செவ்வாய், 21 ஜூலை, 2020

“வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே!

ரமணாச்ரமத்தில் பகவான் வந்து ஐம்பது வருடங்கள் ஆனதை ஒட்டி பொன்விழா கொண்டாடப்பட்டது. அதற்காக நிர்மாணிக்கப்பட்ட ஜூப்ளி ஹாலில் ரமணர் அமர்ந்திருந்தார். பக்தர்கள் பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்து கொண்டிருந்தனர்.
ஒரு பக்தர் குழு, சிவப்பிரகாசம் பிள்ளை இயற்றிய,
“வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே;

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க என்றும் வாழ்க
ரமணாச்ரமத்தில் பகவான் வந்து ஐம்பது வருடங்கள் ஆனதை ஒட்டி பொன்விழா கொண்டாடப்பட்டது. அதற்காக நிர்மாணிக்கப்பட்ட ஜூப்ளி ஹாலில் ரமணர் அமர்ந்திருந்தார். பக்தர்கள் பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்து கொண்டிருந்தனர்.
ஒரு பக்தர் குழு, சிவப்பிரகாசம் பிள்ளை இயற்றிய,
“வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே;
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க என்றும் வாழ்கவே:
…………………………………
………………………………….
திருச்சுழி என்னும் தலத்து உதித்த செல்வன் பாதம் வாழ்கவே;
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே.”
- என்னும் “ரமண பாத மாலை”யைப் பாட ஆரம்பித்தனர். அதில், “ரமணன்” என்று வரும் இடங்களிலெல்லாம் “ரமணர்” என்றே பாடினர். ”ரமணன் பாதம் வாழ்கவே” என்று பாடினால் அது பகவானுக்கு மரியாதைக்குறைவு என்று எண்ணிய அவர்கள், அவ்வாறு அரும் இடங்களில் எல்லாம் மரியாதை விளியாக ”ரமணர் பாதம் வாழ்கவே” என்று சொல்லியே பாடி முடித்தனர்.
பாராயணம் முடிந்தது. உடனே பகவான் அமர்ந்திருந்த பக்தர்களிடம், “ஆஹா.. பிரமாதம். நன்னா பாடினா! ரமணன்னா மரியாதைக்குறைவு போலிருக்கு! அதான், ’ரமணர்’ ’ரமணர்’ன்னு பாடியிருக்கா! அப்போ சிவனைக் கூட இனிமே நாம ”சிவர்”, ”சிவர்”ன்னுதான் சொல்லி பாடணும் போலயிருக்கு. பேஷ்.. பேஷ்…” என்றார், கிண்டலாக.
பக்தர்கள் பகவானின் அந்த நகைச்சுவையை ரசித்தனர். அதேசமயம் சில பக்தர்கள் மட்டுமே, “’ரமணன்’ என்றழைத்தாலும், ‘ரமணர்’ என்றழைத்தாலும் எல்லாம் ஒன்றுதான். ரமணர் என்பது அந்த உடலல்ல. அது எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கும் பரிபூரண ஆத்மா. அதை உணர்வதே முக்திப் பேறு” என்பதைப் புரிந்து பகவானைத் தொழுதனர்.

………………………………….
திருச்சுழி என்னும் தலத்து உதித்த செல்வன் பாதம் வாழ்கவே;
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே.”
- என்னும் “ரமண பாத மாலை”யைப் பாட ஆரம்பித்தனர். அதில், “ரமணன்” என்று வரும் இடங்களிலெல்லாம் “ரமணர்” என்றே பாடினர். ”ரமணன் பாதம் வாழ்கவே” என்று பாடினால் அது பகவானுக்கு மரியாதைக்குறைவு என்று எண்ணிய அவர்கள், அவ்வாறு வரும் இடங்களில் எல்லாம் மரியாதை விளியாக ”ரமணர் பாதம் வாழ்கவே” என்று சொல்லியே பாடி முடித்தனர்.