வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

மகான் புலத்தியர் - 3.

போற்றென்ற அடியேன் உள்ளம் பூரண மதுவும் காட்டி
சாற்றென்று யோக ஞானம் சாதனம் அதுவுங்காட்டி
ஆற்றென்ற கபால தீட்சை அருள்பெற்ற சமாதி காட்டி
யேற்றென்ற வாசி காட்டி யெனையாண்ட சரணம் போற்றி
சரணத்தில் விழுந்தேன் கோவே சச்சிதானந்த மூர்த்தி
சரணத்தில் முன்ன மின்னம் தானது கருக்கஎன்னக்
கரணத்தில் வழலை தானுங் கபாலத்தில் ஒழிந்து போக
அரணத்தில் உதித்த பாதம் அறுசுவை ஒழித்துப்போடே

மகான் புலத்தியர் - 4.

குருவடி பொற்றாள் சரண்சரணம் கும்பமுனியே சரண்சரணம்
திருவடி நாதா சரண்சரணம் சித்தர்களின் அருளே சரண்சரணம்
அருள்வடி வானாய் சரண்சரணம் அமரர்கள் கோவே சரண்சரணம்
பொருளடி மூலங் காட்டிற்று போதித்த குருவே சரண்சரணம்
போதித்த குருவே சரண்சரணம் பொதிகை வளர்அம்பலர் சரணம்
வேதித்தெனையே ஆட்கொண்ட விமலா சரணம் மெய்ஞ்ஞானம
சாதித்த தேவே சரண்சரணம் சமுசயந்தீர்த்தாய் சரண்சரணம்
ஓதித்தருவாய் சரண்சரணம் உண்மைப்பொருளே சரண்சரணம்.

மகான் புலத்தியர் - 5.

லபிக்கவழி(சித்திக்க வழி) சொல்லுகிறேன் ஆத்தாளே நந்திதிருமூலரையும்
லபிக்கக்காளாங்கியையும் ஆத்தாளே நாதாந்தபோகரையும்
சத்திசிதம்பரமும் ஆத்தாளே சட்டமுனி பூசைசெய்வாய்
உத்தமக்கொங்கணரை ஆத்தாளே உசிதமாய் பூசைசெய்வாய
கருவூரார் ஆனந்தர் ஆத்தாளே கண்டு வழிதெரிந்தோர்
ஒருநெறியாய் இவர்களையும் ஆத்தாளே உண்மையுடன் பூசைசெய்தால்
சண்டாளன் ஆனாலும் ஆத்தாளே தான் வேதைகாண்பானே
கண்டசேதி சொன்னேன் நான் ஆத்தாளே.