திங்கள், 30 நவம்பர், 2020

தத்துவ கிறுக்கன் (கிறுக்கி)



இறைவன் என்பவன் மனிதனுடைய கற்பனைக்கு அப்பாற்பட்டவன் , ஞானம் (தன்னை அறிதல் ) மிகப்பெரிய விஷயம் , என்றும் அதற்கு குரு , தியானம் , துறவறம் , மனதை ஒருமுகபடுதல் , மந்திரம் இவை அனைத்தும் மிகவும் அவசியம் என்ற நம் மக்களின் தவறான எண்ணமே காரணம் , மேலும் ஞானம் அடைய நீண்ட காலம் ஆகும் , நமது வாழ்கையையே அர்ப்பணிக்க வேண்டும் என்று நினைகின்றனர் ..,
ஆனால் மேற்கூறியவை அனைத்தும் சமாதி நிலையை அடைவதற்கானவையே,  ஞானம் பெற கண் சிம்மிட்டும் நேரம் கூடத் தேவையில்லை, விஞ்ஞானத்தில் இருந்து கூட ஞானம் பெறலாம்". 
நினைத்துப் பாருங்கள்....பூமியின் பரப்பளவு (510,066,000 sq km) , பூமியை விட 109 மடங்கு பெரியது சூரியன் , சூரியனை விடப் பல பல மடங்கு பெரியது நட்சத்திரம் , எவ்வுளவு நட்சத்திரங்கள் என்று இன்னமும் கணக்குப் போட முடியவில்லை . நம் பூமியைப் போலவே பல ஆயிரம் கிரகங்களும் , சூரியன்களும்; பால் வெளியில் உள்ளன .., பல கோடி ஒளி  ஆண்டுகள் கடந்து இன்னும் ., பிரபஞ்சத்தின் அளவு கோள் நீள்கிறது என்கிறது விஞ்ஞானம் " 

நினைத்துப் பாருங்கள்.. இவ்வுளவு பெரிய பிரபஞ்சத்தில் ஒரு புள்ளி கூட இல்லை நமது பூமி. அதில் ஒரு மூலையில் நாம், நம்மை பாதுகாக்கப்  பெற்றோர் நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்திற்கு வீடு , நமது வீட்டைப்  பாதுகாக்க நாய் , தெருவைப் பாதுகாக்கச்  சங்கம் , காவல் , நமது மாநிலத்தை பாதுகாக முதலமைச்சர், அமைச்சர்கள், நாட்டுக்கு பிரதமர் , அப்பப்பா !!!!!! தலையே சுற்றுகிறது ..,இதைப் படிக்கும் போது வாழ்கையே ஒன்றும் இல்லை என்று ஒரு எண்ணம் வரும். அந்த எண்ணத்தை மனதில் நிறுத்த வேண்டும் ., திரும்பத்  திரும்ப நினைக்க வேண்டும் , நினைத்துக் கொண்டே சித்தர்களின் நூல்களைப் படிக்க வேண்டும்.  அப்பொழுது தான் ஆன்மாவின் சுட்சுமம் உங்களுக்கும் புரியும். மனம் வெறுக்கும் ., அப்பொழுது மனம் வெற்றிடம் ஆகும் . அந்த வெற்றிடத்தில் ஆன்மாவின் ஜோதி பிரகாசிக்கும் .., சமாதி நிலை தானாகவே  அமையும் ..,
இப்படிக்கு