வியாழன், 23 ஏப்ரல், 2015

மகான் இராமலிங்க சுவாமிகள் - 14.

மேற்கண்ட 14 பாடல்களிலும் ஞானிகளைப் பூஜைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. ஞானிகள் என்றாலே நல்வினை தீவினையை நீத்து, தம்முள்ளே
அருடபெரும்; ஜோதியைக் கண்டவர்கள் ஆவார்கள். அவர்கள் ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல்,அருளல் ஆகிய ஐந்தொழிலையும் செய்யும் வல்லவர்கள் ஆவார்கள்.

இவர்கள் திருவடியைப் பூஜிக்க வேண்டும் என்றால், புண்ணியம் செய்திருக்க வேண்டும் அல்லது உண்மைப் பொருள் அறிந்த ஆசானின் உபதேசம் பெற்றிருக்க வேண்டும்.உலகத்தில் சிலர் சிறுதெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு, உயிர்பலி கொடுத்தலும், சிறுதெய்வங்களுக்கு கோவில் கட்டியும், கும்பாபிஷேகம் செய்தும் மற்றும் வீண் ஆரவாரச் சடங்குகள் செய்தும் இந்த அரிய மானுடப் பிறவியை பயனற்றதாக்கிக் கொள்கிறார்கள். விஷயம் தெரிந்தவர்களோ, முற்றுபெற்ற முனிவர்களை வணங்கினால்தான் நாம் செய்த பாவங்களைப் போக்கிக்கொள்ள முடியும் என்றும், பாவங்கள்தான் அறியாமையை உண்டுபண்ணும் என்றும், ஞானிகளைப் பூஜை செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்கிறார்கள்.

ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும் என்றால் மேற்கண்ட பாடல்களில் உள்ள ஞானிகளை குருவாக ஏற்று, தினமும் உருகி நாமஜெபம் செய்ய வேண்டும். நாமஜெபம் செய்யசெய்யத்தான் சிறப்பறிவு உண்டாகும். சிறப்பறிவு உள்ள மக்கள்தான் உடம்பைப் பற்றியும், உயிரைப் பற்றியும் அறிந்து உடல் மாசையும் உயிரைப் பற்றிய மாசையும் நீக்கிக் கொள்கிறார்கள். நீக்கிக் கொண்டவர்கள் தான் தம்முள் அருட் பெருஞ்ஜோதியைக் கண்டு அளவில்லாப் பேரானந்தம் அடைகிறார்கள்.

இவர்கள் தான் கோடிக் கணக்கான யுகங்கள் வாழ்கின்றவர்கள் ஆவார்கள். இவர்கள் பெருமையைக் கணக்கிட்டுச் சொல்ல இதுவரையிலும் யாரும் பிறந்ததில்லை. இனி யாரும் பிறக்கப்போவதும் இல்லை.