! பிறவிப்பிணி நீங்கி நல்வாழ்வு பெறுவோம்!
“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”

வெள்ளி, 22 ஜூலை, 2016

முன் ஜென்ம பாவ புண்ணியங்கள்!



அன்புடையீர்,
முற்பிறப்பு, மறுபிறப்பு பற்றி நான் அறிந்தவரை…


‘வினையும் அதன் மறுவினையும் சமமாகவும் எதிரானதாகவும் இருக்கும்’ என்று கூறியது நியூட்டனின் சித்தாந்தம். இதை இயற்பியல் உலகில் அப்படியே நாம் ஏற்றுக்கொள்கிறோம். இதன் ஆன்மிகப் பயன்பாடு தான் ‘Karma Theory’ என்று சொல்லப்படும் வினைப்பயன் கொள்கை.
‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’, ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’, ‘தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்’ என்றும் முன்னோர்கள் வேண்டிய அளவு நம்மை எச்சரித்தனர். ஆனால் நாம் ‘மூத்தோர் சொல் வார்த்தை விஷம்’ என்று பெரும்பாலும் நினைக்கிற காலத்தில் இருக்கிறோம். தவறு செய்தவன் நம் கண் முன்னாலேயே தண்டனை பெறவேண்டும், இல்லையென்றால் தெய்வம் என்ற ஒன்றே கிடையாது எனப் பேசுகிறோம்.
தமிழில் ‘தெய்வம்’ என்ற சொல்லுக்கு ‘விதி’ என்ற பொருளும் உண்டு. ‘விதி’யை யார் விதித்தார்கள்? யாருமல்ல, நாமேதான்!!!. அதனால்தான் சங்கப் புலவன் ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று மிக உறுதியாகக் கூறினான். இந்து மதம், கடவுளை சாட்சி பூதம் என்று ஒரு நிலையில் சொல்கிறது. நீங்கள் வானத்தை நோக்கி எச்சில் துப்பினீர்கள், அது உங்கள் மேல் மீண்டு வந்து விழுந்தது. உடனே வானம் என்மீது எச்சில் துப்பியது என்று அலறி என்ன பயன்? வானம் பார்த்துக் கொண்டு தான் இருந்தது. வானம் மிக மேலே இருக்கிறது. உங்களைப் பழிவாங்க அதற்கு நேரம் இல்லை. நீங்கள் துப்பியதை இயற்கை மீண்டும் உங்கள் மேலேயே விழுமாறு செய்தது.
வானத்தை நோக்கி எச்சில் துப்பினால் எச்சில் விழும்,  அமிலத்தை ஊற்றினால்… ஊற்றியவன் அமில மழையில் நனைவான், உருக்குலைந்து தான் போவான்.
அப்போது, ‘ஐயோ, இறைவா! உனக்கு என்மீது கருணை இல்லையா?’ என்று கதறுகிறான். அவநம்பிக்கைப் படுகிறான். மற்றவர்கள் எல்லாம் நன்றாக இருக்க எனக்கு மட்டும் ஏன் இப்படித் துன்பம் வருகிறது? என்று புலம்புகிறான். சில சமயம் கடவுள் நம்பிக்கையையே இழக்கிறான்.
கீரை விதை போட்டால் ஆறு மாதத்தில் பலன். வாழை நட்டால் ஒரு வருடத்தில் பலன். தென்னை நட்டால் நான்கு வருடத்தில் பலன். தேக்கு மரம் அறுபது வருடங்கள் எடுக்கிறது.
அதேபோல, நமது நல்ல, தீய செயல்களும் பலன் தர அவற்றின் தன்மைக்கு ஏற்பக் குறைவாகவோ அதிகமாகவோ நாள் எடுக்கின்றன. நமது கரும வினைகளை முன்னோர்கள் மூன்று வகையாகப் பிரித்தார்கள்: பிராரப்தம், ஆகாமியம், சஞ்சிதம் என்பவையே அவை.
பிராரப்தம் என்பது பலன் தரத் தொடங்கி விட்ட வினைகள். விதைத்து, மரம் வளர்ந்து, கனி தரத் தொடங்கிவிட்டது. நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுகதுக்கங்கள் இந்த வினைப் பயன்கள்தாம்.
ஆகாம்யம் என்பது விதைத்து வளரத்தொடங்கிவிட்ட பயிர் போல. அது மரமா,செடியா, கொடியா என்பதைப் பொறுத்துத் தக்க சமயத்தில், இந்தப் பிறவியிலேயே பலன் தரும்.


சஞ்சிதம் என்பது விதைக் கையிருப்பு. ஆனால் பயிராகவில்லை. இந்தப் பிறவியிலோ இன்னும் வரும் பிறவிகளிலோ எப்போது வேண்டுமானாலும் பலன் தரும்.
‘போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்’ என்று ஆண்டாள் திருப்பாவையில் இரண்டு வகை வினைகளைக் கூறுகிறாள். ஒன்று, முன்பே செய்துவிட்ட பிழை, அடுத்தது, இன்னும் வரப்போகும் பிழை (அதாவது அந்தப் பாவங்களின் விளைவு).
ஆக, பாவம், புண்ணியம் இவை இரண்டின் மூட்டையைச் சுமந்து பிறப்பு வருகிறது. அந்தப் பிறப்பு மனிதப் பிறப்பாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. 
பாவ புண்ணிய மூட்டையின் பலனாக மீண்டும் மனிதனாகத்தான் பிறக்க வேண்டும் என்பதில்லை என்று சொல்லி நிறுத்தினேன்.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்பல் விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
என்று திருவாசகத்தில் (சிவபுராணம், 26-32) எப்படி மனிதன் கல் போன்ற ஜடப்பொருள் தொடங்கி புல் முதல் தேவர் வரையான (ஓரறிவிலிருந்து பல்லறிவுடைய பிறவிகள்) பல வகைப் பிறப்பும் எடுத்துத் துயரப்பட்டேன் என்று பட்டியலிடுகிறார்.

ஒருமுறை புத்தரின் முக்கியச் சீடரான மௌத்கல்யாயனர் மற்றும் லட்சணர் கிருத்திர கூட மலையிலிருந்து இறங்கி வரும் போது பாம்புத் தோற்றம் கொண்ட பேயைப் பார்க்கின்றனர். இந்த அதிசயத்தைப் போய் அவர்கள் புத்தரிடம் கூறியதும் அவர் கூறினார்:
“புதிதாகக் கறந்த பால் உடனே தயிராகாது. அதுபோலத்
தீய செயல்களின் விளைவுகள் உடனே தெரிவதில்லை.
அத் தீய செயல்களின் பலன்கள் நீறு பூத்த நெருப்புப் போல
மறைந்திருந்து பாவம் செய்த அறிவிலிகளைச் சுடுகின்றன.”

என்று கூறினார் (தம்மபதம்: மூடர் இயல்: 12). மேலும் அவர் அந்தப் பேயின் பின்புலத்தை இவ்வாறு விளக்கினார், “காஸ்யப புத்தர் என்று ஒருவர் இருந்தார். அவரது காலத்தில் துறவிகள் பலர் ஊருக்குள் சென்று பிச்சை எடுத்தனர். இவர்களை விரும்பாத ஒரு விவசாயி பிட்சுக்களின் குடில்களைத் தீயிட்டுக் கொளுத்தினான். அதன் காரணமாகவே அவன் பாம்பு உருவம் கொண்ட பேயாகப் பிறப்பெடுத்திருக்கிறான்” என்று விளக்கினார்.

எதுவரை செயல்களைச் செய்கிறோமோ, அதுவரை பிறப்பும் இறப்பும் என்னும் சுழல் நம்மைத் தொடரும். இன்பம் துன்பம் என்னும் இருமைகள் இருக்கும்.
முற்பிறவியும் மறுபிறவியும் நிச்சயம் உண்டு. அப்படி செயலைத் தவிர்க்க வேண்டுமா? அது தனிக் கேள்வி. அதற்கு விடை சொல்லப் போனால் இன்னும் பெரிதாக விரியும்.

ஆனால், ஒருவன் துன்பப்படும் போது “இது உன் வினைப்பயன்” என்று கூறிப் பாராமுகமாக இருக்கும் உரிமை சக மனிதனுக்குக் கிடையாது. கருணை உள்ளவனே ஆன்மிகவாதியாக முடியும். அதனால் தான் வள்ளலார் பெருமான், ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று உருகினார். அன்பினால் பிறருக்குச் செய்யும் தன்னலம் கருதாத சேவை மனிதனின் ஆணவத்தை அழித்து, அவனை உயர் நிலைக்குக் கொண்டு செல்கிறது.

அதனால்தான் தன்னலம் கருதாத பேரன்பே ஆன்மிகம். எல்லாவுயிரும் தம்முயிர்போல் எண்ணுவதே ஆன்மிகம். ஆன்மிக வழி ஒன்றே பிறப்பு-இறப்புச் சுழலினின்று விடுபடுவதற்கான தந்திரத்தைச் சொல்லிக் கொடுக்கிறது.


முன்னர் பாவ-புண்ணியங்களை வெவ்வேறு காலங்களில் விளையும் விதைகள். அந்த விதைகளை வறுத்து விட்டால் விளையாதல்லவா? அதுதான் சூட்சுமம்.

செவ்வாய், 5 ஜூலை, 2016

முக்திக்கு நாலு வழி!, அவை....



பிறவா பேரின்ப நிலையான முக்தி அடைதலே சித்த நிலை எனப் படுகிறது.இந்த முக்தி நிலையினை அடைய நான்கு வழிகள் இருப்பதாக சித்தர்கள் கூறியிருக்கின்றனர். அவை முறையே “சரியை”, “கிரியை”, “யோகம்”, “ஞானம்” என்கின்றனர். இந்த நான்கு முறைகளைப் பற்றியும் அதனால் கிடைக்கப் பெறும் முக்தி நிலை பற்றியும் சிவவாக்கியர் தனது சிவவாக்கியம் நூலில் பின் வருமாறு கூறுகிறார்.

"தெளிந்தநற் சரியைதன்னில் சென்று சாலோகம்பெறும்

தெளிந்த நற் கிரியைபூசை சேரலாம் சாமீபமே

தெளிந்த நல் யோகம் தன்னில் சேரலாகும் சாரூபம்

தெளிந்த ஞானம் நான்கிலும் சேரலாம் சாயுச்யமே"

- சிவவாக்கியர் -

"சேருவார்கள் ஞானம்என்று செப்புவர் தெளிவுளோர்

சேருவார்கள் நாலுபாதச் செம்மைஎன்ற தில்லையே

சேருவார்கள் சிவகதி திருவருளைப் பெற்றபேர்

சேருமாறு கண்டுநாலும் செய்தொழில் திடப்படே"

- சிவவாக்கியர் -
சரியை
நமது இல்லத்தில் இறைவனை ஆத்மார்த்தமாய் வழிபடுவதுடன், கோவில்களுக்கு சென்று இறைவனைப் பணிந்து அங்கே மலர் கொய்து மாலை தொடுத்தல் போன்ற ஆலயத் தொண்டுகளை செய்வதன் மூலம் கிடைக்கப் பெறுவதாகும்.இதுவே சரியை வழி எனப்படுகிறது. இத்தகைய நெறி தவறாத வாழ்வின் மூலம் கிடைக்கப் பெறும் முக்தி நிலை சாலோக முக்தி எனப்படும்.

கிரியை

சிவச்சின்னங்களை அணிந்து சிவனடியாராக இறைச் சேவை செய்வது ஒன்றையே வாழ்வின் நோக்கமாய் கொண்டு வாழ்வதே கிரியை வழியாகும்.இந்த வகையில் கிடைக்கும் முக்தி நிலை சாமீப முக்தி எனப் படும்.

யோகம்
தகுதியான குருவை பணிந்து யோக முறைகளை கற்று, தொடர் பயிற்சியின் மூலம் உடல்,மனம் ஆகியவற்றை தூய்மையாக்கி இறைவனை வழிபாடு செய்து முக்தி பெறுவதே யோக வழியாகும். இத்தகைய முக்தி நிலை சாரூப முக்தி எனப் படும்.
ஞானம்
நான் என்கிற அகந்தையை அழித்து தானே பிரம்மமாய் உணர்வது ஞான வழியாகும். இந்த வகையில் பெறும் முக்தி நிலை சாயுச்ய முக்தி எனப்படும்.